வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 58. ஜனவரி 5, 1988 இறந்து கிடக்கிற ரஷ்யாவைப் பற்றிய பகுதியை நான் மீண்டும் வாசித்தபோது, நான் மீண்டும் மனங்கசந்து அழுதேன். வசுலா, அழாதே; நான் அவளை உயிர்ப்பிப்பேன் என்று நான் உனக்குச் சொன்னேன்; ஆண்டவரே, நான் அவளை நேசிக்கிறேன். நான் அவளுக்காகப் பரிதாபப்படுகிறேன். நான் அவளை அன்பு செய்கிறேன். நான் அவளை நேசிப்பது போல அவளை நேசி, அவளும் என் மகளாக, உன் சகோதரியாக இருக்கிறாள்; ஆண்டவரே, நீர் அவளிடம் போய் அவளை உயிர்ப்பிப்பீரா? ஓ, ஆண்டவரே, அவள் உம்மிடம் திரும்பி வருவாளா? நான் அவளிடம் போய் அவளை உயிர்ப்பித்து, என் இல்லத்திற்கு அவளைத் தூக்கி வருவேன்; என் எல்லாக் குழந்தைகளும் அவளை நேசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; நாம் எல்லோரும் அன்போடு அவளைச் சூழ்ந்திருப்போம்; என் இறைவா, நாலாம் தேதியன்று நீர் தந்த செய்தியைத் தொடர்ந்து கூறுவதாக நீர் சொன்னீரா? நான் தொடர்ந்து சொல்வேன்; ரஷ்யா, சாத்தானைச் சார்ந்திருப்பவளாக ஆனபோது, அவளுடைய நிலம் பலன் தராததாக இருந்ததால், நான் நேசிப்பவர்களுக்கென்று அவன் எப்போதுமே வைத்திருக்கிற ஆபத்தான கனியை அவன் அவளுக்குக் கொடுத்தான்; அது படிப்படியாகக் கொல்கிறது; ஒருவன் எவ்வளவுக்கு அதிகமாக அதை உண்கிறானோ, அவ்வளவுக்கு அது அவனுக்குத் தேவைப்படுகிறது; அது ஆபத்தானது, மெதுவாகக் கொல்வது; அவன் தன் கனியைக் கொண்டு அவளை உண்பித்து, அவளைக் கொன்றான்; அவள் தன் கையில் இந்தக் கனியைப் பிடித்துக் கொண்டிருந்தபடியே இறந்தாள்; வசுலா என்னை நம்பு, நான் அவளை உயிர்ப்பிப்பேன்; மகளே, திடமாயிரு, கவலைப்படாதே; என்னைச் சுதந்திரமாக விடு, நான் என் பணிகளைச் செய்து முடிப்பேன்; ஆண்டவரே, நீர் உம் கரபந்தால் குழந்தைகளை ஆசீர்வதிக்கும்படியாகவும், உமது செய்தியை அவர்களுக்கு அறிவிக்கும்படியாகவும் என்னிடம் கேட்டுக்கொண்டீர் என்பதால் நான் கவலைப்படுகிறேன்; அப்படியானால், ஒன்றுபடத் தொடங்குவது எப்படி என்று வாசித்தறிய அதிகாரிகளை அனுமதியும், அதன்பின் கரபந்தாலைப் புனிதப்படுத்தி, கரபந்தால் பாத்திமாவின் தொடர்ச்சி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளச் செய்யும். அதன்பின் அவர்கள் புனித மாமரி கரபந்தாளில் தந்தருளிய காட்சிகளை மதிக்காமல், பாத்திமா தொடர்பாக செய்த தவறை மீண்டும் செய்வதால், புனித மாமரி எவ்வளவு அதிகமாக நோகடிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளச் செய்யும். ஓ, ஆண்டவரே, அதன்பின் இப்போது ரஷ்யா, இந்தச் செய்தியை நான் உம் ஊழியர் இரண்டாம் அருள் சின்னப்பரிடம் தான் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீர் தொடர்ந்து எனக்கு குறிப்பாக உணர்த்தி வருகிறீர், நான் இது எதையும் செய்யவில்லை! உம்முடைய வார்த்தை என் மீது உள்ளது. அது சுமப்பதற்கு பாரமாக உள்ளது.... அதை இப்போது சொல்! '....தன்னந்தனியாக' என்று நான் சொல்ல இருந்தேன். என்னை மன்னியும், குறிப்பு. நான் அவமானமாக உணர்ந்தேன். ஆனாலும், அவரை உண்மையாக இருப்பதால், என் வாக்கியத்தை முடிக்கும்படி அவர் என்னிடம் கேட்டார். வசுலா, நான் அதை உன்னோடு சுமந்து கொண்டிருக்கிறேன்; நான் என் சிலுவையை உன்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்; வசுலா, நான் உன்னை மன்னிக்கிறேன்; இதே சிலுவையைச் சுமக்கிற சாட்சிகளை நான் உனக்குத் தந்தும் இருக்கிறேன்; நீயல்ல, ஆண்டவராகிய நான்தான் இந்தக் காரியங்களை எல்லாம் செய்வேன் என்பதை நீ மறந்து கொண்டே இருக்கிறாய்; நீ செய்ய வேண்டியது என்னை நேசிப்பதும், என்னிடமிருந்து உண்பதுமே; என் அன்புக்குரியவளே, வா, நான் உன் காதில் இரகசியமாகப் பேசுவேன்; மகளே, மகிழ்ச்சி கொள், ஏனெனில் நேரம் வந்துவிட்டது; நான் உன்னை நேசிப்பது போல, நீயும் என்னை நேசி; நான் கடவுளின் அன்புக்குரிய திருமகனும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து; என் அடையாளத்தை வரை; ஜனவரி 6, 1988 இயேசுவே, உம்முடைய சொந்த மகிமைப்படுத்தப்பட்ட சரீரம் துன்பத்தால் தொடப்படுகிறதா? நீரும் நம் பரிசுத்த மாதாவும் இப்போது மோட்சத்தில் துன்பங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவில்லையா? வசுலா, இப்போது எனக்கு சடப்பொருளான சரீரம் இல்லை; குறிப்பு. தமக்கு சடப்பொருளான உடல் இல்லை என்ற இயேசுவின் இந்த வாக்கியம், அவருடைய உயிர்ப்பையோ, அவர் ஒரு மனித சரீரத்தைக் கொண்டிருப்பதையோ மறுக்கவில்லை. தமது தற்போதைய உடலுக்கு, உயிர்ப்புக்கு முன், தாம் கொண்டிருந்த சடப்பொருளான உடலுக்குரிய உலகத்தன்மையான குணங்கள் இல்லை என்றுதான் அவர் சொல்கிறார். 1 கொரிந்தியர் 15 ஆம் அதிகாரம் 42 முதல் 44 ஆம் வேதாகம பகுதியையும் காண்க. நான் அரூபியாக இருக்கிறேன்; குறிப்பு. தாம் அரூபி என்ற இயேசுவின் இந்த வாக்கியம், அவருடைய உயிர்ப்பையோ, அவர் ஒரு மனித சரீரத்தைக் கொண்டிருப்பதையோ மறுக்கவில்லை. 2 கொரிந்தியர் 3 ஆம் அதிகாரம் 17 ஆம் மற்றும் 1 கொரிந்தியர் 15 ஆம் அதிகாரம் 46 ஆம் வசனங்களைக் காண்க. இயேசு இந்தச் செய்திகளில், உதாரணமாக, ஆகஸ்ட் 16, 1988 மற்றும் டிசம்பர் 6, 1989 ஆகிய நாட்களில் தமது சரீர உயிர்ப்பைப் பற்றித் தெளிவாகப் பேசுகிறார். எனக்கு உடல் ரீதியான வேதனை கிடையாது, ஆனாலும், என் ஆன்மாவும், உன் பரிசுத்த மாதாவின் ஆன்மாவும், எங்கள் குழந்தைகள் நேரடியாக சாத்தானின் வலைகளுக்குள் சென்று சிக்கிக் கொள்வதைக் காணும்போது, சகிக்க முடியாத அளவுக்கு துன்பப்படுகின்றன; ஆனால் ஆண்டவரே, நான் துன்பப்படும்போது, நீரும் துன்பப்படுகிறீரா? உதாரணமாக, யாராவது என்னை அநீதியான முறையில் குற்றம் சாட்டினால், நீர் துன்பப்படுவீரா? நீ தவறான விதத்தில் குற்றஞ் சாட்டப்படுகிறாய் என்றால், நான் குற்றஞ்சாட்டுபவன், குற்றஞ்சாட்டப்படுபவன் ஆகிய இருவருக்காகவும் துன்பப்படுகிறேன்; அநீதி சாத்தானிடமிருந்து வருகிறது, அது அவனிடமிருந்து வருவதால், குற்றம் சாட்டுபவன் சாத்தானால் திறமையாக கையாளப்பட்டு வருகிறான் என்பதை அது குறிக்கிறது; குற்றம் சாட்டப்படுபவனைப் பொறுத்தவரை, பலியாகிறவனுக்காக என் இதயம் வேதனைப்படுகிறது; நான் பரிசுத்த வேதாகமத்தில் என் வார்த்தைகளை உறுதிப்படுத்துகிறேன்; நான் மகிமைப்படுத்தப்படுகிறேன்; ஆனாலும், நான் உன்னோடு இணைந்திருப்பதால், நீ உணருகிற எல்லாவற்றையும் நானும் உணருகிறேன்; ஆண்டவரே, உமக்கு நன்றி. ஜனவரி 8, 1988 கடவுளின் மீதான என் ஆசையும், ஏக்கமும் மிகப் பெரியவைகளாக இருந்தன. வசுலா, என்னை விரும்பித் தேடுவதன் மூலம் என்னைக் கனப்படுத்து; தனிவாழ்வு பரம இரகசியமான முறையில் உன்னை வளர்த்து, என்னிடம் அதிக நெருக்கமாக உன்னைக் கொண்டுவரும்; அன்புக்குரியவளே, என் திருக்காயங்களுக்குள் இன்னும் அதிக ஆழமாக ஊடுருவ, அது உனக்கு உதவும்; இரண்டாவது நிகழ்வில், உன் மீது என் பணிகளைத் தீவிரமாக்கி, உன் ஆன்மாவில் குறைவுபடும் எல்லாவற்றையும் நான் உனக்குத் தருவேன்; சந்தேகப்படாதே; நான் என்னிடம் உன்னை உயர்த்துவேன்; என் அன்புக்குரிய ஆன்மாக்கள் அனைத்தையும் என் பாடுகளுக்குள் இட்டுச் சென்று, அவர்களை என் உயிருள்ள மாதிரிகளாக மாற்றும் இந்தப் பாதையை நான் உனக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; இப்போது வா, என் பிரசன்னத்தை உன்னால் உணர முடியாததால், நான் அதை உனக்கு நினைவுபடுத்துவேன்; சரியா? என்னால் முடியாது என்று எனக்குத் தெரியும் என்று நான் சொல்லப்போனேன். என்னிடம் நன்மையானது எதுவும் இல்லை. ஆண்டவரே, உம்முடைய அளவற்ற இரக்கத்திலிருந்து என்னிடம் குறைவுபடுவதை எல்லாம் எனக்குத் தர, உம்மையே முழுமையாக நம்பி இருக்கிறேன். ஆம், எல்லா நன்மையும் என்னிடமிருந்தே வருகிறது என்பதை புரிந்துகொள். வா, நாம் நாங்கள்? ஆம், ஆண்டவரே. ஜனவரி 9, 1988 ஆண்டவரே, ஐந்து காயவரம் பெற்றவர்களை விசுவாசிக்காத சில விஞ்ஞானிகளைப் பற்றி நான் வாசித்திருக்கிறேன். இந்த மக்கள் கற்பனையிலேயே வாழ்கிற மனநலம் குன்றிய மனிதர்கள் என்றும், மனதின் ஏவுதலால் ஐந்து காயங்கள் அவர்கள் தங்களுக்குத் தாங்களே உண்டாக்கிக் கொள்பவை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் தங்கள் புதுமைகளை விசுவசிப்பதில்லை என்று தெளிவான முறையில் ஒப்புக்கொள்கிறார்கள். இதெல்லாவற்றிற்கும் இயற்கையான விளக்கம் கொடுக்கப்பட முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட விளக்கம் ஒன்றும் அவர்கள் தரவில்லை. விஞ்ஞானம், உலக ஞானம் உள்ள ஒரு மனிதனுக்கு பிடித்த எனக்கு எதிரான கருவியாகவே நிலைத்திருக்கும்; கேட்கக்கூட மறுக்கிற ஆன்மாக்களை உங்கள் மத்தியில் நான் கொண்டிருக்கிறேன்; இவர்களே என் கண்களில் மிகுந்த பரிதாபத்திற்குரியவர்கள்; இந்த இழக்கப்பட்ட ஆன்மாக்களுக்காக ஜெபி; ஜனவரி 10, 1988 என் இறைவா, வேறு முறையில் இருந்தாலும், என்னைப்போல் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு விதத்தில் உம் பணிகளை ஏற்றுக் கொள்கிற ஆன்மாக்களைப் பற்றி அவ்வப்போது கேள்விப்படுவது மிக நன்றாக இருக்கிறது. ஏறத்தாழ நான் பெற்றுக் கொள்வது போன்ற அதே செய்திகளைத் தாங்கள் புனித அருளப்பரைப் போல பரவச நிலையில் இருக்கும்போது பெற்றுக் கொள்கிற இரண்டு பெண்மணிகளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்! பரிசுத்த ஆவியானவரால் அவர்களுக்குச் செய்தி தரப்படுகிறது. நான் இலவசமாக என் வார்த்தையைத் தருகிறேன்; நான் எப்போதுமே அதை இலவசமாகத் தருவேன்; அன்பிற்குரியவளே, என்னை மகிழ்வி, என்னோடு ஜெபி; என் ஆன்மா உனக்கு உபகாரம் செய்திருக்கிறது; வா, நாம் ஜெபிப்போம், குறிப்பு: இயேசு நெருங்கி வந்து என் தோலின் மீது தம் கரத்தை வைத்தார். 'பிதாவே, நீதியுள்ளவரே, உமது பரிசுத்த சித்தத்தைச் செய்ய நான் மனதாய் இருக்கிறேன், முட்களை, இன்னும் உம்மில் இருக்கிற முட்களை அகற்றி, அவற்றின் இடத்தை என் அன்பால் நிரப்பி, தொடர்ந்து முன்னேறிச் சென்று, எப்போதும் மிகுந்த உணர்ச்சி உள்ளதாக இருக்கிற உம் திரு இருதயத்தை மகிழ்விக்க நான் மனதாய் இருக்கிறேன்; ஆமென்; வா, நான் உனக்கு மற்றுமொரு ஜெபத்தைக் கற்றுத் தருவேன், அது பரிகாரங்களுக்கு மிகுந்த பலனுள்ள ஜெபம்; இந்த வார்த்தைகளை நான் சொல்லச் சொல்ல திருப்பிச் சொல்; நான் உம்மை விசுவசிக்கிறேன். உம்மை ஆராதிக்கிறேன். உம்மை நம்புகிறேன். உம்மை நேசிக்கிறேன். ஆமென்; ஆண்டவரே, ஆனால் இது பாத்திமாவில் உம் சமாதானத்தின் தூதரால் சொல்லப்பட்டதே. இந்த முறையில் ஜெபிக்கும்படி நான் என் தூதர்களுக்குக் கற்பித்திருக்கிறேன்; "ஆம், ஆண்டவரே, உண்மையில் நீரே என் நம்பிக்கை; நீரே என் மகிழ்ச்சி, என் புன்னகை, உம்மில் நான் விசுவாசம் கொள்கிறேன், நீரே என் வாழ்வின் மகிழ்ச்சி, நீரே என் உயிர். நான் என்றென்றும் உம்மை ஆராதித்து, உம்மை வழிபடுகிறேன். ஆமென்." இப்போது என்னிடம் வா; குறிப்பு: இயேசு பரிசுத்த அடக்கத்துகளின் படத்தையே இப்படி குறிப்பிட்டார். ஆம், என் சிலுவை அடையாளத்தை வரை ; நான் எழுந்து அவரிடம் சென்று, முழந்தாளிட்டு, என் மீது சிலுவை அடையாளம் வரைந்து கொண்டேன். ஆம், தமத்திரித்துவத்தில்; மகளே, நான் உன்னை நேசிக்கிறேன்; நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே, அவர்களிடம் கூறு... அவர்களிடம் கூறு... இதில் ஆண்டவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், நான் சிலுவை அடையாளம் வரைந்து கொண்டபோது, ஆர்த்தடாக்ஸ் எனக்குக் கற்றுத் தந்த விதத்தில் என் மீது சிலுவை அடையாளம் வரைந்து கொண்டேன். பெருவிரலும், ஆட்காட்டி விரலும், நடுவிரலும் ஒன்றாகச் சேர்த்து, பரிசுத்தத் தமத்திருத்துவத்தை உறுதிப்படுத்துகிற ஒரு திரித்துவ அடையாளம். ஜனவரி 12, 1988 ஆண்டவரே, என் இறைவா, வசுலா, நான் உனக்கு உதவி செய்வேனாக; நேராகவும், இருக்கமாகவும் இருந்த அந்த மூன்று கம்பிகளின் காட்சி உனக்கு நினைவிருக்கிறதா? ஆம், ஆண்டவரே, எனக்கு நினைவிருக்கிறது. நல்லது, அப்படியானால், ஒன்றிணைய இயலும்படி அந்த மூன்று கம்பிகளும் வளைய வேண்டி இருக்கிறது; வெறுமனே இரண்டு கம்பிகள் மட்டும் வளைய வேண்டும் என்று நான் சொல்லவில்லை; வசுலா, உன் இறைவனாகிய நான் உங்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு முழுத் திட்டத்தைக் கொண்டிருக்கிறேன் என்பதை நீ உணருகிறாயா? நேற்றைய செய்தியைப் பற்றி, ஒருவன் தன்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளும் முறை பற்றி உம்மிடம் கேட்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். மகளே, எனக்குத் தெரியும், அதனால்தான் 'ஒன்றிணைவதற்கு நீங்கள் அனைவரும் வளைய வேண்டும்' என்று நான் சொல்வதன் பொருளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன், என் அளவற்ற இரக்கத்தின் காரணமாக, ஒன்றிணைவதற்கு உங்களுக்கு உதவி செய்ய நான் வருகிறேன்; வசுலா, இதயத்தின் எளிமையில் என்னைத் தேடு; நான் அன்பின் இறைவனாக இருக்கிறேன்; நான் சாந்தமும் தாழ்ச்சியும் உள்ளவர்; ஒன்றிணைய இயலும்படி என் வழிகளை நினைவில் கொள்ளுங்கள்; உங்கள் சுயநலமான எண்ணங்களைத் தள்ளிவிடுங்கள்; என் குரலை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், என் வார்த்தையை நான் ஒப்படைத்துள்ளவர்களாகிய நீங்கள் ஆயிரக்கணக்கான ஆன்மாக்களை நான் ஒப்படைத்திருக்கிறவர்களாகிய நீங்கள், என் மந்தையின் தலைவர்களாக நான் அறிவித்திருக்கிற நீங்கள், என்னுடைய விருப்பங்களை தேடாமல் ஏன் உங்களுடைய விருப்பங்களைத் தேடுகிறீர்கள்? என் ஆட்டுக்குட்டிகள் சிதறடிக்கப்படுகின்றன, சிதறடிக்கப்படுகின்றன.... மலரே, நான் என் குருக்களை ஒன்று கூட்டி, என் அன்பால் உங்களைப் புதுப்பித்து, நாடுகளை ஒன்று சேர்க்கும்படியாக, உன் வழியாக இறங்கி வருகிறேன்; ஆண்டவரும், இரட்சகருமானவரே, அவர்கள் எப்படித் தங்கள் தவறுகளை அறிந்து கொள்வார்கள் அல்லது அடையாளம் கண்டுகொள்வார்கள்? என் சித்தத்தைத் தேடுவதே அவர்கள் தங்களுடைய தவறுகளை அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக இருக்கிறது; மனஸ்தாபப்படுங்கள்; என் இரக்கத்தைப் பற்றி சிந்தியுங்கள்; என் தேவ பராமரிப்பின் பணிகளை மிதித்து நசுக்குவதற்குப் பதிலாக, அவற்றை விசுவாசியுங்கள்; நேர்மையில் என்னை வழிபடுங்கள்; உங்கள் விருப்பங்களை அன்றி என் விருப்பங்களை தேடுங்கள்; ஆண்டவரே, 'விருப்பங்கள்' என்ற வார்த்தையின் பொருளை ஒருவேளை என்னால் புரிந்து கொள்ள முடியாததற்காக என்னை மன்னியும். ஆண்டவரே, 'விருப்பங்கள்' என்பதன் அர்த்தம் நீர் விரும்புவதெல்லாம் இப்போது சிதறி இருக்கிற உம்முடைய மந்தையை ஒன்று கூட்டுவது என்பதுதானா? அன்பிற்குரியவளே, நான் அனைத்திலும் அதிகமாக எதை விரும்புகிறேன் என்பதை நீயும் கூட புரிந்து கொண்டாய், ஆனால் நான் ஆசிப்பது இது மட்டுமில்லை; வசுலா, இந்த வெளிப்பாட்டை மீண்டும் வாசித்து, நீ புரிந்து கொள்வாய்; சரி, ஆண்டவரே. மகளே, உன்னைத் துன்புறுத்துவவர்களை ஆசீர்வதிக்கும்படி நான் உனக்கு நினைவுபடுத்துவேன்; அன்பு எப்போதும் பொறுமையுள்ளது, கருணையுள்ளது; பரிசுத்தமாக வாழு, மகளே, உன்னிடம் நான் காட்டுகிற பொறுமையைப் பற்றி நினைத்துப் பார்; குறிப்பு: அவர் அன்பாக இல்லாதிருந்தால், நீண்ட காலத்திற்கு முன்பே அவர் என்னை அடித்து வீழ்த்தி இருப்பார். என் சாயலாக இரு, என்னில் விசுவாசம் கொண்டிரு; நம்பு, நேசி; வா, உன் கடவுளாகிய எனக்கு மிகப் பிரியமான ஆன்மாவே, என்னில் இளைப்பாறு; நாங்கள்? நாம்? ஆண்டவரே, நீர் என்னை வைத்து பொதிந்து கொள்கிற உம் அன்பிற்காகவும், என் ஆன்மாவின் மீது நீர் கொண்டுள்ள பொறுமை, உம் கருணை மற்றும் தயவிரக்கத்திற்காக உமக்கு நன்றி. நான் உம்மை வழிபடுகிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன், ஆமென். ஆ, அன்புக்குரியவளே! இந்த வார்த்தைகளை நீ என்னிடம் சொல்ல கேட்கும்போது, என் இதயம் அன்பினால் விரிவடைகிறது! குறிப்பு: கடவுள் மிக அதிகமாக மகிழ்ச்சி அடைந்தவரைப் போல் தோன்றினார். ஓ, இறைவா, நான் எப்படி உம்மை நேசிக்காமல் இருக்க முடியும்? நான் களிமண்ணே என்றாலும், உம்முடையவள். நான் செய்வதெல்லாம் உம் மீதுள்ள அன்பினாலேயே. என் ஆவல்களை நான் தேடவில்லை. உமது திருப்பெயரை மகிமைப்படுத்தவே நான் முயற்சி செய்கிறேன். ஆண்டவரே, உம்முடைய சித்தத்தை அனுசரிக்க நான் முயல்கிறேன். உம் ஆட்டுக்குட்டிகளை உம்மிடம் திருப்பி அழைத்து வர நான் முயற்சி செய்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன். நான் உம்மீது கொண்டுள்ளதும், உம்மால் தரப்பட்டதும், கற்பிக்கப்பட்டதுமாகிய இந்த அன்பின் காரணமாக, இது உமக்கு விருப்பமானால் என் விசுவாசத்தை பலப்படுத்துமாறும், அளவற்ற விதமாக உம்மை நான் நேசிக்கச் செய்யுமாறும், நான் தொடர்ந்து உம்மை மகிமைப்படுத்த எனக்கு உதவுமாறும் நான் உம்மிடம் வேண்டுகிறேன். ஆமென். என் தோட்டத்தின் கனிகளைக் கொண்டு உனக்கு நான் உணவளிக்கப் போகிறேன்; அன்புக்குரியவளே, உன்னை சித்தரவதை செய்பவர்களின் கண்களுக்கு முன் நான் உன்னைப் போஷிப்பேன்; ஏனெனில் இதுவே என் சித்தம்; ஆண்டவராகிய இயேசுவே, உமக்கு நன்றி. நான் உனக்குத் தந்துள்ளதை இறுகப் பற்றிக்கொள், யாரும் உன் பரிசை உன்னிடமிருந்து பறித்துக் கொள்ளாதிருப்பார்களாக; என்னை உறுதியாக விசுவசி; இதோ, என் கரத்தைப் பிடித்துக்கொண்டு நான் உன்னிடம் இரகசியமாய்ச் சொல்வதைக் கேள்; ஜனவரி 13, 1988 ஆண்டவரே, நீர் நீதியற்றவராக இருப்பதாக பலர் உம்மைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆகவே, 'கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் நீதியற்றவராக இருக்கிறார்' என்று சொல்லியபடி அவர்கள் உம்மிடமிருந்து திரும்பிக் கொள்ள முயல்கிறார்கள். மலரே, இவர்களை நோக்கி நான் இப்படிச் சொல்கிறேன்; நீங்கள் சாவீர்கள் என்றால், அதற்குக் காரணம் நீங்கள் உங்கள் மீதே சுமத்திக் கொண்ட தீமைதான், அது உங்கள் விசுவாச மறுதலிப்பின் கனியாக இருக்கிறது, மனஸ்தாபப்பட்டு, உங்கள் பாவங்களை விட்டுவிட்டு, என்னிடம் திரும்பி வாருங்கள், நான் உங்களை மன்னிப்பேன்; உங்கள் மீட்பராக, உங்களை தேற்றுகிறவராக என்னைப் பாருங்கள்; இன்றைய இருண்ட உலகில், ஒளியாக பிரகாசிக்கும்படி நான் வருகிறேன்; என் இல்லம் குழப்பத்தாலும், விவாதங்களாலும், சுய ஆவலாலும், பரிசுத்தமற்ற தன்மையாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது; இராயப்பா! இராயப்பா! ஏன், ஏன் என் சீடர்கள் பகைமையில் சிதறுண்டு இருக்கிறார்கள்? என் கரத்தால் அர்ச்சிக்கப்பட்டவனே, என் சகோதரனே, நான் நித்தியத்திலிருந்தே உன்னை நேசிக்கிறேன்; என் புனித இருதயம் காயமடைந்துள்ளது, என் சொந்த மக்களால், என் இதயத்தினுள் குத்தப்பட்டுள்ள முட்களால், அது காயமடைந்துள்ளது; நான் நேசிக்கிற என் சொந்த மக்களால் காயப்படுத்தப்பட்டுள்ள என் திரு இருதயத்தை உனக்குக் காட்ட நான் விரும்புகிறேன்; அவர்கள் மீண்டும் என் புனித இருதயத்தை எல்லா இடங்களிலும் குத்தி துளைத்துக் கொண்டிருக்கிறார்கள்; என் திரு இரத்தம் வெளியே பீரிட்டுப் பாய்கிறது; அவர்கள் மீண்டும் என்னை சிலுவையில் அறைகிறார்கள்; அவர்கள் உண்மையுள்ளவர்களாக இல்லை; அன்பில்லாமையின் காரணமாக என் சரீரம் வேதனைப்படுகிறது; அன்பில்லாமையால் என் உதடுகள் வறண்டு வெடித்துள்ளன; அன்பே, நான் தாகமாய் இருக்கிறேன்; அவர்கள் என் வழிகளை மறந்துவிட்டார்கள், நான் தாழ்ச்சியும், சாந்தமும் உள்ளவன், அன்பு நிறைந்தவன் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்; நான் உங்களிடமிருந்து கேட்பதெல்லாம் அன்பு மட்டும்தான்; நான் உங்களை நேசிப்பது போல, நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள்; என் திருச்சபையில் ஏன் போராட்டம்? என் பிரசன்னத்தில் ஏன் இந்த சச்சரவுகள், ஏன் இந்த வெறுப்பு? ஏன் இந்த நஞ்சுள்ள அறிக்கைகள்? அவர்களது பரிசுத்தத்தனம் எங்கே? என் தோட்டத்தை அவர்கள் ஏன் அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார்கள்? முன் எப்போதையும் விட அதிகமாக அவர்கள் என் ஆட்டுக்குட்டிகளைச் சிதறடித்துக் கொண்டிருக்கிறார்கள், எஞ்சி இருக்கிற ஒரு சில ஆட்டுக்குட்டிகளையும் அவர்கள் கைவிட்டு விட்டதால், அவையும் கிடையிலிருந்து மறைந்து போகும்; இராயப்பா, அவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதைக் கண்டு என் கண்கள் சோர்ந்து போய்விட்டன; அவர்கள் என் நிலங்களைப் பாழ்பட்டவையாக விட்டுவிட்டார்கள், என் ஆட்டுக்குட்டிகளுக்குத் தருவதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை; அவருடைய வழிகள் எனக்கு ஏற்புடையவையாக இல்லை; நான் அவர்களுக்கு அன்பையும் சமாதானத்தையும் தந்திருக்கிறேன்; மற்றவர்களை தீர்ப்பிட நான் அவர்களுக்கு ஒருபோதும் கற்பித்ததில்லை; வசுலா, கருணையைக் கொண்டு நான் அரசாள்கிறேன்; என் புனித இதயம் இரத்தம் வடிக்கிறது; அது நொறுக்கப்பட்டிருக்கிறது; அவர்கள் ஏன் எனக்கு கோபமூட்டுகிறார்கள்? என் ஒளியில் இருப்பதாக கூறிக்கொண்டு, தன் சகோதரனை வெறுப்பவன் இன்னும் இருளில் தான் இருக்கிறான் என்று நான் கூறவில்லையா? 'நீ பீடத்திற்குக் காணிக்கை கொண்டு வரும்போது, திடீரென உன் சகோதரன் உன்மீது மனத்தாங்கலாக இருப்பது உன் நினைவுக்கு வந்தால், உன் காணிக்கைகளை அங்கேயே வைத்துவிட்டு போய், உன் சகோதரனைக் கண்டுபிடித்து, முதலில் அவனோடு சமாதானம் செய்துகொள், பிறகு, ஒரு தெளிந்த இதயத்தோடு திரும்பி வந்து, உன் காணிக்கையைச் செலுத்து' என்று நான் சொன்னதன் பொருளை அவர்கள் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களா? இதன் மூலம் நீங்கள் ஒருவருக்கொருவர் எப்படி நல்லிணக்கத்தோடு இருக்க வேண்டும் என்பதையும், எப்படி ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும் என்பதையும் நான் குறிப்பிட்டேன்; ஒருவரோடு ஒருவர் சமாதானம் செய்து கொள்ளுங்கள்; என் இல்லத்தில் உங்கள் காணிக்கைகளைச் செலுத்துவதற்கு முன்பாக ஒப்புரவாகுங்கள்; குழந்தாய், என் இருதயத்திலோ, என் முதல் சீடர்களின் இதயங்களிலோ, அன்பு ஒருபோதும் இல்லாமல் இருந்ததில்லை; ஆண்டவரே, நீர் துன்புறுகிறீர் என்பதை உணர்வதில் நான் துன்புறுகிறேன்; உம் பொறுமை பெரிதாய் இருக்கிறது! வசுலா, மரித்தோரிடமிருந்து எழுப்பப்பட்ட என் குழந்தாய், என்னில் விசுவாசம் கொள்; என்னை நம்பு, என்னை நேசி; ஆண்டவராய், நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்; ஆண்டவரே, நீர் என்னை உயிர்ப்பித்தது போல, உம்முடைய மற்ற குழந்தைகளையும் உயிர்ப்பிக்கும்படி நான் உம்மிடம் கேட்கிறேன். உயிர்ப்பிப்பேன், ஆனாலும் நீ என்னிடம் கேட்டுவிட்டாய் என்பதற்காக அல்ல; இதுவே என் சித்தமாக இருந்தது, என் சித்தமாக இருக்கிறது என்பதால், நான் அவர்களை எழுப்புவேன்; வா, என் பிரசன்னத்தை மறந்து விடாதே; அன்புக்குரியவளே, இறுதியில் நான் வெற்றி பெறுவேன்;