வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 64. மார்ச் மார்ச் 16, 1988 நான் ஆண்டவர், நீ யாராய் இருக்கிறாய் என்பதைப் பொருட்படுத்தாமல், என் வார்த்தை ஸ்தாபிக்கப்பட நான் அனுமதிப்பேன்; நீ, ஒன்றுமில்லாமையாகவும், பல சமயங்களில் எனக்கு வருத்தம் தருபவளாகவும், என்னை நோகச் செய்பவளாகவும் இருக்கிறாய்; எண்ணற்ற தடவைகள் என்னைக் காயப்படுத்துகிறாய்; நான் உன் கரங்களில் ஈனத்தன்மையை, உன் யுகத்தின் சித்திரம் ஒன்றை வைத்திருக்கிறேன், ஆயினும், நீ இருக்கிறபடியே இருந்தாலும், நான் உன்னை மன்னித்து, என் திரு இருதயத்தில் உன்னை வைத்திருக்கிறேன்; மகளே, நான் இறைவனும், அரசரும், அனைத்தையும் படைத்தவரும், பக்திக்குரிய நேசம் மற்றும் ஆழங்காண முடியாத அன்பின் ஆவியானவராகவும் இருக்கிறேன்; நான் உன்னை எப்படி ஆதரித்தேன் என்பதை நீ உணர்கிறாயா? பொய் சொல்லும் நாவினின்று உன்னை எப்படிக் காப்பாற்றினேன் என்பதை? படைப்பே! உன்னை எனக்கு அர்ப்பணி; உன் மனம் அலைபாய ஏன் அனுமதிக்கிறாய், நம் பந்தங்களை நீ மறந்துவிட்டாயா? குறிப்பு: என் மனம் வழி தவறிப் போனது. ஆண்டவரே, என்னைச் சந்திக்க வருபவர்கள் என்னைச் சோதிக்கிறார்கள். நான் பலவீனமானவள். நீ என்னை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; எனக்கு அஞ்சாதே! என்னிடம் இப்படிச் சொல்: கடவுளுக்கு மகிமை உண்டாவதாக! நம் ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக! ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக! உம் அருகில் நடக்க என்னை அனுமதித்தருளும், ஆமென். அவர் சொல்லச் சொல்ல, நான் திரும்பிச் சொன்னேன். ஆம்,வசுலா, நான் எப்போதாவது உன்னைக் கைவிடுகிறேனா? நான் உனக்குப் பிரமாணிக்கமாக இருக்கிறேன், அல்லவா? ஆம், ஆண்டவரே, அப்படியே இருக்கிறீர். மகளே, நீ எப்படி இல்லாதிருக்கிறாய் என்பதை பற்றி நான் உன்னை நேசிக்கிறேன்; என் செய்தியை தாங்கிச் செல்பவளாக நான் உன்னை நியமித்திருக்கிறேன், என் செய்தியைத் தாங்குபவளாகவே நீ மரிப்பாய்; தனிப்பட்ட விதமாக நீ எனக்காக வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; உன்னைச் சந்திக்க வருபவர் நான்தான், உன் இறைவனாகிய நான் மட்டும்தான்; உன்னை முழுவதுமாகப் பொதிந்து கொள்ள என்னை அனுமதி, நீ சித்தமாய் இருக்கிறாயா? ஆம், எந்த எதிர்ப்பும் இன்றி நான் சித்தமாய் இருக்கிறேன். வசுலா, நீ என்னிடம் என்ன சொல்கிறாய் என்பதை நீ அறிவாயா? குறிப்பு: இதில் ஈடுபடுவது பற்றியே என் பதிலைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். ஆம், ஆண்டவரே, நான் அறிந்திருக்கிறேன். அப்படியானால், என்னைச் சார்ந்திரு; இன்று நீ இருக்கிற இடத்தில் உன்னை கொண்டிருக்க நான் சித்தம் கொண்டேன், என் சித்தத்தைக் கொண்டு, நான் மறுபடியும் உன்னை உயர்த்தி, நீ என் வார்த்தையை நினைவேற்றக் கூடியவளாக இருக்குமாறு, உன்னை நிரப்புவேன்; என் ஊழியர்களோடு சேர்ந்து, நீ எண்ணற்ற துன்பச் சோதனைகளை எதிர்கொள்வாய், ஆனாலும், இறுதியில் எங்கள் இருதயங்கள் வெற்றி பெறும்; குறிப்பு: இயேசு மாமரியின் இதயங்கள். இன்று, என் காரியதரிசியாக இருக்கிறாய், நாளை, என் செய்தியைத் தாங்கிச் செல்பவளாக இருப்பாய்; குறிப்பு: எட்டு மாதங்கள் கழித்து, மிகச் சரியாக எல்லாம் தொடங்கி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் உலகிற்கு அவருடைய சாட்சியாக இருக்கும்படி என்னை வெளியே உலகில் தள்ளினார். ஆண்டவரே, வளர்ச்சி அடைவது என்பது உண்மையாகவே என்னால் முடியாத காரியமா? அதாவது, நீர் சொன்னது எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது, நான் இன்னும் தொடக்க நிலையிலேயே இருக்கிறேனா? இல்லை, என் வசுலா, நம்பிக்கை இழக்காதே; நீ செய்வதெல்லாம் வீணாய்ப் போகாது; உத்தமத்தனம் அடைய நான் உனக்குக் கற்பிப்பேன்; நீ உத்தமமானவளாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று நான் சொல்லவில்லையா? ஆம், ஆண்டவரே, ஆனாலும் இன்று நான் இருப்பதாக தோன்றுகிற நிலையைப் பார்க்கும்போது, நான் இருக்க வேண்டும் என்று உம் திரு இருதயம் விரும்புகிற இடத்தை அடைய நான் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டி இருப்பது போலத் தோன்றுகிறது. நான் உன் போதகர் அல்லவா? ஆம், ஆண்டவரே, ஆனாலும் நீர் ஒரு நல்ல மாணவியைக் கொண்டிருக்கவில்லை என்று தோன்றுகிறது. நீ பலவீனமானவள், ஆனால் என் பலம் உன் வீழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்தும்; ஆகவே, வசுலா, என்னை உன் ஆன்ம இயக்குனராகக் கொண்டிருப்பதை விட மேலானது என்ன இருக்கிறது? இதைவிடச் சிறந்த உபகாரம் என்ன இருக்கிறது? நான் எதற்கும் கொஞ்சமும் தகுதியற்றவளாக இருப்பதால், நீர் எனக்குத் தருகிற எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி. ஆ, வசுலா! வேண்டுமென்றே என்னை நோகச் செய்வதற்காக நீ இந்தக் காரியங்களைச் செய்வதில்லை என்பதை நான் அறிவேன்; காய்ந்து வற்றிப்போன நீர்நிலைகளைப் போல, உன் பாவங்கள் என்னால் மறக்கப்படுகின்றன; நான் உன் பாவங்களைத் திரும்பிப் பார்ப்பதில்லை, அவற்றை நான் உனக்கு நினைவுபடுத்துவதும் இல்லை; நீ புதிதாக தொடங்க நான் உன்னை அனுமதிப்பேன்; அன்பிற்குரியவளே, நான் உன்னைப் புதுப்பிக்கிறேன்; நான் உன் மீது கொண்டுள்ள அன்பை உணர்வாயாக, நீ இருக்கிறபடியே நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன்; நான் உன் கரங்களில் சமாதானம் மற்றும் அன்பின் கிரீடங்களைத் தந்திருக்கிறேன், நீதான் நீதியின் கிரீடத்தோடு சேர்த்து, இந்த இரண்டு கிரீடங்களையும் எடுத்துச் சென்று, என் இல்லத்தில், என் அன்புக்குரிய இராயப்பனின் பாதங்களில் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்; குறிப்பு: இயேசு உவமான முறையில் பேசிக் கொண்டிருந்தார், அதனால் நான் அதை புரிந்து கொள்ளவில்லை. சரி, ஆண்டவரே, என்னை அங்கே தூக்கிச் செல்லும், ஆண்டவரே. வா, நான் உன் அருகில் இருக்கிறேன்; நாம் ஒன்று சேர்ந்து என் இல்லத்தைப் பழைய நிலையில் ஸ்தாபிப்போம்; நாங்கள் நாம்? ஆம், ஆண்டவரே! பிற்பாடு. வா, வசுலா; இந்த பரிசுத்த வார்த்தை உனக்கு உன் அடையாளமாக இருக்கட்டும்; விசுவாசம்; குழந்தைகளுக்குரிய விசுவாசம்; மார்ச் 17, 1988 வசுலா, என் அழைப்பின் தொடக்கத்தில் நீ செய்தது போல, என் குரலைக் கவனித்துக்கொள்; நீ உற்பவமாவதற்கு வெகுகாலத்திற்கு முன், நான் அநேகரை எனக்கு ஊழியம் செய்ய அழைத்தேன்; ஆம், அவை ஆசீர்வாதங்கள் வரவேற்கப்பட்ட புண்ணிய நாட்களாக இருந்தன; நான் ஈனமுள்ள ஆன்மாக்களை அழைத்தேன், இப்போது அவர்கள் சந்தேகப்படுவது போல, அப்போது தங்கள் இறைவனும், மீட்பருமாகிய நானே அவர்களை அழைத்தேன் என்பதில் அந்த ஆன்மாக்கள் சந்தேகம் கொள்ளவில்லை; அவர்களைச் சந்திக்க வந்தவர்களும் இன்று சந்தேகப்படுவது போல, அப்போது சந்தேகப்படவில்லை. வசுலா, உன் யுகம் இறந்துவிட்டது; அவர்கள் இன்றைய என் பணிகளைக் கண்டனம் செய்ததன் மூலமாக இந்த வனாந்தரத்தை விரிவாக்கி, அதை ஒரு பாலைவனமாக மாற்றிவிட்டார்கள்; உங்கள் இதயங்களுக்கு நீர் பாய்ச்சி, என் ஒளியில் வாழ உங்களை அனுமதிக்கும்படி என் இரத்தம் சிந்தப்பட்டது; ஓ படைப்பே, என் இரத்தம் வீணாகச் சிந்தப்பட்டதா? 'கவனிக்காதே, உன் காதுகளைப் பொத்திக்கொள், ஏனெனில் நீ கேட்கிற குரல் நிச்சயமாக பசாசின் குரல்தான்' என்று இந்த யுகம் உன்னிடம் சொல்லும்; நான் ஆசீர்வதித்தவர்களுக்கு நான் காட்சிகளைத் தருகிறேன், இன்று இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆன்மாக்கள் என் வீட்டுக்குள் இருந்து எனக்குச் சொந்தமானவர்களாலேயே பரிகசிக்கவும், அதைரியப்படுத்தவும் படுவார்கள்; அவர்கள் எனக்குத் தண்டனை தீர்ப்பிட தீர்மானம் உள்ளவர்களாகவும், எப்போதும் ஆயத்தமாகவும் இருப்பார்கள்; என் கொடைகளை அவர்கள் மறுதலிக்கும் போது, மனிதர்களுக்கு முன்பாக அவர்கள் தங்கள் நிலையையும் மீறி எனக்கு தண்டனை தீர்ப்பிடுகிறார்கள்; என் ஆசீர்வாதங்கள் வரவேற்கப்பட்ட காலங்களில் என் அழைத்தல்களைக் கேட்பவர்களிடம் எனக்குச் சொந்தமானவர்கள், 'மகனே, உன் செவிகளைத் திற, ஏனெனில் இது உண்மையாகவே கடவுள் உன்னை அழைக்கும் குரலாக இருக்கலாம்' என்று சொல்வதை நான் கேட்பதுண்டு; என் படைப்பு சாமுவேலின் அழைத்தலை மீண்டும் வாசிப்பதாக; குறிப்பு: ஒன்று சாமுவேல் மூன்றாம் அதிகாரம் எட்டு மற்றும் ஒன்பதாம் வசனங்கள். அவை ஆசீர்வாதங்கள் வரவேற்கப்பட்ட புண்ணிய நாட்களாக இருந்தன; படைப்பே, முன்பு போல, 'சிறிதளவு விசுவாசத்தின் யுகம்' என்று இன்று உன்னைப் பற்றி என்னால் சொல்ல இயல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும் இன்று உன்னைப் பற்றி, 'கொஞ்சமும் விசுவாசம் இல்லாத யுகமே' என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடிகிறது! மகளே, நான் சோர்வாய் இருக்கிறேன்; குழந்தாய், உன் இதயத்தில் நான் இளைப்பாறுவேனாக; ஓ வாரும் ஆண்டவரே! நாங்கள் நாம்? ஆம் ஆண்டவரே. இயேசு மிகத் துயரமாகவும் மிகவும் களைப்படைந்தும் தோன்றினார். எழுது; சரி ஆண்டவரே. இறைவன் துயரமாய் இருக்கிறார், ஏனெனில் மிக அநேகர் அவருக்கு முன்பாக பசாசை முதலில் வைப்பார்கள். 'இந்த அச்சங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை' என்கிறாள் அர்ச்ச புனித அவிலா தெரேசம்மாள். 'இறைவா, இறைவா!' என்று சொல்லி பசாசை நடுங்கச் செய்வதற்குப் பதிலாக, 'பசாசே, பசாசே!' என்று சொல்கிறோம். இன்று இது மிக அதிகமாக நிகழ்கிறது, நாம் பசாசை முதலில் வைக்கிறோம். அதன்பின், 'என் பிரியமே, போய் உன்னைப் பரிசோதித்துக்கொள், எங்களிடம் நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள்' என்று சொல்லி ஏளனம் செய்பவர்கள் இருப்பார்கள். அல்லது சாத்தியமற்ற காரியங்களைப் பற்றிய உளவியலில் தங்களுக்குள்ள அறிவைப் பற்றிப் பெருமை அடித்துக் கொள்பவர்கள் இருப்பார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை கடவுளிடமிருந்து வரும் அழைத்தல்கள் 'பழங்காலத் தவையாக, தற்காலத்திற்குப் பொருந்தாதவையாக' இருக்கின்றன. ஆனாலும் கடவுளின் கண்களில் இந்த எல்லா காரியங்களிலும் மிக மோசமானது வெளிவேடமாகும். இது ராஜதந்திரம் உள்ள பதிலாகும். இது ஆம் என்றும் இருப்பதில்லை, இல்லை என்றும் இருப்பதில்லை. அவர்கள் பிலாத்தைப் போல் இருப்பார்கள். நம் ஆண்டவர் பேரில் பிலாத்து செய்ததைப் போல, அவர்கள் வெறுமனே தங்கள் கைகளைக் கழுவி விடுவார்கள். ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் அங்கு விசுவாசம் இல்லாமற் போய்விட்டது. மார்ச் 18, 1988 என் மலரே, இந்தப் பரிசுத்த வார்த்தையே உன் அடையாளமாக இருப்பதாக விசுவாசம்; ஆம், இழிநிலையின் யுகமே; மார்ச் 19, 1988 இயேசுவே, உம்மிடமே நான் வருகிறேன். ஆ, வசுலா, எழுதுவதில் களைத்துப் போகாதே; இன்று பட்டினியாய் இருக்கிற என் ஆட்டுக்குட்டிகளை நான் உண்பிக்கிறேன்; நாளைக்கு நான் உங்களை ஒன்றிணைத்து என் பரம ரகசியங்களை உங்களுக்குப் போதிப்பேன்; என்னை நேசிப்பவர்களும், எனக்குச் சாட்சியாக இருப்பவர்களுமாகிய எல்லோரிடமும் பரிசுத்த ஜெபமாலை ஜெபத்தைப் பரப்பி, என்னை மகிழ்ச்சியால் நிரப்புங்கள்; அதாவது எல்லாக் கிறிஸ்தவர்களுக்குமா? ஆம், என் அன்புக்குரியவர்களே; நான் என் தாயாரைக் கனப்படுத்துவது போல, நீங்களும் கனப்படுத்த வேண்டும்; எனக்குச் சான்று பகர்பவர்கள் எல்லோருக்கும் என் சிலுவை பாதைப் பக்தியைப் பரப்பி, உன் ஆண்டவருக்குப் பிரியமான விதத்தில் அதை செய்வது எப்படி என்று நீ காட்ட வேண்டும்; ஆண்டவரே, எல்லா கிறிஸ்தவர்களுக்குமா? ஆம், என்னை நேசிப்பவர்கள் எல்லோருக்கும்; ஆண்டவராகிய நான் என் திருச்சபையில் எந்தப் பிரிவுகளும் இருப்பதை விரும்பவில்லை; என் நிமித்தமாக, என் திருப்பெயரின் கீழ் நீங்கள் ஒன்றிணைந்து என்னை நேசிப்பீர்கள், என்னைப் பின்பற்றுவீர்கள், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்; நான் உங்களை நேசிப்பது போல, நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள்; நீங்கள் ஒன்றிணைந்து ஒரே ஆயனின் கீழ் ஒரே மந்தையாக ஆவீர்கள்; குறிப்பு: பாப்பரசர். நீங்கள் எல்லோரும் அறிந்துள்ளது போல, நான் இராயப்பனைத் தேர்ந்தெடுத்து அவனிடம் அதிகாரத்தைத் தந்தேன்; நீங்கள் எல்லோரும் அறிந்துள்ளது போல, நான் அவனிடம் விண்ணரசின் திறவுகோல்களைத் தந்திருக்கிறேன்; என் ஆட்டுக்குட்டிகளையும், ஆடுகளையும் மேய்க்கும்படியாகவும், அவற்றைப் பராமரிக்கும் படியாகவும், நான் இராயப்பனிடம் கேட்டுக்கொண்டேன்; குறிப்பு: அருளப்பர் 21 ஆம் அதிகாரம் 17 ஆம் வசனம். இந்த அதிகாரம் என்னால் தரப்பட்டது; என் விருப்பத்தை நீங்கள் மாற்ற வேண்டும் என்று நான் விரும்பவில்லை; அன்பிற்குரியவர்களே, ஒன்று கூடி, என் திருச்சபையை மீண்டும் பலப்படுத்துங்கள்; நான் விரும்புவதை என்னில் தேடுங்கள்; உங்கள் ஆவல்களை அல்ல, என் ஆவல்களைத் தேடுங்கள்; என்னை மகிமைப்படுத்தத் தேடுங்கள், படைப்பை ஒன்று கூட்டுவதன் மூலம் என்னை மகிமைப்படுத்துங்கள்; என் திருவுடலுக்கு உயிர் ஊட்டுங்கள்; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; உங்கள் செவிகளைத் திறந்து, என் சிலுவையிலிருந்து நான் இடும் கூக்குரலைக் கேளுங்கள்! வசுலா, உன் வீடு எங்கே இருக்கிறது என்று உனக்கு நினைவு இருக்கிறதா? ஆம், என் பரிசுத்த இதயத்தில்; வா, அன்பிற்குரியவளே, வா; நான் காத்துக் கொண்டிருக்கிறேன், நான் உன்னை மட்டற்ற விதமாக நேசிக்கிறேன்; ஆண்டவரும், இரட்சகருமானவரே, நான் உம்மை நேசிக்கிறேன், நான் உம்மோடு இருக்க இயலும்படியாகவும், உம்மால் பயன்படுத்தப்பட இயலும்படியாகவும், தயவுசெய்து உம்மை மகிழ்விக்க எனக்குக் கற்பித்தருளும். நான் உனக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன், இளகிய தன்மை உள்ளவளாக இரு, என் ஆவல்களை மட்டும் தேடு; எல்லாச் சமயங்களிலும் நாங்கள், நாம், நான் உனக்காக, நீ எனக்காக; நான் உன் பக்கத்தில் இருக்கிறேன்; வசுலா, ஆன்மாக்களின் மீட்பிற்காக ஜெபி; நான் இந்தச் செய்திக்காகவே உன்னைப் படைத்திருக்கிறேன்; இயேசுவே, உமக்கு நன்றி. மார்ச் 23, 1988 இயேசுவா? நான்தான்; அன்பு வெற்றி பெறும்; நான் அன்பாக இருக்கிறேன், என் சமாதானத்தைக் கொண்டிரு; அஞ்சாதே, இது இயேசுவாகிய நான்தான்; நீ வருவாயா, நான் காத்துக் கொண்டிருக்கிறேன்; என்னை நேசிக்கும்படி மற்றவர்களை நான் எங்கே நடத்திச் சென்றேனோ, அங்கே உன்னையும் நான் நடத்திச் செல்வேன்; என் வசுலா, ஜெபி; பசாசின் கண்ணிகளைப் பற்றி அறிந்திரு, ஏனெனில் என் படைப்பு மாறாமல் அல்லது மனஸ்தாபப்படாமல் இருந்தால்.... ஆண்டவரே, நீரே எங்களை மாற்றுவீர் என்றும், உம்முடைய அரசு வரும் என்றும், நீர் பல தடவைகள் சொல்லி இருக்கும்போது, 'இருந்தால்' என்று நீர் சொல்வது எப்படி? எனக்குப் புரியவில்லை....கேட்டுப் புரிந்து கொள்; தேர்ந்தெடுக்க நான் உங்களுக்கு சுதந்திரம் தந்திருக்கிறேன்; படைப்பே, ஆண்டவரும், அரசரும், ஒளியுமாகிய நான் உன்மீது இறங்குகிறேன்; என் கரத்தில் உள்ள என் இதயத்தை உங்களுக்குத் தரவும், உங்களை இரட்சிக்கவும், உங்கள் மீது சுடர் வீசவும், இந்த அடர்ந்த இருளில் நான் இறங்கி வருகிறேன்; உங்கள் என்னில் அடங்காத பாவங்களையும், எனக்கெதிரான உங்கள் குற்றங்களையும் கழுவிப் போக்கும்படி நான் வருகிறேன்; உங்களை என்னிடம் திரும்ப அழைக்கும்படி நான் வருகிறேன்; என் திருச்சபையை ஒன்றிணைக்க நான் வருகிறேன், ஆண்டவராகிய நான் அதிகாரத்தையும், விண்ணரசின் திறவுகோல்களையும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டவராகிய உமக்கு நினைவுபடுத்த நான் வருகிறேன்; என் தாயாரைக் கனப்படுத்தவும், அவர்களுக்கு முன்பாக நீங்கள் முழந்தாளிடவும், உங்களுக்குக் கற்பிக்கும்படியாக நான் வருகிறேன், ஏனெனில் என் அன்னை என் கரத்தால் முடிசூட்டப்பட்டு, விண்ணக அரசியாக இருக்கிறார்கள்; படைப்பே! பசாசைப் பற்றி எச்சரிக்கையாய் இரு, ஏனெனில் அவன் உங்களைத் தன் வலையில் சிக்க வைக்குமாறு, தன் முயற்சிகளை இருமடங்காக்குகிறான், இதற்கிடையில், தனக்கு மற்றவர்கள் பயப்படாத விதத்தில் தான் கடுமையாக உழைக்கும் படியாக, பசாசு என்ற ஒருவனே இல்லை என்பது போல, அவன் பாசாங்கு செய்கிறான்; ஓ, படைப்பே! அவன் உன்மீது ஒரு பெரும் நெருப்பை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறான். ஓ, நான் என் சிலுவையிலிருந்து எவ்வளவு கூக்குரலிடுகிறேன்! படைப்பே, என்னிடம் திரும்பி வா! என்னை மறுதலிப்பதன் மூலம், அவன் உங்களை வலையில் சிக்க வைக்க, நீங்கள் அவனை அனுமதியாதீர்கள்! ஜெபியுங்கள், ஆன்மாக்களின் திரும்பி வருதலுக்காக ஜெபியுங்கள், ஒவ்வொரு ஆன்மாவும் நான் உனக்குத் தந்த ஜெபங்களைக் கற்றுக்கொள்ளட்டும், குறிப்பு: அந்த ஜெபங்கள் புனித பெர்னார்தின் மிகவும் இரக்கமுள்ள தாயே என்ற ஜெபம், புனித மிக்கேலுக்கு ஜெபம், இயேசுவின் திரு இருதயத்தின் மீது நம்பிக்கையின் நவநாள் ஆகியவை ஆகும். எழுதுவதற்கு முன், ஒவ்வொரு நாளும் நான் இந்த ஜெபங்களைச் சொல்கிறேன். சில சமயங்களில், இரண்டு தடவை அவர்கள் அந்த ஜெபங்களை கற்றுக் கொள்வார்களாக; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; மகளே, என்னிடம் வருவதிலும், முழந்தாள் இடுவதிலும், எழுதுவதிலும் சோர்ந்து போகாதே; நான் உன் இரட்சகரும், உன் மணவாளருமாக, உன்னோடு எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறேன்; வா, எனக்கு ஆறுதல் கொடு, நான் களைப்பாக இருக்கிறேன்; ஓ, ஆண்டவரே, வாரும்! இயேசு தமது பெரிய தோள்கள் சற்றே தளர்ந்திருக்க, கலைத்துப் போனவராகவும், துயருற்றவராகவும் தோன்றினார். நானும் அப்படியே உணர்கிறேன். நான் அவரை மகிழ்விக்க விரும்புகிறேன். பாப்பரசர், அவருடைய வேண்டுகோளை இப்போது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் அனுதினமும் ஜெபிக்கிறேன். பரிசுத்த பாப்பானவர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்கில் இயேசுவின் செய்தியை பெற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.வசுலா, என் பிரசன்னத்தை ஞாபகம் வைத்திருப்பாயா? ஆம், ஆண்டவராகிய இயேசுவே, நான் ஞாபகம் வைத்திருப்பேன். நாங்கள், நாம்! ஆம், நாங்கள் நாம் என்றென்றைக்கும் இயேசு இன்று களைத்துப் போனவராகவும், துயரமுள்ளவராகவும் இருக்கிறார். ஆன்மாவே, உன்மீது சமாதானம் இருப்பதாக; வசுலா, நான் களைப்புற்று இருக்கிறேன், அன்பும் எளிமையும் எப்படி காணாமல் போய்விட்டன என்பதைக் கண்டு நான் களைத்துப் போயிருக்கிறேன்; அவர்களிடையே அன்பில்லாதபோது, சடங்குகளாலும் பலிகளாலும் எனக்கு என்ன நன்மை? மலரே, என் வெறுங்கால் சீடர்களை விட பெரிய மகிழ்ச்சி என்ன இருக்கிறது? குறிப்பு: எளிமையான துர்குணம் இல்லாத தாழ்ச்சியுள்ள சீடர்கள், அவர்கள் தங்கள் கரங்களில் என் ஆட்டுக்குட்டிகளைக் காவல் காக்கும்படி ஒரு கைக்கோலை மட்டும் வைத்திருக்கும் போது! நான் எளிமையை நேசிக்கிறேன், எளிமையும் வறுமையும் என்னை வசீகரிக்கின்றன; என் உண்மையான சீடர்கள் வெறுங்கால்களோடு இருந்தனர், ஆனால் ஆவியில் செல்வந்தர்களாக இருந்தனர்; வசுலா, தைரியம் கொள்; நான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன், என் சொந்த மக்களால் என் சிலுவையில் நீட்டி விரிக்கப்பட்டிருக்கிறேன்; நாம் என் சிலுவையை பகிர்ந்து கொண்டிருக்கிறோம், நானும் நீயும், நீயும் நானும் அன்பு துன்புறுகிறது......