இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு வசுலாவிடம், பாலைவனத்தில் ஒருபோதும் அவளைக் கைவிடமாட்டேன் என்றும், தம்மை நம்பும்படியும் கூறுகிறார். வனாந்தரத்தில் கூக்குரலிடும் தம் குரலைக் கேட்பவர்கள் அனைவரையும் உயர்த்துவேன் என்றும், தம்மைக் கைவிட்டவர்கள் தாழ்மையோடு தம் வழிகளை ஏற்கவும், தேவ ஆவியை அணைக்காமல் வரவேற்கவும் அழைக்கிறார். அன்னை மரியாவும் இதயங்களைத் திறக்க அழைக்கிறார்.

Show Notes

அத்தியாயம் 77: நீங்கள் என்னை கைவிட்டுவிட்டீர்கள் - இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு வசுலாவிடம், பாலைவனத்தில் ஒருபோதும் அவளைக் கைவிடமாட்டேன் என்றும், தம்மை நம்பும்படியும் கூறுகிறார். வனாந்தரத்தில் கூக்குரலிடும் தம் குரலைக் கேட்பவர்கள் அனைவரையும் உயர்த்துவேன் என்றும், தம்மைக் கைவிட்டவர்கள் தாழ்மையோடு தம் வழிகளை ஏற்கவும், தேவ ஆவியை அணைக்காமல் வரவேற்கவும் அழைக்கிறார். அன்னை மரியாவும் இதயங்களைத் திறக்க அழைக்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:17 10/09/1988 - கிறிஸ்துவின் கடைசி சோதனை திரைப்படம்
01:06 12/09/1988 - பாலைவனத்து ரோஜா, என்னை நம்பு
05:47 14/09/1988 - நீங்கள் என்னைக் கைவிட்டுவிட்டீர்கள்
09:23 15/09/1988 - தேவ ஆவியை அணைத்துவிடாதீர்கள்
14:25 18/09/1988 - என்னை அன்பு செய், எனக்கு அஞ்சாதே
15:55 24/09/1988 - நானே வாழ்வு, எனக்கு எதிராக புரட்சி செய்யாதே
18:36 25/09/1988 - நானே அன்பு; என் செய்திகள்
20:25 26/09/1988 - குழுவின் ஒன்றுகூடலுக்கான செய்தி

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #நீங்களென்னைக்கைவிட்டுவிட்டீர்கள் #TrueLifeInGodTamil #பாலைவனத்துரோஜா

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 77. செப்டம்பர் 10, 1988 இறைவனுக்கு மகிமை உண்டாவதாக! இறைவனுக்கு மகிமை உண்டாவதாக; புனித மிக்கேலா? வசுலா, இந்த வெளிப்பாடு முழுவதும் உன்னதுருடைய திருவாயில் நின்று வருகிறது என்று நான் உனக்குச் சொல்லுகிறேன்; அவருடைய இரக்கத்தைப் பற்றி உறுதியாய் இரு; மிக்கேலே, உமக்கு நன்றி. தீமையோடு போரிடும்படி, புனித மிக்கேலிடம் அவருடைய ஜெபத்தை நான் ஜெபித்துக் கொண்டிருந்தபோது இது வெளிவந்தது. பிற்பாடு: ஆண்டவரா? நான்தான்; வெளிவந்திருக்கிற 'கிறிஸ்துவின் கடைசி சோதனை' என்ற இந்தத் திரைப்படம் ஒரு நிஜமான அவதூறு! அடுத்து என்ன வருமோ! அதைப் போய் பார்க்க விரும்பாதவர்கள் பேறுபெற்றோர்! இதைச் சொல்லிவிட்டு இயேசு மௌனமாக இருந்துவிட்டார். செப்டம்பர் 12, 1988 என் ஆண்டவரே! நான்தான்; என்னை நம்பு; குறிப்பு: நான் இயேசுவிடம், "இந்த மக்கள் உம் காலத்தில் பூமியில் வாழ்ந்தது எத்தகைய வரப்பிரசாதம்?" என்று சொன்னேன். நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன்; என் சித்தத்திடமிருந்து நீ பெற்றுக்கொண்ட வரப்பிரசாதம் எல்லா ஆன்மாக்களுக்கும் தரப்பட்டதில்லை; இருந்தும், எவ்வளவு அடிக்கடி நீ சந்தேகப்படுவாய்? நம்பு... உன்னை இழுப்பவர்களை விட்டு விலகு, அவர்களுடைய இதயங்கள் மூடியுள்ளன, அவர்கள் இருளில் வாழ்கிறார்கள்; வனாந்தரத்தினுள் வெகுதூரம் சென்று அலைந்து கொண்டிருக்கிற ஒரு குருடனை ஏன் பின் செல்கிறாய்? நீ பின் செல்ல வேண்டியவர் நான் ஒருவர் மட்டுமே, ஆகவே, உன்னால் கேட்க முடியும் என்பதால், உன் செவியைத் திற; முயற்சி செய்து, புரிந்துகொள். என் பிரசன்னத்தை உணர்; என்னைப் பார்க்கும்போது நீ ஏன் வேறுபக்கம் பார்க்கிறாய்? குழந்தாய், நான் பார்ப்பதை நீயும் பார், ஆம்! குறிப்பு: கடவுள் "குழந்தாய்" என்று சொன்னவுடன் நான் அவரை உணர்ந்தேன். அவருடைய பிரசன்னத்தை நான் உணர்ந்தேன். என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது! நீ பார்க்கிறாயா? நீ முயன்றால் உன்னால் முடியும்; மண ஒப்பந்தமானவளே! என்னை மகிழ்வி, நான் உனக்குத் தந்துள்ள அனைத்தையும் தியானித்து என்னை மகிமைப்படுத்து; ஆண்டவரே! நான் பயங்கரமான அளவு பலவீனமாய் இருக்கிறேன்! உன் பலவீனத்திற்காக ஜெபி, நான் காத்திருக்க மாட்டேன்; என் அன்பிற்குரியவளே, நான் உன்னை உயர்த்துவேன்; என் திருவுடலை உண்ணு, இதை எழுது; இயேசு, "என் திருவுடலை உண்ணு" என்று சொன்னபோது, முந்தின இரவில் என்னிடம் உள்ள 20 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு பாடுபட்ட சுரூபத்திலிருந்து அவருடைய முழுச் சரீரத்தையும் நான் பிரித்தெடுத்து, அவருடைய சரீரம் முழுவதையும் நான் உட்கொண்டு, அந்தப் பாடுபட்ட சுரூபத்தின் சிலுவையை வெறுமையாக விட்டுவிட்டதாக நான் கனவு கண்டது என் நினைவுக்கு வர, அதை எழுதுவதற்கு இயேசு என்னை அனுமதித்தார். இந்தக் காட்சியை நானே உனக்குத் தந்திருக்கிறேன், நீ என் சரீரத்தை உண்ண வேண்டும்; நான் உனக்கு என் சரீரத்தைக் கையளித்திருக்கிறேன்; என் இரத்தத்தைப் பருகு, நீ என் இரத்தத்தையும் பருக வேண்டுமென நான் விரும்புகிறேன்; வசுலா, சில சமயங்களில் நீ ஏன் சந்தேகப்படுகிறாய் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறாயா? அது ஏனென்றால் நீ, என் ரோஜாவாக, ஒரு பாலைவனத்தில் வாழ்கிறாய்; பாலைவனத்தில் உள்ள ஒரு ரோஜாவுக்கு அசாதாரணமான கவனமும் அக்கறையும் தரப்படாவிட்டால், அது அங்கு ஒருபோதும் பிழைத்திருப்பதில்லை; அதன் சுற்றுப்புறம் அதை பாதிக்கிறது; கடும் வெப்பமுள்ள காற்றுகள் உன்னை எரித்துவிடக்கூடும் என்ற பயத்தால், உன்னிடமிருந்து தமது கண்களை ஒருபோதும் அகற்றாதிருக்கிற உன்னுடைய பாதுகாவலராக நான் இருக்கிறேன்; நான் இடைவிடாமல் உன்னைக் கண்காணிக்கிறேன்; உன்னை கண்ணும் கருத்துமாய் ஊன்றிக் கவனிக்கிறேன்; உன் எதிரிகள் உன்னை மிதித்து நசுக்கிவிடாதபடி நான் அவர்களை விரட்டி அடிக்கிறேன்; உனக்கு எதுவும் குறைவுபடுகிறதா என்று நான் பரிசோதிக்கிறேன்; நான் உன்னை கிளை_ கழிக்க வேண்டியிருக்கும்போது அப்படியே செய்கிறேன், உன் மண்ணைச் செழிப்புள்ளதாக்குகிறேன்; என் ஆன்மாவின் மணவாட்டியே, அவநம்பிக்கைப்பட வேண்டாம் என்று நான் உனக்கு நினைவூட்டுகிறேன், ஏனெனில், ஆண்டவராகிய நான் உன் பாதுகாவலராக இருக்கிறேன், நான் உன்னை இந்த பாலைவனத்தில் ஒருபோதும் கைவிட்டு விடமாட்டேன், ஆகவே, என்னை நம்பு இந்த வனாந்தரம் உன்னை அச்சுறுத்த அனுமதியாதே; என் சமாதானத்தைக் கொண்டிரு, என்னில் நீ கொண்டுள்ள விசுவாசத்தை அதிகரிக்க நான் உனக்கு உதவுவேன், ஏனெனில் நீ அதை விரும்பினாய்; என்னை உட்கொள், நாங்கள், நாம்? என்றென்றும்.... சதாகாலமும், நாங்கள், நாம், அம்மா? ஆம், நாங்கள், நாம்; எப்போதும் இயேசுவின் அருகில் இரு; சரி, அம்மா. நான் அப்படியே இருக்க விரும்புகிறேன். வா; செப்டம்பர் 14, 1988 திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள். இயேசுவா? நான்தான்; என் குரலைக் கேள்; நான் இந்த வனாந்தரத்தில் கூக்குரலிடுகிறேன்; அதைக் கேட்பவர்கள் அனைவரையும் நான் உயர்த்துவேன், அவர்களுடைய பாவங்கள் கழுவிப் போக்கப்பட்டு, ஓடும் தண்ணீர்களைப் போல மறக்கப்பட்டுவிடும்; தங்கள் காதுகளை மூடிக்கொள்வோருக்கு ஐயோ கேடு! அந்தோ, தவறு செய்துவிட்டவர்களும், ஆனால் வழியாய் இருக்கிற நான் சொல்வதை கேளாதவர்களுமான பலர் உங்கள் மத்தியில் இருக்கிறார்கள்; நீங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்; நீங்கள் இப்போது மிக நீண்ட காலமாக தப்பறையில் தவறு செய்திருக்கிறீர்கள், சாத்தானின் புகையை சுவாசித்திருக்கிறீர்கள், என் திருப்பெயர் உங்களுக்கு இப்போது பொருளற்றதாக இருக்கிறது; நீங்கள் நிலத்தின் மீதுள்ள நிழல்களைப் போன்றவர்கள், இருந்தாலும், உங்கள் கொடும் தன்மையில் சாத்தானின் உதவியோடு உண்மையை திருப்பி விட்டீர்கள்; நீங்கள் பரிணாம வளர்ச்சியைக் கொண்டு என்னை மறைத்துவிட்டீர்கள்; நான் உங்களுக்கு மிகப் பல எச்சரிக்கைகளைத் தந்தேன், நான் இந்த நாட்களைப் பற்றி உங்களுக்கு முன்னுரைத்திருக்கிறேன்; என் அளவற்ற இரக்கத்தில், நான் உங்களுக்கு அடையாளங்களைத் தந்திருக்கிறேன், இருந்தும், நீங்கள் என் இரக்கத்தின் மீது உங்கள் கண்களை மூடிக்கொள்வதையே தேர்ந்து கொண்டீர்கள்; வழிகாட்டிகளே, என் வார்த்தையை அறிந்து எனக்காக ஊழியம் செய்பவர்களே, இறுதிக் காலத்தை அடையாளம் கண்டு, அது அண்மையில் இருப்பதை உணர்ந்திருப்பவர்களே, குறிப்பு: வேதாகமங்களில். ஆனால் வடிகட்டின கோழைத்தனத்தின் காரணமாக, மனிதருக்கு முன்பாக மகிமையை வைத்து, நான் உங்கள் மீது பொழிகிற வரப்பிரசாதங்களின் அருகில் செயலற்றவர்களாக நின்று, என் பழமொழிகளின் மறைவான பரம இரகசியங்களைப் புரிந்து கொள்ளவும், அவற்றிற்குள் மீண்டும் ஒருமுறை உற்றுநோக்கவும் தேடுபவர்களே; அறிவைப் பற்றிய இன்னும் ஆழமான உணர்தலுக்காக, புத்தியின் பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது இறங்கி வரும்படி அவரிடம் இரந்து மன்றாடுங்கள் என்று நான் உங்களை அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொள்கிறேன்; நாட்கள் எண்ணப்படுகின்றன; உங்கள் ஆன்மாக்களும் தான்; தயாராக இருந்தேன், என் எதிரி உங்கள் கண்களின் மீது இட்டு வைத்திருக்கிற திரையை அகற்றுங்கள், ஏனெனில் மிக நீண்ட காலமாக உங்கள் வீண் பெருமை நிலைத்திருப்பது போலவே, உங்கள் குற்றமும் உங்கள் மீது நிலைத்திருக்கும்; உங்களை தாழ்த்திக்கொண்டு என் வழிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; இந்த வனாந்தரத்தில் கடும் அவஸ்தையில் கூக்குரலிடுகிற என் குரலுக்கு பதில் கொடுங்கள்; குறிப்பு: இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, தம் அவஸ்தையையும் நான் அவரோடு பகிர்ந்து கொள்ளச் செய்தார். இயேசு மிகக் கடுமையாக துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார். என் குழந்தாய், வந்து என் மீது சாய்ந்து கொள், ஒன்றாக, ஒன்றாக நாம் என் அவஸ்தையைப் பகிர்ந்து கொள்வோம்; சரி, என் ஆண்டவரே, நான் அதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்; நாங்கள், நாம்; என்றென்றும்! செப்டம்பர் 15, 1988 புனித வியாகுல அன்னையின் திருநாள். ஆண்டவரா? நான்தான்; இந்நாட்களில் நீர் தந்து கொண்டிருக்கிற உமது இரக்கமுள்ள அடையாளங்களை இவ்வளவு அதிகமான திருச்சபை அதிகாரிகள் மதித்து ஏற்றுக்கொள்ளாதிருப்பது எப்படி நிகழ்கிறது? ஆண்டவரே, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று உமக்குத் தெரியுமா? இது நிஜமான விசுவாசம் அல்ல என்று அவர்கள் சொல்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாங்கள் அடையாளங்கள் இல்லாமல் ஏற்கனவே மனம் திரும்பி விட்டோம். எனவே, அவை இல்லாமலே எங்களால் வாழ முடியும். ஆகவே, கடவுளே, எங்களுக்கு இனிமேலும் அடையாளங்கள் எதையும் தராதீர். இத்தகைய அசாதாரண காரியங்களில் எங்களுக்கு ஆர்வமில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். முகம் குப்புற தரையில் விழுந்து உம்மை நோக்கி, இறைவனுக்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக! உமது அளவற்ற இரக்கத்திற்காக நீர் உண்மையாகவே வேதாகமங்களை நீர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர் என்று அவர்கள் சொல்வதற்கு பதிலாக, ஆவியானவரை அவர்கள் வெளியே தள்ளிவிடுகிறார்கள் என்றால், உண்மையான விசுவாசம் அவர்களுக்கு என்னவாய் இருக்கிறது? இயேசு தோமையாரிடம் என்ன சொன்னார் என்பதை நினைத்துப் பாருங்கள்: காணாமல் விசுவாசிப்பவர்கள் பேரு பெற்றவர்கள் என்று அவர் கூறினார் என்று சொல்லி அவர்கள் வாதிடுகிறார்கள். தேவ ஆவியை அணைத்துவிடவோ, இறைவாக்கு வரத்தை இழிவாய் நடத்தவோ முயலாதீர்கள் என்றும் வேதாகமம் சொல்வதை அவர்கள் மறந்துவிட்டார்களா? தேவ ஆவி தான் விரும்புகிற இடத்தில் வீசுகிறது. இந்த மக்கள் வாதிடும்போது, அவர்கள் என் ஆண்டவராகிய உம்மோடு தான் வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்வதாக தோன்றவில்லை. என் குழந்தாய், மக்கள் இனங்களை நோக்கி இப்படி உரக்கக் கூக்குரலிடு, கத்து! எல்லோரும் கேட்கும்படியாக; 'உங்கள் இறைவன் இங்கே இருக்கிறார்! நம் இறைவன் நம்மோடு இருக்கிறார், அவர் நம்மை ஒருபோதும் கைவிட்டதில்லை, தம் மந்தைக்கு உணவளித்து, தம் ஆட்டுக்குட்டிகளைத் தம் கரங்களில் ஒன்று கூட்டும்படி, ஓர் ஆயனைப் போல் அவர் வந்திருக்கிறார், ஏனெனில் அவருடைய அரசு அண்மையில் உள்ளது; என் சிறு மந்தையை நான் போஷிப்பேன், அவர்கள் எல்லோரையும் பெரும் அன்புடன் என் கரங்களில் ஒன்று கூட்டுவேன்; அவர்கள் உம் அடையாளங்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. அவர்கள் அவற்றை கேள்விப்பட்டு, அதைப்பற்றி பிறகு சிந்திக்கும்படி அதை ஒதுக்கி வைத்துக் கொள்கிறார்கள். உம் அடையாளங்களை நிறுத்திக் கொள்ளும்படி உம்மிடம் சொல்ல அவர்கள் விரும்புகிறார்கள். யாரும் எனக்கு அறிவுரை கூறத் தேவையில்லை; அந்த ஆலோசகர்களில் ஒருவனும் எனக்குத் தேவையில்லை, ஏனெனில் அவர்களுடைய ஞானம் எனக்கு அவமானமாக இருக்கிறது; உங்களை எப்படி அளவிடுவது என்றும், உங்களுக்கு எப்படி உணவளிப்பது என்றும் எனக்குத் தெரியாதா? அந்தோ! உங்களில் ஒரு சிலர் மட்டுமே என் ஆவியை வரவேற்கும்படி விடப்பட்டிருக்கிறீர்கள்; அவர்கள் ஒரு விரோத மனப்பான்மையைக் கொண்டிருந்ததன் மூலம் எப்படி என்னைக் கைவிட்டு விட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்களா? மேலும் என்னை கைவிட்டு விட்டதன் மூலம், உண்மையை காண அவர்கள் தவறிவிட்டார்கள் என்பதை களிமண் தன்னை வடிவமைப்பவனிடம் 'நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' என்று கேட்குமோ? என் வேலைகளையும், அதன் மறைபொருட்களையும் ஏற்றுக்கொண்டு, தேவ ஆவியிடமிருந்து நீங்கள் பெறுவதைத் தாழ்ச்சியோடு பெற்றுக்கொள்ளுங்கள்; நான் உங்கள் நாட்களில் என் அடையாளங்களை அதிகரிக்க விரும்பினேன், ஆகவே, தேவ ஆவியிடமிருந்து நீங்கள் பெறுவதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்ளுங்கள்; எனக்கு உங்கள் முதுகுகளைத் திருப்புவதற்குப் பதிலாக, மகிழ்ச்சியாய் இருங்கள்; என்னை எதிர்கொண்டு என்னை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்! என் தேவ ஆவியை அணைத்து விடாதீர்கள், அதற்குப் பதிலாக, எனக்கு வரவேற்புத் தாருங்கள்! என் ஆவியை அணைத்து விடுகிற உங்களுக்கு ஐயோ கேடு, குருட்டு வழிகாட்டிகளாகிய உங்களுக்கு ஐயோ கேடு, வீண் பெருமையால் வீங்கியவர்களாக, நீங்கள் என் பரிசுத்த திருச்சபையைப் பாழ்படுத்தி விட்டீர்கள்! நீங்கள் நிஜமான விசுவாசத்தில் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி, உங்களையே பரிசோதித்துக் கொள்வதன் மூலம் உண்மையைத் தேடுங்கள்! பலிபீடமே! ஆண்டவராகிய நான் இறுதிவரை உன் தீச்சுவாலை பற்றி எரியும்படி பார்த்துக் கொள்வேன், என் கைவேலைகள், அதாவது நூல்கள் இன்னும் முடியவில்லை. இப்போது வா, நாங்கள் ?நாம்? என்றென்றும். ஆமென். செப்டம்பர் 18, 1988 என் இறைவனா? குறிப்பு: இந்த பூமியில் ஒரு விதவையைப் போல உணரும் அளவுக்கு நான் இறைவனை அன்பு செய்கிறேன். நான்தான்; என்னை அன்பு செய், எனக்கு அஞ்சாதே; எனக்கு எதிராக நீ கலகம் செய்கிறாய் என்றால் மட்டும் எனக்குப் பயப்படு; அன்பின் ஒவ்வொரு துளியும் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து ஆன்மாக்களை விடுவிக்க பயன்படுத்தப்படுகிறது, என்னை பக்தி ஆர்வத்தோடு அன்பு செய்வதன் மூலம் நீ அவர்களுடைய நெருப்புகளை அணைத்து; குறிப்பு: இயேசு இதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, பற்றி எரிந்து கொண்டிருந்த ஏதோ ஒரு ஆன்மாவின் கரங்களில் இருந்து நெருப்பு அணைந்து போனதை நான் காட்சியாகக் கண்டேன். அவர்களுடைய கடும் வேதனையிலிருந்து அவர்களை விடுவிக்கிறாய்; அதன்பின், ஆண்டவராகிய என்னால் இறுதியாக அவர்களை வரவேற்க முடியும்; ஆகவே, என்னை அன்பு செய்; என்னை ஆசி; என்னை வழிபடு; அவர்களை ஒருவர் பின் ஒருவராக விடுவி; அன்பு பின்னக வல்லமைகளை உட்கிரகித்துக் கொள்கிறது; அதுவே சுதந்திரத்திற்கும் வாழ்வுக்கும் திறவுகோலாக இருக்கிறது; சாத்தான் ஏன் என்னை வெறுக்கிறான் என்பது இப்போது உனக்குப் புரிகிறதா? என் வசுலா, என் மீது சாய்ந்துகொள், எதுவும் வீணாய்ப் போகாது; நாங்கள், நாம்? என்றென்றும் நித்திய காலமும். செப்டம்பர் 24, 1988 என் இறைவனா. நான்தான்; நான் அரூபியாக இருக்கிறேன் என்பதை நினைவில் வை, நான் சொந்தமாகக் கொண்டிருக்கிற அனைத்தையும் உன் ஆவியோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்; நீயும் நானும் அன்பின் பந்தம் ஒன்றால் இணைக்கப்பட்டு, அன்பில் ஒருவரோடு ஒருவர் கட்டுண்டவர்களாக, ஒன்றாய் இருக்கிறோம்; உன் இறைவனாகிய நானும், என் சிறியவளாகிய நீயும்; உன் சிருஷ்டிகராகிய நானும், என் சிருஷ்டியாகிய நீயும்; தங்கள் இதயம் இறுகிப் போயிருப்பவர்களுக்கு, என் இருதயம் அச்சிக்கிறது என்பது மீண்டும் நினைவுறுத்தப்படுவதாக; பெயரில்லாத மக்களையும், புண்ணியங்கள் இல்லாத மக்களையும், எந்த பேரு பலன்களும் இல்லாத மக்களையும் கூட நான் அழைக்கிறேன் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்களாக; நான் கல்லான இதயம் உள்ளவர்களையும் உருமாற்றி, வெறும் ஒன்றுமில்லாமையிலிருந்து அவர்களை உயர்த்துகிறேன்; நான் இறந்தோருக்கு நடுவில் எதிர்பாராமல் வருகிறேன்; அவர்கள் எல்லோரையும் மேலே எழுப்ப என்னால் முடியும்; உன்னையே பார், வசுலா; உன்னிடம் பேரு பலன்கள் எதுவும் இல்லை, இருந்தாலும், மிகுந்த தயவ இரக்கத்தின் காரணமாக, நான் உன்னை உயர்த்தினேன்; இப்போது இறைவனின் உண்மையான வாழ்வு என்றால் என்ன என்று நீ அறிந்திருக்கிறாய்; நானே வாழ்வு; என் குழந்தாய், என்னை மகிமைப்படுத்து, ஒருபோதும் எனக்கு எதிராக புரட்சி செய்யாதே; என் போதனைகளை மனதில் வைத்துக்கொள்; ஆண்டவரே! நான்தான்; ஒரு காரியம் எனக்குத் தொந்தரவாய் இருக்கிறது. நான் விவாகரத்துச் செய்து மறுமணம் செய்தவள் என்பதால், எப்போதும் இடைவிடாமல் பாவத்தில் இருக்கிறேன் என்று சொல்கிற ஒருவர் இருக்கிறார். அதனால்தான் என் இடைவிடாத பாவ வாழ்வின் காரணமாக இந்த வெளிப்பாட்டை தருபவர் நிச்சயமாக என் இறைவனாகிய நீர் அல்ல என்று அவர் சொல்கிறார். பாவமில்லாத மனிதன் எனக்கு தன்னை அறிவிக்கட்டும்! அவன் முன்னே வந்து தன்னை எனக்கு காட்டட்டும்! ஆம், என் தேவனே, எனக்கு உதவும். இந்த மனிதர்களின் இந்த அறிக்கைகளுக்கு நான் என்ன பதில் தருவது என்று எனக்கு தெரியவில்லை. பதில் தராதே; என்னிடம் விரைந்து வா; உன் பிதா உன்னைப் பற்றி அக்கறை கொள்கிறார்; நாங்கள், நாம், குழந்தாய்? என்றென்றும் எக்காலமும். ஆமென். ஞானம் குழந்தைகளை நேசிக்கிறது; செப்டம்பர் 25, 1988 என் தேவனே, உம் செய்திகளில் ஒரு சிலவற்றை எல் என்ற எழுத்தில் தொடங்கும் பெயருள்ள ஒருவருக்கு கொடுத்திருக்கிறேன், அவை வாசிக்க தர்ம சங்கடமாக இருப்பதாக அவர் சொன்னார். அவற்றை வாசிப்பது தம்மை அமைதியிழக்கச் செய்வதாக அவர் உணர்ந்தார். ஏனெனில் நீர் உம் படைப்பாகிய என் மீது கொண்டுள்ள அன்பும், நான் என் இறைவனாகிய உம் மீது கொண்டுள்ள அன்பும் அதிர்ச்சி அடிப்பவையாக உள்ளன என்று அவர் சொல்கிறார். ஆண்டவரா? நான்தான்; நான் இறைவன், நானே அன்பு; என் செய்திகள் இழிவானவையாக இருக்கின்றன என்று சொல்பவன் யாராய் இருந்தாலும், அவன் என்னைத் தீர்ப்பிட்டுக் கொண்டு மட்டும் இருக்கிறான், என்னைத் தீர்ப்பிடுவதன் மூலம் அவன் தன்னையே தீர்ப்பிட்டுக் கொண்டிருக்கிறான். ஆன்ம தன்மையற்ற ஒரு மனிதனிடம் தன் மனதைக் கொண்டு தேவ ஆவியை புரிந்து கொள்ளும் திறன் இல்லை; ஆவியானவரை புரிந்து கொள்ள இயலும்படி ஞானத்தினுள் ஊடுருவ செல்லும் திறனும் இல்லை; ஒருவன் தன் இதயத்தை திறந்து தேவ ஆவி தனக்குள் நுழைந்து, அதன் மூலம் தன்னுடைய ஆவியை அவர் சந்திக்க அனுமதிக்க வேண்டும்; அப்போது என் ஆவி அவனுடைய ஆவியைப் போஷிக்கும், தேவ ஆவி யாராய் இருக்கிறார்? அவர் எப்படி வேலை செய்கிறார்? அவர் எப்படி உணர்கிறார் என்பதைக் காணும்படி ஞானம் அவனை ஒளிர்விக்கும்; நான் இறைவனாய் இருக்கிறேன், நான் என்னை நேசிக்குமாறு, என் மட்டற்ற அன்பின் காரணமாக உங்கள் எல்லோரையும் படைத்த அன்பின் மூல ஆதாரமாக இருக்கிறேன்; நம் ஆண்டவர் போற்றப்படுவாராக! செப்டம்பர் 26, 1988 குழுவின் மறு ஒன்றுப்பிற்காக தரப்படும் செய்தி. என் இறைவனா? நான்தான்; என் வசுலா, ஓர் அரசரைப் போல் என்னை நடத்து, எல்லா ஆன்மாக்களையும் என்னிடம் அழைத்து வா; கேட்க விரும்புபவர்களை நான் உயர்த்தி, என் புனித இதயத்தில் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்; அன்புக்குரியவளே; சொல்லுங்கள், பரிசுத்த அன்னையே? ஆம், நான் சொல்வதைக் கேள்; என் வாசனை திரவியத்தை நீங்கள் உயிர்த்துணரும்படி உங்கள் மத்தியில் வைக்கிறேன்; குறிப்பு: இந்த வெளிப்பாட்டை பின்பற்றும் பலர் தூபம் மற்றும் ரோஜாக்களின் நறுமணங்களை முகர்ந்திருந்திருக்கிறார்கள். எங்கள் பிரசன்னம் உங்கள் மத்தியில் இருக்கிறது என்பதையும், உங்கள் இதயங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும், நாங்கள் எப்படி உங்களை நேசிக்கிறோம் என்பதையும் உணருங்கள்; குழந்தைகளே, நான் உங்கள் தாய்; என் திருமகன் உங்களை சுத்திகரித்து, உங்களை வழிநடத்தவும், உங்களைக் குணப்படுத்தவும், அவரை அனுமதியுங்கள், இயேசுவால் குணமாக்கப்பட, உங்களையே அனுமதியுங்கள்; என் மகன் உங்களுக்கு தந்து கொண்டிருக்கிற இந்த வரப்பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; அவர் ஏன் ஒவ்வொரு ஆன்மாவையும் தேடுகிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்; இயேசு மற்றற்ற விதமாக உங்களை நேசிக்கிறார்! குழந்தைகளே, முழு மனித குலத்தின் தாயாகவும், உங்கள் மீட்பரின் தாயாகவும் இருக்கிற நான், உங்கள் அருகில் இருக்கிறேன், உங்களுக்கு உதவ எவ்வளவோ ஆயத்தமாக இருக்கிறேன்; வாருங்கள், உங்கள் இதயங்களை எங்களுக்குத் திறங்கள்; நாங்கள் உங்கள் திருக்குடும்பமாக இருக்கிறோம். எங்கள் சமாதானத்தை பெற்றுக்கொள்ளுங்கள்; இயேசுவும், நானும், உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறோம். பரிசுத்த அன்னையே, இறைவனின் தாயே, நான் உங்களை வாழ்த்துகிறேன்.