இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 27. மார்ச் 23, 1987. நான் ஒன்றாய் இருக்கிறேன்; பரிசுத்த தமத்திருத்துவம் ஒன்றாய் இருக்கிறது என்பதை நினைவில் கொள்; குறிப்பு: தேவ சாராம்சத்தின் ஒன்றிப்பில். நம் ஐக்கியம் உத்தமமானதாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; என்னைக் கவனமாகப் பகுத்தறி; ஆம், நீ நன்றாகக் கண்டிருக்கிறாய், நான் இரண்டு மோதிரங்கள் வைத்திருக்கிறேன்; அவை வெள்ளி - வெண்மை நிறமானவையா? மேலும் மிகப் பிரகாசமானவையா! இவை பரிசுத்த வெண் பொன்னால் செய்யப்பட்டவை; அங்கே, தீமை என்னைத் தவறாக வழிநடத்துகிறது என்று நான் நினைத்தேன்; இது எப்படி இருக்க முடியும்? கேள், வசுலா; இது நான்தான், இயேசு; பயப்படாதே; நேசமே, வா; நான் இந்த மோதிரத்தை உனக்குக் கொண்டு வந்திருக்கிறேன்; இப்போது இதை நீ அணிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்; என்னைப் பகுத்தறி; ஆனால் இது சாத்தியமா? ஆம், நான் நம் ஐக்கியத்தை ஆசீர்வதிக்கிறேன்! நேசமே, இந்தச் செயல் ஒரு ஞானத்தன்மையுள்ள பரலோகச் செயல்; உன் ஆத்துமம் என்னோடு ஒன்றிக்கப்பட்டுள்ளது என்று நான் உண்மையாகவே உனக்குச் சொல்கிறேன்; என்னை நம்பு, நான் நம் விவாகத்தை அர்ச்சிப்பேன்; இந்த மோதிரத்தை உன் விரலில் அணிவிக்க என்னை அனுமதி; நான் உன்னை நேசிக்கிறேன்; என்னை உணரு; நான் உன்னை நேசிக்கிறேன்; உன்னை ஆசீர்வதிக்கிறேன். இயேசு மற்றொரு மோதிரத்தை தம் விரலில் அணிந்து கொண்டார். பார்த்தாயா? இன்னும் அதிகமாக எதை நீ பகுத்தறிய முடியும்? இரண்டு 'வட்டங்களை' இணைக்கிற ஒரு நாடாவை என்னால் காண முடிகிறது. இதை நான் நம் தலைகளின் மீது வைப்பேன்; நாம் இப்போது இணைக்கப்படுகிறோம்; நான் நம் ஐக்கியத்திற்கு முடிசூட்டுகிறேன்; இயேசுவே, இதை அநேகர் வெறும் கற்பனைத் தோற்றம் என்று குற்றம் சாட்டுவார்கள்.

ஏன்; அநேகர் என்னிடம் வந்து என்னை மணம் செய்து கொள்வார்கள்; என்னை மகிமைப்படுத்துவார்கள்; அவர்களோடு இணைக்கப்படுவதில் நான் மிக அதிகமாக அக்களிப்பேன்; வசுலா, நான் உன்னை மரித்தோரிடமிருந்து எழுப்பி இருக்கிறேன்; நான் என் ஒளியை உன்மீது பொழிந்தேன்; உன்னைக் கவனித்துக் கொண்டேன்; உன்னைத் தேற்றினேன்; உன்மீது நான் வேலை செய்ய என்னை அனுமதி, மகளே; நான் விரும்புகிறபடி வனைந்து கொள்ள சித்தமாய் இருக்கிற மென்மையான சாந்துக் கலவையாக இரு; உன்னை என் கரங்களில் சுதந்திரமாக விட்டுவிடு, என்னை எதிர்க்காதே; ஆண்டவரே, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; நான் நினைப்பது தவறாய் இருக்கலாம் என்று எண்ணும் அளவுக்கு, அளவுக்கு மீறி மகிழ்ச்சியாக இருக்கிறேன்! இல்லை, நீ நன்றாகப் பகுத்தறிந்திருக்கிறாய்; உன்னை இப்போதே எடுத்துக் கொள்ளத் தயாராகும் அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன்; உன்னை விடுவித்து என் அருகில் உன்னைக் கொண்டிருக்க நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்; ஆனால் இந்த செய்திக்காகவே நான் உன்னைப் படைத்திருக்கிறேன். ஆண்டவரே, நான் தவறாகப் பகுத்தறிந்திருக்கலாம் என்றும், நீர் எனக்கு ஒரு மோதிரத்தைத் தந்து நம்மை ஒன்றிணைத்தீர் என்று நினைப்பதன் மூலம் உம்மை அவமதித்து விட்டேன் என்றும் பயப்படுகிறேன். என் மணவாளியே, என் பரிதாபத்திற்குரிய மணவாளியே, நீ ஏன் எனக்குப் பயப்படுகிறாய்? என்னைத் துயரப்படுத்தாதே; என்னை அணுகி வா; நான் உன்னை நேசிக்கிறேன்; என்மீது சாய்ந்து கொள்; நானே நம் மெய் விவாகத்தை அர்ச்சித்தேன் என்பதை நினைவில் வை. கவலைப்படாதே; இது நான்தான், இயேசு; உன் அச்சங்களை விட்டுவிட்டு என்னை நெருங்கி வா; நான் உன் கரத்தை உணர்ந்தேன்; குறிப்பு: இயேசு இதை மிக வேகமாகக் கூறினார். எழுதுகையில் பரிசுத்த அடக்கத்துகளின் பெரிய அளவிலான புகைப்படத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்; நானே அறியாத விதத்தில் என் மனதால் நான் அவருடைய தலைக்கேசத்தை மென்மையாக இடப்பக்கமாகத் தள்ளி, அதை அவருடைய கன்னத்தில் படாதபடி பின்பக்கமாக வைத்துக் கொண்டிருந்தேன். உடனடியாக அவருடைய எதிர்வினை பற்றி நான் ஆச்சரியப்பட்டேன். நீர் என் கரத்தை உணர்ந்தீரா? உண்மையாகவா? உணர்ந்தேன்; வசுலா; நான் சர்வேசரன் என்பதை நீ உணர்கிறாயா? இதை செய்ததற்காக நான் வருந்துகிறேன். வருந்தாதே; நீ இப்போது இருக்கிறபடியே, என்னோடு அன்யோனியமாய் இரு; வா, உன் கரத்தை என்னிடம் தா; நான் என் கரத்தில் உன் கரத்தை வைத்துக் கொள்வேன்; மார்ச் 26, 1987. இதோ, கடவுள் எனக்கு ஒரு காட்சியைத் தந்தார். என்னை மகிழ்வி, வசுலா; கடவுளாகிய நான் ஒன்றாய் இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்; என் மகிமையை உனக்கு அதிகமாகக் காட்ட நான் மிகவும் பிரியப்படுவேன்; குழந்தாய், பரலோகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது என்பதை நீ அறிவாயா? உம்மால், உம் வழியாக. ஆம், நான் அகலத்தையும், உயரத்தையும், ஆழத்தையும் அளந்துவிட்டேன்; எல்லா அளவுகளும் மிகச் சரியாக இருக்கின்றன; ஒவ்வொரு உயிருள்ள சிறு படைப்பும் என்னிடமிருந்து வருகிறது; உண்மையில் அது என்னுடையதாய் இருக்கிறது; எல்லா உயிரும் என்னிடமிருந்தே வருகிறது; என் சுவாசமே உயிர்; என் பரலோக வேலைகளைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள நீ விரும்புகிறாயா? ஆம், ஆண்டவரே. அப்படியானால் நாம் என் மகிமையில் உலாப் போவோம்; கடவுளின் பிரசன்னத்தில் ஓர் அழகிய தோட்டத்தில் நான் நடந்து கொண்டிருக்கக் கண்டேன்; அது மிக வண்ணமயமாய் இருந்தது; பிரகாசமான; ஆனால் ஒரு சாதாரண சூரியனிடமிருந்து வராத ஒளி ஏராளமாக நிறைந்திருந்த தோட்டம் அது. நான் நடந்து கொண்டிருக்கையில் ஒரு பிரம்மாண்டமான ஒளிப்பந்து ஏறக்குறைய அடிவானத்தைத் தொட்டுக் கொண்டிருந்ததை நான் கவனித்தேன்; அது ஒரு பெரிய சூரியனைப் போல் இருந்தது; ஆனால் விழித்திரையை எரித்துக் கொள்ளாமலே அதைப் பார்க்க முடிந்தது. எப்படி உணர்கிறாய், மகளே? இது அழகாய் இருக்கிறது; இது முழுவதும் விசித்திரமாய் இருக்கிறது! உன்னால் என்ன பார்க்க முடிகிறது? இந்த வகையான 'சூரியனை'. ஆம், இதுவே என் பரிசுத்த வசிப்பிடம்; அந்த ஒளியைச் சுற்றிலும் உன்னால் எதைப் பார்க்க முடிகிறது? முதலில் அதைச் சுற்றிப் புள்ளிகள் நகர்வது போல் எனக்குத் தோன்றியது; ஆனால் அதன்பின் அவை அதைச் சுற்றும் சிறிய சம்மணசுகளாக மாறின; அவர்கள் கோடிக்கணக்கில் இருப்பதாகத் தோன்றினார்கள். அவர்கள் என் மகிமையைச் சுற்றி வந்து கொண்டிருக்கிற கெரூபிம்கள்; வேறு என்ன பார்க்கிறாய்? அந்த சூரியனுக்குள் போகிற சில படிக்கட்டுகள்? இந்த ஒளிக்குள் நாம் போவோம், நீ தயாராய் இருக்கிறாயா? உன் காலணிகளைக் கழட்டிவிடு.

ஏனெனில் நாம் பரிசுத்தமான நிலத்தில் நுழைகிறோம்; இப்போது அந்த ஒளிக்குள் நாம் இருக்கிறோம்; அதனுள் நுழைவதன் மூலம் ஒரு மிகப் பிரகாசமான ஒளிக்குள் நான் இருப்பேன் என்று நான் நினைத்தேன்; ஆனால் இல்லை, எல்லாமே அங்கே நீல நிறமாக இருந்தது; ஆனால் என்னை எல்லாவற்றிலும் அதிகமாகத் தாக்கியது என்னவென்றால், அங்கு நிலவிய அமைதியும் சமாதானம் மற்றும் பரிசுத்தத்தனத்தின் உணர்வும் தான்; இது அதிசயத்திற்குரியது; உள்ளே எல்லாமே ஒரு வட்டமாய் இருந்தது. ஆம், இது ஒரு வட்டம் தான்; சுற்றிலும் இருந்த 'சுவர்'. சுவர் அல்ல, மாறாக உயிருள்ள வஸ்துக்கள்; அவை சம்மணசுகளாக இருந்தன; சம்மணசுகளின் ஒரு சுவர்; அந்தச் சுவர் மேலே ஒரு கவிகை போல, சம்மணசுகளால் உருவான ஒரு 'கூரையாகக்' குவிந்திருந்தன; எல்லோருமே நீல நிறமாக இருந்தார்கள்; அவர்கள் கோடிக்கணக்கில், ஆயிரம் கோடிக்கணக்கில் இருந்தார்கள்; ஒருவரோடு மற்றொருவர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள்; ஒருவருக்கு மேல் ஒருவராக எல்லோரும் ஒட்டிக்கொண்டு ஒரு திடமான சுவரைப் போல் உருவாக்கினார்கள். என் செராப்பின்கள் இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் என்னை இடையறாமல் ஆராதித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் பாடுவதை உன்னால் கேட்க முடிகிறதா? பரிசுத்தர்களுக்கெல்லாம் பரிசுத்தர்; நம் மகா உன்னத சர்வேசரன் பரிசுத்தர் என்று அவர்கள் பாடுகிறார்கள்; அவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், ஆண்டவரே? ஆயிரக்கணக்கானவர்கள், என் குழந்தாய்; பொன்னாலான வாளைக் கொண்டுள்ளவரும் மிக அழகானவருமாகிய இவர் யார்? எனக்குத் தெரியவில்லை; நான் தேவதூதரைப் போன்ற ஒருவரைக் கண்டேன்; அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டிருந்தார்; ஏனெனில் அவர் 'சாதாரண' நிறத்தில் இருந்தார்; நீண்ட வெண்ணங்கி அணிந்திருந்தார்; பொன்னிறமான தலைமுடி தோள்களின் மீது படிந்திருந்தது; அவர் தம் கரத்தில் அழகியதோர் மின்னுகிற தங்க வாளைப் பிடித்துக் கொண்டிருந்தார்; அவருடைய ஆடை வெண்மை நிறங்களில் எல்லாம் அதிபரிசுத்த வெண்மையாய் இருந்தது. வசுலா, அந்த வாள் என் வார்த்தையே; என் வார்த்தை மாசற்றது; அது ஊடுருவுகிறது, ஒளிர்விக்கிறது; திடீரென அந்தக் கவிகை ஒரு மலரைப் போல விரிந்தது. பார், சிறியவளே, பகுத்தறிய முயற்சி செய்; நான் உனக்கு உதவி செய்தபடி உன் அருகில் இருக்கிறேன்; நீ உனக்கு மேலே வரவிருக்கும் பரிசுத்த யுத்தத்தைக் காண்பாய்; மகளே, உன்னைச் சுற்றிலும் விழிப்போடு பார்த்துக் கொண்டிரு; தீமை உயிரோடு இருக்கிறது என்பதை அறிந்திரு; உன்னால் எதையாவது பார்க்க முடிகிறதா? இந்தச் சுவர் ஒரு மலரைப் போல விரிந்தபோது கருத்த வெல்வெட் போன்ற கொடூரமான கண்களோடு கூடிய குதிரைகளை நான் கண்டேன்; இந்தக் காட்சி இன்னும் விரிவடைந்தபோது அங்கே நான் ஒரு போர் நிகழ்ந்து கொண்டிருந்ததைக் கண்டேன். என் சேனை சாத்தானோடும், அவனைப் பின் செல்வோரோடும் போராடும்; இவர்களில் என் திருச்சட்டத்தை அழிக்க முயன்ற எல்லோரும் அடங்குவர்; நானே ஆல்ஃபாவும் ஒமேகாவுமாக முதலும் முடிவுமாக இருக்கிறேன் என்பதை நினைவில் வை; என் வார்த்தை நித்தியமானது; இப்போது உன்னால் என்ன பார்க்க முடிகிறது? குதிரையிலிருந்து வீசியெறியப்பட்ட ஒரு பெரிய பாம்பைப் போன்ற ஊரும் ஜந்து. என் புனிதரின் குறிப்பு: புனித மிக்கேல். ஈட்டியின் கீழ் இருக்கும் இந்தப் பறவை நாகம் வெற்றிகொள்ளப்படும்; இது நிறைவேறும்போது அவனைப் பின் செல்வோர் அனைவரும் கூட வீழ்ச்சி அடைவார்கள்; வசுலா, இப்போது நீ என் தீர்வை மண்டபத்தைக் காண வருவாய்; ஒரு பெரிய மண்டபத்தை நான் கண்டேன்; ஆனால் இதுவரை அங்கே யாருமில்லை; திடீரென ஒரு மூலையில் ஆத்துமங்களின் கூட்டம் ஒன்றை நான் கண்டேன்; சங்கிலிகள் மோதி ஒலிக்கும் சத்தம் தான் நான் திரும்பிப் பார்க்கும்படி செய்தது; அவர்கள் முற்றிலும் சோர்ந்து போனவர்களாகவும் வர்ணனைக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருந்தார்கள்; அவர்கள் மீது நிலக்கரி போன்ற அல்லது வேறு ஏதோ கரும்புள்ளிகள் இருந்தன; அவர்கள் அச்சமடைந்தவர்களைப் போல் இருந்தார்கள்; தாங்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது பற்றி நிச்சயமின்றி இருந்தனர்; அவர்கள் எங்களைப் பார்க்கவில்லை; அவர்கள் தாங்கள் இருந்த சூழ்நிலையைக் கண்டு வியப்படைந்தவர்கள் போலத் தோன்றினர். எக்காளங்கள் ஒளிப்பதைக் கேள்; அவர்கள் என்னை அறிவிக்கிற என் சமணசுக்கள்; என் கரத்தை என்னிடம் தா; ஏனெனில் நீ என் விருந்தாளியாக இருக்கிறாய்; ஆம், ஒவ்வொரு சமணசானவரும் என் முன்பாக சாஷ்டாங்கமாக விழுகிறார்; இந்த ஆத்துமங்களின் கூட்டத்தைக் கண்டாயா? இவர்கள் இப்போதுதான் பாதாள உலகத்திலிருந்து வந்து சேர்ந்திருக்கிறார்கள். குறிப்பு: உத்தரிக்கிற ஸ்தலம் சாத்தானின் வாசலுக்கு அருகில் மிகக் கீழான இடம். இவர்கள் வாதிக்கப்பட்ட ஆத்துமங்கள்; இப்போது விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்; இவர்கள் சாத்தானின் வாசல்களுக்கு அருகில் இருந்தார்கள்; இவர்களை விடுவித்தவர் யார்? நானே விடுவித்தேன்; என் பரலோக செயல்களைக் கொண்டும் பரிகாரம் செய்வோரும் என்னை நேசிப்போருமான அனைவரோடும் சேர்ந்தும் நான் அவர்களை விடுவித்தேன்; நீ என்னை நேசிக்க வேண்டுமென நான் ஏன் விரும்பினேன் என்று புரிகிறதா? எவ்வளவு ஆழமாக என்னை நேசிக்கிறாயோ, அவ்வளவு நன்றாக அவர்கள் உயர்த்தப்பட்டு என்னிடம் வர வாய்ப்பு பெறுகிறார்கள்; இந்த ஆத்துமங்களுக்கு என்ன ஆகும் என்று நீ அறிய விரும்புகிறாயா? ஆம், ஆண்டவரே, இப்போது என்ன நடக்கும்? நான் உனக்குச் சொல்கிறேன்; நான் என் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு இவர்களுக்கு ஞானஸ்தானம் அளித்து இவர்களை முழுவதுமாக விடுவிப்பேன்; ஏனெனில் இவர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்தானம் பெறும் வரை என் இராஜ்ஜியத்தில் பங்கடைய இயலாதவர்களாக இருப்பார்கள்; இவர்கள் ஞானஸ்நானம் பெறவில்லை என்று சொல்கிறீரா? பெறவில்லை; அவர்கள் அதைப் பெற விரும்புகிறார்களா? ஆம், பெற விரும்புகிறார்கள்; வா, நான் விளக்கிச் சொல்வேன்; நாம் உட்காருவோம்; நீ கண்டது அவர்களுடைய ஒரு தோற்றம்தான்; அவர்கள் உண்மையில் என் மண்டபத்தில் இல்லை; ஆத்துமங்கள் தங்கள் இவ்வுலக வாழ்வின் இறுதிவரை ஒருபோதும் தீர்ப்பிடப்படுவதில்லை; இந்த ஆத்துமங்கள் உமது மண்டபத்தில் இருக்கவில்லை என்றால், அவர்கள் எங்கே இருந்தார்கள்? இந்த ஆத்துமங்கள் ஹாதேசில் இருந்தார்கள். குறிப்பு: கிரேக்க மொழியில் உத்தரிக்கிற ஸ்தலம். ஹாதேசில் இருக்கும்போது அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள்; நீ என்னைத் தேர்ந்துகொண்டு, என்னைப் பின் செல்ல ஆசிக்கும்போது, நீ இரட்சிக்கப்படுகிறாய், ஆனாலும் என்னை நீ அடையாளம் கண்டுகொள்ளத் தவறினால், இந்தப் பிடிவாத குணத்தின் காரணமாக நீ தவறிவிடுவாய்; நீ போகுமிடம் முடிவற்ற கடும் வேதனையின் ஸ்தலமாக இருக்கும்; குறிப்பு: நரகத்தில். நான் உங்கள் எல்லோரையும் எச்சரிக்க வேண்டும்; இது முன்பே சொல்லப்பட்டிருக்கவில்லை என்பதால் அல்ல; மாறாக, எவனாவது பரிசுத்த ஆவியானவரைத் தூஷிப்பான் என்றால், அவன் ஒருபோதும் மன்னிக்கப்படமாட்டான்; இதுவே என் திருச்சட்டம்; என் முன்பாக உன் கண்களைத் தாழ்த்து, குழந்தாய். நான் அப்படியே செய்தேன். நான் உன்னை ஆசீர்வதிக்க விடு; நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்; இந்த வார்த்தைகளைச் சொல்; ஆண்டவரும் சர்வ வல்லப தேவனுமானவர் வாழ்த்தப்படுவாராக; அவருடைய இராஜ்ஜியம் நித்திய மகிமையில் அரசாள்வதாக; அவருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுத்தப்படுவதாக; அவருடைய வார்த்தை ஒவ்வொரு இதயத்தையும் ஊடுருவி அதில் இளைப்பாறுவதாக; ஆமென். வசுலா, இன்று இதற்கு மேல் ஒன்றும் செய்யாதே; ஓய்வெடு; நான் நாளைக்கு என் செய்தியை எழுதத்தருவேன்.... கடவுள் திடீரென கசப்புற்றார் என்று நான் உணர்ந்தேன்.....என் பிரதிநிதிகளாக இருந்தாலும், எனக்குப் போதுமான அன்பைத் தராதவர்களையும், என் அளவற்ற நேசத்திலிருந்து முகந்து கொள்ளாதவர்களையும் பற்றி; மகளே; வா, என் தோழமையில் நிலைத்திரு; நான் இளைப்பாற வேண்டியுள்ளது; குறிப்பு: அன்பு செய்யும் ஓர் இதயத்தால் தேற்றப்படும்படியாக. எனக்கு இன்னும் அருகில் வா, என் துயரத்தைப் பகிர்ந்துகொள்; என் தேவனே, நீர் விரும்புவது போலவே நான் செய்வேன்; ஆனாலும் உம்மைப் பிரியத்தோடு நேசிப்பவர்கள் அநேகர் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து விடாதீர்; மேலும் அவர்களுடைய பரித் தியாகங்கள் உம்மீது அவர்களுக்குள்ள நேசத்தைக் காட்டுகின்றன என்பதையும் மறக்காதீர். ஆம், அவர்கள் என் துயரங்களைத் தணிக்கிறார்கள்; என் காயங்களின் வேதனைகளை குறைக்கிறார்கள்; ஆனாலும் இவர்களைப் போன்ற ஆத்துமங்கள் என் அளவற்ற நேசத்திற்கு பரிகாரம் செய்யவும்; அதை மூடுபனி போலப் பரப்பி அதை பரவலாக்கவும், இன்னும் அதிக எண்ணிக்கையில் எனக்கு தேவைப்படுகிறார்கள்; அவர்கள் தங்கள் இதயங்களைத் திறந்து என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் ஆசிக்கிறேன்; நான் என் நேசத்தால் அவர்களுடைய இதயங்களை நிரப்புவேன்; அவர்களது இதயங்கள் நேசத்தால் நிரம்பி வழியும்போது அவர்களால் அதைப் பரப்பவும் என் ஆட்டுக்குட்டிகளைப் போஷிக்கவும் முடியும்; நேசமே, நான் உன்னில் இளைப்பாற அனுமதிப்பாயா? ஆம், என் சர்வேசுவரா, என்னில் இளைப்பாறும். நீ என்னில் இளைப்பாறுவாயா? ஆம், என் தேவனே, இளைப்பாறுவேன். அப்படியானால் வா, நான் உன்னை நேசிக்கிறேன்; நானும் உம்மை நேசிக்கிறேன், என் தேவனே. மார்ச் 27, 1987. வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; நானும் உம்மை நேசிக்கிறேன், இயேசுவே. என் குருக்கள் என் பிரதிநிதிகளாக இருப்பதால் அவர்கள் பரிசுத்தமாய் இருக்க வேண்டுமென நான் எவ்வளவு ஏங்குகிறேன்; அவர்கள் மாசற்றத்தனமும் பரிசுத்தமும் தாழ்ச்சியும் இரக்கமும் உள்ளவர்களாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; என்னுடைய அளப்பரிய அபரிதமான நேசத்தை அவர்களுடைய இதயங்களுக்குள் பொழிய என்னை அவர்கள் அனுமதிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; என் இருதயத்தின் செல்வங்களிலிருந்து அவர்கள் அதிகமாக எடுத்து அதைக்கொண்டு தங்கள் இதயங்களை நிரப்பி அது பழுகி நிரம்பி வழியச் செய்து அதன் மூலம் அதை உலகம் முழுவதிலும் பரப்ப வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன்; அவர்கள் என் ஆட்டுக்குட்டிகளைப் புரிந்து கொண்டு அவற்றை நேசிக்கவும் குணப்படுத்தவும் முயல்வது அவசியம்; ஆனாலும் இதெல்லாவற்றையும் செய்ய அவர்களால் முடியுமாறு நான் அவர்களை நேசித்திருக்கிற அளவுக்கு அவர்களும் என்னை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்; நான் என் குழந்தைகளை நேசிப்பது போல என் குருக்களும் அவர்களை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்; அவர்கள் என் திருச்சபையை மகிமைப்படுத்த வேண்டும்; நான் நேசத்தை ஆசிக்கிறேன்; வசுலா, அவர்களிடம் சொல்; என் உதடுகள் வறண்டு வெடித்துள்ளன; அவை நேசத்திற்காகத் தாகம் கொண்டுள்ளன என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக; அவர்களுடைய இதயங்கள் கல்லைப் போல் கடினமாகவும் வறண்டும் இருக்கும்போது அவர்களுடைய பரித் தியாகங்களாலும், சடங்குகளாலும் எனக்கு என்ன பயன் இருக்கும்; இந்த வனாந்தரத்தை நேர்மையைக் கொண்டு செழிப்பாக்க நான் ஆசிக்கிறேன்; எனக்கு கதகதப்பு தேவை; எனக்கு ஒரு உயிருள்ள தீச்சுவாலையும் மாசற்றத்தனமும் பக்தி பட்டுதலும் ஆர்வமுள்ள நேசமும் தேவை; நீங்கள் இந்த அளவற்ற நேசத்திலிருந்து பெற்றுக்கொண்டு உங்கள் இதயங்களை நிரப்பிக் கொள்வீர்களாக; நான் உங்களிடம் கேட்பதெல்லாம் பிரமாணிக்கமும் மாசற்றத்தனமும் அன்புமே; வாருங்கள், வந்து என்னிடம் மனம் திரும்புங்கள்; வந்து உங்கள் வாழ்வை மாற்றுங்கள்; நான் உங்களை உயர்த்துவேன்; நீங்கள் என்னை பெற்றுக்கொள்வீர்கள்; என் வழிகளை உங்களுக்கு நினைவூட்ட நான் விரும்புகிறேன்; நான் உங்களுக்கு ஏராளமான செய்திகளையும் அடையாளங்களையும் தந்திருக்கிறேன்; அந்த அடையாளங்களை நீங்கள் அலட்சியம் செய்தீர்கள்; என் வார்த்தைகளை நீங்கள் மறந்து விட்டீர்களா? என் வார்த்தைகளை வெளிப்படுத்த நான் பயன்படுத்தும் பலவீனமான கருவிகளைக் கண்டு ஆச்சரியப்படாதீர்கள்; ஏன் இந்த கற்களில் ஒன்றை கூட எடுத்து அவற்றை என்னுடைய பக்தியுள்ள சீடர்களாக மாற்ற என்னால் முடியும்; இந்தச் செய்திகளைத் தருவது இயேசுவாகிய நான்தானா என்று உங்களில் சிலர் நிரூபணங்களை தேடிக் கொண்டிருப்பீர்கள்; என் ஆவியை முழு மனுக்குலத்தின் மீதும் என் புதல்வர் புதல்வியர் மீது சகல தீர்க்கதரிசனத்தையும் பொழிவேன் என்றும் வானத்திலும் பூமியின் மீதும் அடையாளங்களை தருவேன் என்றும் நான் சொல்லவில்லையா? என் வழிகள் உங்கள் வழிகள் அல்ல; என் அடையாளங்கள் உங்கள் அடையாளங்கள் அல்ல; நான் என் திருமுகத்தை மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்; ஆனால் உங்களில் எத்தனை பேர் விசுவாசிப்பீர்கள்? நான் வேதனையால் முனங்குகிறேன்; நான் நசுக்கப்படுகிறேன்; என் வித்து இறந்த வார்த்தைகளைக் கொண்டு நிரப்பப்படுவதைக் கண்டு மூச்சுத் திணறுகிறேன்; பிரமாணிக்கும், உங்கள் இதயங்கள் இறந்திருக்கும்போது நீங்கள் பிரமாணிக்கம் உள்ளவர்கள் என்றாக சொல்கிறீர்கள்; வாருங்கள், வந்து என் இருதயத்திலிருந்து உறிஞ்சிக் கொள்ளுங்கள்; மனம் திரும்பும்படியும் பரிகாரம் செய்யும்படியும் நான் அதிகாரப்பூர்வமாக உங்களிடம் கேட்கிறேன்; என்னை மாசற்ற விதமாக நேசியுங்கள்; என் திவ்ய நற்கருணையை கனப்படுத்துங்கள்; ஆம், நீதிமான்கள் என்றும் பக்திமான்கள் என்றும் உங்களை நினைத்துக் கொள்கிற நீங்கள் எல்லோரும் மனம் திரும்புங்கள்; உங்கள் இதயங்களைத் திறந்து என்னை பெற்றுக் கொள்ளுங்கள்; நீங்கள் அப்படி செய்யும்போது நான் உங்கள் கண்களின் கட்டை திறப்பேன்; உங்கள் செவிகளைத் திறப்பேன்; வசுலா, நான் நாளைக்கு உனக்கு எழுதத்தருவேன்; நேசமே, நீ இளைப்பாறலாம்; நான் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தபோது நீ என்னைப் பகுத்துணர்ந்தாயா? ஆம், ஆண்டவரே, நீர் என் வலது கரத்துக்குப் பின்பக்கம் இருந்தீரா? நீர் அங்கே இருந்தீரா? இருந்தேன்; ஆம், ஆம், இப்போது நான் உனக்கு எதிரே இருக்கிறேன்; வசுலா, ஆம், நீ செய்வது போலவே என் பிரசன்னத்தை உணர்ந்து பார்; அஞ்சாதே, நான் உன் அருகில் இருப்பேன்; வா, நாம் ஒருவரில் மற்றவர் இளைப்பாறுவோம்;