இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் மக்களை இடைவிடாமல் இதயத்திலிருந்து ஜெபிக்கவும், ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும், ஒன்றுபட்டிருக்கவும் அழைக்கிறார். தாம் அன்பிற்காகத் தாகமாயிருப்பதாகவும், தம்மை அன்பு செய்யாதவர்களும் தம்மிடம் வரலாம் என்றும் கூறுகிறார். வசுலா குற்றம் சாட்டப்படும்போது, அவளைக் கைவிடமாட்டேன் என்கிறார்.

Show Notes

அத்தியாயம் 85: நான் நித்திய வாழ்விற்கு, வாயிலாக இருக்கிறேன் - இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் மக்களை இடைவிடாமல் இதயத்திலிருந்து ஜெபிக்கவும், ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும், ஒன்றுபட்டிருக்கவும் அழைக்கிறார். தாம் அன்பிற்காகத் தாகமாயிருப்பதாகவும், தம்மை அன்பு செய்யாதவர்களும் தம்மிடம் வரலாம் என்றும் கூறுகிறார். வசுலா குற்றம் சாட்டப்படும்போது, அவளைக் கைவிடமாட்டேன் என்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:17 10/01/1989 - குழுவிற்கு செய்தி: நித்திய வாழ்வின் வாசல்
04:33 13/01/1989 - நல்ல மரம் நல்ல கனிகளை விளைவிக்கும்
10:09 17/01/1989 - தியானி, ஜெபி, என் சட்டத்தை நேசி
15:31 ஜெபக்குழுவிற்கான செய்தி: அன்பிற்கான தாகம்
21:29 22/01/1989 - துன்புறுத்தலிலும் நிலையாயிரு
24:50 27/01/1989 - ஆன்மாக்களை எனக்கு ஒப்புக்கொடு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #NithiyaVaazhvinVaasal #AnbirkaanaThaagam #OndrippirkaanaJebam

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 85. ஜனவரி 10, 1989 குழுவிற்கு செய்தி: ஆண்டவரே! நான் உங்களிடம் கேட்பதெல்லாம் பரிசுத்தத்தனத்தில் ஜெபிப்பது, இடைவிடாமல் ஜெபிப்பது, உங்கள் இதயங்களில் இருந்து ஜெபிப்பதுதான்; ஒருவருக்கொருவர் நல்லவராக இருங்கள்; என் பிரதிபலிப்பான, என் தெய்வீக சாயலாக இருங்கள்; என் பரிசுத்தத்தனத்தையும், மாசற்றத்தனத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடிகளைப் போல் இருங்கள்; நீங்கள் என்னுடையவர்கள் என்பதையும், நீங்கள் அன்பின் குழந்தைகள் என்பதையும் உலகம் காணட்டும்; ஏனெனில் எங்கே ஆண்டவரின் ஆவியானவர் இருக்கிறாரோ, அங்கே பரிசுத்தமும், அன்பும், ஒளியும், பிரகாசமும் இருக்கிறது; ஆகவே, ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள், உங்கள் எதிரிகளை அன்பு செய்யுங்கள்! விண்ணகத்திலுள்ள உங்கள் தந்தை உத்தமராய் இருப்பது போல, நீங்களும் உத்தமர்களாக இருங்கள்!! நீங்கள் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், புதிதாக வருபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; நான் நித்திய வாழ்வுக்கு வாசலாக இருக்கிறேன் என்பதை நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன்; என்னில் விசுவாசம் கொள்பவன், இறந்தாலும் வாழ்வான்; நான் உயிர்ப்பாக இருக்கிறேன், என் சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்; நான் என் சமாதானத்தை உங்களுக்குத் தருகிறேன், அதை உலகமெங்கும் பரப்புங்கள்; என் சந்ததிகளாக இருங்கள், ஒவ்வொரு ஆன்மாவும் உங்களில் என்னை அடையாளம் கண்டுகொள்ளட்டும்; தம் செய்தியை நான் வெளியே பரப்ப வேண்டும் என்று ஆண்டவர் விரும்புவதற்கு சற்று முன்பாக, ஒருவர் வந்து எனக்கு நம் பாத்திமா அன்னையின் அழகான சுரூபம் ஒன்றைத் தந்தார். என் பொதுக்கூட்டங்கள் எல்லாவற்றிலும் என்னோடு சேர்ந்து வருமாறு நம் அன்னை சரியான நேரத்தில் இங்கே வந்து சேர்ந்தார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன். லாவ்ஸானுக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில், அவர்கள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டதால், பாத்திமா மாதாவைக் கொண்டுவர வேண்டாம் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதே இரவில், நான் என் கனவில் நம் பாத்திமா அன்னை சுரூபமாக என்னை எதிர்நோக்கியபடி இருப்பதை நான் கண்டேன். என் கூட்டங்களுக்கு என்னோடு சேர்ந்து வருவதற்காகத்தான் அவர்கள் என்னிடம் வந்தார்கள் என்று நான் புரிந்து கொண்டிருந்தது சரிதான் என்பதை நான் அறிந்துகொள்ள, ஒரு அடையாளம் தரும்படி நான் அவர்களிடம் கேட்டேன். இந்த வார்த்தைகளை நான் கூறிய உடனேயே, நம் அன்னை தன் கரங்களை விரித்து, அவற்றால் என்னைச் சுற்றி இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அப்படியே இருந்தார்கள். நான் விழித்தெழுந்தேன். அதே காலை நேரத்தில், நம் பாத்திமா அன்னை, "தயவுசெய்து என்னை விட்டுச் செல்லாதே, என்னை உன்னுடன் கூட்டிக்கொண்டு போ" என்று எழுதினார்கள். வசுலா, என் சமாதானத்தைக் கொண்டிரு; ஆண்டவர் உனக்குத் தருகிற அடையாளங்களைப் புரிந்து, அவற்றைப் பகுத்துணர்ந்து, அவற்றைப் பின் செல்; அவற்றைக் கவனிக்க எனக்கு உதவுங்கள். நான் உனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன்; உங்களுக்கு நன்றி, பரிசுத்த அன்னையே. நேற்று, என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு குரு என்னை எதிர்த்துப் பேசிய வார்த்தைகளை நான் கேட்டேன். "அவளை விட்டு விலகி இருங்கள், அவள் ஒரு பொய் வேடதாரி" என்று அவர் சொன்னார்! எப்படியோ, அவருடைய இந்தக் குறிப்பு எனக்கு மகிழ்ச்சி அளித்தது. ஏனெனில், இயேசு போலி இறைவாக்கினர் என்று பரிசேயர்களால் குற்றஞ் சாட்டப்பட்டது போலவே, ஒரு பொய்க்காரி என்று நானும் குற்றம் சாட்டப்படுகிறேன். இது அவர் டிசம்பர் 7, 1988 அன்று எனக்கு தந்த செய்தியை எனக்கு நினைவூட்டியது. நான் குற்றம் சாட்டப்படுவேன் என்றும், துன்புறுத்தப்படுவேன் என்றும், விமர்சிக்கப்படுவேன் என்றும் பல தடவைகள் இயேசு எனக்குச் சொன்னார். இது அவருடைய வார்த்தைகளை நிரூபிக்கிறது. நான் அவருக்காக குற்றம் சாட்டப்படுகிறேன், அவர் காரணமாக துன்புறுத்தப்படுகிறேன் என்பதால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். என் குழந்தாய், உன்னைக் குற்றம் சாட்டி, உன்னைத் தீர்ப்பிடுபவர்களுக்காக ஜெபி, அவர்களுடைய இதயங்களைத் திறக்குமாறு, அவர்களுக்காக ஜெபி; ஆண்டவரின் இரக்கமுள்ள அடையாளங்களை, அடையாளம் காணாமல் இருக்கும் எல்லா ஆன்மாக்களுக்காகவும் ஜெபி; என் அருகில் தங்கியிரு; நாங்கள் நாம்? ஆம்; நாங்கள், நாம். ஜனவரி 13, 1989 இயேசுவா? நீர் எனக்குத் தந்து வரும் வேலைகள், எழுத்துக்கள், ஆவியுலக தொடர்புள்ளவை என்று ஒரு குரு இப்போது கூறியிருக்கிறார். தயவுசெய்து எனக்கு உதவும். வசுலா, நான் உனக்கு உதவுவேன்; தீமையிலிருந்து உன்னை விடுவித்ததற்காக இறைவனுக்கு மகிமை உண்டாகுக; உன்மீது சந்தேகப்பட்டு, எல்லாவிதமான அவதூறுகளாலும் உன்னைக் குற்றம் சாட்டுபவர்கள் எல்லோரும் வேதாகமங்களில் உள்ள என் வார்த்தைகளை நினைவில் கொள்வார்களாக; நல்ல மரம், நல்ல கனிகளை விளைவிக்கும்; என் வசுலா, சமாதானம்; மக்கள் உன்னை வசைகூறித் துன்புறுத்தும் போது களிகூர்வாயாக, ஏனெனில், விண்ணகத்தில் உன் வெகுமதி பெரியதாய் இருக்கும்; அன்பிற்குரியவளே, இந்த வேலைகள் ஆண்டவராகிய என்னிடமிருந்து வரவில்லை, ஆனால் ஆவியுலகத் தொடர்பினாலும், மாய மந்திரத் தொடர்பினாலும் வருகிறது என்று வலியுறுத்திச் சொல்பவர்களிடம் நான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்; தனக்கு எதிராகத் தானே பிரிய சாத்தானால் முடியுமா? அவன் தனக்கு எதிராகத் தானே பிரிந்தால், அப்போது அவனுடைய அரசு எப்படி நிற்கும்? என் வரப்பிரசாதம் உன்மீது இருக்கிறது, என் குழந்தாய்; ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை; ஆண்டவரே, என் எழுத்துக்களை வாசிப்பதற்கு முன், அல்லது என்னைச் சந்திப்பதற்கு முன் என்னைக் குற்றம் சாட்டி, என்னை தீர்ப்பிடுபவர்கள், உம் செய்தியின் வழியாகப் பலர் மனந்திரும்புகிறார்கள் என்பதை நம்பவும் விரும்பவில்லை. அவர்கள் என்னை நம்பவில்லை! ஏனெனில், தங்களுக்குச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை; வசுலா, காலங்களின் தொடக்கத்திலிருந்தே நான் எப்போதும் இறைவாக்கினர்களை அனுப்பியுள்ளேன், ஆனால் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள்; மனிதர்கள் மாறவேயில்லை; ஆண்டவராகிய நான் இதைச் சொல்கிறேன்; யாராவது மனிதருக்கு முன் வெளிப்படையாக என்னை அறிக்கையிடுவான் என்றால், நானும் தேவதூதர்களுக்கு முன்பாக அவனை அறிக்கையிடுவேன்; ஆனால் மனிதருக்கு முன்பாக எவனாவது என்னை மறுதலிப்பான் என்றால், அப்போது நானும் என் தூதர்களுக்கு முன்பாக அவனை மறுதலிப்பேன்; என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராக இருக்கிறான், என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்; என் வேலைகள் ஒருபோதும் முடியாது; என் ஆவியானவர் உண்மையாகவே உங்கள் நடுவில் இருக்கிறார்; ஒரு முடிவில்லாத அன்பினால் நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்; இந்த அன்பின் காரணமாக, நீங்கள் விழுவதை என் திரு இருதயம் பார்த்துக் கொண்டிருக்காது; என் வேலைகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்! ஆவிகளை பகுத்தறியுங்கள்! வேதாகமம் கூறுகிறது; இறைவாக்கு உரைப்பவன் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களுடைய ஊக்கத்திற்காகவும், அவர்களுடைய ஆறுதலுக்காகவும் அவர்களிடம் பேசுவான்; குறிப்பு: 1 கொரிந்தியர் 14 ஆம் அதிகாரம் மூன்றாவது இறைவார்த்தை. எவ்வளவோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிற என் திரு இருதயம் அன்பு மற்றும் இரக்கத்தின் பாதாளமாக இருக்கிறது; உங்கள் யுகம் இறந்துவிட்டது; ஆனால் உயிர்ப்பாக இருக்கிற நான் அதை உயிர்ப்பிப்பேன்; செவிகள் இருந்தும் கேட்க மறுக்கும் குருக்களுக்காக ஜெபியுங்கள்; அவர்கள் மீது நான் கொண்டுள்ள அன்பு பெரியது, ஆயினும் அவர்கள் எனக்குத் தருகிற துன்பத் துயரங்களும் பெரிதாகவே இருக்கின்றன... என் குழந்தாய், என் சிலுவையை பகிர்ந்துகொள், போராட்டம் இன்னும் முடியவில்லை; ஆண்டவராகிய நான் இறுதிவரை உன்னோடு இருக்கிறேன்; நாம்? ஆம், ஆண்டவரே. நாங்கள்? ஆம், என் ஆண்டவரே, என்றென்றைக்கும் எக்காலத்திற்கும். ஆமென். ஜனவரி 16 அன்று, மெட்ரோபொலிட்டன் ஆர்த்தடாக்ஸ் பேராயரைச் சந்திக்கும்படி சபைகளின் உலக சங்கத்திற்கு நான் அழைக்கப்பட்டேன். அவர் செய்தியைக் கேட்டு, அதை ஆராய விரும்பினார். இயேசு மிகச் சரியாக எக்குமெனிசக் கொண்டாட்ட வாரத்தில் என்னை அனுப்பினார். இது ஒரு அடையாளம். இது புனித இராயப்பரின் ஆசனத் திருநாளும், என் பிறந்த நாளுமான ஜனவரி 18 அன்று கொண்டாடப்படும். 1987 மே 20 அன்று, இன்னும் ஒரு குரு கூட என்னை ஆதரிக்காமல் இருந்தபோதும், ஒரு கைப்பிடி அளவுள்ள நண்பர்கள் மட்டுமே என்னை அறிந்து, ஆதரித்தபோதும், இயேசு திருச்சபை பற்றியும், அதன் எதிர்கால ஒன்றிப்பைப் பற்றியும் நான் எழுதும்படி செய்த பிறகு, நான் கடும் எரிச்சல் அடைந்து கேட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நான் கத்தோலிக்கத் திருச்சபைக்கு வெளியே உள்ளவள், ஆசியாவில் வாழ்பவள், அந்தச் சமயத்தில், சபைகளுக்கான உலக சங்கத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதையும் நான் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதால், இந்தச் செய்தி எப்படி சரியான செவிகளைச் சென்றடையும் என்று நான் கேட்டேன். "அது சென்றடையும்" என்று இயேசு எளிமையாகப் பதில் சொன்னார். மே 20, 1987 அன்று, அந்த வார்த்தைகள் ஜனவரி 16 அன்று எப்படி துல்லியமாக நிறைவேறின என்பதை நான் புரிந்து கொண்டேன். அவர்கள் செய்தியை ஏற்றுக் கொண்டார்களா இல்லையா என்பது வேறு கதை. ஜனவரி 17, 1989 நான் தளர்ந்து கொண்டே போவதாக உணர்ந்தேன், எனவே என்னைத் தூக்கும் படியும், இயேசுவை உணரவும், அவருடைய குரலைக் கேட்கவும் அவர் எனக்குக் கற்பித்த தியானங்களை எனக்கு நினைவுபடுத்துமாறும் நான் அவரிடம் ஜெபித்தேன். இயேசுவா? நான்தான்; மலரே, எப்படித் தியானிப்பது என்றும், நான் சொல்வதை எப்படிக் கேட்பது என்றும் உனக்கு நினைவுபடுத்துவேன்; வார்த்தையாகிய நான் உன்னைக் கேட்கத் தூண்டி, ஞானத்தைக் கொண்டு உனக்குக் கற்பிப்பேன்; திற, திறந்து என் ஆவியானவர் உன்னை நிரப்ப அவரை அனுமதி; ஆம், தியானி, வேறு எப்படி நீ என்னை அடைய முடியும்? அமைதியில், விசுவாசத்தோடு, உன் ஆன்மாவை என்னிடம் எழுப்பு; உன் தந்தையாகிய எனக்கு உன் சித்தத்தை அர்ப்பணி. உன் தேவைகளை அறிந்துள்ள நான் உன்னை வழிநடத்தி, உனக்கு உணவூட்டுவேன்; ஆகவே, சிறியவளே, வேலை செய், அதிகக் கடினமாக வேலை செய்; நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆண்டவரே. என்னோடு பேசுவதன் மூலம் என்னை மகிழ்வி; என்னிடம் ஜெபி, ஜெபி, ஜெபி, நான் கேட்பதெல்லாம் ஜெபங்கள் மட்டுமே; உம்மோடு எழுதுவதும் ஒரு ஜெப வடிவம் தான் இல்லையா, ஆண்டவரே? ஆம், ஏனெனில் உன் எல்லாம் வல்ல இறைவனிடம் நீ பேசிக் கொண்டிருக்கிறாய்; உன்னோடு இருக்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன்; ஏனெனில் உன் இறைவனாகிய என்னோடு இடைவிடாமல் தொடர்பு கொண்டிருப்பதை விட மேலானது என்ன உள்ளது? நான் இப்போது உன்னுடன் இணைந்திருக்கிறேன், நானும் நீயும், நீயும் நானும், அன்பின் ஒன்றிப்பில் ஒன்றாக; ஆ வசுலா, என் குழந்தாய், சமாதானம்; நீயே சொந்தமாக இந்த செய்திகள் எல்லாவற்றையும் எழுதி இருக்க முடியும் என்று உன்னால் எப்படி கற்பனை செய்ய முடிந்தது? நான் இல்லாமல் ஞானத்தின் ஒரு வார்த்தையைக் கூட எழுத முடியாதவளாக இருக்கிறாய் என்பதை நீ உணர்ந்து, புரிந்து கொள்ளச் செய்யும்படி, சற்று நேரம் மட்டும் நான் என் முகத்தை மறைத்துக் கொண்டேன்; நானே பேசுகிறவரும், தருகிறவரும், கற்பிப்பவரும், வெளிப்படுத்துபவரும், உயிர்த்தெழுபவரும், கடவுளற்ற மக்களுக்கு உணவளிப்பவருமான வெளிப்பாடாக இருக்கிறேன்; என் வசுலா, நீ என்னுடன் மகிழ்ச்சியாயிருக்கிறாயா? நீ யாருக்குச் சொந்தமாயிருக்கிறாய் என்பதைப் பற்றி நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாயா? நான் இறைவன், உயிருள்ள இறைவன், உன்னைப் படைத்தவர்; நான் அன்பாக இருக்கிறேன், நான் இப்போது உன்னிடம் பேசுகிற உன் தந்தையாக இருக்கிறேன், நான் மிகப் பரிசுத்த திருத்துவமாக இருக்கிறேன்; உன்னை எனக்கு அர்ப்பணி; நீ முற்றிலும் வெறுமையாக இருந்தாலும், காதலன் தன் கன்னிகையைப் பின்தொடர்வது போல் நான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன்; நீ என்னை நேசித்து, என் வேலையைப் பகிர்ந்து கொள்ளும்படி செய்திருக்கிறேன்; நீ எப்படி இல்லையோ, அதற்காக நான் சிறிதும் கவலைப்படுவதில்லை, ஏனெனில் நான் என்னிலேயே போதுமானவராயிருக்கிறேன், ஆனாலும் என் ஒளியில் உன்னைக் கொண்டிருப்பதில் நான் இன்பம் காண்கிறேன், என் மண்டபத்தில் உன்னைக் கொண்டிருப்பதில் நான் இன்பம் காண்கிறேன், உனக்கு உணவூட்டுவதிலும், உன்னை செழிக்கச் செய்வதிலும் நான் இன்பம் காண்கிறேன்; என் குழந்தாய் உனக்குப் புரிகிறதா? என்னை வேதனைப்படுத்தாதே; குறிப்பு: பழக்கத்தாலும், அந்நியோன்னியத்தாலும் நான் மிகச் சிறிய காலத்திலேயே திடீரென சந்தேகங்களுக்கு இடம் கொடுத்தேன். பேசுவது கடவுள் தானா என்று சந்தேகப்பட்டேன். இது அவரைக் காயப்படுத்தியது. அப்பாக்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள்; எப்போதும் என்னுடன் அந்நியோன்னியமாக இரு; என் பரிசுத்தத்தை ஒருபோதும் மறக்காதே; நான் உன்னை நேசிக்கிறேன், நீயும் பரிசுத்தத் தனத்தில் என்னை நேசிக்க நான் விரும்புகிறேன்; என் சட்டத்தை மதி; அதை மதிப்பதன் மூலம் நீ என்னை மதிப்பாய்; என் சட்டத்தை நேசி; ஏனெனில் அதை நேசிப்பதில் என்னையும் நேசிப்பாய்; என் சட்டத்தைப் பின் செல்; அதை பின் செல்வதன் மூலம் நீ என்னைப் பின் செல்வாய்; என் சட்டம் என் இல்லத்திலுள்ள என்னிடம் உன்னை நடத்தி வரும்; அது உன் இல்லமாகவும் இருக்கும்; என்னில் விசுவாசம் கொள், ஏனெனில் என் வல்லமை மேலானது, நாங்கள், நாம்? நித்தியத்திற்கும், ஆண்டவரே. என்னைப் போற்று; ஆண்டவரே, உமக்கு நான் வாசித்துக் காட்டும்படி, வேதாகமத்தில் ஸ்துதி புகழ்ச்சியின் ஒர் அதிகாரத்தை எனக்குக் கண்டுபிடித்துத் தாரும். அப்படியே செய்வேன், பரிசுத்த வேதாகமத்தைத் திற; நான் திறந்தேன். அது தானியேல் ஆகமம் அதிகாரம் மூன்று இறைவார்த்தைகள் 52 முதல் 90 வரை. ஆகவே இந்த வசனங்களை நான் ஆண்டவருக்கு வாசித்துக் காட்டினேன். அது அவரை மகிழ்வித்தது. ஜெபக்குழுவிற்கான செய்தி. பிப்ரவரி 17க்காக எழுதப்பட்டது. சமாதானம் உங்களோடு இருப்பதாக; என் வார்த்தையே ஒளி; என் வார்த்தை சமாதானமும், அன்புமாகும்; என் வார்த்தை ஒற்றுமையும், நம்பிக்கையுமாகும்; என்னிடம் வந்து, இன்னும் அதிகமாக என் வார்த்தையை வாசியுங்கள்; அன்புக்குரியவர்களே, இது நான்தான், இரக்கமுள்ளவராகிய இயேசு, இந்தப் பலவீனமுள்ள கருவியின் மீது என் வார்த்தைகளைப் பதிக்கும்படி அவள் வழியாக இறங்குகிற உங்கள் மீட்பராகிய இயேசு; என் அளவற்ற அன்பாலும் என் மிக அபரிதமான இரக்கத்தாலும், இந்த இருளில் நான் இறங்குகிறேன், இந்தப் பாலைவனத்திலும், வறட்சியிலும் உங்கள் மீது என் ஆவியை ஊற்றும்படி நான் இறங்கி வருகிறேன்; படைப்பே! இந்த வறண்ட மண்ணுக்கு நீர் பாய்ச்சி, இந்த தாகமுள்ள நிலத்திலிருந்து ஆறுகளைப் புறப்படச் செய்ய நான் இறங்குகிறேன்; காலைப் பனியைப் போல என் ஆசீர்வாதங்களை உங்கள் மீது பொழிய, நான் இறங்குகிறேன்; எல்லாத் தீமையையும் அகற்றி, அக்கிரமத்தை வேரறுத்து, அவற்றின் இடத்தில் சமாதானத்தையும், அன்பையும் வைக்கும்படி நான் வருகிறேன்; இன்று என் உதடுகள் அன்பின் தாகத்தால் காய்ந்து வெடிப்புற்று இருக்கின்றன, எனக்கு உங்களிடமிருந்து அன்பு தேவைப்படுகிறது, நான் அன்பிற்காகத் தாகமாயிருக்கிறேன், நான் அன்பிற்காக தாகமாய் இருக்கிறேன்... என்னை நேசிக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று என் புனித இதயம் எவ்வளவு ஆசிக்கிறது! என்றாவது ஒரு நாள் நீங்கள் அன்பின் சிகரத்தை அடைந்து, என்னை நோக்கி "அப்பா" என்று கதறுவதைக் கேட்க நான் எவ்வளவு ஆசிக்கிறேன்! அப்போது... அப்போதுதான், என் காயங்கள் குணமாகத் தொடங்கும்... என் குருக்கள் என் அளவற்ற அன்பிலிருந்து முகந்து, தங்கள் இதயங்களை நிரப்ப நான் எவ்வளவு ஆசிக்கிறேன்! அவர்கள் மீது நான் கொண்டுள்ள அன்பு பெரியது, மிகப்பெரியது, அவர்கள் மோட்சத்திற்கு வந்து சேராதவரை, என் அன்பின் முழுமையைப் புரிந்து கொள்ள அவர்களால் இயலாது; பக்தி அவர்களது விருதுக்கொடியாகவும், பிரமாணிக்கம் அவர்களது தீப்பந்தமாகவும், மாசற்ற தனம் அவர்களது மகிழ்ச்சியின் அங்கியாகவும், அன்பு அவர்களது இலச்சினையாகவும் இருக்க வேண்டும்; அப்போது என் ஆட்டுக்குட்டிகள் அவர்களில் என்னை அடையாளம் கொள்ளும், அவர்களில் என் சாயலைத் தெளிவாகக் காணும்; என் மேய்ப்பர்கள், தங்கள் மாசற்றத் தனத்தில் விளைவிக்கும் கனிகள் முழுமையாக இருக்குமாறு, அவர்கள் மாசற்றவர்களாக இருக்க நான் விரும்புகிறேன்; என் புனித இதயத்தை மகிழ்வித்து, என் கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியுங்கள்; அன்பு செய்வது என்பது, என் கட்டளைகளை அனுசரிப்பதாகும்; ஓ என் ஒளியின் குழந்தைகளே, ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள், என் வார்த்தைகளை வாழுங்கள், என் வார்த்தைகளை வாழுங்கள்... என் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள், அது உங்களில் இருப்பதாக, என் அன்பைப் பெற்றுக்கொள்ளுங்கள், அது உங்களை நிரப்புவதாக; நீங்கள் உங்களை எனக்குத் திறப்பீர்கள் என்றால், நான் உங்களை முழுமையாகப் புதுப்பிப்பேன்; என்னை நம்புங்கள், என்னிடம் வாருங்கள், அப்போது நான் உங்களைக் கொண்டு ஒரு புதிய இனத்தை உருவாக்குவேன், ஒரு மாசற்ற இனத்தை உருவாக்குவேன்! என் செய்திகளை வாழுங்கள், என் செய்தியைத் தியானியுங்கள்; அன்போடு என்னிடம் வாருங்கள், என் பாதச் சுவடுகளைப் பின்பற்றுங்கள்; அவை என் இல்லத்திலுள்ள என்னிடம் உங்களை அழைத்து வரும், அது உங்கள் இல்லமாகவும் இருக்கும்; வெட்கப்படாதீர்கள், உங்கள் குறைபாட்டிலும் நான் உங்களுக்கு என் கரங்களை விரிப்பேன்; உங்கள் அன்பு வெதுவெதுப்புள்ளதாக இருந்தாலும், என் கரங்களுக்குள் விழுங்கள், அன்பின் எஜமானராகிய நான் என்னையும், ஒருவர் ஒருவரையும் அன்பு செய்யவும் உங்களுக்குக் கற்பிப்பேன்; என்னை அன்பு செய்யாதவர்களும் என்னிடம் வாருங்கள், நான் உங்களை மன்னித்து விட்டேன்; வாருங்கள், நான் உங்களைக் குணப்படுத்துவேன்; காணாமலே விசுவசிக்கிற நீங்கள் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; என் சிறிய ஆத்துமங்கள் பேறு பெற்றவர்கள், ஏனெனில் எனக்கு அவர்கள் மீது பாரபட்சமற்ற அன்பு உள்ளது; சிறியவர்களாகவும், எளியவர்களாகவும் நிலைத்திருங்கள், அப்போதுதான் நீங்கள் என் புனித இருதயத்தின் உள்ளாழங்களுக்குள் நுழைய முடியும்; குழந்தைக்குரிய விசுவாசத்தோடு சிறு குழந்தைகளைப் போலிருங்கள், ஏனெனில் என் தந்தையானவரை மகிழ்விப்பது இதுவே; ஒருபோதும் ஜெபிப்பதை நிறுத்தாதீர்கள்; என்னை மகிழ்வியுங்கள், உங்கள் இதயத்தால் ஜெபியுங்கள்; ஒன்றிப்பிற்காக, என் சரீரத்தின் ஒன்றிப்பிற்காக நீங்கள் ஜெபிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், பாப்பரசருக்காகவும், பிதாப் பிதாவுக்காகவும் நீங்கள் ஜெபிக்க வேண்டுமென விரும்புகிறேன்; அனைத்து குருக்களுக்காகவும் நீங்கள் ஜெபிக்க விரும்புகிறேன், இராயப்பரின் வழிகாட்டுதலின் கீழ் இல்லாத ஆடுகள், அவரிடம் திரும்பி வந்து, ஒப்புறவாக ஜெபியுங்கள்; ஒரே மந்தையும், ஒரே ஆயனும் இருக்கும்படியாக ஜெபியுங்கள்; உங்களிடையே சமாதானமும், ஐக்கியமும், இன்னும் மேலான அன்பும் இருக்குமாறு ஜெபியுங்கள்; ஒரே தேவ நற்கருணைப் பேழையைச் சுற்றியிருந்து, நீங்கள் என்னைப் போற்றி துதிக்குமாறு ஜெபியுங்கள்; அன்புக்குரியவர்களே, ஒன்றாக இணையுங்கள், பிதாவும், நானும் ஒருவராக இருப்பது போலவே, நீங்களும் ஒன்றுபட்டிருங்கள்; நாங்கள் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கிறேன்; ஜனவரி 22, 1989 ஆண்டவரா? குழந்தாய், நான் உன்னோடு இருக்கிறேன்; உனக்காக நான் இட்டு வைத்திருக்கிற வாழ்வு முறையைப் பின்பற்று; பகுத்துணர்தல் மற்றும் உண்மையின் ஆவியானவர் எப்போதும் உங்கள் மேல் வருமாறு ஜெபி; அவர்கள் உன்னைத் துன்புறுத்தும் போதும் நிலையாயிரு; என்னையும் உன் பரிசுத்த அன்னையையும் எட்டிப்பிடி; வசுலா, நான் உனக்குத் தந்திருக்கிற எல்லாவற்றையும் பற்றிக்கொள்; எனக்குச் சொந்தமானவர்களால் அநியாயமாகத் தீர்ப்பிடப்பட்டு, நடத்தப்படுகிற என் இறைவாக்கினர்களில் முதலாமவள் நீயல்ல; இல்லை, நீயில்லை; என் மிகச்சிறந்த நண்பர்களே, அனைத்திலும் ஆழமான காயங்களை என் மீது ஏற்படுத்துகிறார்கள், அவர்கள் புரிந்து கொள்ளவில்லை, தாங்கள் செய்வது என்னவென்று அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்; அவர்களுடைய இதயங்கள் கலங்கியுள்ளன, என் குழந்தையாகிய உன்னை நான் தேர்ந்து கொண்டிருக்கிறேன் என்ற உண்மையால், அவர்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்; இழிவான ஒன்றின் மீது வந்து, அவளையும் அன்பு செய்ய என்னால் முடிகிறது என்பது பற்றி அவர்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்; இரக்கத்தின் பாதாளமாக இருக்கும் என் இதயத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை; அவர்களில் பலர் பழிவாங்கத் தேடுகிறார்கள்; பிதாவிடம் தங்கள் அன்றாட ஜெபத்தைச் சொல்லும்போது, தாங்கள் பிறரை மன்னிப்பது போல, தங்களையும் மன்னிக்குமாறு பிதாவிடம் மன்றாடியபடி, ஒரு தெளிந்த மனசாட்சியோடு அவர்கள் வருகிறார்களா? இன்றுவரை அவர்கள் உன்னை மன்னிக்காமல் இருந்துவிட்டு, தங்களை மன்னிக்கும்படி எப்படி பிதாவிடம் கேட்க முடியும்? உன்னைத் தீர்ப்பிட அவர்கள் தயங்குவதில்லை, அவர்கள் சமாதானத்திற்காகக் கூக்குரலிடுகிறார்கள், ஆனால் சமாதானமில்லை, அவர்களில் ஒருவரும் தங்கள் தீமையிலிருந்து மனந்திரும்புவதில்லை; உங்கள் சமாதான தாகம் எங்கே? ஒன்றிப்பின் மீதான உங்கள் ஆசை எங்கே? இன்று நீங்கள் பிரிந்து கிடக்கிறீர்கள் என்றால், காரணம் உங்கள் கொடிய குணமும், மன்னிக்காத உணர்வும் தான்; அன்பு எங்கே இருக்கிறது? படைப்பே, உன்னில் ஏதேனும் அன்பு எஞ்சியிருக்கிறதா? உங்களில் ஞானம் எதுவும் எஞ்சி இருக்கவில்லையா? உங்களில் மிகச் சிறியவர்களுக்கும் நான் தருவேன் என்றும், அந்நிய மொழி பேசும் மனிதர்கள் வழியாகவும், அந்நியர்களின் உதடுகளைக் கொண்டும், நான் மக்கள் இனங்களிடம் பேசுவேன் என்று ஆண்டவராகிய நான் கூறியிருக்கிறேன், இருந்தும், அவர்கள் எனக்கு செவி சாய்ப்பதில்லை; என் வசுலா, கவலைப்படாதே, துன்புறுத்தல்கள் எப்போதும் இருக்கும்; அன்புக்குரியவளே, நான் உனக்குத் தந்திருப்பதைப் பற்றிக்கொள்; நீ என் பரிசுத்த ஆவியானவரால் இயக்கப்படுகிறாய் என்பதால், இப்போது என் மகளாக இருக்கிறாய்; ஆகவே, என்னோடு ஒட்டிக்கொள், நிலையாயிரு; நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்; இறைவன் எனக்குக் காட்டியுள்ள இரக்கத்திற்காகவும், அன்பிற்காகவும், அவருக்கு மகிமையுண்டாவதாக! நம்பிக்கையோடிரு, நீ உன் அப்பாவின் கரங்களில் இருக்கிறாய்; நாங்கள், நாம்; ஆம், என்றென்றைக்கும். ஜனவரி 27, 1989 ஆண்டவராகிய நான் உன்னை நேசிக்கிறேன்; நானே உன் வாழ்வின் முதல்வர்; இது எப்போதும் இப்படியே இருக்கட்டும், ஏனெனில் நானே இருக்கிறவர்; என் ஒளியில் நிலைத்திரு, ஆன்மாக்களை என்னிடம் கொண்டு வருவதன் மூலம் என்னை மகிழ்வி; உன் மழலை வார்த்தைகளால் என்னைச் சீராட்டு; ஒருபோதும் ஜெபிப்பதை நிறுத்தாதே, எப்போதும் என் பிரசன்னத்தை உணர்ந்து கொள்; இப்போது என்னை ஓர் அரசராக நடத்து, அன்பின் மலர் மாலைகளை எனக்குக் காணிக்கையாக செலுத்து, ஜெபங்களை மோட்சத்தை வந்தடைகிற தூபத்தைப் போல எனக்கு ஒப்புக்கொடு, ஆன்மாக்களை மீட்கும்படி, அவற்றை எனக்கு ஒப்புக்கொடு, அவற்றை என் புனித இருதயமாகிய சூளையில் நான் தள்ளும்படி, எனக்கு அவற்றை ஒப்புக்கொடு, உங்கள் ஒவ்வொருவரையும் அன்பின் சூளையின் உயிருள்ள தீப்பந்தமாக்க நான் விரும்புகிறேன்; இப்போது என்னைக் கனப்படுத்து, அன்பிற்காக அன்பைக் கொண்டு நற்செய்தி அறிவி; வா, என்னைப் போற்று; அசுத்தமும் ஈனமுமான என்னைக் கண்ணோக்கி என்னை உணர்த்தியதற்காக ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக. இறந்தோரிலிருந்து என்னை எழுப்பியதற்காக ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக. நம்மைத் தீமையிலிருந்து விடுவிக்கும்படி இறங்கி வந்து, நம் வரைக்கும் குனிவதற்காக இறைவன் ஸ்துதிக்கப்படுவாராக. தம் குழந்தைகளின் மீது தாம் கொண்டுள்ள தயவிரக்கத்திற்காக ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக. ஆமென். என்னிடமிருந்து உணவுகொள்; வா, நாங்கள், நாம்? ஆம், என் ஆண்டவரே.