இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 45. செப்டம்பர் 5, 1987 வசுலா, அஞ்சாதே, 'கரபந்தால்' என்ற வார்த்தையை எழுது; 'கரபந்தால்' என்பது மற்ற அடையாளங்களின் தொடர்ச்சியாக உள்ளது; 'கரபந்தாலின்' காட்சிகள் நம்பகமானவை; பார்க்காதிருக்கிற நீங்கள் எல்லோரும் விசுவசியுங்கள், விசுவசி, விசுவசி மகளே, உன் மூலம் என்னை வெளிப்படுத்த முடியும்படி நான் உன்னைப் பயன்படுத்தியிருக்கிறேன்; என் திருமாதா என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆத்துமங்களுக்குக் காட்சி அளித்தார்கள்; அந்த ஆத்துமங்களின் வாய்மொழியாக சத்தியம் உரைக்கப்பட்டது; ஆனால் என் குருத்துவ ஆன்மாக்களில் அநேகர் அவை நிச்சயமற்றவை என்று அறிவித்தார்கள், அவர்களில் சிலர் அவற்றை ஒட்டுமொத்தமாக மறுதலித்தார்கள்; 'கரபந்தால்' பற்றிய இந்த சந்தேகத்தை உன் வழியாக அகற்றும்படி நான் என்னை வெளிப்படுத்தியிருக்கிறேன்; 'கரபந்தாலின்' காட்சிகள் நம்பகமானவை; என் குழந்தைகள் உண்மையில் என் மாதாவைக் கண்டார்கள்; அவர்களுடைய செய்தியைக் கேட்டார்கள்; வசுலா, அதிகக் கடினமான துன்பச் சோதனை உன் மீது வந்து, உன் தோள்களின் மீது என் சிலுவையின் பாரத்தை அதிகமாக்கும், அது என் நீதியின் கிண்ணத்தை அதிகரிக்கும்; நான் உலகிற்கு ஏற்கனவே முன்னெச்சரிக்கை செய்துவிட்டேன்; என் தேவனே, அநேகமாக மிகச்சிலர் தான் இந்த நிகழ்வைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். உண்மைதான்; என் குருத்துவ ஆன்மாக்கள் கொண்டுள்ள சந்தேகங்கள் மற்றும் பயங்களின் காரணமாக அநேகர் அறியாமல் இருக்கிறார்கள்; சந்தேகப்படுவதன் மூலம் அவர்கள் என் பரலோக வேலைகளை மறுதலிக்கிறார்கள்; நான் சர்வ வல்லபர் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்; இருதயத்தில் இறுகிப் போனவர்களாக அவர்கள் தங்கள் ஆன்மீகத்தைத் தொலைத்துவிட்டார்கள், குருடாக்கப்பட்டவர்களாக, அவர்கள் ஒளியின்றியும் ஞானமின்றியும் தேடுகிறார்கள்; என் பணிகள் எல்லாம் ஒருபோதும் கற்றவர்களுக்குத் தரப்படாமல், எப்போதும் சாதாரணக் குழந்தைகளுக்கே தரப்பட்டுள்ளன; என் பணிகள் அவர்களுடைய கண்களுக்கு வழக்கத்துக்கு மாறானவைகளாகத் தோன்றுகின்றன; ஏனென்றால் அவர்கள் தங்களையே என்னோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான்; காலங்களின் தொடக்கத்திலிருந்தே நான் உங்களை ஒருபோதும் கைவிட்டதில்லை; குறிப்பு: தரப்படுகிற அடையாளங்கள் நம் மத்தியில் அவர் பிரசன்னமாய் இருந்து, நம்மை உற்சாகப்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டும் படியாகவே என்பதை நான் புரிந்து கொள்ளும்படி அவர் செய்தார். வசுலா, உனக்குப் பரிசேயர்களை நினைவு இருக்கிறதா? ஆம், ஆண்டவரே. அவர்கள் ஒருமுறை மோயேசனின் வேதப் பிரமாணத்திற்கு எதிராக நான் போதிப்பதாக என்னைக் குற்றம் சாட்டினார்கள்; இன்று மட்டும் என்ன வித்தியாசம் இருக்கிறது? நான் ஒழுங்கற்ற கலப்புள்ள போதனைகளை தருவதாகவும், அவர்களுடைய சட்டத்துக்கு எதிராக செல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன்; இன்றைய குற்றசாட்டுகளும், நிச்சயமின்மையும் இதிலிருந்து தூரமானவை அல்ல; இதை நான் உனக்குச் சொல்லவிடு; வெளிப்பாடுகளையும் காட்சிகளையும் செய்திகளையும் மறுப்பவர்களே என்னைக் காயப்படுத்துவவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் என் சரீரத்தில் முட்களாக இருக்கிறார்கள்; சிறிது காலத்துக்கு முன் நான் என் இரத்தம் வடியும் சரீரத்தின் உள்ளாழங்குளுக்குள் உன்னை வழிநடத்துவேன் என்று உன்னிடம் சொல்லியிருந்தேன்; குறிப்பு: ஜூன் 11 அன்று இதே செய்தியைக் கடவுள் எனக்குச் சொன்னார். தாம் அவர்களைத் தண்டிக்காமல் விடப்போவதில்லை என்று அவர் கூறினார். அந்தச் சமயத்தில் அவர் யாரைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. என்னைக் காயப்படுத்துபவர்களை என் விரலால் நான் உனக்குச் சுட்டிக்காட்டுவேன் என்று நான் உன்னிடம் கூறினேன்; நான் இயேசு கிறிஸ்து, கடவுளின் நேசகுமாரன்; வசுலா, அஞ்சாதே. ஏனெனில் நான் உனக்கு முன்பாக இருக்கிறேன்; செப்டம்பர் 6, 1987 இயேசுவா? நான்தான்; நான் எப்போதாவது உன்னை கைவிடுவேனா? மலரே, நேசத்தின் மலர் வளையங்களால் என்னைச் சூழ்ந்துகொள்; என் குழந்தைகளை என்னைச் சுற்றி ஒன்று கூட்டு, நான் அவர்களை ஆசீர்வதிக்க விடு; அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த நான், இந்த நேரத்திற்காகவே நான் காத்திருந்தேன்; அவர்களை வரவேற்கவும், அவர்களை ஆசீர்வதிக்கவும் நான் வருகிறேன்; என் பிரியத்துக்குரியவர்களை, எனக்குச் சொந்தமானவர்களை, என் ஆட்டுக்குட்டிகளை ஒன்று கூட்டு, எனக்காக அவர்களை அணைத்துக்கொள், எனக்காக அவர்களை வருடி சீராட்டு, என் வாக்குத்தத்தத்தை அவர்களுக்கு நினைவூட்டு, அவர்களை நேசி, அவர்களை ஒன்றாக இணை; எனக்கு இன்னும் அருகில் வா, நான் ஞானத்தைக் கொண்டு உனக்குப் போதிக்க என்னை அனுமதி; செப்டம்பர் 7, 1987 சமாதானம் உன்னோடு இருப்பதாக; உம்மோடும் இருப்பதாக, ஆண்டவரே. என்னைக் கிரகித்துக் கொள், மலரே, என் ஒளி உன் மீது பிரகாசிக்கக் கடவது; உன் கவலைகள் தணிந்து போகட்டும்; என் சுவாசம் அவற்றைக் கலைத்துவிடும், அவற்றின் அமைப்பு விழாமற் போகாது; அது அவற்றைச் சிதறடித்து நீ புன்னகைத்துக் கொண்டிருக்கச் செய்யும்; என் நீதியின் பனித்துளி உன்னை அலங்கரிக்கும், மலரே, என் இன்றைய செய்தியைப் பெற்றுக்கொள்; அஞ்சாதே, ஏனெனில் நீ பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே என் திட்டங்களை நான் உருவாக்கி வைத்திருக்கிறேன்; எனக்கோ உம் செய்திகளுக்கோ அல்லது எல்லோருக்குமோ என்ன நேர்ந்தாலும், அது உம் சித்தத்தினால் தான் என்பதுதான் இதன் அர்த்தமா? ஆம், நேசமே, வரவிருக்கும் எல்லாமே, என்னிடமிருந்து தான் வரும்; நான் தவறிவிடுவேனோ என்று கவலைப்படுகிறேன், ஆண்டவரே. என் திட்டங்களை நீ எப்படித் தவறவிடுவாய், யோசி, நீ ஒன்றுமில்லாமையாக இருக்கிறாய்; ஆகவே ஓர் ஒன்றுமில்லாமை, எப்படி ஏதோ ஒன்றாக இருக்க முடியும், அந்த ஏதோ ஒன்று எப்படி உண்மையாகவே அது இருந்தால் எப்படி என் திட்டங்களைக் குலைக்க முடியும்? ஆனால் நீ ஒன்றுமில்லாமையாகவே இருக்கிறாய், ஆகவே கவலைப்படாதே; எல்லாவற்றையும் என் கரங்களில் விட்டுவிடு; வசுலா, நான் உன் போதகர்; நீ என்னோடு இருக்கும்போது, அஞ்சாதே; தயவுசெய்து, நான் உம்மிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன்; தைரியமாகச் சொல்; நான் முழுவதும் பைத்தியமாக இருப்பதாக நான் நினைக்கிற நேரங்கள் இருக்கின்றன என்பது உமக்குத் தெரியுமா? புத்தி சுயாதீனம் இல்லாதவளாக? தெரியும்; அப்படியானால் இதை ஒருநாள் நான் யாரிடம் காட்டுவேனோ அவர்களைப் பற்றிக் கற்பனை செய்து பாரும்! அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள். இதற்கு ஒரு இயற்கையான விளக்கத்தைக் கண்டுபிடிக்கத் தங்களால் முடியும் என்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் நம்பவே மாட்டார்கள். நம்புவது ஒரு வரப்பிரசாதம்; விசுவாசம் கொள்வதும் ஒரு வரப்பிரசாதம் தான், என் பரலோக வேலைகளை காண்பதும், கேட்பதும், புரிந்து கொள்வதும் கூட ஒரு வரப்பிரசாதம் தான், எல்லாமே என்னால் தரப்படுபவை; ஆம், ஆண்டவரே. வசுலா, நான் உன்னோடு பணிபுரிந்திருக்கிறேன்; மகளே, என்னை மகத்துவப்படுத்து; உம் உதவியைக் கொண்டு நான் தவறிப் போகாமல் இருப்பேன்.... அப்படியானால் என் திருமாதாவிடமிருந்து வருகிற இந்த வார்த்தைகளுக்குச் செவிகொடு; வசுலா, பெத்தி மௌ, குறிப்பு: கிரேக்க மொழியில் "என் குழந்தாய்" என்று பொருள். அஞ்சாதே, நான் உன்னோடு இருக்கிறேன்; என் திருமகன் இயேசு உனக்குத் தரும்படி நீ அவரிடம் கேட்டுக்கொண்டிருந்த சாட்சியங்களையும், அடையாளங்களையும் போதிய அளவு தராமல் தம்மைக் கட்டுப்படுத்தி இருக்கிறார், அவர் அப்படிச் செய்வதற்குச் சரியான காரணங்கள் உள்ளன; ஆயினும் விசுவசிக்க உனக்கு வரப்பிரசாதம் தந்திருக்கிறார், ஞானத்தைக் கொண்டு உனக்குப் போதித்திருக்கிறார்; வசுலா, நீ உண்மையாகவே கண்மூடித்தனமாக விசுவசித்திருக்கிறாய்; நான் விசுவசித்திருக்கிறேனா? விசுவசித்திருக்கிறாய், இல்லாவிடில் எங்களிடம் வருவதிலும், எழுதுவதிலும், அவருடைய சித்தப்படி பயன்படுத்த உன்னை அனுமதிப்பதிலும் நீ இந்த பக்தி ஆர்வத்தைக் கொண்டிருந்திருக்க மாட்டாய்; நேசமே, நீ இதைச் செய்துள்ளது, நீ கண்மூடித்தனமாக நம்புகிறாய் என்பதை நிரூபிக்கிறது, கடவுளும் இதில் மகிழ்ச்சி அடைகிறார்; உன் விசுவாசம் பெரிதாய் இருக்கிறது; இயேசு இதைக் கொண்டு மற்றவர்களும் விசுவாசம் கொள்ளும்படியும், தமது பரலோக வேலைகளில் கண்மூடித்தனமாக விசுவாசம் கொள்ளும்படியும் அவர்களுக்குக் கற்பிக்க விரும்புகிறார், கடவுளுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் ஒரு குழந்தையைப் போல நீயும் மாசற்றவளாக இரு; புனித மரியாயே, அவர்கள் அப்படி விசுவசிக்கவில்லை என்றால் என்ன செய்வது? குறிப்பு: வேறு வார்த்தைகளில் சொன்னால், நாம் சுயாதீனம் உள்ளவர்கள். நாம் நம் சொந்த சுயாதீன சித்தத்தைக் கொண்டிருக்கிறோம். உன் துன்பங்கள் பெரியவையாய் இருக்கும்; நீ இயேசுவின் சாயலைப் பிரதிபலிக்கிற கண்ணாடியைப் போல் இருப்பாய்; குழந்தாய், அவருடைய துன்பங்கள் உன் மீது பிரதிபலிக்கும்; அவர்கள் அவநம்பிக்கையும் அவமானமும் காட்டினால் இயேசு துன்புறுவார் என்று சொல்கிறீர்களா? மிகச் சரியாகச் சொன்னாய்; இயேசு துன்பப்படுவார்; உன் மீது அவரது துன்பங்கள் காணப்படும்; ஆனாலும் அவர் தம் திட்டத்தை ஏற்கனவே வகுத்துவிட்டதால் எந்த முரண்பாடுகளும் இல்லாத விதமாக அவர் ஏன் அவற்றை ஏற்படுத்தி இருக்க முடியாது? குழந்தாய், மனிதர்கள் சிந்திக்க முற்படும் விதம் இதுதான்; அவருடைய போதனைகளை மறக்காதே; இயேசு தமது வேலைகள் வரப்பிரசாதத்தோடு ஏற்று அங்கீகரிக்கப்பட வேண்டுமென விரும்புகிறார்; குறிப்பு: புனித மாமரியின் குரல் தொணி திடீரென மாறி, மிகத் தீவிரம் உள்ளதாகிவிட்டது. என்னை யாராவது நோகடிக்க விரும்புவதைத் தாம் கண்டால், அதைப் பார்த்துக்கொண்டு நிற்கப் போவதில்லை என்று இயேசு என்னிடம் கூறினார்; அவர் உண்மையாகவே அப்படிச் சொன்னார்; மகளே, நான் உனக்குச் சொல்கிறேன், நான் அதைப் பார்த்துக்கொண்டு நிற்க மாட்டேன்! நான் உன்னை நேசிக்கிறேன், அவர்கள் உன்னை நோகச் செய்வதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்; இங்கே நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். நான் ஒரு கோழை; நான் பயப்படுகிறேன், ஆனாலும் நான் உங்களோடும், இயேசுவோடும் ஒட்டிக்கொள்வேன். மகளே, நான் இன்னும் ஒன்று உனக்குச் சொல்வேன்; கடவுள் மனிதர்களின் மீது தமது நீதியைச் சுமத்தி இருக்கிறார்; அவருடையக் கிண்ணம் இப்போது நிரம்பிவிட்டது; நான் சொல்வதைக் கவனமாக கேள்; இந்த வார்த்தைகளுக்கு அப்பால் இன்னும் பல காரியங்கள் மறைந்திருக்கின்றன; வசுலா, கடவுளை மகிமைப்படுத்து; நான் உன் பரிசுத்த மாதாவாக இருக்கிறேன்; மகளே, என்னைச் சார்ந்திரு; கடுமையாக உழைப்பதில் சோர்ந்து போகாதே. இயேசு சிலுவையில் அறையப்படும்படி சென்ற வழியில் எல்லோராலும் கைவிடப்பட்டார் என்பதை நினைவில் வை; அவர் தனியாகவே தம் சிலுவையைத் தாங்கினார்; சரி, மாதாவே, அவர் எனக்குத் தருவதை விட அதிகமாக நான் எதையும் கேட்க மாட்டேன். வசுலா, நீ கேட்காமல் விட்டுவிட்ட கேள்விக்கு நான் பதில் சொல்வேன்; அவர்கள் மீண்டும் விசுவசிக்காவிட்டால், கடவுளின் கடும் சினம் அதிகரிக்கும்; அது அவரது நீதியின் கிண்ணத்தின் அளவை அதிகரிக்கும்; அது கடவுள் உனக்குத் தந்துள்ள காட்சியைப் போல் இருக்கும்; குறிப்பு: செப்டம்பர் 1, 1987. ஜெபி, பரிகாரம் செய்; ஏனெனில் காலங்களின் முடிவு இப்போது மிக அண்மையில் உள்ளது; குறிப்பு: ஒரு யுகத்தின் முடிவு. சரி, மாதாவே, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான்தான், இயேசு; சிறியவளே, சிறியவளாகவே இருந்து கொள்; நாம் ஒருவரோடு ஒருவர் பேசுவோம்; இந்த நாளை நாம் பகிர்ந்து கொள்வோம்; உன் பரிசுத்த தோழனாக இருக்க என்னை அனுமதி; ஆண்டவரே, உம்மோடு பேச என்னை அனுமதியும். நான் உம் பிரசன்னத்தை நினைவில் வைத்துக் கொள்வேன். வா, நாம் நாங்கள்; செப்டம்பர் 7, 1987 மகளே, சமாதானம் உன்னோடு இருப்பதாக; நான் மீண்டும் உன்னிடம் சொல்லப்போகிற அந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்; குறிப்பாக இப்போது அவற்றை அதிகமாக நினைவில் வைத்திரு; ஆண்டவராகிய நான் கதவைத் தட்டியபடி, வாசலில் நின்று கொண்டிருக்கிறேன்; உங்களில் ஒருவன் நான் அழைக்கும் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால் நான் உள்ளே பிரவேசித்து, அவன் அருகில் அமர்ந்து அவனுடைய உணவைப் பகிர்ந்து கொள்வேன்; நான் வெற்றி பெற்று என் பிதாவின் அரியணையில் அவரோடு என் இடத்தை எடுத்துக் கொண்டது போல வெற்றி பெற்றவர்கள் என் அரியணையைப் பகிர்ந்து கொள்ள நான் அனுமதிப்பேன்; கேட்க செவியுள்ளவன் எவனும் தேவ ஆவியானவர் சபைகளுக்கு கூறுவதை கேட்கக் கடவான்; அவர்களுக்கு சொல், மகளே, அவர்களுக்குச் சொல், என் வார்த்தைகளை அவர்களுக்கு நினைவூட்டு; ஏனெனில் அவர்கள் அவற்றை மறந்துவிட்டார்கள். இயேசுவே, எனக்கு உதவும். வசுலா, நான் எப்போதும் உனக்கு உதவுவேன்; நான் பெருமூச்சறிந்தேன். உமக்கு நன்றி, ஆண்டவரே. செப்டம்பர் 8, 1987 வசுலா, என்னை மகிழ்வி; என்னைப் பெற்றுக்கொள்; நீ என்னை பின்செல்ல வேண்டுமென நான் விரும்புகிறேன்; என் தேவ நற்கருணைப் பேழையில் என்னை நீ சந்திக்கும்படி உன்னை நான் வழிநடத்துவேன்; என்னைப் பெற்றுக்கொள்; அப்போது நான் உன்னை ஆசீர்வதிப்பேன்; குறிப்பு: திவ்ய நன்மை வாங்க இயேசு என்னை மீண்டும் அழைக்கிறார். நான் உன்னை நேசிக்கிறேன்; ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன். நான் வருவேன். செப்டம்பர் 9, 1987 வசுலா, நான் உனக்குத் தரும் வார்த்தைகள் அறிவிக்கப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன், அந்த வார்த்தைகள் எல்லா இடங்களிலும் பரப்பப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன், "ஆண்டவராகிய நான் கரபந்தாளில் உள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறேன்;" வசுலா, அவர்களை ஆசீர்வதி, அவர்களை ஒன்றுபடுத்து; உம் உதவியைக் கொண்டு நான் அனைத்தையும் செய்வேன், ஆண்டவரே... அதன்பின் "நரகம் முழுவதும் அவிழ்த்து விடப்பட்டது." சாத்தான் கோபவெறி கொண்டான். அவனுடைய தூதர்களும் தான். அவர்களுக்குப் பெயர்கள் கூட இருக்கின்றன. என்னை தாக்கிக் கொண்டிருந்தவர்களை நான் அறிவேன்; வசுலா,வா; அவர்கள் உன்னை எவ்வளவு அதிகமாக வெறுக்கிறார்கள் என்பதை நீ புரிந்து கொள்ளும்படி நான் செய்வேன்; அஞ்சாதே; இயேசு பூமிக்கடியில் என்னை நடத்திச் சென்றார். அங்கே நாங்கள் நின்றோம். நான் நரகத்தை அடையாளம் கண்டுகொண்டேன். ஏனெனில் என் பாதங்கள் பிசுபிசுப்பாயும், கருப்பான சேற்றில் ஒட்டுவதாயும் இருந்தன. ஒரு இருண்ட குகை. கவனித்துக் கேட்கும்படி இயேசு என்னிடம் கூறினார். "ஆஹா, இது மறுபடியும் அவள்தான். மற்றொரு அசிங்கமான கிழவி! போ, இப்போது அவளை காயப்படுத்துவதில் கவனமாய் இரு. என்றென்றைக்குமாக அவளை முடமாக்கிவிடு. நாம் வெற்றி பெறும்படி அவளைக் காயப்படுத்துங்கள். அவளை மோசமாக நடத்துங்கள். நான் அவள் மீதும் எஞ்சிய அவருடைய படைப்பின் மீதும் கொண்டுள்ள வெறுப்பை அவள் உணர்கிறாள். சாபி, நீயும் போய் அவளைக் காயப்படுத்து. நான் உங்கள் எல்லோரையும் வெறுக்கிறேன்.!" சாத்தான் மீண்டும் ஒரு பைத்தியக்காரனைப் போல் இருந்தான். இயேசு என்னை மீண்டும் வெளியே இழுத்தார். இப்போது அவனுடைய வெறுப்பை நீ கேட்டுள்ளதால், நீ எழுதுவதை நிறுத்தும்படி என்ன ஒரு தீர்மானத்தோடு அவன் உன்னை துரத்திக் கொண்டு வருகிறான் என்பதை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்; இயேசுவாகிய நான் உன்னை நேசிக்கிறேன், என் பார்வையிலிருந்து ஒரு கணம் கூட நீ ஒருபோதும் விலகி விடாதபடி, என் இறக்கைகளின் அடியில் நான் உன்னைப் பாதுகாக்கிறேன்; பிற்பாடு: வசுலா, இந்தப் புத்தகங்களை வாசிக்காதே, அவற்றில் ஞானமும் இல்லை, சத்தியமும் இல்லை; ஞானம் பரிசுத்த வேதாகமத்தில் காணப்படுகிறது; நான் சொல்வதை நீ கேட்டாய் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்; நான் அதிகமாக ஒன்றும் செய்திருக்கவில்லை, ஏனெனில் நான் நாள் முழுவதும் பெரும்பாலும் தியானம் செய்து கொண்டிருந்தேன். பொழுது போய்விட்டது என்பதை நான் உணர்ந்தபோது, உணவு தயாரிக்கச் சென்றேன். நான் வேலையை தொடங்கியதும், என்னை கவனித்துக் கொண்டிருந்த இயேசு என் வேலையை இடைமறித்தபடி, "வசுலா, எனக்கு ஒரு கண நேரம் ஒதுக்குவாயா?" என்று கேட்டார். ஆம், உமக்காக ஒரே ஒரு கணமல்ல, கோடிக்கணக்கான கணங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் பதில் சொன்னேன். உடனே வேலையை நிறுத்திவிட்டு எழுதச் சென்றேன். நான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை வாசிப்பதை நிறுத்தும்படி அவர் என்னிடம் கூறினார். அது நல்லதல்ல என்று அவர் அறிவுறுத்தினார். அது நான் அதுவரை ஒருபோதும் கேள்விப்பட்டிராத காரியங்களைப் பற்றியதாகவும், பழங்கதைகளையும் மதங்களையும் பற்றியதாகவும், முழுவதும் வேத வல்லுனர்களாக இல்லாதவர்களால் எழுதப்பட்டதாகவும் இருந்தது. பிற்பாடு மாலையில்: என் முகத்தின் இந்த எல்லாப் பகுதிகளும் காயப்படுத்தப்பட்டிருந்தன; புனித அடக்கத்துகிலின் புகைப்படத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆண்டவரே, நான் பார்ப்பது அனைத்துமா? ஆம், அனைத்து பகுதிகளும் தான், அவர்கள் என் தாடியின் ஒரு பகுதியைப் பீய்த்தெடுத்தார்கள், என் வலது கண்ணைக் காயப்படுத்தினார்கள்; இயேசுவே, என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. நான் உம்மை நேசிக்கிறேன் என்று என்னிடம் சொல்! நான் உம்மை நேசிக்கிறேன். வசுலா, ஒருபோதும் அதைரியப்படாதே; நான் உன்னோடு இருக்கிறேன்; நாம் சேர்ந்து என் சிலுவையைச் சுமந்து கொண்டிருக்கிறோம்; செப்டம்பர் 10, 1987 வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; நான் வந்து உன்னை விடுவிக்கும் வரைக்கும் என் மீது கண்மூடித்தனமாக விசுவாசம் கொண்டிரு; இயேசுவே, நான் உமக்கு மிகுந்த வேதனை தந்த சமயங்களும் உண்டு என்பதை நான் அறிவேன். அச்சமயங்களில் சந்தேகங்களில் விழுந்தேன். இச்சமயங்களில் நீர் தோமையாரைப் பத்தால் பெருக்கினால், வரும் விடையாகத்தான் நான் இருந்தேன். மலரே, நீ மிக மென்மையானவள், உன் இந்த கசங்கக்கூடிய மென்மைதான் என்னை ஈர்க்கிறது, நேசமே, இதெல்லாம் எனக்குத் தெரியாதா? நான் உன் பலமாக இருக்கிறேன்; இயேசு என் காதில் கிசுகிசுப்பாக ஒரு விஷயத்தைச் சொன்னார். நான் அதை ரகசியமாக வைத்துக்கொள்வேன். வசுலா, கரபந்தால் அற்புதங்களின் தொடராக இருக்கிறது, இந்த அற்புதங்களுக்கு நடுவில், நான் மற்ற அடையாளங்களையும் தந்து வருகிறேன்; எந்த அற்புதங்கள் என்று உம்மால் எழுத முடியுமா? எழுது; லூர்து, பாத்திமா, இப்போது சான் செபஸ்டியானில் உள்ள கரபந்தால் என்று நீ எழுத வேண்டுமென நான் விரும்புகிறேன்; என்னை மகிமைப்படுத்து; நானே இந்த உலகத்தின் ஒளி என்பதை நினைவில் கொள்; திடீரென்று இயேசு நேற்றிரவு நான் கண்ட ஒரு கனவைப் பற்றி எனக்கு நினைவுபடுத்தினார். அதை நான் மறந்து போயிருந்தேன். அது சமீபத்தில் நான் கண்ட காட்சியாக இருந்தது. ஆனால் அது என் கனவில் அதிக மோசமானதாக தோன்றியது. கவனி, இந்த காட்சியை நீ உணர்ந்து பார்க்கும்படியாகவே அதை உன் தூக்கத்தில் நீ காண நான் அனுமதித்திருக்கிறேன்; இல்லை, தப்புவதற்கு வழியே இல்லை! ஒரு பிரம்மாண்டமான அலையைப் போல அது வருவதையும் ஓடி மறைந்து கொள்வது சாத்தியமில்லை என்று அறிந்தும் நான் ஓடி மறைந்து கொள்ள முயற்சி செய்ததையும் நான் கண்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் நீர் எங்களை நேசிக்கிறீர் என்றால், ஏன் இதை செய்கிறீர்? ஏன்? நான் அன்பின் கடவுளாகவும் அதே வேளையில் நீதியின் கடவுளாகவும் அறியப்பட்டிருக்கிறேன்; இதை நிறுத்த நாங்கள் என்ன செய்ய முடியும்? மிகப் பிரம்மாண்டமான பரிகாரங்கள் இப்போது உங்கள் எல்லோரிடமிருந்தும் தேவைப்படுகின்றன, நீங்கள் ஒன்றிணைந்து, ஒன்றாக இருந்து ஒருவரை ஒருவர் நேசித்து என்னில் விசுவாசம் கொண்டு என் பரலோக வேலைகளில் விசுவாசம் கொண்டு, இந்த பரிகாரங்களை செய்ய வேண்டும்; ஏனெனில் நான் எப்போதும் உங்கள் மத்தியில் இருக்கிறேன்; செப்டம்பர் 11, 1987 வசுலா, சமாதானத்தைக் கண்டடையும்படி மட்டும் ஞானம் உனக்கு போதிக்கவில்லை என்பதை நான் உனக்கு சொல்லவிடு; ஞானமானது தன்னுடைய வெள்ளைப் போலத்தைக் கொண்டு உன்னை மூடுவது மட்டுமின்றி, தன் பக்திக்குரிய நேசத்தால் உன்னை வாசனையாக்குகிறது; ஞானம் சுற்று வழிகளில் உன்னை நடத்திச் சென்று, நீ பயப்படும்படி செய்யவில்லை, இப்போது உன்னைக் கைவிடப் போவதாக சோதிக்கவும் இல்லை; இல்லை வசுலா, நீ எங்கிருக்க வேண்டுமென நான் விரும்பினேனோ, அங்கேதான் நான் உன்னை நடத்தி வந்திருக்கிறேன்; நான் தொடங்கி வைத்து, ஆசீர்வதித்ததை நானே முடித்து வைப்பேன்; வா, என் தோலின் மீது இளைப்பாறு; பிற்பாடு: சிறியவளே, மனிதர்களிடம் நான் பிரமாணிக்கத்தை அரிதாகத்தான் காண்கிறேன்; பிரமாணிக்கமின்மையாகிய மனிதர்களின் பலவீனத்திற்கு எதிராக நான் உன்னை எச்சரிக்க விரும்புகிறேன்; நான் உன்னை நேசிக்கிறேன்; நீ எவ்வளவு பலவீனமானவள் என்பதை அறிந்திருக்கிற நான் உன்னைத் தாங்கிக் கொள்வேன்; மலரே, உன்னை முத்தமிட என்னை அனுமதி; நான் கடவுளை நோக்கிச் சாய்ந்தேன், அவர் தமது குழந்தையாகிய என் நெற்றியில் முத்தமிட்டார். நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னை அர்ச்சித்தேன், நான் உன்னை விடுவித்தேன்; வா, நானும் நீயும், நீயும் நானும், பக்தி பற்றுதலோடு என்னை நேசித்து, என்னை மகிமைப்படுத்து; நான் உம்மை நேசிக்கிறேன், பரிசுத்த பிதாவே, நானும் திருக்கரங்களை முத்தமிடலாமா? மகளே, எப்போதும் முத்தமிடு; நான் அவருடைய மணிக்கட்டுகளை முத்தமிட்டேன்.