இறைவனில் உண்மையான வாழ்வு

இந்த செய்திகளில் ஆண்டவர் திருச்சபையின் அஸ்திவாரம் அசைக்கப்படும் என்றும், தம் புதிய ஜெருசலேமைத் தாமே மீண்டும் கட்டி எழுப்புவார் என்றும் கூறுகிறார். அன்பு, பிரமாணிக்கம், மாசற்றத்தனம் ஆகியவற்றை அவர் கேட்கிறார். துன்ப சோதனைகளில் அதைரியப்பட வேண்டாம், தம்மை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்கிறார்.

Show Notes

அத்தியாயம் 73: விரைவில் திருச்சபையின் அஸ்திவாரங்கள் அதிரும் - இறைவனில் உண்மையான வாழ்வு

இந்த செய்திகளில் ஆண்டவர் திருச்சபையின் அஸ்திவாரம் அசைக்கப்படும் என்றும், தம் புதிய ஜெருசலேமைத் தாமே மீண்டும் கட்டி எழுப்புவார் என்றும் கூறுகிறார். அன்பு, பிரமாணிக்கம், மாசற்றத்தனம் ஆகியவற்றை அவர் கேட்கிறார். துன்ப சோதனைகளில் அதைரியப்பட வேண்டாம், தம்மை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:17 26/07/1988 - திருச்சபையின் அஸ்திவாரம் அசைக்கப்படும்
04:33 27/07/1988 - என் உத்தரவுகளைக் கடைப்பிடி
06:17 29/07/1988 - அன்போடு செழித்து வளருங்கள்
09:31 02/08/1988 - என் இரக்கம் ஒப்புமைக்கு அப்பாற்பட்டது
11:01 04/08/1988 - ரோம்: பாப்பரசருடன் சந்திப்பு
14:20 06/08/1988 - ரோம்: திருச்சபையின் சுத்திகரம்
16:24 07/08/1988 - ரோம்: என் இதயத்தின் ஆசைகளை உணர்
17:19 08/08/1988 - ரோம்: உன் ஆயன் நானே

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #திருச்சபைசுத்திகரம் #புதியஜெருசலேம் #TrueLifeInGod

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 73. ஜூலை 26, 1988 ஆண்டவரே! என் திருச்சபை காட்டுமிராண்டித்தனமாக காயப்படுத்தப்பட்டுள்ளது... இன்னும் சிறிது காலத்தில் திருச்சபையின் அஸ்திவாரம் அசைக்கப்படும்; அதைத் தொடர்ந்து, அதைக் காயப்படுத்தியவர்கள் மற்றும் என் திருவுடலைக் காயப்படுத்தும் நோக்கத்தோடு அதில் இணைந்தவர்கள் அழிக்கப்படுவது நிகழும்; அதன் துன்பங்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளன; என் புதிய ஜெருசலேம் மீண்டும் கட்டி எழுப்பப்படும்படியாக, ஜெருசலேமின் மதில்கள் நொறுங்கி விழுந்து, தூசிக், குவியலாக மாறும்; அதை மீண்டும் கட்டி எழுப்புபவர் ஆண்டவராகிய நான்தான்; நான் அதன் மதில்களைப் புதுப்பிப்பேன், நீங்கள் எல்லோரும் அதன் புதிய கூரையின் கீழ் வாழும்படி நான் அதை அழகுபடுத்துவேன்; ஒரு புதிய வானகம் மற்றும் புதிய வையகத்தின் கீழ்; அன்பு உங்களிடம் அன்பாகத் திரும்பி வந்து உங்கள் மத்தியில் வாழும்; நான் உங்கள் இறைவனாக இருப்பேன்; என் திருப்பெயரின் கீழ் நீங்கள் எல்லோரும் சமாதானத்தோடு வாழ்வீர்கள்; உங்கள் ஆவி பரிசுத்தத்தனத்தாலும் மாசற்றத்தனத்தாலும் நிரப்பப்படும்; ஆம், வசுலா, நான் மின்னலைப் போல் மேலிருந்து இறங்கி அவளை முழுமையாகப் புதுப்பிப்பேன்; அவர்கள் என் இல்லத்தைப் பாழடையச் செய்துவிட்டார்கள் என்பதால் அங்கே உள்ள துன்பங்கள் அதிகமாக இருக்கும்; அவர்கள் அதைக் கொள்ளையடித்துவிட்டார்கள்; வசுலா, உனக்குப் புரிகிறதா? இது தன் வீட்டைத் தன் வேலையாட்களிடம் ஒப்படைக்கின்ற ஒரு வீட்டு எஜமானனைப் போன்றது... அவனது வீட்டை ஒழுங்காக வைத்துக்கொள்ளவும், கன்னமிட்டுத் திருடுவோரிடம் விழிப்பாய் இருக்கவும், அவன் அவர்களுக்குக் கண்டிப்பான உத்தரவுகள் தந்திருந்தாலும், அவர்கள் தங்கள் அலட்சியத்தாலும் அக்கறையின்மையாலும் அவனது உத்தரவுகளுக்குக் கீழ்படியாமல் போனார்கள்; அவன் திரும்பி வந்தபோது, தனது வேலையாட்கள் உறங்கிக் கொண்டிருப்பதையும், அவர்களது உறக்கத்தில் தன் வீடு கொள்ளையிடப்பட்டிருப்பதையும் காண்பான்; அவனுடைய விலைமதிப்புமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன; இந்த வேலையாட்கள் அவனுடைய உத்தரவுகளுக்குக் கீழ்படியாமல் அவனுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள், இதே வேலையாட்கள் எஜமானன் திரும்பி வரும்போது கடுமையான முறையில் கவனித்துக் கொள்ளப்படுவார்கள்; நான் திரும்பி வரும்போது என் வீடு சிதைவுற்று இருப்பதையும், என் அடிப்படையான அம்சங்கள் காணாமல் போயிருப்பதையும் நான் காண்பேன்; என் ஆட்டுக்குட்டிகள் சிதறடிக்கப்பட்டிருப்பதையும், பட்டினியால் சாவதையும் நான் காண்பேன்; ஆ, வசுலா, நான் எவ்வளவு அதிகமாக பழுது பார்க்க வேண்டியிருக்கும்... நான் என் சொந்தக் கரத்தால் நானே நட்டிருந்த லீலிகளுக்கும், ரோஜாக்களுக்கும் பதிலாக அங்கே முட்களும், காட்டுப்புதர்களும் இருக்கின்றன; அவர்கள் என் மலர்களை ஒன்றன் பின் ஒன்றாக கசக்கிவிட்டார்கள்; அவர்கள் என் மலரைச் சுற்றி வளைத்து, குறிப்பு: பாப்பரசர் இரண்டாம் அருள் சிநப்பர். அதை வலையில் சிக்க வைக்கும்படி சாத்தானின் உதவியோடு வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்; அவர்கள் ஒவ்வொரு நாளும் அதிகம் அதிகமாக நெருங்கி வந்திருக்கிறார்கள், இப்போது அவருக்கு எரிச்சல் மூட்டி, அவர்களுடைய நஞ்சுள்ள கொடுக்கை அவர் உணரும் அளவுக்கு இப்போது அவரை மிகவும் நெருங்கி வந்திருக்கிறார்கள்; இந்த முட்கள் அவரை மூச்சுத் திணறச் செய்யும்; இராயப்பர் வலையிடப்படுகிறார், அவர்கள் நடுவில் ஆதரவற்றவராக நிற்கிறார்; வசுலா? சொல்லுங்கள் பரிசுத்த அன்னையே. நம் அன்னை வந்தார்கள். நம்பு, ஏனெனில் இதெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது; என் மகனின் திருவுடல் இன்னும் அதிக தாராளமாக இரத்தம் சிந்தும்; இராயப்பரின் முடிவு அண்மையில் இருக்கிறது; அன்பைக் காணவில்லை; ஜூலை 27, 1988 ஆண்டவரே! நான்தான்; என்னை மகிழ்வி, என்னைப் பகுத்துணரு; நான் இங்கே இருக்கிறேன்; நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்; நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன்; முயற்சி செய்; நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் கடுமையாக முயற்சி செய்; என் உத்தரவுகளைக் கடைப்பிடி, உன் இதயத்தில் என்னைப் பூட்டி வைத்திரு; சரி, ஆண்டவரே. நீ செய்யும் எல்லாவற்றையும் எனக்காகச் செய், எனக்காக மட்டுமே செய்; வா, நான் அவ்வப்போது என் பிரசன்னத்தை உனக்கு ஞாபகமூட்டுவேன்; அற்ப சந்தேகமும் கொள்ளாதே; முயன்று, நான் உனக்கு வேலையாகத் தந்த காரியத்தைப் பகுத்துணரு; முழுவதுமாக என் மீது சாய்ந்து கொண்டு தாழ்ச்சியோடு பணியாற்று; நான் மட்டுமே காணப்படும்படியாக, உன்னை முழுமையாக அழித்துவிடு; உன் ஒன்றுமில்லாமையில் என் ஆவியானவர் தம் உயிர் மூச்சை ஊத அவரை அனுமதி; இம்முறையில் எனக்கு மகிழ்ச்சி கொடு; நான் உனக்குத் தந்துள்ளது எல்லாமே என்னுடையது; நீ என்னை உணரும்படியாகவும், அதன் மூலம் முழுமையாக என்னுடையவளாக இருக்கும்படியாகவும், உலகத்திடமிருந்து உன்னை முழுமையாக பிரித்துவிடு; ஆண்டவராகிய நான் உன் போதகராக இருக்கிறேன், என் வார்த்தைகள் ஞானத்திலிருந்து வருகின்றன; நாங்கள், நாம்? நாங்கள், நாம். உன் பரிசுத்த திருக்குடும்பத்துடன் சேர்ந்து; ஆம் ஆண்டவரே. ஆம், பரிசுத்த அன்னையே. ஜூலை 29, 1988 புனித மார்த்தா திருநாள். அன்புக்குரியவர்களே! அன்போடு செழித்து வளருங்கள், உங்கள் மத்தியில் என் பிரசன்னத்தை உணருங்கள்; உங்கள் எல்லோர் மீதும் நான் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை உணருங்கள்; இந்த அன்பில் விசுவாசம் கொள்ளுங்கள்; நான் அன்பின் ஆதாரமாக இருக்கிறேன்; என் ஆவி உங்கள் மீது இருக்கிறது; வாருங்கள், நீங்கள் மாசற்றவர்களாகவும், பரிசுத்தர்களாகவும், தாழ்ச்சியும் இரக்கமும் உள்ளவர்களாகவும் ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நீங்கள் என் மீது கொண்டுள்ள அன்பை அளவற்றதாகப் பெருகச் செய்ய என்னை அனுமதி; பக்திக்குரிய தேவ அன்பு நிரம்பி வழிந்து, இந்த உலகை நிரப்பி, என் திருச்சபையைக் கனப்படுத்தும்படியாக, உங்கள் இதயங்களுக்குள் என் மிக அபரிதமான அன்பைப் பொழிந்து, உங்களை நிரப்பி, அந்த அன்பில் நீங்கள் ஊறியிருக்கச் செய்ய என்னை அனுமதியுங்கள்; இந்த அளவற்ற அன்பிலிருந்து முகந்து கொண்டு, உங்கள் இதயங்களை நிரப்பிக்கொள்ள உங்களையே அனுமதியுங்கள்; அன்புக்குரிய சகோதரர்களே, நான் உங்களிடமிருந்து கேட்பதெல்லாம் அன்பு, பிரமாணிக்கம் மற்றும் மாசற்றத்தனம் ஆகியவையே; சிறியவர்களே, துன்ப சோதனைகள் வரும்போது, அதைரியப்படாதீர்கள்; நான் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டேன்; நான் உங்கள் மேய்ப்பராக இருக்கிறேன், என் மேற்பொருவியின் கீழ் நான் உங்களை வைத்து மறைத்துக் கொள்வேன்; என்னோடு நீங்கள் உண்பீர்கள்; என்னோடு நீங்கள் ஒருபோதும் தாகமாக இருக்க மாட்டீர்கள்; நான் உங்களை நடத்துவது போல, நீங்களும் ஒருவரை ஒருவர் நடத்துங்கள்; நான் உங்களை நேசிப்பது போல, நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள்; நான் உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிப்பது போல, நீங்களும் ஒருவர் மற்றவருக்காக பதிலளியுங்கள்; என்னிடமிருந்து உண்ணுங்கள், பிரமாணிக்கமின்மை, பொறாமை, ஐக்கியமின்மை, அசுத்தத்தனமாகிய சாத்தானின் கனிகளை ஏற்றுக்கொள்ளாதீர்கள்; ஒருவராக இருங்கள்! உத்தமர்களாக இருங்கள்! என் இல்லம் தனது மாசற்ற தனத்தால் ஒளிவீசட்டும்! என் நீதியின் பணி உங்கள் மீது இறங்கி, அந்த பாரமான இடி மேகங்களைக் கரைத்து மறையச் செய்யவும், அவற்றைச் சிதறடிக்கவும் அனுமதியுங்கள்; முழு இருளும், தீமையும் மறைந்து போகும்படியாக, என் ஒளி அவற்றை ஊடுருவ அனுமதியுங்கள்; சூரியனை நோக்கி இருக்கிற மலர்களைப் போல் இருங்கள், என் உஷ்ணமான ஒளிக்கதிர்கள் உங்கள் பரிசுத்தத்தனத்தையும், மாசற்றத்தனத்தையும், நேர்மையையும், அன்பையும் புத்துயிர் பெறச் செய்வதாக; ஆண்டவராகிய நான் உங்களை நேசிப்பது போல, நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்ற என் கட்டளையை எப்போதும் அனுசரியுங்கள்; ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகிய நான் மற்றற்ற விதமாக உங்களை நேசிக்கிறேன்; நான் விரைவில் வர இருக்கிறேன், நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்; ஆகஸ்ட் 2, 1988 ஆண்டவராகிய நான் பெரும் தயவிறக்கம் உள்ளவராக இருக்கிறேன், என் இரக்கம் ஒப்புமைக்கு அப்பாற்பட்டது; என் இரக்கம் பெரியது, ஆழங்காண முடியாதது; படைப்பே! உங்கள் பாவங்கள் நிலக்கரியைப் போல கறுப்பாக இருக்கின்றன, என் அளவற்ற இரக்கம் இல்லாவிடில், என் நீதி உங்களை முழுமையாக அழித்து ஒழித்திருக்கும்; நான் இப்போது உங்கள் வாசல்களிலேயே இருக்கிறேன், ஒரு திருடனைப் போல, நான் உள்ளே நுழைவேன்; என் அடையாளங்களில் கவனமாய் இருங்கள், ஆயுத்தமாய் இருங்கள்; என் வசுலா, ஜெபி, இன்னும் என்னை எதிர்த்து நிற்பவர்களுக்காக ஜெபி; என்னை நோகச் செய்பவர்களும், சரியான பாதையில் நடக்கிற என் ஆட்டுக்குட்டிகளுக்குத் தண்டனை தீர்ப்பிட்டு, உலகத்தை இருள் சூழச் செய்பவர்களுமாகிய மனிதர்களுக்காக ஜெபி; அவர்களை விடுவி! அவர்களை என்னிடம் கொண்டுவந்து, அவர்களை விடுவி; ஆ வசுலா! சின்ன ஆட்டுக்குட்டியே, என் அருகில் தங்கியிரு; என் மேற்போர்வையின் கீழ் மறைவாக, என் இருதயத்தில் மறைவாகத் தங்கியிரு; இரட்சணியம் என்னிடமிருந்து வரும், உன்னை பயன்படுத்த என்னை அனுமதி; சரி, ஆண்டவரே. புனித மாமரி; சித்தமாய் இரு; மகளே, என் பிரசன்னத்தை நினைவில் கொள்; நாங்கள், நாம், என்றென்றும், நித்தியத்திற்கும், நாங்கள், நாம் சேர்ந்து; ஆகஸ்ட் 4, 1988 ரோம். பாப்பரசருடன் பொது சந்திப்பில், பாப்பரசர் என் அருகில் நின்று கொண்டிருந்தபோது, இயேசுவின் செய்தி ஒன்றை அவருடைய இடைக்கட்சியின் கீழ் வைத்து விடுவதில் நான் வெற்றி பெற்றேன்; ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது. இன்று இயேசுவை முழுநேரமும் ஒரு அகன்ற புன்னகையுடன் என்னைச் சுற்றிலும் இருந்து, என்னை எதிர்கொள்பவராக நான் கண்டேன். இயேசுவா? நான்தான்; மலரே, என் வழிகளைப் புரிந்து கொள்ளத் தேடாதே; எளியவளாக இரு, என்னிடமிருந்து வரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்; ஆண்டவராகிய நான் என் வீட்டிற்குள் உன்னை நடத்தி வந்திருக்கிறேன்; நான் எனக்கு மிகவும் பிரியமான ஊழியரான இரண்டாம் அருள் சின்னப்பரை நீ காணவும், அவரைச் சந்திக்கவும் உன்னை நடத்தி வந்திருக்கிறேன்; மிகப்பிரியமான ஆன்மாவே, நீ எனக்குக் கீழ்படிந்தாய்; என்னை நம்பினாய், என்னைச் சார்ந்திருந்தாய்; ஆன்மாவே, அக்களிப்பாயாக! ஏனெனில் உன் தேவனாகிய நான் மகிழ்ச்சி உள்ளவராக உணர்கிறேன்! எளிமை என்னை வசீகரிக்கிறது; கீழ்படிதல் என் திரு இருதயத்தை துள்ளச் செய்கிறது, ஏனெனில் தீயவனுக்கு எதிராகப் போராடுவதற்கான ஆயுதம் இதுவே; ஆண்டவரே! பாப்பரசரின் இடைக்கட்சியில் உன் கடிதத்தை வைத்தது சரியானதுதானா? நீ எனக்குக் கீழ்படிந்தாய் - இது மற்றவர்களுக்கு கீழ்படிதலுக்கான ஒர் உதாரணமாக இருக்கட்டும்; சூழ்நிலை எவ்வளவு கடினமானதாக உனக்குத் தோன்றினாலும், பிரச்சனை இல்லை, என்னை நம்பு, எனக்குக் கீழ்ப்படி. நீ எனக்கு கீழ்ப்படிவதையும், என் சித்தத்தைச் செய்வதையும் நான் காணும்போது, நான் எப்போதும் உனக்கு உதவி செய்வேன்; இதை எனக்காகச் செய்யும்படி நான் ஏன் உன்னிடம் கேட்டேன் என்பதைப் புரிந்து கொள்ள தேடாதே; என் திருப்பெயரின் கீழ் உங்கள் எல்லோரையும் இணைக்கப் போவது, ஆண்டவராகிய நான்தான் என்பதை நினைவில் வை, என் வல்லமையின் வழியாகத்தான் என் ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்; என் குழந்தாய், இந்த முறையில் உன்னைப் பயன்படுத்தியபடி, என் விரல் உன்மீது தங்கியிருப்பதாக; என் மூடுதுகிலை உன்மீது போர்த்தி, அதன் மூலம் உன்னைத் தீமையிலிருந்து காப்பாற்றி, நான் உன்மீது பொழிகிற இந்த எல்லா வரப்பிரசாதங்களாலும் நீ உயர்த்தப்பட்டவளாகும்படி செய்ய என்னை அனுமதி; உன் இறைவனாகிய நான் உன்னை நேசிக்கிறேன், மிக ஆபத்தான சூழ்நிலைகளிலும் கூட, நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்; அன்பு உன்னை ஏவித் தூண்டும்; ஞானம் வாழ்வை நேசிக்கிறது; ஞானம் பரிசுத்தத்தனத்தின் பெயரைத் தாங்கியுள்ளது; எனக்குக் கீழ்படிகிற அனைவருக்கும் அது தரப்படுகிறது; எல்லா போதனைகளும் ஞானத்தினின்றே இறங்கி வருகின்றன; என்னை நம்பு, பரிசுத்தத்தனத்தின் விதைகளை விதை; சமாதானம் உன்மீது இருப்பதாக; வா. என் புனித பிரசன்னத்தை நினைவில் கொள்; என்னை நோக்கி புன்னகை செய்; ஆகஸ்ட் 6, 1988 ரோம். நம் புனித அன்னை வசுலா, ஒருபோதும் தைரியம் இழக்காதே; நான் உன் அருகில் இருக்கிறேன்; இயேசுவின் திருக்காயங்களுக்குள் நுழை; என் வியாகுல இதயத்திற்குள் நுழைந்து, என் துயரத்தை உணர், நான் எப்படி அழுகிறேன் என்பதை உணர்; நான் பலரிடம் வருகிறேன்; குறிப்பு: காட்சி அளித்தபடி, நான் என் இதயத்தை அவர்களுக்குக் காட்டுகிறேன்; என் படங்களும், சுரூபங்களும் கண்ணீர் சிந்தச் செய்வதன் மூலம், நான் அடையாளங்களை தருகிறேன்; பல்வேறு இடங்களில் நான் தோன்றுகிறேன், ஆனால் என் குழந்தைகளின் இதயங்கள் ஒரு கடினமான மேலோட்டால், அவநம்பிக்கையின் அடுக்கு ஒன்றால் மூடப்பட்டுள்ளன; விசுவாசிப்பவர்களை அவர்கள் ஏளனம் செய்கிறார்கள்; இறைவார்த்தை அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை; இறைவனின் அழைப்புகள் அலட்சியம் செய்யப்படுகின்றன; எங்கள் எச்சரிக்கைகளுக்கு அவர்கள் வெகு குறைவாகவே செவிமடுக்கிறார்கள்; இறைவனால் தரப்படுபவையும், அவருடைய திரு வாயினின்று என்று பேசப்படுபவையுமான வெளிப்பாடுகளை கவனிக்க யாரும் விரும்புவதில்லை; உன் காலத்தின் விசுவாசமானது, சகிப்பின்மை, வக்கிரம், கொடூரம் மற்றும் இழிந்த தன்மையால் அடித்துச் செல்லப்பட்டு மறைந்துவிட்டது; என் மாசற்ற இருதயம் எவ்வளவு துயரமாக இருக்கிறது, கடவுளின் கரம் உங்கள் மீது விழவிடாமல், என் கரத்தால் தடுக்க இனியும் என்னால் முடியவில்லை; திருச்சபை புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளது. அதன் சுத்திகரத்தின் நேரம் இப்போது ஏறத்தாழ முடிந்துவிட்டது; பரிசுத்த ஆவியானவர் நம்பிக்கையையும், அன்பையும், விசுவாசத்தையும் உங்கள் அனைவருக்கும் தந்தபடி, உங்கள் மீது இறங்கி வருவார்; உங்கள் விசுவாசத்தை முன்பிருந்த நிலையில் மீண்டும் ஸ்தாபித்து, உங்கள் ஆன்மாவுக்கு உணவளிப்பார்; இது மாம்பெரும் திரும்பி வருதல் என்றும், ஒரு நித்திய ஆதாரம் முளைத்த எழுதல் என்றும், மலர்கள் பழுகி பெருகுதல் என்றும் அழைக்கப்படும்; திருச்சபையின் சுத்திகரம் ஒரு புதிய விண்ணகத்தையும், ஒரு புதிய மண்ணகத்தையும் எதிர்கொள்ள, உங்கள் அனைவரையும் ஆயத்தம் செய்யும்; அது உங்கள் கடவுளை எதிர்கொள்ள, உங்களைத் தயாரிக்கும்; உங்கள் அனைவர் மீதும் நான் கொண்டுள்ள என் ஆழ்ந்த நேசத்தை புரிந்து கொள்ளுங்கள்; நாங்கள், நாம்? ஆம், நாங்கள், நாம். வா; ஆகஸ்ட் 7, 1988 ரோம். நீ என்னை உணர வேண்டுமென நான் விரும்புகிறேன்; என் இதயத்தின் ஆசைகளை உணர்; என் அன்பின் தாகத்தை உன்னை என் அருகிலேயே கொண்டிருக்க வேண்டும் என்ற என் ஆசையை உணர்; மனிதகுலம் முழுவதன் மீதும் நான் கொண்டுள்ள பொறாமையுள்ள அன்பை உணர்; உன் சொந்த விருப்பங்களைக் கைவிட்டு விடு; அப்படி எதையும் கொண்டிராதே; என் முன்னிலையில், அதுவும் நான் உன்னை போஷிக்கவராக இருக்கும்போது, உனக்கு இவை தேவையில்லை; என் பணிகள் முழுவதும் என்னுடையவையாக இருக்கட்டும்; நான் உன்னை நடத்தி செல்கிற வழியை ஏற்றுக்கொள்; என் திரு இருதயத்தில் நுழை; நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; ஆகஸ்ட் 8, 1988 ரோம். அன்புக்குரியவளே, உன்னை தேடியவரும், இறுதியாக உன்னைக் கண்டுபிடித்தவருமான உன் ஆயன் நானே என்பதை நான் உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்; நானே உயிர்ப்பு, என் வழியாக மட்டுமே நீ வாழ்வை, நித்திய வாழ்வைக் கண்டடைவாய், ஆனால் இந்தத் திரும்பி வருதலில், தமது ஆட்டுக்குட்டிகள் சிதறடிக்கப்படுவதையும், அவற்றில் பல பட்டினியாய் இருப்பதையும் ஆயன் காண்கிறார்; அவை இருந்த கிடை மீண்டும் மீண்டும், அவருடைய சொந்த நண்பர்களாலேயே தாக்கப்பட்டுள்ளது; மோசமாக நடத்தப்பட்டவையும், பட்டினி கிடந்தவையுமான என் ஆட்டுக்குட்டிகள் இறந்து கிடக்கின்றன; என் ஆட்டுக்கிடைக்குப் பொறுப்பாக இருந்த இந்த ஆயர்கள் எனக்கு கீழ்படியாமல் இருந்திருக்கிறார்கள், அவர்கள் எனக்கு பிரமாணிக்கமற்றவர்களாக இருந்தார்கள்; ஆகவே, இன்னும் அதிக சேதம் ஏற்படலாம் என்ற அச்சத்தில், நான் அவர்களை அகற்ற வேண்டி இருக்கும்; இதுவே என் திருச்சபையின் பெரிய துன்பமாக அறியப்பட்டிருக்கும்; வா, நீ கற்றுக் கொள்கிறாய்; நேசம் உன்னை நேசிக்கிறது;