வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 57. டிசம்பர் 26, 1987 டிசம்பர் 25, 26க்கு இடைப்பட்ட இரவில், இயேசு பாத்திமா செய்திகளோடு சேர்த்து, கரபந்தாலின் செய்திகளின் முக்கியத்துவத்தையும், அவை இரண்டும் ஒரே விதமானவை என்பதையும் வலியுறுத்திக் கொண்டிருந்தார். அந்த இரவில் நான் ஓய்வே எடுக்காதது போல் இருந்தது. அந்தச் செய்தி திரும்பத் திரும்ப என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. இயேசு தம் பிரசன்னத்தை வலியுறுத்திக் கொண்டிருந்தார். பாத்திமாவின் தேவாலயம் கரபந்தாலின் அர்ச்சிப்பிற்காகக் கூக்குரலிடுகிறது; காலங்களின் அடையாளங்களை வாசிக்க நான் உங்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறேன், அந்த அடையாளங்களை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அந்த அடையாளங்களை எப்படி உங்களால் சொல்ல முடியாமல் இருக்கிறது? உங்களுக்கு உணர்வில்லையா? உங்கள் மனங்கள் ஏன் மூடியிருக்கின்றன? நீங்கள் ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? நீங்கள் ஏன் கேட்க மறுக்கிறீர்கள்? என் வார்த்தைகளை ஏன் மறந்துவிட்டீர்கள்? ஏன் உங்கள் தவறுகளை திரும்பவும் செய்கிறீர்கள்? அன்புக்குரியவர்களே, உங்களுக்கு என் வார்த்தையின் உடன்படிக்கைப் பேழையாக இருக்கிற உங்கள் பரிசுத்த மாதாவால் தரப்பட்ட கரபந்தாள் செய்தியின் மீது இந்த எல்லாவிதமான தாக்குதல்களும் எதற்காக? கரபந்தால் காட்சிகள் மற்றும் செய்திக்கு என் குருநிலையினர் காட்டிய எதிர்ப்புகள், சாத்தானின் தந்திரமான செயல்பாடுகள;. பாத்திமாவில் நான் செய்தது போலவே, அவன் மீண்டும் ஒருமுறை என் செய்தி உலகப் பொதுவானதாக ஆவதிலிருந்து அதைத் தடுத்துவிட முயன்று கொண்டிருக்கிறான்; கரபந்தாலில் என் தாயாரால் சாதாரண குழந்தைகளுக்கு தரப்பட்ட என் இரட்சனிய திட்டத்தின் மதிப்பை அறிந்திருக்கிற சாத்தான், மீண்டும் ஒருமுறை என் திட்டத்தை அழித்துவிட முயன்று கொண்டிருக்கிறான் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? இவ்வாறு நீங்கள் எல்லோரும் இருளில் தவறி விழும்படி செய்கிறான்; சாத்தான் பாத்திமாவின் இரட்சனிய செய்தியின் தொடர்ச்சியாக இருக்கிற இந்தக் காட்சிகளை மறுக்கும்படி என் திருச்சபையைத் தந்திரமாகத் தூண்டிவிட்டு, உங்கள் பரிசுத்தத் தாயார் என் மீது வெற்றி பெற்றுவிட, இப்போது முன் எப்போதையும் விட தன் முயற்சிகளை இருமடங்காக்கிக் கொண்டிருக்கிறான்; சாத்தான், தன் கடுங்கோபத்தில், என்னை உட்கொள்ள விடாமல் உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறான்; என் இரட்சனியத் திட்டம் தெளிவாய் இருக்கிறது; நான் என் பிள்ளைகளை இரட்சிக்க வருகிறேன்; என் குரலை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்! நான் பயன்படுத்துகிற கருவிகளின் வகை கண்டு வியப்படையாதீர்கள்; இந்த வெறுமையான துணியில் நிரப்பப்படும் இந்த வேலை என்னிடமிருந்தே வருகிறது என்பது தெளிவாகும்படியும், குறிப்பு: கேன்வாஷ் துணி. இந்த முறை பேசுவது கடவுளின் பிரியமுள்ள குமாரனாகிய நான்தான் என்று நீங்கள் நம்பும்படியாகவும், நான் ஒரு வெறுமையை, ஒரு வெறுமையான துணி என்று நன்கு அறிந்தே தேர்ந்தெடுத்திருக்கிறேன்; என் இராஜ்ஜியம் உங்கள் மத்தியில் இருக்கிறது; என் ஆபேல்களே, நீங்கள் மீண்டும் என்னை அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நான் அறிவேன்; ஓ நேசர்களே, நான் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேன்! என் திட்டத்தை நான் விரைவில் உங்களுக்கு வெளிப்படுத்துவேன்; ஆண்டவரே, குருநிலையினர் உம் குரலை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்றால், அதன்பின் என்ன நிகழும்? வசுலா, கேட்பது உன் வேலையல்ல; புழுதியும், சாம்பலுமே, நான் விரும்புகிறபடி உன்னை வழிநடத்தவிடு; குறிப்பு: இந்த இரண்டு வார்த்தைகளைக் கொண்டு தமது படைப்புகளிலேயே நான்தான் அனைவரிலும் அற்பமானவள் என்று கடவுள் எனக்கு நினைவுபடுத்தினார். இந்த காரியங்களை என்னிடம் விட்டுவிடு. சரி, ஆண்டவரே. ஓ, வா,என்னை தவறாகப் புரிந்து கொள்ளாதே, நான் நேசமாக இருக்கிறேன், ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்; வா, நாங்கள் நாம்? நான் உன் விளக்கை நிரப்புவேன்; சரி, ஆண்டவரே, அன்போடு என் மீது அக்கறை எடுத்துக் கொள்வதற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். நாம் போவோம்; டிசம்பர் 28, 1987 நான் என்னை மறந்து யாரைப் பற்றியாவது ஒரு தீர்ப்பை உச்சரிக்கத் துணிவேன் என்றால், அல்லது மற்றவர்களை விட நான் அதிகமாக புரிந்து கொள்கிறேன் என்று நினைத்தால், அதே நேரம் கடவுள் தமது செய்தியைத் தர வேண்டியவளாகிய என்னை தமது கண்களின் ஒரே ஒரு ஊடறவும் பார்வையைக் கொண்டு என் இடத்தில் வைத்து விடுகிறார். நான் இருக்க வேண்டிய இடத்தில் என்னைப் பொருத்தி விடுகிறார். "புழுதியும் சாம்பலுமே" என்ற தம் இரண்டே வார்த்தைகளை மட்டும் கொண்டு, நான் ஒன்றுமில்லாமை என்பதையும், அவரது எல்லாப் படைப்புகளிலும் அற்பமானவள் என்பதையும் எனக்கு அவர் நினைவூட்டினார். இல்லை, சிலர் இதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர் தமது வார்த்தையை பெற்றுக்கொள்ள என்னை தேர்ந்தெடுத்திருப்பதால், நான் தகுதி உள்ளவள் என்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? எல்லோரிலும் அற்பமானவளாகிய என்னை தேர்ந்தெடுத்ததன் மூலம், அவர் நம் மீது எத்தகைய ஆழங்காண முடியாத இரக்கம் கொண்டிருக்கிறார் என்பதையும், அனைவரிலும் அற்பமானவளுக்கும் கூட அவர் தருகிறார் என்பதையும் காட்டுகிறார். அப்படி இருக்க, அவரது கண்களில் மிக அதிகம் தகுதி உள்ளவர்களாய் இருப்பவர்கள் விசுவாசத்தோடு கேட்பார்கள் என்றால், அவர் அவர்களுக்கு இன்னும் ஏராளமாக கொடுக்க மாட்டாரா? எனக்கு அவர் காட்டும் பொறுமையை நீங்கள் கவனிக்கவில்லையா? என்னை அடிப்பதற்கு பதிலாக, அவரது அன்பு அதிக அபரிமிதத்தோடு பாய்ந்து வருகிறது. அவரது படைப்புகள் எப்படி அவரை மறுதலிக்க முடியும்? ஆகினும், முன்பு நான் இவ்வகையான மக்களை சேர்ந்தவளாக இருந்ததால், நான் பேசக்கூடாது. இப்போது நான் சொல்கிறேன், உங்கள் சுவாசத்தை எவ்வளவு போற்றிப் பேணுகிறீர்களோ, அப்படியே உங்கள் கடவுளை பேணுங்கள். ஏனெனில், சுவாசம் இல்லாவிடில் நீங்கள் இறந்து விடுவீர்கள். கடவுள் நம்மில் தம் உயிர் மூச்சை ஊதியதன் மூலம் நமக்கு உயிர் தந்தார். அவரது சுவாசமே நம் வாழ்வு. கடவுளே, நம் சுவாசம். கடவுளே, நாம் வாழ்வு. ஓ வசுலா!என் ஆபேல் இந்த முறை உயிர் வாழ்வான்; நேர்மை தீமையை அழித்துவிடும்; குறிப்பு: நேர்மை தீமையை அழித்துவிடும். இது ஆபேல் காயினின் மீது வெற்றி கொள்வார் என்றும் இருக்கலாம்; என் வார்த்தையைத் தூண்டுகிறவர்கள் பேறு பெற்றவர்கள்; என் குரலை அடையாளம் கண்டுகொள்கிற என் ஆடுகள் பேறு பெற்றவை; என் ஆட்டுக்குட்டிகளை மீண்டும் மேய்க்கிறவர்கள் பேறு பெற்றவர்கள்; இதயத்தில் எளிமையுள்ளோர் பேறு பெற்றவர்கள்; கரபந்தாலின் அர்ச்சிப்பின்போது யார் ஜெபமாலை ஜெபிக்கிறார்களோ... குறிப்பு: இந்த நிகழ்வைக் கடவுள் முன்னறிவிக்கிறார். யார் தங்கள் முழங்கால்களை மடக்கி என் திருமாதாவை வாழ்த்துகிறார்களோ, அவர்கள் பேறு பெற்றவர்கள்; ஒன்றுபட்டவர்களாக என் சமாதானம் மற்றும் நேசத்தின் சிலுவையைச் சுமக்க இருப்போர் பேறு பெற்றவர்கள்; இராயப்பனிடம் திரும்பி வருகிற என் ஆடுகள் பேறு பெற்றவை; தங்களையே தாழ்த்தி, என் முன் மாதிரிகையைப் பின் செல்பவர்கள் பேறு பெற்றவர்கள்; என் கட்டளையை அனுசரித்து, நான் உங்களை நேசித்தது போல ஒருவரை ஒருவர் நேசிக்கிறவர்கள் பேறு பெற்றவர்கள்; எனக்குச் சாட்சிகளாக இருந்து, என்னைப் பற்றி இடறல் படாதவர்கள் பேறு பெற்றவர்கள்; வசுலா, என் ஆன்மாவின் அன்பிற்குரியவளே, என்னில் விசுவாசம் கொண்டு என்னை நம்பியிரு; நான் உன் பரலோக ஆசிரியர்; என் வார்த்தையை ஒருபோதும் சந்தேகிக்காதே; வா, நீ பலவீனமாய் இருக்கிறாய்; உன் பலமாய் இருக்கிற என் மீது சாய்ந்துகொள்; சரி, ஆண்டவரே, நீர் எனக்குத் தேவைப்படுகிறீர். நீர் இல்லாமல் என்னால் ஒருபோதும் வாழ முடியாது. என்னை நேசி, என்னை ஆசி, என் மோட்சமாக இரு; ஆ, வசுலா, இப்போது நீ எனக்காகப் பலியாகிக் கொண்டிருக்கிறாய், ஆனால் சீக்கிரத்தில் நான் உன்னை என் அருகில் கொண்டிருப்பேன்; அந்த நாளுக்காக நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். என் அருகிலேயே தங்கியிரு, நான் உன்னிடம் ஒன்று கேட்க வேண்டியுள்ளது; சொல்லும், ஆண்டவரே. என் நிமித்தமாக வசுலா, என் நிமித்தமாக, நீ ஜெபமாலை ஜெபிக்கக் கற்றுக்கொள்வாயா? எல்லா நேரங்களிலும் என் தாயை வாழ்த்திக் கொண்டே இரு; வசுலா, இதை எனக்காகச் செய்வாயா? சரி, ஆண்டவரே, நான் கற்றுக்கொள்ளச் சித்தமாய் இருக்கிறேன்; ஆண்டவரே, நான் கற்றுக்கொள்ள எனக்கு உதவும். "சரி, ஆண்டவரே, நான் கற்றுக்கொள்ளச் சித்தமாய் இருக்கிறேன்; ஆண்டவரே, நான் கற்றுக்கொள்ள எனக்கு உதவும்" இதைத்தான், இதே வார்த்தைகளைத்தான் அறியாதவர்களாய் இருக்கிற உங்கள் எல்லோரிடமிருந்தும் நான் கேட்க ஆசிக்கிறேன்; கற்றுக்கொள்ளச் சித்தமாய் இருக்கிற உங்கள் எல்லோருக்கும் நான் கற்றுத் தருவேன்; உங்கள் எல்லோருக்கும் நான் கற்றுத் தருவேன்; வா, மகளே, என்னில் இளைப்பாறு; நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்; நான் இயேசுவுக்காக எவ்வளவு ஏங்குகிறேன் என்பதையும், இங்கே வெளியே நான் எவ்வளவு துன்புறுகிறேன் என்பதையும் அவர் உணர்ந்திருக்க வேண்டும். இது மீண்டும் கடவுளின் பலிப்பொருளாக இருக்க விரும்பி, எல்லாவற்றின் மீதும் உள்ள பற்றை விளக்கிக் கொண்டு, "கடவுளை ஆசிக்கிற" அலையாக இருக்கிறது. நான் தடுமாறுவதாகத் தோன்றுகிறேன். இங்கேயே தங்கியிருந்து, அவருடைய புதிய அப்பத்தை ஒருபோதும் மறுதலியாத, அவருடைய சில ஆட்டுக்குட்டிகளை, புதிய ஆன்மாக்களை, நான் மீண்டும் "மேய்ச்சலுக்கு" இட்டுச் செல்லலாம். இந்தப் புதிய ஆன்மாக்களின் வருகையைக் கொண்டு, அவரை மகிழ்விக்கலாம். எனக்கோ, அவரோடு இருப்பதுதான் மிக அற்புதமானதாக இருக்கும். இவற்றில் எது மிகச்சிறந்தது? டிசம்பர் 31, 1987 என் இறைவா, சபைகள் உம் செய்தியை விசுவாசிக்க வேண்டும் என்று நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்! வசுலா, என்னில் விசுவாசம் கொள்வது என்னால் தரப்படுகிற ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது, நான் சொல்வதைக் கேள், வசுலா; குறிப்பு: இந்த வரப்பிரசாதத்திற்காக நாம் கடவுளிடம் ஜெபிக்கவும், அவரிடம் மன்றாடவும் வேண்டும். என் வாயைக் கொண்டு நீ பேசுவாய், என் திருச்சபை உள்ளாக இருக்கிற துன்பங்களைப் பற்றி நீ பேசுவாய்; இந்த வெளிப்பாடு என் குரலே; காலங்களின் அடையாளங்களைக் கண்டுபிடிங்கள்; என் செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், என் செய்தியை சுவைத்துப் பாருங்கள், என் செய்தியை உணவாகக் கொள்ளுங்கள்; பிரமாணிக்கமற்றவர்களுக்கு ஐயோ கேடு; பிற்பாடு: சிறியவளே, நீ என்னை நேசிக்கிறாயா? ஆண்டவரே, நான் முடிவின்றி உம்மை ஆராதிப்பேன். ஆம், வசுலா, என்னை நேசி; உன் கடந்த காலத்திற்கு ஈடு செய்; என்னை நேசிக்காதவர்களுக்காக ஈடு செய்; மலரே, மலர்களின் இதழ்களின் மீது ஒளி ஏற்படுத்தும் விளைவு என்னவென்று அறிந்து, ஒவ்வொரு மலரும் ஒளியின் தேவைக்கு உட்பட்டிருக்கிறது; மகளே, நீ மனஸ்தாபப்படுவாயா? நான் திவ்விய நன்மை வாங்குவதற்காக அவர் என்னை தயாரித்துக் கொண்டிருந்ததால், என் பழைய பாவங்களுக்காகவும், என் இப்போதைய பாவங்களுக்காகவும் நான் மனஸ்தாபப்பட்டேன். இந்த எல்லா காரியங்களையும் உன் ஆத்துமத்தின் உள்ளாழங்களில் இருந்து வெறுத்து ஒதுக்கு; அசுத்தத்தனத்தை வெறுத்து ஒதுக்கு; ஏனெனில் அதுவே சோதோமின் கெட்ட நடத்தையாக இருந்தது; குறிப்பு: ஆத்துமத்தின் அசுத்தத்தனம். இறைவனில் உண்மையான வாழ்வு. குறிப்பேடு; 20, 1988. ஜனவரி 1, 1988 என் இறைவா, நான்தான்; என் கரத்தைப் பிடித்துக்கொள், இப்போது என் இன்னொரு கரத்தையும் பிடித்துக்கொண்டு நட! இது முன்பு ஒருமுறை சொல்லப்பட்டது. இது, ஒரு புதிய கருத்துக்குள் நான் முன்னேறிச் செல்ல இருந்தபோது கடவுள் என் இரு கரங்களையும் பிடித்துக்கொண்ட அதே காட்சியை எனக்கு நினைவுபடுத்தியது. நட! நட, அன்புக்குரியவளே, முன்னேறு! அஞ்சாதே; நான் என் படைப்பின் ஒரு பகுதிக்கு மட்டுமின்றி, என் ஒட்டுமொத்த படைப்பிற்குமாக உன்னை என் செய்தியைத் தாங்கிச் செல்பவளாக நியமித்திருக்கிறேன்; வசுலா, காத்திரு, நீ காண்பாய்; நான் என் செய்தியின் நடுப்பகுதிக்கு இன்னும் போதுமான அளவுக்கு நெருக்கமாக வரவில்லை; வசுலா, நீ இல்லாமல் என்னால் பணியாற்ற முடியும், ஆனாலும், மலரே, உன்னோடு என் பணிகளை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்; நான் இறைவன், நான் என்னிலேயே போதுமானவராய் இருக்கிறேன்; நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நான் ஆசீர்வதிக்கிறேன், ஆகவே, அன்புக்குரியவளே, முன்னேறு, என்னோடு முன்னேறு, முன்னே போ; எல்லாம் வல்லவராகிய ஆண்டவரே, இதுவும் சித்தமாக இருப்பதால், நான் முன்னேறிச் செல்ல எனக்கு உதவும். என்னால் தனியாக முன்னேறிச் செல்ல முடியாது. வழக்கம் போல, என்னை நீர் தூக்கிச் செல்லும்படி நான் உம்மிடம் கேட்பேன். என்னால் எதுவும் செய்ய இயலாது. வசுலா, நான் உனக்கு உதவி செய்வேன், ஏனெனில் நானே உன் பலமாக இருக்கிறேன்; ஜனவரி 2, 1988 எல்லாம் வல்ல ஆண்டவரே, தப்பறைக்குள் விழாதபடி எங்களைக் காத்தருளும். ஏனெனில் ஆதியில் இருந்தது போல, ஒரே ஒரு தப்பறையை செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நாடுகளையே அழித்து, அது பேரழிவு விளைவிப்பதாக இருக்கக்கூடும். ஆம், வசுலா, இந்த கொள்ளைக்குப் பயப்படு, ஏனெனில் தப்பறை என்பது தொற்றிக் கொள்கிற கொள்ளை நோயாக இருக்கிறது; என் இறைவா, தனிப்பட்ட வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்வதில் திருச்சபை காட்டும் தயக்கத்திற்கு காரணம் என்னவெனில், அதில் இருக்கிற எல்லாமும் ஏற்கனவே வேதாகமத்தில் இருக்கின்றன என்பதால்தான். ஆகவே, எந்த ஒரு புதிய வெளிப்பாட்டையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று நான் எங்கோ வாசித்திருக்கிறேன். புதிய என்பதை ஒரு ஆய்வு கருத்தாக அல்ல, மாறாக வேதாகமத்திற்கு அப்பாற்பட்ட புதியதாக இருப்பதை நான் குறிப்பிடுகிறேன். புதிய அல்லது தனிப்பட்ட வெளிப்பாடு தங்களை வழி தவற செய்துவிடலாம் என்று அவர்கள் நினைப்பதால், இதற்கு வெளியே செல்வது அவர்களுக்கு பயத்தை வருவிக்கிறது. வசுலா, என் படைப்பு என் எதிரியின் படு குழிக்குள் விழும்படி இருப்பதை நான் காணும்போது, அவர்களுடைய உதவிக்கு விரைந்து வராமல் வெறுமனே உட்கார்ந்து அவர்கள் விழுவதை நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? நான் ஓய்வு நாளன்று ஒரு திமிர்வாதக்காரனைக் குணமாக்கியது உனக்கு நினைவிருக்கிறதா? பரிசேயர்களிடம் நான் என்ன கேட்டேன்? ஆண்டவரே, நான் விவிலியத்தில் அதை வாசித்து பார்க்க வேண்டும். அப்படியானால், என் வார்த்தையை எடு; நான் வேதாகமத்தை எடுத்து, லூக்கா 14 ஆம் அதிகாரம் ஒன்று முதல் ஆறு வரை உள்ள திருவாக்கியங்களை வாசித்தேன். ஆம் மகளே, "ஓய்வுநாளன்று ஒரு மனிதனைக் குணமாக்குவது திருச்சட்டத்திற்கு எதிரானதா, இல்லையா?" என்று நான் கேட்டேன்; அவர்கள் பதில் சொல்லவில்லை; "உங்களில் ஒருவன் தன் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வு நாள் என்றாலும், அதனை உடனே தூக்கிவிட மாட்டானா?" என்று நான் கேட்டேன், இந்நாள் வரை அவர்களால் இதற்கு பதில் கண்டுபிடிக்க முடியவில்லை; குறிப்பு: இது நம் காலத்திற்கான ஒரு அடையாள வாக்கியம். இன்று இந்த வெளிப்பாட்டை ஏற்க மறுப்பவர்களிடம் நான் இந்தக் கேள்வியை கேட்கிறேன்: "உங்கள் காலத்தில் என் இன்றைய தெய்வீக பராமரிப்புக்குரிய செயல்களின் மூலமாக என் படைப்பு தவறி விழுவதனின்று அதை காப்பாற்றுவது என் சட்டத்திற்கு எதிரானதா?" வசுலா, நான் இயேசு, இயேசு என்பதற்கு இரட்சகர் என்பது பொருள்; ஆண்டவரே, அப்படியானால் அவர்களிடம் சொல்லும், ஆண்டவரே, இதையெல்லாம் அவர்களுக்கு ஞாபகப்படுத்தும். அன்புக்குரியவர்களே, அவர்கள் ஒரு முள் வளையத்தைக் கொண்டு என் திரு இதயத்திற்கு முடிசூட்டி இருக்கிறார்கள்; என் புனித இதயம் இரத்தம் வடித்துக் கொண்டிருக்கிறது; இயேசுவே, இதை அவர்கள் உணர்கிறார்களா? நான் மௌனமாக அவர்களது வாசலருகில் அடியெடுத்து வைப்பேன், கதவைத் தட்டாமலே அவர்கள் வீட்டினுள் புகுந்து, என் புனித இதயத்தை அவர்களுக்குக் காட்டுவேன்; உண்மை உள்ளவர்களாக தங்களை நிரூபிப்போர் தங்கள் தவறை உணர்ந்து கொள்வார்கள்; மகளே, வா, நாங்கள் நாம்? ஆம், ஆண்டவரே, ஒன்றாகச் சேர்ந்து. ஜனவரி 4, 1988 வசுலா! ஓ வசுலா! என் அன்பிற்குரிய மகள்களில் ஒருத்தி இறந்து கிடக்கிறாள்! குறிப்பு: ஆண்டவரின் துணை அவசரமானதாகவும், துயரத்தினால் குழப்பமுற்றதாகவும் ஒலித்தது. உன்னுடைய ஒரு சகோதரி! ஆண்டவரே, யார் இறந்து கிடப்பது? என் பூரண அன்பிற்குரிய மகள், ரஷ்யா; வா! வா, நான் அவளை உனக்குக் காட்டுவேன்; பார்! இறைவன் என்னை ஒரு பாலைவனத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்று, சுட்டெரிக்கும் வெயிலில், தமது திருக்கரத்தை வெகுதூரம் நீட்டி, தமது சுட்டு விரலால் இறந்து கிடக்கிற தம் மகளும், என் சகோதரியுமானவளைச் சுட்டிக்காட்டினார். கொடுங்கோன்மையால் அவளுடைய உடல் மெலிந்திருந்தது, அவள் பாலைவனத்தின் மத்தியில் இறந்து கிடந்தாள். தன் மரணத்திலும் கூட அவள் கைவிடப்பட்டவளாகத் தோன்றினாள். தன்னைத் தேற்ற, தன் பக்கத்தில் யாருமின்றி, தன்னந்தனியாக அவள் இறந்தாள். நான் இந்த வேதனையான காட்சியைக் கண்டபோது, அவள் மீதுள்ள பரிதாபத்தினால் கதறி அழுதேன். அவளை நான் கண்டபோது, மனம் கசந்து அழுதேன். ஓ அழாதே; வசுலா, நான் அவளை உயிர்ப்பிப்பேன்; என் மகிமைக்காக நான் அவளை உயிர்ப்பிப்பேன்; லாசரை நான் உயிர்ப்பித்தது போல, அவளை நான் உயிர்ப்பிப்பேன்; ஓ இறைவா, நீர் எனக்கு மிக அதிகமான வேதனையைத் தருகிறீர்... நீ உணர்கிற இந்த வேதனை என் வேதனையோடு ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை; வசுலா, நான் அவளை நேசிக்கிறேன், அவள் மீது பரிவிரக்கம் கொள்; இறந்தவளாகவும், பொசுக்கும் காற்றுகளின் தாக்குதல்களுக்கு உட்பட்டவளாகவும் கிடக்கும்படி நான் அவளை விட்டுச் செல்ல மாட்டேன்; வசுலா, உன் சகோதரியை அன்பு செய். ஏனெனில் அவள் எல்லோராலும் மிகவும் அன்பு செய்யப்படாமல் இருக்கிறாள்! வசுலா, அவள் என்னைக் கைவிட்டு, எனக்கு எதிராகத் திரும்பி இருந்தாள்; அவள் வளர்ந்தபோது, அவள் நேசிப்பதற்கான நேரம் வந்தபோது, அவள் எனக்கு எதிராகத் திரும்பினாள்; என் மேலாடையைப் பகிர்ந்து கொள்ளும்படி நான் அவளை அழைத்தேன், ஆனால் அதற்கு பதிலாக, அவள் என்னை விட்டு விலகிச் சென்றாள்; முதிர்ச்சி அடைந்து விட்டதாக உணர்ந்து, தானே தன்னைப் போஷித்துக் கொள்ள முடியும் என்று அவள் நம்பினாள்; அவள் எனக்கு முதுகைத் திருப்பிக்கொண்டு, என்னிடமிருந்து பிரிந்து சென்றாள், பிரமாணிக்கமற்ற ஒரு மனைவியைப் போல, அவள் ஓடிப்போனாள்; என் அன்புக்குரியவளே, ஒரு மகளை இழப்பது எப்படிப்பட்டது என்று உனக்குத் தெரியுமா? என் இருதயம் நொறுக்கப்பட்டது; நான் அழுதேன்; இது போதாது என்பது போல, அவள் அகங்காரத்தோடும், அற்ப மன உறுத்தலும் கூட இல்லாமலும், தன் தந்தையாகிய எனக்கு எதிராகவும், மறை சாட்சிகளான எல்லாப் புனிதர்களுக்கும் எதிராகவும், பகிரங்கமாக போர்ப் பிரகடனம் செய்தாள்! இதற்கு மேல், அவள் என்னை நம்பவே இல்லை; என்னை வழிபடுவதையும், என்னை நம்புவதையும், என்னை அன்பு செய்வதையும், அவள் நிறுத்திவிட்டாள்; நாங்கள் ஒரு காலத்தில் பகிர்ந்து கொண்ட அன்பை மறந்துவிட்டவளைப் போல், அவள் தோன்றினாள்; நான் அவளுக்கு மகன்களையும், மகள்களையும் தந்திருந்தேன், ஆனால் அவள் தன் கோபவெறியில், என் குழந்தைகளைப் படுகொலை செய்து, ஒருவன் தகனப்பலி ஒப்புக்கொடுப்பது போல, அவர்களை சாத்தானிடம் கையளித்தாள்; அதன்பின், இதுவும் போதாது என்பது போல, அவள் சாத்தானிடம் திரும்பி, தான் ஆசைப்பட்டதெல்லாம், அவன் தனக்குத் தருவான் என்றால், அவனுக்கு பிரமாணிக்கமாக இருப்பதாகவும், எனக்குப் பதிலாக அவனை வழிபடுவதாகவும், அவனோடு ஒப்பந்தம் செய்து கொண்டாள்; தனக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்ற நிபந்தனையோடு, சாத்தான் சம்மதித்தான்; அதன்பின், சாத்தான் அவளை முழுவதுமாக என்னிடமிருந்து விலக்கினான்; அவன் எங்கள் பந்தங்களைத் துண்டித்துவிட, அவள் அவனை அனுமதித்தாள்; அவள் தன்னை நம்பும்படி, அவன் செய்தான்; அவன் நம்பிக்கைத் துரோகி என்பதால், அவள் புதை மணலில் தான் மூழ்கிப் போகலாம் என்ற பயத்துடன், தன்மீது அவள் சாய்ந்து கொள்ளும்படியாக, அவன் என் மகளை சதுப்பு நிலங்களுக்குக் கூட்டிச் சென்றான்; அவன் மீது முழுமையாக சாய்ந்து கொள்ளத், தன்னை அனுமதிக்கும்படி, அவள் அவனிடம் கேட்டாள்; வசுலா, என் பரிசுத்தத்தனத்தின் இல்லத்திலிருந்து ஓடிப்போன முற்கால ஜெருசலேமைப் போல், எந்த ஒரு நல்லொழுக்க விதியும் இல்லாத ஒரு மகளாக ஆகும்படி, அவள் என் இல்லத்திலிருந்து தன் குழந்தைகளை ஒருவர் பின் ஒருவராக பழியாக ஒப்புக்கொடுத்தாள்; என் மகளாகிய ரஷ்யா, அதையே செய்வதுதான் ஞானமுள்ள செயல் என்று நினைத்தாள்; அவள் என் பரிசுத்தக் கொடைகளை எடுத்து, சாத்தானுக்குக் கையளிக்க, அவன் அவற்றை ஆயுதங்களாக மாற்றினான்; சாத்தான், தன் மகிமையைக் கொண்டு, அவளை குருடாக்கினான், அவளுடைய குருட்டுத்தனத்தில், அவன் அவளை அந்தச் சதுப்பு நிலங்களில் இருந்து அகற்றி, அவள் தாகத்தால் வருந்தி, சாகும்படியாக, வனாந்தரத்திற்குள் கொண்டு போய் வைத்தான்; அவள் நிர்வாணமாக நடப்பதையும், தன் சொந்த இரத்தத்தில் போராடிக் கொண்டிருப்பதையும், நான் கண்டு, அவளை அழைத்தேன்; ஆனால் அவளோ என் குரலைக் கேட்கவில்லை; நான் மறுபடியும் அவளை அழைத்தேன், ஆனால் அவள் என் அழைப்பைக் கேட்கவில்லை; அதற்குப் பதிலாக, அவள் தன் சொந்த ஒழுக்க விதிகளை ஆதரிக்கும்படி, தன்னுடைய இளைய சகோதரிகளை அழைத்து, என் கோபத்தைத் தூண்டினாள்; அவர்கள் மறுத்தார்கள் என்றால், தன் வாளைக் கொண்டு, அவள் அவர்களைக் கட்டாயப்படுத்தினாள்; தன் வாளை உயர்த்துபவன், வாளால் மடிவான் என்று நான் சொல்லவில்லையா? அவளுக்கு என் அப்பம் தேவைப்படும்படியாக, நான் அவளுடைய அப்பத்தின் அளவைக் குறைத்தேன், ஆனால் அவள் என்னிடமிருந்து உண்பதற்குப் பதிலாக, பட்டினி கிடப்பதைத் தேர்ந்து கொண்டாள்; களைத்துச் சோர்ந்தவளாகவும், பசியால் வாடியவளாகவும், அவள் தனது தீய வேலைகளை இரகசியமாகத் தொடர்ந்து செய்யும்படி, தன் இளைய சகோதரிகளை அனுப்பினாள், ஏனெனில், அவளுடைய வெறுமையான வெளிப்பகட்டு, வெளிப்பகட்டாகவே இருக்கிற சாத்தானால் தூண்டப்பட்டது; அவளுடைய நிலம், அவளை உண்பிக்கப் போதுமானதை விளைவிக்கவில்லை; பொதுவாகச் சொல்லப்படுவது போல, அவள் என் எதிரியைச் 'சார்ந்திருப்பவளாக' ஆகிவிட்டாள். மகளே, இதற்கு மேல் இப்போது ஒன்றும் செய்ய வேண்டாம்; நான் இந்தச் செய்தியை நாளைக்குத் தொடர்ந்து சொல்வேன்; மகளே, வா, நான் உன்னை ஆசீர்வதிப்பேனாக. என்னை உணவாகக் கொள்; நாங்கள் நாம்? ஆம், ஆண்டவரே.