இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 23. பிப்ரவரி 26, 1987. பெயத்ரிஷும் நானும் சிட்டாங்கிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து டியாங் கிராமத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஆற்றைக் கடந்து சென்றோம். அங்கேதான் நாங்கள் ரேமண்ட் துசாரியே என்பவரைச் சந்திக்க முடியும்; இவர் பிரெஞ்சு நாட்டவர், பாதி வனவாசி, தியானத்தால் கடவுளைக் காண இயலும் என்ற கோட்பாடு உள்ளவர். கத்தோலிக்க குரு, ஆனால் அவர் இந்து, முஸ்லிம் மற்றும் புத்த மதத்தவரும் கூட. எல்லாம் கலந்தவர். ஒரு சில கருத்துகளை அவரோடு பகிர்ந்து கொள்ளவும், என் எழுத்துக்களை அவருக்குக் காட்டவும் அங்கு சென்றோம். அவர் அவற்றை "இயேசுவின் திரு இருதயத்தின் தேவ வெளிப்பாடுகள்" என்று அழைத்தார். அவர் சொன்னது, "வெளிப்பாடுகள் பற்றிய சிந்தனைக்கும் அவற்றின் நோக்கத்திற்கும் மிகப் பொருத்தமானதாக இருந்தது." அதாவது, அவை எனக்கு மட்டுமல்ல, மாறாக மற்றவர்களுடைய நன்மைக்காகவும் தான் என்று அவர் சொன்னார். எங்கள் முழு பயணமும் யாரோ சரியாக திட்டமிட்டது போல, எந்தப் பிரச்சனையும் இன்றி ஒழுங்காக நடந்தது. டியாங்குக்கு நாங்கள் புறப்படுவதற்கு முன், எனக்கு மிகுந்த துயரம் அளித்த ஓர் உணர்வு இருந்தது; நான் எதற்கு டியாங்குக்குப் போகிறேன்? எதைக் காட்ட இந்தச் சிறு பிள்ளை தனத்தைக் காட்டவா? இதைக் குறிப்பிட மறந்து போனேன். அந்த நாள் முழுவதும் அவஸ்தையாகக் கழிந்தது. அதன்பின் நாங்கள் புறப்பட்ட அதே நாள் விடிய காலையில் தோன்றிய முதல் வார்த்தைகள்: "ஒரு பொய்யன் உன்னை வழிநடத்திக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் சேகரித்து எரித்துவிடு." அப்போதுதான் தீமையானது முந்தின நாளிலிருந்து என் பயணத்தை தடுத்து நிறுத்திவிட முயன்று கொண்டிருந்தது என்பதை நான் அறிந்து கொண்டேன். இந்தச் செய்திக்கு ஒரு சில நொடிகள் கழித்து, கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்தேன். "நான் உன்னோடு இறுதிவரை இருப்பேன், நாம் என்றென்றைக்குமாக இணைந்திருக்கிறோம்; குழந்தாய், என் ஒளி உன்மீது ஒளிரக்கடவது; யாவேயாகிய நான் உன்னை வழிநடத்துகிறேன்; என்னை நேசிப்பதன் மூலம் என்னை மகிமைப்படுத்து" என்று அவர் எழுதினார். மார்ச் 1, 1987. இன்று ஒரே நாளில் பல தடவைகள் என்னைச் சுற்றிலும் இயேசுவை நான் உணர்ந்தபோது, அவர் என்னிடம், "எழுதுவதில் சோர்ந்து போகாதே," என்று சொன்னார். வசுலா, என் வார்த்தைகள் அநேகருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; என் உதடுகளிலிருந்து நேரடியாக வருகிற வார்த்தைகள், ஏனெனில் உனக்கு நான் சொன்ன வெளிப்பாடுகள் எல்லாமும் என்னிடமிருந்து வந்தவையே; இந்த முறையிலும் நான் செயலாற்றுகிறேன்; அவ்வப்போது நான் வந்து, என்னால் ஏற்கனவே கற்பிக்கப்பட்டுள்ள அனைத்தையும் புதுப்பிக்கிறேன்; உனது இரட்சகர் நானே, நான் எப்போதும் உன் அருகில் இருக்கிறேன், தீமையிலிருந்து உன்னை எப்போதும் காப்பாற்ற ஆயுத்தமாக இருக்கிறேன்; என் வார்த்தை இதயங்களை ஊடுருவி, அவற்றில் இளைப்பாறும் என்ற நம்பிக்கையில் நான் வருகிறேன்; வசுலா, மற்றவர்களுக்காக நீ பரிகாரம் செய்வாயா? இங்கே மிகச் சரியாக "பரிகாரம்" என்பதற்கு என்ன அர்த்தம், ஆண்டவரே? பரிகாரம் என்பது என் நேசத்திற்குப் பதில் நேசம் காட்டாத மற்றவர்களுக்காக ஈடு செய்வது, மற்றவர்களுக்காக காரியங்களைச் சரி செய்வது; நீ செய்ய வேண்டியது முழு இருதயத்தோடும் மனதோடும் என்னை நேசிப்பதுதான்; நான் உம்மை நேசிக்கிறேன்! ஆனாலும் அதிகமாக பரிகாரம் செய்யும்படி அளவில்லாமல் உம்மை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். வா, நான் உனக்குக் கற்றுத் தருவேன், என் வார்த்தையைக் காப்பாற்றாமல் இருந்ததாக நான் எப்போதாவது அறியப்பட்டிருக்கிறேனா? மகளே, நானே உன் போதகர், என்னிடம் நீ எல்லாவற்றையும் கற்றுக்கொள்வாய்; நான் உன்னை முன்னேற்றுவேன்; நீர் எனக்குத் தருபவற்றிற்கெல்லாம் நான் தகுதியற்றவள், தாழ்ச்சியும், மிகுந்த அர்ப்பணமும் உள்ளவர்களோடு என்னை ஒப்பிடும்போது, இதுவே உண்மை என்பது எனக்குத் தெரியும். மிகவும் பரிதாபத்துக்குரியவளாகத் தெரிந்து கொள்ளப்பட்டிருப்பதாலும், அதைவிட மோசமாக இந்த வழிகாட்டுதல் எனக்குத் தரப்படுவதாலும், என்னைப் பற்றி நான் ஆங்காரம் கொள்ளவில்லை. என் தகுதிகளுக்காக நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது எனக்குத் தெரியும். அதற்கு மாறாக, என் ஈனத்தன்மையின் காரணமாகவே நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். ஆண்டவரே, நீரே இதை உறுதிப்படுத்தி இருக்கிறீர். என் சமாதானத்தைக் கொண்டிரு, வசுலா; நீ பரிதாபமானவள் என்றாலும், எப்படியும் நான் உன்னை நேசிக்கிறேன்; உன் ஈனத்தன்மை முழுவதையும் என்னிடம் தந்துவிடு, என் இரக்கம் அதைச் சுட்டெரித்துவிடும்; என்னால் நேசிக்கப்படுவதை உணரு, என் மீது சாய்ந்து கொள்; நான் சொல்வதைக் கேள்; எனக்குத் துணையாய் இரு; நானே உன் பரிசுத்த தோழர் என்பதை மறவாதே; மார்ச் 2, 1987. உன்னைத் தீமையிலிருந்து விடுவிப்பதற்காக பிதாவாகிய சர்வேசுவரனுக்கு மகிமை உண்டாவதாக; யார் இது? நான்தான் இயேசு. ஏன்? இங்கே நான் தர்ம சங்கடப்பட்டேன். யார் பிதா, பிதாவுக்கும் இயேசுவுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை நான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவர் பிதாவாகிய சர்வேசுவரனைக் குறிப்பிடுகிறார் என்றால், இயேசு எப்படித் தாமும் பிதா என்று சொல்ல முடியும்? கேள் வசுலா, நான் சொல்வதைக் கவனமுடன் கேள், கடவுளும் நானும் ஒன்றே என்பதை அறிந்துகொள்; குறிப்பு: மூவொரு கடவுள், ஆனால் ஒருமையின் சாரத்தில் ஒரே சர்வேசுவரன். நானே பிதாவும், சுதனுமாக இருக்கிறேன்; குறிப்பு: என்னைக் கண்டவன் என் தந்தையைக் கண்டிருக்கிறான்.... நான் தந்தையிலும் தந்தை என்னிலும் இருக்கிறோம். அருள் 14 ஆம் அதிகாரம், வசனங்கள் 9 முதல் 10 முடிய. இப்போது உனக்குப் புரிகிறதா? நான் ஏக தேவன், எல்லா ஆட்களும் உள்ளடங்கிய ஏக சர்வேசுவரன், எல்லா ஆட்களும் உள்ளடங்கிய ஏக சர்வேசுவரன், நீர் எல்லாரையும் உள்ளடக்கியவரா? ஆம்; நீரே ஒளியா? நான் ஒளியாகவும் இருக்கிறேன்; நான் சொல்வதைக் கேள்; இங்கே, பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய கேள்வியும் என் மனதில் இருந்ததால், புரிந்து கொள்வதும், எழுதி வைப்பதும் கடினமானதாக இருக்கும் என்று நான் நினைத்தேன். நாம் முயற்சி செய்வோம்; பரிசுத்த ஆவியானவர் என்னிடமிருந்து வருகிறார்; இப்போது உனக்குப் புரிகிறதா? எல்லோரும் ஒருவரில் தமத்திரித்துவம் ஒன்றாய் உள்ளது. குறிப்பு: பொருண்மையில். நீ என்னையும் பிதா என அழைக்கலாம்; குறிப்பு: இசை ஒன்பதாம் அதிகாரம், ஐந்தாவது வசனம். நித்திய பிதா. ஞானம் என்னிடமிருந்து வருகிறது; நானே ஞானமாகவும் இருக்கிறேன்; இது நான்தான், இயேசு; நீ சந்தேகப்படும் ஒவ்வொரு தடவையும் என்னிடம் வா; ஆனாலும் வெளிப்படுத்துதல்களின் 11 குறிப்புப் புத்தகங்களை எழுதி முடித்த பின்னும், அவ்வப்போது இப்படி நான் சந்தேகம் கொள்வது எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது. வேறு யாரும் என்னைப்போல் இருக்க மாட்டார்கள். வேறு யாராய் இருந்தாலும், இதற்குள் ஒரு புனிதராக மாறி இருப்பார்கள்! நீ தர்ம சங்கடமாக உணரும் ஒவ்வொரு முறையும், நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன்; வசுலா, வா, நீ என் நேசத்துக்குரியவளாக இருக்கிறாய்; நான் உன்னில் இளைப்பாறுவதை நேசிக்கிறேன்; நீ என்னை நேசிக்கிறாயா? ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீரே. ஆனாலும் சில சமயங்களில் நான் ஒரு கல்லைப் போல் குளிர்ச்சியாக உணர்கிறேன்! நான் எவ்வளவு நன்றி கெட்டவளாக இருக்க வேண்டும்! நீ இவ்வித உணர்வைக் கொண்டிருக்கும் போதெல்லாம், ஞான உஷ்ணம் தேவைப்படும் மற்ற ஆன்மாக்களை உஷ்ணப்படுத்த உன் அன்பைப் பயன்படுத்துபவர் நானே. இப்போது உனக்குப் புரிகிறதா? மகளே, இந்த வார்த்தைகளை எழுது. குறிப்பு: இது சமாதானச் செய்தியின் தொடர்ச்சி என்பதை நான் புரிந்து கொண்டேன். பிப்ரவரி 19, 1987 செய்தி காண்க. யாவேயாகிய நான் என் சமாதானம் முழுவதையும் உனக்குத் தந்து, என் வார்த்தையை எல்லா மக்களினங்களுக்கும் அறிவித்து, என் நேசத்தைக் கொண்டு உன்னை மூடுவேன். ஏனெனில் இதோ, எனக்குள் நேசமும், சமாதானமும், இரக்கமும், ஞானமும் தங்கியிருக்கின்றன; நான் பரலோகத்தில் இருப்பது போல, பூலோகத்திலும் என் அரசை நிறுவுவேன்; வசுலா, இது என் செய்தியின் ஒரு பகுதிதான்; மீதியை பிறகு எழுது; என் அருகில் இரு; மார்ச் 3, 1987. இது நான்தான், இயேசு; என் எல்லாப் பாவங்களுக்காகவும் என்னை மன்னித்தருளும். நான் உன்னை மன்னிக்கிறேன்; வா, நான் உன்னில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்; என் மகிமையை நான் உனக்குக் காட்டிய நாள் உனக்கு நினைவிருக்கிறதா? ஆம்! அதைத் தொடர்ந்து காண நீ விரும்புகிறாயா? விரும்புகிறாய் தானே? நான் பாதுகாப்பற்றவளாக உணர்ந்தேன். தந்தாய், நான் சற்று நேரம் காத்திருக்கலாமா? அப்படியே ஆகட்டும்.; நான் பிற்பாடு மீண்டும் உன்னிடம் கேட்பேன்; என் அரசு எப்படி இருக்கிறது என்பதை என் குழந்தைகளிடம் விளக்கிச் சொல்ல உன்னால் இயலுமாறு, இன்னும் அதிகமாக என் மகிமையை உனக்குக் காட்ட நான் விரும்புகிறேன்; என் முந்தின செய்தியை பொறுத்தவரை, அதை எழுத நீ தயாராக இருக்கிறாய் என்று நான் உணரும் போது, உனக்கு தெரியப்படுத்துவேன்; வசுலா, இன்று நான் உன்னை பயன்படுத்த என்னை அனுமதிப்பாயா? எந்த விதத்தில், ஆண்டவரே? நீ என் பேரில் கொண்டுள்ள நேசத்தின் சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம்; ஆகவே வசுலா, பக்தி ஆர்வத்தோடு என்னை நேசி; ஒரு மிக விசேஷமான ஆத்துமம் தவறி விழாதபடி அதைக் காப்பாற்ற நான் விரும்புகிறேன், அவள் என்னால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒருத்தி; வசுலா, நாம் இன்னமும் கூட அவளை இரட்சிக்க முடியும்; நான் எனது இரண்டு மாசற்ற இரத்தத் துளிகளை உன் இருதயத்தின் மீது விட்டு வைப்பேன்; இந்த இரண்டு துளிகள் உன் முழு இதயத்தையும் மூடி, என் துயரத்தை உணரச் செய்வதற்குப் போதுமானது; நான் என்ன செய்ய வேண்டும்? நேசத்தோடு நேசத்திற்காக வேலை செய்ய உன்னால் முடியுமா? ஆண்டவரே, நான் முயற்சி செய்வேன். என்னோடு ஒன்றித்திரு; நாம் இன்று அவளுடைய ஆத்துமத்தைப் பழைய நிலையில் ஸ்தாபிப்போம்; நாம் அவளைப் பலப்படுத்துவோம்; நான் எப்படி வேலை செய்கிறேன் என்பதை உனக்குக் கற்பிப்பேன், ஏனெனில் இவை பரலோகப் பணிகளாக இருக்கின்றன; எல்லாப் பரிசுத்த செயல்களும் என்னிடமிருந்தே வருகின்றன; ஞானம் உனக்குப் போதித்துக் கொண்டிருக்கிறது; நான் என்னுடைய ஒளியில் வளரச் செய்யும் என் மலர் நீ என்பதை மறவாதே; நான் உன் மண்ணைச் சுத்திகரித்து உன்னில் குறைவுபடுவதை நிறைவுபடுத்துவேன்; நான் திரும்பி வந்து என் அந்த தனிப்பட்ட ஆன்மாவின் இதயத்தைப் பற்றி உனக்குத் தெரியப்படுத்துவேன். நான் உன்னை நேசிக்கிறேன்; என்னை நேசி, வசுலா, ஏனெனில் மிக அநேகர் இந்த நேசத்தைச் சார்ந்திருக்கிறார்கள்; பிற்பாடு, பிற்பகலில் நான் தீமையால் தாக்கப்பட்டேன். அது என்னைக் குற்றம் சாட்டியது. அது கடவுள் அல்ல என்பதை நான் அறிந்திருந்தேன். ஏனெனில் அவர் ஒரு நாளும் என்னைக் குற்றம் சாட்ட மாட்டார் என்பதை நான் அறிந்திருந்தேன். மகளே, நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; யாவேயாகிய நான் உனக்குத் தந்துள்ள காரியங்களுக்காக ஒருபோதும் உன்னைக் குற்றம் சாட்ட மாட்டேன்; நான் உன்னில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்; என் திருமுகத்தை வெளிப்படுத்துவதற்காக நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; என் வசுலா, தியானம் செய்; உணர்ந்துகொள், உன் மட்டில் நான் கொண்டுள்ள அன்பை உணர்ந்துகொள்; விரைவில் நீ என்னைக் காண்பாய்; ஆம், நான் வருவேன்; ஆண்டவரே, நீர் என்னை எடுத்துக்கொள்ளும்போது நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். ஏனெனில் நான் எதையும் செய்துவிடவில்லை. எதையும் செய்ய முடியாதவளாக நான் இருக்கிறேன். மீண்டும் "தகுதியற்றவள்" என்ற வார்த்தையிலே முடிக்கிறேன். இருந்தாலும், உம் அருகில் இருக்க நான் எவ்வளவோ விரும்புகிறேன்! வசுலா, என் கரத்தை உணர்ந்து பார்; என் கரம் உன்னைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, உன்னை என் அருகிலேயே வைத்திருக்க மிகக் கடுமையாக முயல்கிறது; உனக்குப் புகழிடம் கொடுக்க எவ்வளவோ ஏங்குகிறேன்; நான் உன்னை எடுத்து என் இருதயத்தின் உள்ளாழங்களுக்குள் உன்னைத் திணித்து அங்கே முழுவதும் எனக்காக உன்னை மறைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்; என் வார்த்தைகளை நீ மறப்பது போலத் தெரிகிறது; நான் நித்தியத்திற்கும் என்னோடு உன்னை இணைத்துக் கொள்ளவில்லையா? என்னால் நாம் ஒன்றாக இணைக்கப்பட்டு அதன் மீது நேசத்தின் மலர்க் கிரீடம் ஒன்றை வைக்கவில்லையா? குறிப்பு: எங்கள் ஒன்றுப்பின் மீது. என் நேசமே, நாம் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம்; நான் உன் கடவுளாகவும் வழி நடத்துபவராகவும் இருக்கிறேன்; என் ஆண்டவரே, நான் பலவீனமாக இருக்கிறேன், எனக்கு நீர் தேவைப்படுகிறீர். என்னால் உம்மை மகிமைப்படுத்த இயலுமாறு, எல்லாவற்றிலும் நான் பலப்படுத்தப்படுவது தேவையாய் இருக்கிறது. வசுலா, என் கரங்களைக் கவனி; உன் விரல் நுனிகள் என் விரல் நுனிகளைத் தொட்டுக் கொண்டிருக்கும் விதமாக உன் கரங்களை வை; மின்சாரத்தைப் போல. குறிப்பு: ஆண்டவருடைய ஒளியானது பகல் போல் இருக்கிறது. அவருடைய கரங்களில் ஒளிக்கதிர் விளங்குகிறது. அதில்தான் அவருடைய வல்லமை மறைந்திருக்கின்றது. அபாக் அதிகாரம் மூன்று நான்காம் வசனம். அவருடைய விரல் நுனிகளில் இருந்து மின்னல் வெளிவந்து கொண்டிருப்பது போல நான் கண்டேன். நான் என் கரங்களை வைத்து அவருடைய விரல் நுனிகளை தொட்டேன். இதை நான் பகுத்துணர்ந்தபடியும் தியானத்தோடும் செய்தேன். என் பரிசுத்தத் தனத்தை உணர்வாய்; என் பலம் உன் விரல் நுனிகள் வழியாக ஊடுருவிக் கொண்டிருக்கிறது; இத்தகைய பணிகள் விண்ணகப் பணிகள், நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; என் மீது சாய்ந்து கொள்; நீ இப்போது என்னை உட்கிரகித்துக் கொண்டிருக்கிறாய்; உன் கரங்களை என் கரங்களுக்குள் வைத்து என் உஷ்ணத்தை உணர்வாயாக; பிற்பாடு: வசுலா, கேள். இப்போது தவறி விழுவதிலிருந்து நாம் அவளைக் காப்பாற்றி இருக்கிறோம், களிகூர்வாயாக! நான் உன் நேசத்தின் சாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறேன்; நாம் ஆன்மாக்களுக்கு உதவியபடியும் அவற்றை குணப்படுத்தியபடியும் சேர்ந்து உழைக்கிறோம்; அவற்றைக் குணப்படுத்துவதில் ஒருபோதும் சோர்ந்து போகாதே, மகளே; நான் மீண்டும் தீமையால் தாக்கப்பட்டேன். "நீ இங்கிருந்து மறைந்து விடுவாயா" என்று அவர்கள் கேட்டார்கள். வசுலா, வா, என்னை நெருங்கி வா; என் நேசத்தைக் கொண்டிரு; அவர்கள் ஏன் உன்னை வெறுக்கிறார்கள் என்பது உனக்குப் புரிகிறதா? நீ என் பிரியத்துக்குரிய ஆன்மாக்களைத் தீமையிடமிருந்து பிடுங்கி எடுத்து அவற்றை மீண்டும் என்னிடம் கூட்டி வருகிறாய். ஆண்டவரே, மற்ற மனிதர்கள் உமக்குத் தருகிற நேசத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்? அதுவும் உதவுகிறதா? ஆம்! எல்லா நேசமும் ஆன்மாக்களை பழைய நிலையில் ஸ்தாபிக்கவும் அவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. சமாதானச் செய்தியின் தொடர்ச்சி. என்னால் தரப்பட்ட அன்பைக் கொண்டு என் அரசு பரவி வளர்ந்து கொண்டே இருக்கும்; என் எல்லாத் துன்பங்களும் வீணாகி விடாது என்று நான் உண்மையாகவே உனக்குச் சொல்கிறேன்; மிக உயர்ந்த மகிமையோடு நான் தீமை முழுவதின் மீதும் வெற்றி கொள்வேன்; நான் இவ்வாறு ஒவ்வொரு இதயத்தையும் தூண்டி எழுப்பி என் நேசம் மற்றும் சமாதானத்தின் விதைகளை எங்கும் தூவி என் குழந்தைகளை ஒன்று சேர்ப்பேன்; பிரபஞ்சம் முழுவதன் மீதும் என் ஒளி சிந்தப்படும்; ஏனெனில் என் சித்தம் இத்தகையதே; வசுலா, நேசிப்பதின் மூலம் என்னைக் கனப்படுத்து; என் கரங்களை முத்தமிடு; நான் அவரை பகிர்ந்துணர்ந்தபடியும் அதே வேளையில் ஒரு படத்திலும் முத்தமிட்டேன். எப்போதும் என்னை மகிமைப்படுத்து, உங்கள் எல்லோரையும் நான் நேசிக்கிறேன்; வா, நேசமே, எனக்கு இன்னும் அருகில் வா; ஏனெனில் உன் மீதான என் நேசம் நீ கற்பனை செய்யக்கூடியதையும் விட அதிகமானது; கடவுளிடமிருந்து மிக அதிகமான மகிழ்ச்சியை நான் உணர்ந்தேன். கடவுள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்! மார்ச் 4, 1987. மிக வஞ்சகமானவளாக நான் என்னை அறிந்திருப்பதால் என்றாவது ஒரு நாள் பலவீனத்தின் காரணமாக நான் உம்மைக் கைவிட்டு விடுவேன் என்று அஞ்சுகிறேன். இந்த எண்ணம் பயங்கரமானது. இது எப்படி நடக்க முடியும் என்பதை என்னால் யூகிக்க இயலவில்லை. ஆனாலும், இது நிகழ்வதையோ அல்லது நீர் என்னை விட்டு விலகுவதையோ நான் விரும்பவில்லை! வசுலா, யாவேயாகிய நான் உன்னை நேசிக்கிறேன்; நான் எப்போதாவது உன்னைக் கைவிடுவேனா? நாம் ஒன்று சேர்ந்து கட்டப்பட்டிருக்கிறோம், நாம் ஒருவரோடு ஒருவர் கட்டுண்டு இருப்பதால், நீ என்னைக் கைவிட முடியாதவளாக இருப்பாய்; பார்த்தாயா? நான் நம் ஐக்கியத்தைப் பற்றி அக்கறையாய் இருக்கிறேன்; உனக்கு நான் தேவைப்படுவதாலும் நீ என்னைப் பக்திப் பற்றுதலோடு நேசிப்பதாலும் நான் உம்மீது சுதந்திரமாக அரசாள்வதாலும், எந்தக் கட்டுப்பாடும் இன்றி உன்னை நேசிப்பதாலும் நாம் இறுதிவரை ஐக்கியப்பட்டவர்களாகவே நிலைத்திருப்போம்; உன்னை நீ எனக்குக் கையளிக்கும் ஆசையை நான் ஒருகாலும் விட்டுவிடாமல் இருப்பேன்; என் சர்வேசுவரா, இதை நீர் சொன்னீரா? நானே இதைச் சொல்லியிருக்கிறேன்; நீ என்னிடம் கேள்வி கேட்கப் போகிறாயா? எனக்குத் தைரியம் இல்லை! ஏன்? எனக்குப் பயப்படாதே; அவருக்குத் தெரியும் என்று நான் அறிந்திருந்தேன். ஆனாலும், அதைக் காகிதத்தில் எழுதி வைக்க நான் விரும்பவில்லை. சர்வேசுவரா, தயைகூறும். வா, நாம் கற்றுக்கொள்வோம்; நான் சர்வ வல்லவராக இருக்கிறேன்; உன் ஆன்மாவுக்கு எது மிகச் சிறந்தது என்று நான் அறிவேன்; உங்களில் ஒருவன் என்னிடம் ஒரு கேள்வியையோ அல்லது ஒரு உபகாரத்தையோ கேட்டால் நான் பதிலளிப்பேன்; அந்த ஆன்மா போஷிக்கப்படுவதற்கு என் மறுமொழி மிகச் சிறந்ததாக இருக்கும்; அது ஆன்மாவிற்கு சிறந்த பயனை, பலனை அளிக்கக்கூடிய, கனிகளில் எல்லாம் பொருத்தமான கனியை நான் தேர்ந்தெடுப்பது போன்றது; என்னால் எத்தனை தடவைகள் மன்னிக்க முடியும் என்பது பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? ஆம், ஆண்டவரே. ஆனாலும், இயல்புக்கு மேலான விதத்தில் நீர் அவர்களுக்குப் பதிலளிக்க விரும்புவதில்லை என்றாலும், நீர் பதிலளிக்கிறீர் என்றாலும், நீர் அதை வெறுக்கிறீர், கோபமாய் இருக்கிறீர் என்று சில நூல்கள் சொல்கின்றன. யாவேயாகிய நான் உனக்கு இதைச் சொல்கிறேன், நான் சிந்திக்கும் முறை, நீ சிந்திக்கும் முறை அல்ல, என் வழிகள், உங்கள் வழிகள் அல்ல; குறிப்பு: இந்தக் கருத்து தவறானது என்பது பொருள். வசுலா, நான் மகா இரக்கமுள்ள ஒரு கடவுளாகவும், உங்களுக்கு ஒரு நேசமுள்ள பரிசுத்த பிதாவாகவும் இருக்கிறேன்; உங்கள் தேவைகளையும், பலவீனங்களையும் நான் அறிந்திருக்கிறேன்; உங்கள் எல்லோரும் மீதும் எனக்குள்ள அன்பு, பொறாமையுள்ள அன்பு; வாருங்கள், எனக்கு இன்னும் அருகில் வாருங்கள், யாவேயாகிய நான் உங்களை வந்தடைய எல்லா முயற்சிகளையும் எடுக்கிறேன்; என் பிதாவே, நான் உம்மோடு இருக்கும்போது உம்மால் வெகுவாக நேசிக்கப்படுவதாக உணர்கிறேன். உம் பேரில் எனக்குள்ள அன்பு வளரத்தான் செய்கிறது; என்றாலும், நான் பாவம் நிறைந்தவளாக இருப்பதால் நான் உம்மைக் கைவிட்டு விடுவேன் என்று பயப்படுகிறேன். வசுலா, இதெல்லாம் எனக்குத் தெரியாதா? நீ ஒரு தூசி துகள்தான், நான் உன் மீது என் மூச்சை ஊதினால், நீ மறைந்து விடுவாய்; நீ எவ்வளவு பலவீனமானவள் என்று எனக்கு தெரியும்; நீ பூமியின் மீது கடந்து செல்லும் ஒரு நிழல் மட்டுமே, இருந்தாலும், உன் ஒன்றுமில்லாமையிலும், உன் ஈனத்தன்மையிலும் கூட என் கண்கள் உன்னை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை; உன் பலவீனங்களை நான் தயவிருக்கத்தோடும் நேசத்தோடும் கண்ணோக்குகிறேன்; பயப்படாதே, ஏனெனில் நான் உன்னைப் பலப்படுத்துவேன்; உன் பாவங்களை நான் ஏற்றுக்கொண்டு என் மன்னிப்பை உனக்குத் தருகிறேன்; வசுலா, இன்று இதற்கு மேல் எதுவும் செய்ய வேண்டாம்; நாளைக்கு நான் உன்னை அழைப்பேன்; என் சமாதானத்தைக் கொண்டிரு;