வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 11. டிசம்பர் 6, 1986. மகளே, சமாதானம் உன்னோடு இருப்பதாக; என் பிரசன்னத்தைப் பார், நான் உன் பரலோகப் பிதா; என்னோடு இரு, அவநம்பிக்கைப்படாதே. நீ இன்னும் என் போதனைகளின் தொடக்கங்களில் தான் இருக்கிறாய்; நான் உன்னை முன்னேற்றுவேன்; விசுவாசம் கொள். இப்போது நீ விழித்திருக்கிறாய் என்பதால், மனிதர்கள் உன்னை அதைரியப்படுத்த அனுமதிக்காதே. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். என்னை நம்பு, என் மீது சாய்ந்துகொள். நானே உன் பலம். என் குழந்தைகளின் இதயங்கள் எப்படி எனக்கு மூடப்பட்டிருக்கின்றன, அவை மேற்கொண்டு என் வேலைகளை எப்படி புரிந்துகொள்ளாதிருக்கின்றன என்பதைக் காண்பதில் நான் மனவேதனைப்படுகிறேன். நான் எபிரேயர்களோடு இருந்தபோது அவர்களை அழைத்தேன்; அவர்கள் என் அழைத்தல்களை ஏற்றுக் கொண்டார்கள். எல்லாம் எழுதி வைக்கப்பட்டது: நான் இருக்கிறேன் என்று உனக்கு கற்பிக்கச் சித்தம் கொண்டவர் நானே. என் வார்த்தையின் வழியாக நான் உனக்குக் கற்பித்தேன்; உன்னை அழைத்தவர் நானே. இன்னும் அழைத்துக் கொண்டிருப்பவரும் நானே. எனக்கு ஆயிரம் ஆண்டுகள் ஒரே ஒரு நாளைப் போல. குறிப்பு: அதன்பின், கடவுள் என்னைப் பார்த்து என் மனநிலைக்காக என்னை ஒரு விதமாக கண்டித்தார். நான் அழைக்கப்படும்போது, அமர்ந்து எழுத வேண்டியுள்ளது பற்றிச் சில சமயங்களில் முறையிட்டு வந்திருந்தேன். என் வார்த்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பது பற்றிப் புலம்பியழாதே; நான் உன்னை அன்பு செய்கிறேன், உன் பயங்களைப் பற்றி நான் முழுமையாக அறிந்திருக்கிறேன்.... இதை நினைவில் வை: உன்னைத் தேர்ந்துகொண்டவர் நானே. உன்னை வழிநடத்துபவர் நானே. உன்னைத் தேர்ந்தெடுத்தவர் நானே; மகளே, நீ பிறப்பதற்கு முன்பாகவே நான் உன்னை அறிந்திருந்தேன், உன்னை ஆசீர்வதித்தேன்; உம்மிடமிருந்து அழைத்தல்களைப் பெற்றுக் கொண்ட அனைவரையும் போலவே, நானும் ஏளனம் செய்யப்படுவேன். இப்போது மனிதர்களால் நான் பரிகசிக்கப்படுவேன் என்று அறிந்திருக்கிறேன்; மனிதர்கள் என்னை நம்பமாட்டார்கள்; நான் எங்களுடைய இந்தக் காலத்தின் நகைப்பிற்குரிய பொருளாக இருப்பேன். ஆம், உனக்கு முன் பலர் ஏளனம் செய்யப்பட்டார்கள். ஏனெனில் மனிதர்களின் இதயங்கள் இப்படித்தான் இருக்கின்றன. அவை கரடுமுரடாகவும், கடினமானவையாகவும் இருக்கின்றன; நான் சொல்வதைக் கேள்: இறைவனாகிய நான் உயிருள்ள இறைவனாக இருக்கிறேன்; கடவுளற்றவனாக இருக்கும்படி நான் எவனுக்கும் ஒருபோதும் கட்டளையிட்டதில்லை; சிந்திப்பதற்காக நான் மனிதர்களுக்கு ஓர் இதயத்தைத் தந்தேன். மகளே, உன் கவனத்தை ஈர்ப்பதற்காக உன்னை என்னிடம் கொண்டு வரும்படி என் ஊழியன் தானியேலை நான் உன்னிடம் அனுப்பியிருந்தேன்; அவருக்கு நான் என் உத்தரவுகளைத் தந்திருந்தேன்; என் வேலைகளை உனக்குக் காட்ட சித்தம் கொண்டவர் நானே; பயப்படாதே, நான் சமாதானத்தோடு வருகிறேன். ஏனெனில் நான் உன்னிடம் விரும்புவது சமாதானமே; நான் பரிசுத்தமாக வாழ விரும்புகிறேன்; ஆனால் என் இறைவா, நீர் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறீரா? நான் எதைத் தேர்ந்தெடுத்தேன் என்பதை அறிந்திருக்கிறேன்; பேசிக் கொண்டிருப்பவர் யாவே சாபவோத்தாகிய நான்தான்; என்னோடு நட, காலம் கனியும்போது நான் என்னிடம் உன்னை எடுத்துக் கொள்வேன்; இப்போது சமாதானமாய் போ. நான் எப்போதும் உன் அருகில் இருக்கிறேன்; டிசம்பர் 10, 1986. மகளே, என் அருகில் இரு; நான் எல்லாம் வல்ல கடவுள்; என் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதன் மூலம் என்னை மகிமைப்படுத்து; என் வார்த்தையை வாசிக்கும்படி அவர்களுக்குச் சொல். உனக்கும் அவர்களுக்கும் நான் விடுக்கும் அழைப்பை வாசிக்கும்படி அவர்களிடம் சொல். ஆ,.. நான் உமக்குக் கீழ்படிய விரும்புகிறேன். ஆனால் அவர்களுடைய எதிர்ச் செயலை நினைக்கும்போது என் எலும்புகள் அதிர்கின்றன. அதன்பின் அவர்கள் அச்சம் கொள்ளலாம். அவர்களுக்கு எச்சரிக்கை தருவதை நீ குறிப்பிடுகிறாய்; அவர்களிடம் பேசு. யாருக்கும் பயப்படாதே; என் ஆண்டவரே, இதையெல்லாம் எப்படிக் கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. எப்படி பேசுவது என்றும் எனக்குத் தெரியவில்லை. இந்தக் காரியங்களை இதற்கு முன் நான் செய்ததே இல்லை; உம் வார்த்தைகளை என் இதயத்திலும், என் வாயிலும் வைக்க உம்மால் இயலாதா? நான் வைப்பேன்; நான் இதை விரும்பவில்லை என்பது இதன் பொருள் அல்ல, என் ஆண்டவரே. ஆனால் எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான். எனக்குத் தெரியும். முழுமையாக என்னைச் சார்ந்திரு; நான் சரியான வார்த்தைகளை உன் உதடுகளில் வைப்பேன். நான் என் சொந்த வார்த்தைகளைக் கொண்டு உன் இதயத்தை நிரப்புவேன்; உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை நான் முழுமையாக அறிந்திருக்கிறேன்; தைரியம் கொள், மகளே; டிசம்பர் 14, 1986. ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்வதால் உம்மை பின் செல்லவும், நீர் விரும்புகிறபடியெல்லாம் நான் இருக்கவும் மனதாய் இருக்கிறேன். ஆகவே, நான் உம் ஆடைகளோடு ஒட்டிக்கொள்வேன். என் பாதங்கள் முன்னோக்கிச் செல்லவில்லை என்றாலும் என்னை இழுத்துச் செல்லும். என்னிடம் பலவீனத்தின் தருணங்கள் இருக்கலாம். ஆனாலும், நான் எங்கு போக வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ, அங்கே என்னை நீர் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் உண்மையாகவே விரும்புகிறேன். இப்போது நான் பலமுள்ளவளாக உணர்வதால் இதையெல்லாம் நான் உமக்குச் சொல்லுகிறேன். உம் தயவிரக்கத்தில் என் பலவீனத்தைப் பொருட்படுத்தாதீர். ஆண்டவரே, இதை நான் இப்போது உம்மிடம் கேட்கிறேன். இயேசு கிறிஸ்துவே, இது உம்மோடு நான் செய்து கொள்ளும் ஒப்பந்தம். குழந்தாய், நீ சொன்னதை நான் கேட்டேன்; இயேசுவாகிய நான், நீ சொன்னதைக் கேட்டேன். அன்புக்குரியவளே; குறிப்பு: இயேசு நெகிழ்ச்சி அடைந்தார். சமாதானத்தில் வாழு. நீ கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் நான் உன் ஆசிரியராய் இருக்கிறேன். என்னிடமிருந்து நீ எல்லாவற்றையும் கற்றுக் கொள்வாய்; இதோ, விடியற்காலத்தின் நட்சத்திரம் விரைவில் காணப்பட இருக்கிறது; அகமகிழ்வாயாக! நான் விரைவில் உங்கள் அனைவரோடும் இருப்பேன்; தூய இதயமுள்ளோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்; இது உண்மையாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நீர் பேசும் ஒவ்வொரு முறையும் உம் குரலை நான் கேட்பதெல்லாம் உண்மையாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறதா? இருந்தும், உம் திருப்பெயர் எனக்குத் தரப்படவில்லை. இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நடந்து கொண்டிருக்கிறது. இயேசு வேடிக்கை உணர்வு கொண்டவராகத் தோன்றினார். நான் இங்கே இருக்கிறேன். இது நிஜமாகவே நீர்தானா? இது நான்தான். இயேசுவாகிய நான் இங்கே இருக்கிறேன். ஆண்டவரே, அவர்கள் உம்மை பெற்றுக் கொள்ளும்படி அவர்களுடைய இதயங்களைத் திறந்தருளும். குறிப்பு: கடவுள் தம் செய்தியோடு என்னை நாடுகளுக்கு அனுப்பும் காலத்தைப் பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். இது ஜெபம் என்பதை விட ஒரு புலம்பலாகவே என் வாயினின்று வெளிவந்தது. அவர்கள் என்னைப் பெற்றுக் கொள்ளத் தயாராய் இருக்கிறார்களா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் தயாராய் இருப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் நீர் நிச்சயமாகவே அவர்களுக்கு உதவ முடியும்; நான் அவர்களுக்கு உதவுவேன்; பொறுத்திரு. அப்போது பார்ப்பாய்; விழிப்பாய் இரு, வசுலா; ஏனெனில் நான் விரைவில் உன்னோடு இருப்பேன்; நான் உன்னை அன்பு செய்கிறேன்; டிசம்பர் 15, 1986. சமாதானம் உன்னோடு இருப்பதாக; இயேசுவாகிய நான் உன்னோடு இருக்கிறேன்; என்னோடு இருப்பவர் யார் என்பதை முயற்சி செய்து பகுத்துணர்ந்துகொள்; நான் என் ஆன்மாவின் கண்களால் அவருடைய தாயாரைக் கண்டேன். உம் தாயாரா? புனித மாமரியா? குழந்தாய், உன் தாயாரும் கூட! அவர்கள் கூறுவதைக் கேள். குறிப்பு: புனித மாமரி பேசினார்கள். அவர்கள் பேசுவது இதுவே முதல் முறை. மகளே, நான் உன்னை அன்பு செய்கிறேன்; நானும் உன் அருகில் இருக்கிறேன்; தைரியம் கொள்; எங்களோடு இரு. எங்களோடு சேர்ந்து பணியாற்று; ஆம், அதை நான் விரும்புகிறேன்; திடீரென நான் கண்ட ஒரு பழைய கனவு என் நினைவுக்கு வந்தது. எனக்கு சுமார் 10 வயதானபோது நான் என் கனவில் புனித மாமரியைக் கண்டேன். எனக்குத் திருமணம் நடப்பதாகவும், வேறு யாரையும் அல்ல, இயேசுவையே நான் மணந்து கொள்வதாகவும் நான் கனவு கண்டேன்! நான் அவரைக் காணவில்லை. ஆனால் அவர் மறைந்திருக்கிற இறைவனாக அங்கே இருந்தார். நான் அழைக்கப்பட்ட விருந்தாளிகளாகிய பல மக்களிடையே நடந்து செல்ல வேண்டி இருந்தது. அவர்கள் தங்கள் கரங்களில் குறுத்தோலைகளோடு உற்சாகக் குரல் எழுப்பியபடி நாங்கள் கடந்து செல்ல வழிவிட்டார்கள். அதன்பின் ஒரு கதவு திறந்ததை நான் கண்டேன். அந்த அறையில் நான் காலடி எடுத்து வைத்தபோது புனித மாமரியைச் சந்தித்தேன். அவர்கள் முன்னே வந்து என்னை அணைத்துக் கொண்டார்கள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்களைச் சுற்றி மற்ற பரிசுத்த பெண்கள் இருந்தார்கள். அதன்பின் திடீரென்று அவர்கள் என் தலைமுடியையும் என் ஆடையையும் சீர்படுத்தத் தொடங்கினார்கள். தன்னுடைய திருமகனுக்காக நான் மிக நன்றாகவும் அழகாகவும் தோன்ற வேண்டும் என்பதில் அவர்கள் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டார்கள். அதன்பின் இயேசு பேசினார். உனக்கு நினைவு இருக்கிறதா? உனக்கு 11 வயதானபோது நான் அந்தக் கனவை உனக்குத் தந்தேன். இறைவனாகிய நான் உன்னை தேர்ந்தெடுத்தேன். அந்தக் கனவை இன்று நீ நினைவு கூறும்படியாக அது பற்றிய உன் ஞாபகத்தை நான் புதிதாக பாதுகாத்து வைத்திருந்தேன். அது எதைக் குறித்தது? எனக்காக பணியாற்ற நீ தேர்ந்தெடுக்கப்படுவாய் என்பதை அது குறித்தது. கடவுளாகிய நான் எப்போதுமே என் இலக்குகளை அடைகிறேன். நீ என்னை அன்பு செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். நீ சமாதானத்திற்காக உழைப்பதற்கு நான் உன்னை ஆசீர்வதிப்பேன். பரிசுத்தமாக இருக்கவும், பரிசுத்தமாக வாழவும் நான் உனக்குக் கற்பிப்பேன். ஏனெனில் நான் பரிசுத்தராய் இருக்கிறேன். எனக்காக உழைக்கும் எவனும் பரிசுத்தமானவனாக இருக்க வேண்டும். தைரியம் கொள், மகளே. இறைவனாகிய நான் எப்போதும் உன் அருகில் இருக்கிறேன். உன்னை அன்பு செய்கிறேன் என்பதை நினைவில் கொண்டிரு. டிசம்பர் 18, 1986. மகளே, சமாதானம் உன்னோடு இருப்பதாக; பலன் தருபவளாக இரு; ஆ, ஆண்டவரே, அப்படி இருக்க எனக்குக் கற்றுத் தாரும்! நான் உனக்கு உதவி செய்வேன். என் அருகில் நீ அப்படி இருக்கக் கற்றுக் கொள்வாய்; நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியையும், கடவுளாகிய நான் ஆசீர்வதிக்கிறேன். போய் என் குழந்தைகளை ஒன்று திரட்டு. அவர்கள் உன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அனுமதி. குறிப்பு: அவருடைய செய்திகளை வாசிப்பதன் மூலம் என்னுடைய குழந்தைகள் அக்களிப்பார்களாக. உன்னைப் போலவே அவர்களும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக. பலன் உள்ளவளாக இரு. டிசம்பர் 27, 1986. சமாதானம் உன்னோடு இருப்பதாக. இயேசு கிறிஸ்துவாகிய நான் இங்கே இருக்கிறேன். என்னில் தங்கியிரு. உன் கரத்தை எனக்குக் கொடு. நான் என் கரத்தில் உன் கரத்தை வைத்துக்கொண்டு உன்னை வழிநடத்துவேன். நான் உன்னோடு நடப்பேன். உன் காலடியின் வேகம் என் காலடியோடு இணைந்து வரும்; என்னை அன்பு செய்யவும், என்னை அடையாளம் காணவும் நீ கற்றுக் கொண்டது போலவே என்னோடு இருக்கவும் நீ கற்றுக் கொள்வாய். பலருக்கு உதவி செய்ய நீ கற்றுக் கொள்வாய். ஆகவே, என்னோடு ஒட்டிக்கொண்டு விழிப்பாய் இரு. நான் சரியான நேரத்தில் உன்னை புரிந்து கொள்ளச் செய்வேன். குறிப்பு: இதெல்லாம் எப்போது நிறைவேறும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். என்னோடு சேர்ந்து ஜெபி. ஆசீர்வதிக்கப்பட்டவளாக இரு. இறைவனாகிய நான் உன்னை அன்பு செய்கிறேன். என்னைக் காணாமலே விசுவாசிப்பவர்கள் பேருபெற்றவர்கள். அவர்கள் எனக்கு சொந்தமான அனைத்தையும் தங்கள் உரிமைச் சொத்தாக ஆக்கிக் கொள்வார்கள். டிசம்பர் 28, 1986. சமாதானம் உன்னோடு இருப்பதாக. நீ என்னோடு நடப்பாய் என்பதை உன் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இறைவனாகிய நான் உன்னை அன்பு செய்கிறேன் என்பதை நீ மனதில் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த வார்த்தைகளை எப்போதும் நினைவில் கொண்டிரு. மகளே, ஆசீர்வதிக்கப்பட்டிரு, அகமகிழ்வோடு இரு. நீ புரிந்து கொள்வதில்லையா? குறிப்பு: இறைவன் உல்லாசமான தொனியோடு இந்த வார்த்தைகளை உரக்கக் கூக்குரலிட்டார். நான் உடனே பதில் சொல்லாமல் இருந்திருந்தேன். இதெல்லாம் இன்னமும் என் மனித புத்திக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றவில்லையா? ஏன் நான் உன்னை ஆசீர்வதித்திருக்கிறேன் என்றும், நீ என்னில் இருப்பதன் மூலமாக என்னுடைய தெய்வீக ஒளியில் தங்கியிருக்கிறாய் என்றும் நீ உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; உன் முழு பலத்தையும் கொண்டு என்னை அன்பு செய். ஏனெனில் யாவேயாகிய நான் என் கண்களை உம்மீது பதித்து வைத்திருக்கிறேன்; நீ விரும்பும்போது என்னை சந்தி; டிசம்பர் 29, 1986. மகளே, என்னைப் பார். குறிப்பு: இது ஓரளவுக்கு மனச்சோர்வு நிலையாக இருந்தது. நான் என் எலும்புகளில் சிறைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன்; இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று நம்புவது ஏனோ மிகவும் கடினமானதாக இருக்கிறது. இது ஒரு கனவைப் போல் இருக்கிறது. இது நான்தான் என்று நம்புவது உனக்கு ஏன் கடினமானதாக இருக்கிறது? தவறான காரியங்களைச் செய்யும்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குழந்தையைப் போலவே நான் ஏறக்குறைய மனக்கசப்போடு என் கண்களைத் தாழ்த்தியபடி மௌனமாய் இருந்தேன். யாவேயாகிய நானே இதை உன்னிடம் கேட்டேன்; என்னை ஒருமுறை கண்ணோக்கிப் பாரும், என் ஆண்டவரே. அப்போது ஏன் என்று நீர் புரிந்துகொள்வீர். நான் உதவியற்றவளாகவும் இழிந்தவளாகவும் இருக்கிறேன். எனக்கு நீர் தந்துள்ள தாராளமுள்ள கொடை என் புத்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. நீர் என்னிடம் மிகப் பல காரியங்களை ஒப்புவித்திருக்கிறீர். ஆனால் நான் ஆலோசனையின்றியும் பேச்சற்றவளாகவும் இருக்கிறேன். உம் உதவி எனக்குத் தேவை. குறிப்பு: பங்களாதேஷில் எனக்கு உதவ அல்லது அறிவுரை கூற எனக்கு குரு நண்பர் யாரும் இருக்கவில்லை. ஒரு சில நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இக்காரியங்களில் என்னைப் போலவே அவர்களும் எதுவும் அறியாதவர்களாக இருந்தார்கள். என்னிடம் ஜெபி. என்னிடம் மன்றாடு. அப்போது நீ என் உதவியைப் பெற்றுக்கொள்வாய். என்னில் வாழு. நான் உன் கடவுள்; ஒருநாள் அண்மையில் உள்ள அந்நாளில் ஒரு பணியாக உனக்குத் தரப்பட்டுள்ளது என்ன என்பதை முழுமையாக புரிந்து கொள்வாய். இப்போது நீ இன்னும் என் அழைத்தலின் தொடக்கத்தில் தான் இருக்கிறாய்; நீ எனக்காக வேலை செய்வதற்காக நான் உன்னை அழைத்திருக்கிறேன். இறைவனாகிய நான் உன் ஆசிரியர் என்பதையும் என் இலக்குகளை அடைய என்னால் இயலும் என்பதையும் நினைவில் வை. நான் உன்னை விடுவிக்க வரும் வரையிலும் என் அழைப்புகளையும் என் சந்திப்புகளையும் ஏற்றுக்கொள். என் சுவீகாரத்தை ஏற்றுக்கொண்டு சமாதானத்தில் வாழு. ஏனெனில் நான் உன்னை அன்பு செய்கிறேன். என்னிடம் சுதந்திரமாய் இரு. என்னை சார்ந்திரு. மகளே, நீ பலவீனமாய் இருக்கிறாய் என்று நான் சொல்வதை நம்பு. என் வல்லமையையும் என் அதிகாரத்தையும் காட்டுவதற்கு இந்த பலவீனத்தை பயன்படுத்த என்னால் முடியும். நான் உன்னில் இன்பம் காண்கிறேன். யாவே சாபவோத்தாகிய நான் பரிசுத்தமாக வாழ்வதற்கு இந்த அழைப்புகளின் வழியாக உனக்கும் மற்றவர்களுக்கும் உதவி செய்வேன். இப்போது என் முற்றங்களில் நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய். சந்தோஷமாய் இரு. உங்கள் அஸ்திவாரங்கள் எப்படி தொடங்கின என்றும் என் வார்த்தை உயிருள்ளது என்றும் என் செய்திகள் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்தும் என்று நான் உனக்குச் சொல்கிறேன். அவை உங்களை உயிர்ப்பிக்கும். அவை என்னைப் போலவே பரிசுத்தமாய் இருக்கின்றன. மகளே, பிற்பாடு என் இரட்சிப்பின் உதவியை நீ முழுமையாக புரிந்து கொள்வாய். நீ நசுக்கப்பட மாட்டாய். உன் நம்பிக்கை எப்போதும் என்னில் இருப்பதாக. மனிதர்களின் பகைமை உன்னை அதைரியப்படுத்தாமல் இருப்பதாக. நீ என் இருதயத்தில் இருக்கிறாய். ஆகவே, மாமிசத்தால் அச்சுறுத்தப்படாதே. குறிப்பு: அதாவது அழியக்கூடிய மனிதர்களால். டிசம்பர் 30, 1986. ஆண்டவரே, நீர் மோயீசனை அழைத்த அதே இறைவன் தானா? நான் அதே இறைவன் தான்! யுகமே, ஓ யுகமே! இறைவனாகிய நான் பிரமாணிக்க உள்ள ஒவ்வொரு இதயத்திலும் பிரகாசிக்கிறேன் என்பதை நீ கொஞ்சமே அறிந்திருக்கிறாய். உன்னை அழைக்க நான் எப்போதும் வழிகளைக் கண்டுபிடிப்பேன். ஈனோ, ஓ காஸ்மோஸ், எக்கி, அபிசி, டோபாஸ், ஈகோ, ஓ மெகா, ஸ்தியோஸ், தாவ்ரோ, மெசோனா, எர்தோகினா, சாஸ், ஃபோட்டிசோ. குறிப்பு: இந்த கிரேக்க மொழி வாக்கியத்தின் பொருள் "உலகம் ஒளியை கைவிட்டுவிட்டது என்றாலும் எல்லாம் வல்ல இறைவனாகிய நான் உங்கள் மீது ஒளிவீசுவதற்கு ஒரு வழியை கண்டுபிடிப்பேன்."