வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 29. ஏப்ரல் 9, 1987. ஸ்விட்சர்லாந்தில் இருந்தபோது, எனக்கு எங்கே வீடு கிடைக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்; ஏனெனில் வீடு தேடி. நாங்கள் இன்னமும் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறோம், தொடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து அலைந்து திரிந்து கொண்டே இருக்கிறோம். என் பிரசன்னத்தை உணர்ந்து பார்; இயேசு தம் திரு இருதயத்தைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்ததை நான் கண்டேன். உன் வீடு இங்கே இருக்கிறது... நேராக என் இருதயத்தின் நடுவில்; மகளே, ஆத்துமங்களை என்னிடம் இழுத்து வருவதன் மூலம் என்னை மகிமைப்படுத்து; என் மூத்த சகோதரி முதன்முறையாக இந்தச் செய்தி பற்றி அறிந்து கொண்டாள். அவள் கடைசி ஐந்து நகல்களை வாசித்தாள். எல்லோருக்கும் மூத்த, எங்கள் ஒன்று விட்ட சகோதரியோடு ஒரு எட்டு வருட குடும்பத்தகராறு நீங்கியது இதன் நற்பாதிப்பாக இருந்தது. அவர்கள் மீண்டும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதன்பின் அவள் தான் வசிக்கிற ரோடோஸுக்குப் புறப்பட்டுப் போனாள். அந்த இரவிலேயே அவள் தன் கணவரோடு பேசினாள். அவர் அவளை விட அதிகமாக அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் அன்று மாலையில் ஐந்து மற்றும் ஆறு ஆகிய குறிப்பேடுகளை ஒன்றாக வாசித்தார்கள். அதன்பின் அவர்கள் உறங்க சென்றார்கள், ஆனால் அவரால் உறங்க முடியவில்லை. அவர் ஜெபிக்க தொடங்கினார், தமது பாவங்களை மன்னிக்கும்படி கடவுளிடம் மன்றாடினார். அப்போது ஒரு புதுமை நடந்தது. நான் கண்ட அதே காட்சியை கடவுள் அவருக்கும் தந்தார்! அந்த அழகிய தோட்டம், சுற்றிலும் அந்த 'சூரியன்,' அது கோடிக்கணக்கான சம்மனசுகளால் காவல் காக்கப்படுவது ஆகியவை பற்றிய கனவு. நான் செய்தது போல, அந்த வட்டமான ஒளியை அவரும் ஊடுருவிச் செல்லும்படி கடவுள் செய்தார். கடவுளின் பிரசன்னத்தை மிக நெருக்கமாக தாம் உணர்ந்தபோது, அவர் நடுங்கவும் அழவும் தொடங்கினார். அவர் என் சகோதரியை எழுப்பி, அவளிடம் சொல்லி இருக்கிறார். அவள் அதிசயித்துப் போனாள். இதைப்பற்றி என்னிடம் சொல்ல, மறுநாள் காலை வரை காத்திருக்க அவர்களால் முடியவில்லை. அதன்பின் இப்போது நான் எப்போதுமே விரும்பிய ஏனோக்கின் புத்தகத்தை வாங்கினேன். அதை வாசிக்கத் தொடங்கும் முன், நான் அதை திறக்க. 102 ஆம் பக்கம் வந்தது. தற்செயலாக நான் வாசித்தது? நான் கண்டது போலவே, ஏனோக் கண்ட அதே காட்சியைப் பற்றி, பிரகாசமான வட்ட ஒளி, அது ஆயிரக்கணக்கான சம்மணசுகளால் காவல் காக்கப்படுவது! குறிப்பு: இதற்கு வெகு காலத்திற்குப் பிறகு, 1996 இல், என் நண்பர் ஒருவர் புனித ஹில்ட கார்ட் கண்ட ஒரு காட்சியின் ஓவியத்தை எனக்கு அனுப்பினார். அதுவும் அதே காட்சியாக இருந்தது. இது தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பே இல்லை; ஏனெனில், மார்ச் 26 அன்று நான் பங்களாதேஷில் இருந்தபோது, இந்தக் காட்சியைக் கண்டேன். அதன்பின், 1987 ஏப்ரல் 11 அன்று, நான் பாரிஸில் இருந்தபோது கண்டேன்; ஒரு புத்தக நிலையத்தில் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கையில், மெட்டனோயா என்ற புத்தகம் என் காலில் தட்டுப்பட்டது, அது அட்டைப்படம், அதை நான் பார்க்கத் தூண்டியது. அதன் படம் மிகச் சரியாக, நானும் ஏனோக்கும் என் சகோதரியின் கணவரும் கண்ட காட்சியே, சம்மணசுக்களால் காவல் காக்கப்படுகிற வட்ட ஒளி, என் சகோதரி போன பின், கடவுள் என் கரத்தைப் பயன்படுத்த அனுமதித்து, நான் மறுபடியும் எழுதினேன். கடவுள் அப்போது ஒரு எழுதப்பட்ட செய்தியை ஸ்ட்ரேடேட்டாவுக்குத் தந்தார். குறிப்பு: வசுலாவின் மைத்துனர். நான் என் ஆட்டுக்குட்டிகளை நேசிக்கிறேன்; என் ஆட்டுக்குட்டிகளை ஒன்று சேர்; என் செய்தியை யார் வாசித்தாலும், அவன் என் அப்பத்தை உண்பான்; என் வரப்பிரசாதத்தால் ஒளிர்விக்கப்பட வேண்டுமென நான் விரும்புபவர்கள் யாராய் இருந்தாலும், அவர்கள் என்னிடமிருந்து ஓர் அடையாளத்தைப் பெற்றுக் கொள்வார்கள்; குறிப்பு: தம் செய்திகளை வாசிப்பவர்களும், ஒளிர்விக்கப்படுபவர்களுமாகிய, அதாவது கடவுளை நோக்கிய ஒரு ஈர்ப்பை மீண்டும் பெற்றுக் கொள்பவர்களாகிய எல்லோரும், அவர்தான் அவர்களுக்கு உணவளிக்கிறார் என்பதற்கும், இந்தச் செய்தி அவரிடமிருந்து தான் வருகிறது என்பதற்கும் போதுமான அடையாளமாக இருக்கிறார்கள் என்று நான் புரிந்து கொள்ளுமாறு கடவுள் செய்தார். என் அடையாளத்தை வரை; இச் திஸ். குறிப்பு: இச் திஸ் என்பது மீன் என்பதற்கான கிரேக்க வார்த்தை. இவ்வார்த்தையின் எழுத்துக்கள், "இயேசு கிறிஸ்து கடவுளின் திருச்சுதன், இரட்சகர்" என்பதன் சுருக்கமாக இருக்கின்றன. வசுலா, இந்த வழிகாட்டுதலைத் தொகுத்து, என் செய்தியைத் திரும்ப எழுதத் தொடங்கு; நான் உன்னை வழிநடத்துவேன், உன்னை ஒளிர்விப்பேன்; திரும்ப எழுதப்படுவதை எல்லாம் உனக்குக் கற்பிக்கவே; உனக்கு அது தேவைப்பட்டது, என் செய்தி சமாதானமும், நேசமும் என்று அழைக்கப்பட வேண்டும்; குறிப்பு: இச்சமயத்தில், திருச்சபை சார்ந்த இந்தச் செய்தித் தொகுப்புகள், எபிரேயர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கூட உரியவை என்ற ஞான வெளிச்சத்தை இயேசு எனக்குத் தந்து கொண்டிருந்தார். நான் சுபாவத்திற்கு மேற்பட்டதை நம்பாதவளும், பகுத்தறிவுவாதியுமாக இருப்பதால், இது நடக்கிறது என்பதை சந்தேகப்படுவதாக இன்று மீண்டும் உணர்வதை என்னால் தவிர்க்க இயலவில்லை. இது பயங்கரமானது. அவர்கள் இதை முழுமையாகவும் நிலையாகவும் நம்பும்போது, நான் மட்டும் ஏன் நம்புவதில் இவ்வளவு நிலையற்றவளாக இருக்கிறேன்? என் கரத்தைக் கையாள என்னால் முடியவில்லை என்பதையும், கடவுள் என் கரத்தைச் சொந்தமாக எடுத்துக் கொள்ளும்போது, நான் எவ்வளவு சக்தியற்றவளாக இருக்கிறேன் என்பதையும், எப்படி அவர் பென்சிலை என் கையிலிருந்து வீசேறிய முடிகிறது என்பதையும், பென்சிலை நான் அதிகம் தொடாமலே அதை நகர்த்த, அவரால் எப்படி முடிகிறது என்பதையும் மிக நன்றாக அறிந்திருந்தும், சந்தேகப்படுதல் எனக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் எனக்கு மிக அதிகமாக நிரூபங்களை தந்திருக்கிறார். இருந்தாலும் பாருங்கள், இன்னமும் சந்தேக அலைகள்! மேலும் பலமுறை, நான் எல்லோரையும் தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணம்! என் புத்தி கெட்டாத அநேக காரியங்கள் இந்த வழிகாட்டுதலில் இருக்கின்றன! மேலும் இது இன்னும் வெளிப்படவும் இல்லை... அன்பே, நான் யாவே; உன் பலவீனங்களை என்னிடம் தா. என் பலம் அவற்றை அழித்தொழிக்கட்டும்; கடவுள் என்னிடம், என்னைப் பொறுத்துக்கொள்ள எவ்வளவு அதிக பொறுமையுள்ளவராக இருக்க வேண்டும்.... எனக்குச் சந்தேகங்கள் வர முக்கிய காரணம் நான்தான், நான் என்னை அறிந்திருப்பதுதான் என்று நான் நினைக்கிறேன். கடவுளை சுபாவத்துக்கு மேலான விதத்தில் நெருங்கிச் சென்றவர்களும், செய்திகளைப் பெற்றுக் கொண்டவர்களுமாகிய மற்றவர்களோடு என்னை நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாகவும், பக்தி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். இதுதான் என்னைத் தாக்குகிறது. இது பகலோடு இரவை ஒப்பிடுவது போல் இருக்கிறது. ஆனாலும், ஒரு நேர்மறையான காரியத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். குறைந்தபட்சம், நான் கடவுளை ஆழமாக நேசிக்கிறேன், இது என் கற்பனை என்று யாரும் சொல்ல முடியாது. அல்லது 'பசாசும் கூட உன் மூளையில் இவற்றை வைக்க முடியும்' என்று ஒரு குரு சொன்னது போல, யாரும் என்னிடம் சொல்ல முடியாது..... நான் பலவீனமாக இருந்திருந்தாலோ, மற்றவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் கேட்டிருந்தாலோ, எனக்குப் பைத்தியமே பிடித்திருக்கும். இன்று ஒரு பெண்மணி ஃப்ராய்டின் நூலை அப்போதுதான் வாசிக்கத் தொடங்கியிருந்தவர், இதெல்லாம் உன் ஆழ்மனதில் இருந்திருக்க வேண்டும், கடவுளின் பெயரில் ஒரு அசாதாரண, மனத்தெளிவற்ற நேசம் இது என்று சொன்னதை நான் கேட்டேன். இது அபத்தமானது! அவரிடம் நான் கேட்கிறேன், கடவுள் பெயரில் நாம் அன்பு கொண்டிருந்தால், மனரீதியாக நாம் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தமா? அந்தப் பெண்ணில் அல்லது ஃப்ராய்டின் கோட்பாடு என்னைச் சிறிதளவும் பாதிக்கவில்லை. இந்தக் கோட்பாடுகளால் நான் குற்றம் சாட்டப்படலாம் என்று ஏற்கனவே கடவுள் என்னை எச்சரித்திருந்தார். மேலும் தனிப்பட்ட முறையில் எனக்கு ஃப்ராய்டைப் பிடிக்காது. ஏனெனில் அவன் ஒரு நாத்திகன். ஜங் கூட அவரை விட்டு சென்றுவிட்டான். ஃப்ராய்டைப் பொறுத்தவரை, நாம் வெறும் பொருட்களாக மட்டுமே தோன்றுகிறோம்! என் குழந்தாய், மக்கள் எப்போதும் மனித வழிகளிலேயே தீர்மானம் செய்கிறார்கள்; நான் இரக்கமும், நேசமும் நிறைந்த கடவுளாய் இருக்கிறேன், ஆனாலும், மிகக் குறைவாகவே புரிந்து கொள்ளப்படுகிறேன்; ஆனாலும், ஆண்டவரே, எதற்குமே உதவாத ஒருத்தியை நீர் தேர்ந்தெடுத்திருக்கிறீர், அதுதான் எனக்கு சந்தேகங்களை கொண்டு வருகிறது! நீ என் மகளாகவும் இருக்கிறாய்! உங்கள் மத்தியில் மிக ஈனமானவர்களையும் கூட நான் நேசிக்கிறேன்; ஏப்ரல் 10, 1987. நான் சிலுவையில் அறையப்பட்ட சம்பவம் மணிக்கணக்காக நீடித்தது என்பதை நினைவில் கொள்; நான் பல மணி நேரம் துன்பப்பட்டேன்; என் இரத்தம் முழுவதும் சிந்தப்பட்டுவிட்டது; நான் உன்னை நேசிக்கிறேன்; வந்து என்னை நேசித்து, எனக்கு ஆறுதல் கொடு; இயேசு துயரமாக உணர்ந்து கொண்டிருந்தார், ஆறுதல் படுத்தப்பட ஏங்கிக் கொண்டிருந்தார். அவர் இந்த நாட்களில் தாம் சிலுவையில் அறையப்பட்டதை இடைவிடாமல் எனக்கு நினைவூட்டிக் கொண்டும், எனக்கு அது தொடர்பான காட்சிகளை தந்து கொண்டும் இருந்தார். சில சமயங்களில், அவருடைய பிரசன்னத்தை நான் எவ்வளவு முழுமையாக உணர்கிறேன் என்றால், என்னால் திடமான முறையில் அவரைத் தொட முடியும் என்று நான் நினைக்கிறேன், ஒரு விதத்தில், அவர் நகர்வதால் ஏற்படும் காற்றின் அசைவை கூட என்னால் உணர முடிந்தது! ஏப்ரல் 16, 1987. பெரிய வியாழன். வசுலா, நான் என் ஆலயத்தில் பிரசன்னமாய் இருந்தேன்; நான் என் சிலுவைக்கு முன்பாக நடந்தேன்; உனக்கு முன்பாக ஒரு சில வினாடிகள் நான் தாமதித்தேன்; குறிப்பு: சிலுவைப் பவனி நடந்து கொண்டிருக்கையில், விசித்திரமான முறையில், சுமார் இரண்டு மீட்டர் நீளமுள்ள பரிசுத்த சிலுவையைச் சுமந்து வந்த குருவானவருக்கு இடம் தருமாறு நாங்கள் நகர்ந்து கொள்ள வேண்டி இருந்தது. கோவில் சிறுவர்கள் பெரிய மெழுகுவர்த்திகளோடு சிலுவையைப் பின்தொடர்ந்தார்கள். மங்கலான வெளிச்சம் காரணமாக, குருவானவர் வழி தெரியாமல் எனக்கு நேராக வந்துவிட்டார். அதன்பின், தம் தவறை உணர்ந்து சரியான வழியைக் கண்டுபிடிக்க முயன்றபடி, அவர் எனக்கு நேராக சில வினாடிகள் நின்றார். என்னோடு இருந்த என் ஒன்று விட்ட சகோதரி உடனடியாக இந்த நிகழ்வைக் கவனித்துவிட்டாள். மேற்கொண்டு பின்னுக்கு நகர முடியாததால், அந்தப் பெரிய சிலுவைக்கு நேராக நின்ற என் இதயம் மிக வேகமாகத் துடித்தது. எனக்குப் பின்னால் கூட்டத்தினர் எரியும் மெழுகுவர்த்திகளோடு நின்றதால், என்னால் பின்புறமாக நகர முடியவில்லை. என் மகளே, எனது மிகுந்த நேசத்திற்குரிய ஆலயத்தில் நீ இருக்க வேண்டும் என்று இத்தனை வருடங்களாக நான் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். குறிப்பு: என் மூத்த மகனின் ஞானஸ்நானத்திற்குப் பிறகு, நான் அந்த கோவிலுக்குச் சென்றதே இல்லை. 15 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்! ஆண்டவரும் இரட்சகருமானவரே, நீர் உண்மையாகவே என்னைத் தேடிக் கொண்டிருந்து என்னைக் கண்டுபிடித்து, உம்மிடமும், உம் ஆலயத்திற்கும் என்னைக் கொண்டு வந்திருக்கிறீர். இதற்குப் பல வருடங்கள் ஆகி இருக்கிறது.... நீர் வருடக்கணக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கிறீர்! நான் என் சிலுவை முன்பாகவே இருந்து கொண்டிருந்தேன், என்னை ஆராதிக்க வந்தவர்கள் எல்லோரையும் பதிலுக்கு நான் ஆசீர்வதித்தேன்; பரிசுத்த சிலுவை, கோவிலின் நடுப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. எல்லோரும் வரிசையாக அதை முத்தமிடச் சென்றார்கள்.
ஏப்ரல் 17, 1987. புனித வெள்ளி அன்று, திவ்விய பலி பூசைக்குப் பிறகு, குரு இயேசுவின் கல்லறையை மூடியிருந்த மலர்களை விநியோகிக்கிறார். அவர் மக்களுக்கு மலர்க் கொத்துகளைத் தருகிறார். நான் என் கையில் மூன்றே மூன்று மலர்களை மட்டும் பெற்றுக்கொண்டேன்; பரிசுத்த தமத் திருத்துவத்தைப் புரிந்து கொள்வதில் எனக்கிருந்த பிரச்சனையை எனக்கு நினைவூட்டும்படி, கடவுளிடமிருந்து வந்த ஓர் அடையாளமாக இதை நான் புரிந்து கொண்டேன்; இரண்டு நாட்கள் கடந்தன. நான் எதுவும் எழுதவில்லை. இது எனக்குக் கடுமையான ஏக்கத்தைத் தந்தது, ஏனெனில், தியானத்தில் இருப்பது போல, நான் எழுதும்போது, நான் மிக அதிகமாக கடவுளைத் தொடுகிறேன், அவரை உணர்கிறேன். என் தேவனே, மிக நீண்ட காலமாகிவிட்டது! எவ்வளவு காலம்? இரண்டு நாட்கள்! இரண்டு நாட்களா, வசுலா, அப்படியானால், உனக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருந்த நான்.... நான் என்ன சொல்வேன்? நான் பேச்சற்றுப் போனேன். இயேசுவே, உம்மைக் காயப்படுத்தியதற்காக வருந்துகிறேன், என்னை மன்னியும். வா, நான் உன்னை மன்னிக்கிறேன்; நான் என் நேசத்திற்குரிய ஆத்துமங்களிடமிருந்து விரும்புவதெல்லாம் அவர்களுடைய இதயத்தை ஒரு சில நிமிடங்கள் மட்டுமாவது ஆட்கொள்ளவும், அதற்குள் என் மிக அபரிதமான நேசத்தை ஊற்றவும் என்னை அவர்கள் அனுமதிக்க வேண்டும் என்பது மட்டுமே; இயேசு இதை மிகுந்த கனிவோடும், நேசத்தோடும் சொன்னார். கடவுள் எனக்கு ஒரு முக்கியமான நீண்ட செய்தியைத் தரும்படி என்னை நெருங்கி வரும்போதெல்லாம், பசாசோ, அல்லது அவனது தூதர்களோ என்னைத் தாக்குகிறார்கள். நான் உடல் ரீதியாக அவனை உணர்வதில்லை, ஆனாலும், இந்த வழிகாட்டுதலில் அவன் செய்ய அனுமதிக்கப்படுவதெல்லாம், எழுதுவதன் மூலம் தன்னை வெளிப்படுத்துவதும், இவ்வாறு என்னை அவமானப்படுத்துவதும், என்னை சபிப்பதும் மட்டுமே. குறிப்பு: ஒரு விதத்தில், இது ஒரு நல்ல அடையாளமே. ஏனெனில், பசாசு தான் இருப்பதை வெளிப்படுத்துகிறது. மேலும், குறைந்தபட்சமாக சொல்வது என்றாலும், இந்த வெளிப்பாடு அதற்கு எரிச்சல் மூட்டவாவது செய்கிறது. இந்த வித்தியாசத்தை அறியவும், அவனுடைய வார்த்தைகளை அடையாளம் காணவும், கடவுள் எனக்குக் கற்றுத் தந்திருப்பதால், அவன் தன் வார்த்தையை முடிக்கக் கூட விடாமல், நான் வழக்கமாக அவனைத் தவிர்த்து விடுகிறேன், இது அவனைக் கோபவெறி கொள்ளச் செய்கிறது. அது என் கவனத்திற்குத் தப்பிவிட்டால், கடவுள் என் கரத்தை தடுத்து விடுகிறார், அப்போது அது எழுத முடிவதில்லை. இந்தக் காகிதம் என் குறிப்பேட்டிலிருந்து எடுத்தது. கடவுளின் முக்கியமான செய்தி எழுதப்பட இருக்கும் நேரத்தில், இந்தத் தாக்குதல்கள் எப்போதும் அதிக பலமுள்ளவையாக இருக்கின்றன. இப்போது அது நடக்கும் விதத்தை நான் உணர்ந்திருக்கிறேன்.... ஆகவே, சில சமயங்களில் நம்பிக்கையற்றவளாக நான் உணர்ந்தாலும், நான் விட்டுக்கொடுப்பதில்லை.
ஏப்ரல் 23, 1987. சில சமயங்களில், சுதந்திரம் என்றால் என்ன என்று நான் யோசிக்கிறேன், கடவுளின் அழைப்புக்கு முன், நானும் சுதந்திரமாகத்தான் இருந்தேன். நல்ல இணக்கத்தில் குடும்ப வாழ்வு நடத்தி வந்தேன். உண்மையில், என்னை நசுக்குவதும் என் மீது பாரமாக அழுத்துவதுமாகிய இந்தச் செய்தியைப் போன்ற எந்தப் பொறுப்பும் இல்லை. கவலைகளும் இல்லை. ஆனால், நான் அப்போது கடவுளிடமிருந்து தொலைவில் இருந்தேன். திடீரென, கடவுள் என்னைத் தடுத்து நிறுத்தினார்.... தொடக்கத்தில், நான் அதை விரும்பவில்லை. ஏனெனில், அவர் மீது எனக்கு எந்த அன்பும் இல்லை. ஆனால், ஒரு குறுகிய காலத்திலேயே, மூன்று மாதங்களில் எனக்குப் போதித்து, தம்மை நேசிக்க அவர் எனக்குக் கற்றுத் தந்தார். இப்போது, எட்டு மாதங்களுக்குப் பிறகு, முழுச் செய்தியும் ஏறத்தாழ தரப்பட்டுவிட்டது. குறிப்பு: நான் இப்படித்தான் நினைத்தேன். இது என் மீது பாரமாக அழுத்துகிறது. இதை இறக்கி வைக்க, நான் ஓர் இடம் தேடிக் கொண்டிருக்கிறேன். இது மிக மிகப் பாரமாக இருக்கிறது!! சுதந்திரம் என்றால் என்ன? இந்தப் பாரம் சகிக்கக் கூடாததாக இருக்கிறது. ஆண்டவராகிய நான், சுதந்திரம் என்றால் என்ன என்று உனக்கு அறியத் தருவேன், எழுது; சுதந்திரம் என்பது உன் ஆன்மா உலக இன்பங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு என்னை நோக்கி என்னிடம் பறந்து வருவது; கடவுளாகிய நான் வந்து உன்னை விடுவித்தேன்; நீ இப்போது சுதந்திரமாய் இருக்கிறாய்; வசுலா, நீ உலகத்திடம் பற்றுக் கொண்டிருந்தபோது, அதன் சோதனைகள் எல்லாவற்றிற்கும் நீ அடிமையாய் இருந்தாய், ஆனால், உன் ஆன்மா இப்போது விடுவிக்கப்பட்டுள்ள ஒரு புறாவைப் போல் இருக்கிறது; நீ கூண்டில் அடைக்கப்பட்டிருந்தாய் அன்பே, கூண்டில் அடைக்கப்பட்டிருந்தாய்; உன் ஆன்மா வெளியே சுதந்திரமாகப் பறக்கட்டும். அது என்னுடைய எல்லா ஆன்மாக்களுக்கும் என்னால் தரப்பட்டுள்ள இந்தச் சுதந்திரத்தை உணரட்டும், ஆனால், என் ஆன்மாக்களில் எத்தனையோ பேர் நான் அளித்த இந்த வரப்பிரசாதத்தை மறுக்கிறார்கள்! கட்டப்பட்டு, கூண்டில் அடைபட்ட நிலையிலிருந்து உன்னை நான் விடுவித்திருக்கிறேன், மீண்டும் பிடிபட உன்னை அனுமதிக்காதே; நான் கடந்து சென்றபோது, உன்னை உன் கூண்டில் கண்டேன், நீ மெதுவாக வாடி, வதங்கி மரித்துக் கொண்டிருந்தாய்; வசுலா, இதைக் கண்டும், உன்னை மீட்காமல் இருக்க என் இருதயத்தால் எப்படி முடியும்? நான் வந்து, உன் கூண்டை உடைத்தேன், ஆனாலும், நீ உன் இறக்கைகளைப் பயன்படுத்த இயலாதவளாக இருந்தாய், ஏனெனில் உன் காயங்கள் அப்படிப்பட்டவையாக இருந்தன, ஆகவே, நான் உன்னை என் வாசஸ்தலத்திற்குத் தூக்கிச் சென்று, கனிவோடு உன்னை குணமாக்கி, மீண்டும் பறக்க அனுமதித்தேன்; இப்போது என் சின்னப்புறா சுதந்திரமாகப் பறப்பதையும், தொடக்கத்திலிருந்தே தான் எங்கு இருந்திருக்க வேண்டுமோ, அங்கே இருப்பதையும் கண்டு என் இருதயம் மிக அதிகமாக அக்களிக்கிறது; குறிப்பு: இயேசு ஆழமாக மூச்சை இழுத்துவிட்டபடி, மிகுந்த மகிழ்ச்சியோடு இதைச் சொன்னார். ஆண்டவராகிய நானே உன்னை விடுவித்தேன்; நானே உன்னை மீண்டும் ஸ்தாபித்தேன்; நானே உன் நிர்பாக்கியத்திலிருந்து உன்னை விடுவித்திருக்கிறேன்; என் கண்கள் தங்கள் பார்வையிலிருந்து உன்னை ஒருபோதும் விலக்கவில்லை; நீ உன் இரட்சகரும், குருவுமானவரை அடையாளம் கண்டுகொள்கிறாய் என்பதால், நீ எப்போதும் என்னிடம் திரும்பி வருவாய் என்பதை அறிந்தபடி, நீ சுதந்திரமாகப் பறப்பதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்; உன் ஆன்மாவுக்கு என் கதகதப்பு தேவைப்படுகிறது, இப்போது உன் வாசஸ்தலம் என் இருதயத்தின் மத்தியில் இருக்கிறது என்பதை நீ அறிவாய்; அங்கேதான் நீ இருக்க வேண்டுமென நான் எப்போதும் ஆசைப்பட்டேன்; நீ இப்போது எனக்குச் சொந்தமாய் இருக்கிறாய், நான் உன்னை நேசிக்கிற உன் குருவாக இருக்கிறேன்; சுவிட்சர்லாந்துக்குப் போவது பற்றிய எண்ணம் எனக்கு வந்தது, நான் அங்கே மாறிவிடலாம் என்று நான் பயப்படுகிறேன்.... வசுலா, நீ உன்னை மீண்டும் கறைப்படுத்திக் கொள்ள நான் உன்னை அனுமதிக்க மாட்டேன்; அஞ்சாதே, நான் எப்போதும் உன் அருகிலிருந்து உன்னை சுத்திகரித்துக் கொண்டிருப்பேன்; நீ அங்கே இருக்க வேண்டும் என்பதற்கு என்னிடம் சரியான காரணங்கள் இருக்கின்றன; கடவுளின் காரணங்களைப் பற்றி சிந்திக்க நான் முயன்று கொண்டிருந்தேன். அதன் பின் நான் கேட்டேன். என் விதைகள் ஐரோப்பாவில் விதைக்கப்பட வேண்டியுள்ளன; வசுலா, நீ என் விதைப்பவளாக இரு; வசுலா, என்னை காயப்படுத்தும் மக்களிடையே வாழு; உன் கண்கள் எல்லாவற்றையும் காணட்டும், அவை என் படைப்பு எப்படி ஆகிவிட்டது என்பதைக் கவனிக்கட்டும்; உன் இதயம் அவர்கள் என்னை எவ்வளவு குறைவாக மதிக்கிறார்கள் என்பதைக் காணட்டும்; அவர்கள் எப்படி என்னை தூஷிக்கிறார்கள், எப்படி காயப்படுத்துகிறார்கள் என்பதை உன் காதுகள் கேட்கட்டும்; உன் ஆத்துமம் கொதித்து எழாதா? என் மக்கள் எப்படி என்னை மறந்துவிட்டார்கள் என்பதைக் காணும்போது நீ எனக்காக அழுது கூக்குரல் இடமாட்டாயா? வசுலா, உன் ஆன்மாவிற்கு அக்கிரமங்களில் ஆழமும், உலகின் பாவத்தின் அருவருக்கத்தக்க ஆழமும், தீமைகளும், அசட்டைத்தனமும் வெளிப்படுத்தப்படும்; அவற்றிற்கு மேலாக, ஒரு புறாவைப் போலப் பறந்து, நீ உலகத்தைக் கவனிப்பாய், அதன் ஒவ்வொரு செயலிலும் கசப்பைக் காண்பாய்; நீ என் பலியாக இருப்பாய்; நீ என் இலக்காக இருப்பாய்; தங்கள் வேட்டைக்குரிய மிருகத்தைத் துரத்தும் வேட்டைக்காரர்களைப் போல, அவர்கள் உன்னை வேட்டையாடுவார்கள், தங்கள் ஆயுதங்களை உருவிக்கொண்டு, உன்னைப் பின்தொடர்ந்து வருவார்கள்; உன்னை அழிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு பெரியதொரு விலை கொடுக்க, அவர்கள் முன்வருவார்கள்; ஆண்டவரே, எனக்கு என்ன நிகழும்? மகளே, நான் உனக்குச் சொல்கிறேன்; எதுவும் வீணாய்ப் போகாது; பூமியின் மீது நிழல்கள் மங்கி, மறைந்து போகின்றன; மழையின் முதல் துளிகளிலேயே சேறு எப்போதும் கழுவப்பட்டுவிடும், ஆனால், உன் ஆன்மா ஒருபோதும் இறந்து போகாது; ஆண்டவராகிய நான், என் கேள்விக்கு உன் பதில் என்ன என்பதை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன், நான் ஒருமுறை உன்னிடம், "யாருடைய வீடு அதிக முக்கியமானது? உன் வீடா, என் வீடா?" என்று கேட்டேன், என் வீடுதான் அதிக முக்கியமானது என்று நீ சரியாகப் பதிலளித்தாய்; ஆம், பதிலளித்தேன். நான் உன்னை எப்போதும் என் இதயத்தில் வைத்துக் கொள்வேன்; நான் உன்னை நேசிக்கிறேன்; நானும் உம்மை நேசிக்கிறேன். நாம் போவோம், என் பிரசன்னத்தை மறந்து விடாதே! ஏப்ரல் 26, 1987. என் நேசமே, நீ பிறப்பதற்கு முன்பே நான் என் திட்டங்களை வரைந்துவிட்டேன் என்பதை நான் உனக்குச் சொல்லவிடு; நாம் எப்போதும் சேர்ந்து பணியாற்றுவோம்; நீ அதற்கு சித்தமாய் இருக்கிறாயா? நீர் என் இயலாமையில் என்னை ஏற்றுக் கொள்வீர் என்றால், என் சர்வேசரா, நான் சித்தமாய் இருக்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன், வசுலா, நான் உனக்கு உதவுவேன்; கடந்த வாரத்தின் தொடக்கத்தில், நீ தீமையால் அலைக்கழிக்கப்பட்டாய், தாக்கப்பட்டாய் என்றாலும், நான் உன்னை கொண்டு நான் விரும்பிய எல்லா வார்த்தைகளையும் எழுதிவிட்டேன்; நான் உன்னைப் பாதுகாத்தேன்; இது பசாசு என்னைச் சபித்தபோதா? ஆம், அவன் உன்னை இழிவான முறையில் சபித்துக் கொண்டிருந்தபோது, நான் உன்னை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தேன்; உன்னைப் பாதுகாத்துக் கொண்டிருந்தேன்; பிற்பாடு: நீ எவ்வளவு குறைவாக இருப்பாயோ, அவ்வளவுக்கு நான் அதிகமாக இருப்பேன்; உன்னில் நான் செயல்படவும், உன்னில் என் சித்தத்தைச் செய்யவும், என்னை அனுமதி; ஒன்றுமில்லாமையாக இரு; ஒன்றுமில்லாமையாக உணரு; என் வார்த்தை உலகத்தின் எல்லைகள் வரை எட்டும்படியாகவும், என் சமாதானம் மற்றும் நேசத்தின் வேலைகள் ஒவ்வொரு இருதயத்தையும் வசீகரிக்கும் படியாகவும், நானே உனக்கு எல்லாமுமாக இருப்பேனாக; உன் நிர்பாக்கிய நிலையை உனக்கு நினைவுபடுத்த என்னை அனுமதி; அதை உனக்கு நினைவுபடுத்துவதன் மூலம், நான் உனக்குத் தந்திருக்கிற எல்லா வரப்பிரசாதங்களாலும் நீ தற்பெருமை கொள்ளாதபடி அது தடுக்கும்; என் மாசற்ற பலிபீடமாக இரு... மனிதர்களைப் பிடிப்பவளே, என் சமாதானம் மற்றும் நேசத்தின் வளையை உலகம் முழுவதும் வீசுவாயாக, அது இழுக்கப்படச் செய்து, அதன் மீன்பாட்டினால் என்னை அக்களிக்கச் செய்; நான் பூமியில் என் சரீரத்தில் இருந்தபோது, ஒரு சிறு கூட்டமான மனிதர்களுக்கு மனிதர்களைப் பிடிப்போராய் ஆகக் கற்றுக் கொடுத்தேன்; என் வார்த்தைகளை மனுக்குலம் முழுவதற்கும் பரப்ப, நான் அவர்களை உலகத்தில் விட்டுச் சென்றேன்; ஆண்டவராகிய இயேசுவாகிய நான், உனக்குப் போதித்து, இந்த வேலை எவ்வாறு செய்யப்பட்டது என்று உனக்குக் காட்டுவேன்; நான் என்ன சொல்ல முடியும்? எதையுமே செய்து முடிக்க இயலாத நான், எப்படி தனியாக இப்படி ஒரு அலுவலை செய்து முடிக்க இயலும்? நாளுக்கு நாள், இந்தச் செய்தி அதிக பாரமாகி வருவதை நான் உணர்கிறேன். கடவுளை மகிழ்விக்க நான் விரும்புகிறேன். ஆனால், எந்த வழிகளைக் கொண்டு? எனக்கு முன்னால் ஒரு ஆல்ப்ஸ் மலையையும், இந்த வெளிப்பாடு என் மீது பாரமாக இருப்பதையும் தான் என்னால் காண முடிகிறது. நான் உன்னோடு சேர்ந்து என் சிலுவையைச் சுமந்து கொண்டிருக்கிறேன்; ஆம், அது உண்மையாகவே பாரமாய் இருக்கிறது; ஆனாலும், சோர்ந்து போகாதே; ஆண்டவராகிய நான், உனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன்; எனக்கு நெருக்கமாக இருந்துகொள், நான் உன்னைக் கைவிடமாட்டேன்; இருந்தாலும், அது மிக அதிகம். இயேசு தொடர்ந்து வேலை செய்ய என்னை ஊக்கப்படுத்துகிறார். வசுலா, இதுவரை நான் உனக்கு உதவி செய்யவில்லையா? ஆகவே, நான் ஏன் உன்னை கைவிட வேண்டும்? என் மீது முழுவதுமாகச் சார்ந்திரு; என்னை நம்பு; நான் தொடங்கி ஆசீர்வதித்துள்ளதை நானே முடிப்பேன்;