வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 49. அக்டோபர் 6, 1987 நான் வறியவளாக உணர்ந்தேன், வறியவளாகவே இருக்கிறேன். நான் என் அறியாமை மற்றும் புரிந்துகொள்வதின் மந்தநிலை காரணமாக கடவுளை மகிழ்விக்கவில்லை. நான் இந்நிலையே மகிழ்ச்சியாய் இல்லை. அவரது படைப்புகளிலேயே "இதுவரையிலும்" அதிக இழிவானவளாக இருக்கிறேன் என்று அவர் என்னைப் பற்றிச் சொன்னது மிகச்சரியானதே. இப்போது இது எப்படித் தொடங்கியது என்பது பற்றிப் பேசுவதை நான் வெறுக்கிறேன், ஏனெனில் நான் என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறேன். இது வெறுக்கத்தக்கது, மிகவும் வெறுக்கத்தக்கது. ஆனால் நண்பர்களும் மக்களும் இது எப்படித் தொடங்கியது என்பது பற்றிக் கேட்க விரும்புகிறார்கள். ஆகவே நான் அதை விளக்கக் கடமைப்பட்டிருந்தேன். எவ்வளவு அதிகமாக அதை நான் விளக்கினேனோ, அவ்வளவுக்கு ஒவ்வொரு முறையும் என்னைப் பற்றி ஏதாவது சொல்வதை இழிவானதாக நினைப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எந்த அளவுக்கு எனில், இப்போது முதல் அது எப்படித் தொடங்கியது என்று நான் விளக்கமாட்டேன். இவ்வாறு என்னைப் பற்றிப் பேசுவதை நான் தவிர்ப்பேன் என்று நான் தீர்மானிக்கும்படி அது செய்தது. மற்றவர்களிடமிருந்து அவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளக்கூடும். அவர்கள் வினோத பிரியம் உள்ளவர்களாக இருந்தால், என் பேரில் அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். விசுவாசத்தைக் கொண்டு அவர்கள் வாசிக்க விரும்பினால், கடவுள் அவர்களுக்கு ஒளி தருவார். நான் எனக்கே சாட்சியாக இருக்க மாட்டேன். நான் எல்லாவற்றையும் கடவுளின் கரங்களில் விட்டுவிடுவேன். அவர் முடியாததையும் முடியக்கூடியதாக்குகிறார். ஆகவே இப்போதிலிருந்து நான் அவருடைய பென்சிலாகவும், காகிதமாகவும், அவருடைய காரியதரிசியாகவும், தம்மை நேசிக்கும்படி அவரால் கற்பிக்கப்படுகிற ஒரு காரியதரிசியாகவும் மட்டும் இருப்பேன். மேலும் அவருடைய வார்த்தைகளை எடுத்துக்கொண்டு, அவருடைய எழுத்துப் பலகையாக நான் இருப்பேன். ஆம், உன் மீது என் வார்த்தையைச் செதுக்க என்னை அனுமதித்து, என் எழுத்துப் பலகையாக இரு; என்றாலும், என் வார்த்தை உன் மீது ஆழமாகச் செதுக்கப்படுமாறு மென்மையானவளாக இரு; நான் என்னை மறந்து தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்தார், எனக்கு நினைவூட்டினார், நான் முழந்தாளிட்டேன். வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன், நீயும் நானும் சேர்ந்து, என் சிலுவையைப் பகிர்ந்து கொள்கிறோம்; என் வசுலா, கேள்; நீ என் ஆன்மாவின் நேசத்துக்குரியவளாக இருக்கிறாய்; இதை நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லையா? உணர்ந்துகொள், உன் கடவுளாகிய நான், என் குழந்தையும், என் பூரண நேசத்திற்குரிய மணவாளியுமாகிய உன்னை எப்படி நேசிக்கிறேன் என்பதை உணர்ந்துகொள்; இயேசு தம்மில் என்னைப் பொதிந்து கொள்வதை நான் உணர்ந்தேன். வசுலா, கேள், வானங்கள் எல்லாம் என் கூக்குரல்களை எதிரொலிக்கின்றன, என் ஆசை அசைக்கப்படாததாக இருக்கிறது; அது உன் காதுகளை எட்டி இருந்திருக்க வேண்டும்; இளகிய தன்மையை நான் ஆசிக்கிறேன், நீ இளகியவளாக இல்லை என்றால், எப்படி ஒன்றிணைப்பாய்? நான் என் திருச்சபையை ஒன்றுபடுத்த விரும்புகிறேன், நீ என்னை உணர்வாயா, என் குரலைக் கவனிப்பாயா? என் தேவனே, திருச்சபையின் தலைவர்கள் உம் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ள நீர் ஏன் அனுமதிக்கக்கூடாது? மகளே, நான் அனுமதிப்பேன்; என் திருச்சபையை அலங்கரி; என்னை நேசி, திருச்சபை புத்துயிர் பெறும்! நான் இயேசுவின் அற்புதமான ஒரு உருவத்தை, மகத்துவமுள்ள, மகிமைப்படுத்தப்பட்ட, அழகிய இயேசுவின் உருவத்தைக் கண்டேன். அவர் ஒர் அரசரைப் போல வெற்றியாளராக இருந்தார். தமது உயர்த்திய கரத்தைக் கொண்டு ஓர் அடையாளத்தைக் காட்டினார். உயர்த்திய தம் விரலைக் கொண்டு ஒரு சைகை செய்து கொண்டிருந்தார். வெற்றி. என்று அவர் சைகை செய்வது போல் இருந்தது. அக்டோபர் 8, 1987 இயேசுவா? நான்தான்; இயேசுவே, நம் ஆசீர்வதிக்கப்பட்ட மாதாவைப் பற்றிச் சொல்லப்படுகிற. ஒவ்வொரு குற்றசாட்டிற்காகவும் பரிகாரம் செய்ய நான் விரும்புகிறேன். உமது படைப்புகளால், குறிப்பாக உமது குருக்களால் சொல்லப்படுகிற அனைத்து குற்றமுள்ள சொற்களையும் என்னால் தாங்கிக்கொள்ள இயலாது. அவை ஒவ்வொன்றிற்கும் நான் பரிகாரம் செய்ய ஆசிக்கிறேன். மாதாவுக்கு ஆதரவாக இருக்குமாறு என் தலையைக் கொடுக்கவும் நான் தயாராக இருப்பேன். வசுலா, அந்த குற்றமுள்ள சொற்களைக் கேட்கும்போது அன்பாய் இருக்கிறவர் எவ்வளவு பாடுபடுகிறார் என்பதை நீ புரிந்து கொள்ளும்படி செய்வேன்; வசுலா, ஆண்டவராகிய நான் என் தாயாரை மதித்து வணங்குகிறேன் என்பதை அனைவரும் அறிந்திருப்பார்களாக; என் தாயார் பரலோக இராக்கினியாக இருக்கிறார்கள் என்பதையும், அவர்களுடைய தலையில் ஆண்டவராகிய நான் 12 விண்மீன்கள் உள்ள ஒரு கிரீடத்தைச் சூட்டி இருக்கிறேன் என்பதையும் அவர்களை நிந்திக்கிறவர்கள் அறிந்து கொள்வார்களாக; நேசமே, என் தாயார் ஆட்சி புரிகிறார்கள்; இது என் வார்த்தையில் எழுதப்பட்டுள்ளது; நான் என் தாய்க்கு வணக்கம் செலுத்துகிறேன், நான் என் தாயை வணங்குவது போல நீங்களும் அவர்களை மதித்து வணங்க வேண்டும்; நான் உன்னை நேசிக்கிறேன், என் தாயாரும் நானும், இருவரும் உன்னை ஆசீர்வதிக்கிறோம்; ஆண்டவரே, புரொட்டஸ்டன்ட் போதகர், மாமரி எங்கள் பரிசுத்த தாயார் அல்ல என்றும், நாங்கள் அவர்களை வணங்கக்கூடாது என்றும் சொல்லி அவர்களை மறுதலித்தார். நீர் சிலுவையிலிருந்து அதைச் சொன்னீர் என்று நான் அவரிடம் சொன்னபோது, அதை அருளப்பெருக்காகத்தான் நீர் சொன்னீர் என்றும், அவர்கள் எங்களுக்கும் தாயார் என்றோ, நாங்கள் அவருடைய பிள்ளைகள் என்றோ வேதாகமத்தில் எங்கேயும் எழுதப்படவில்லை என்றும் அவர் சொன்னார். ஆனால் மகளே, என் தாயார் உங்களுக்கும் தாயாராக இருக்கிறார்கள் என்றும், நீங்கள் அவர்களுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்றும் நான் மறுபடியும் உனக்குச் சொல்கிறேன்; இது என் வார்த்தையில் எழுதப்பட்டிருக்கிறது, அறியாதவர்களுக்காக நான் அதை மறுபடியும் சொல்கிறேன், வேதாகமம் சொல்கிறது; எங்கே, ஆண்டவரே? திருவெளிபாட்டு ஆகமத்தில் சாத்தான் என் தாயாரைப் பின்தொடர தோல்வியுற்றபோது, அவன் அவர்கள் மீது கடும் கோபம் கொண்டு, அவர்களுடைய எஞ்சிய பிள்ளைகளோடு, அதாவது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, எனக்கு சாட்சிகளாக இருப்பவர்கள் அனைவரோடும் போர் தொடுக்கச் சென்றான் என்று வேதாகமம் சொல்கிறது; எனக்கு உதவி செய்ததற்காக, ஆண்டவராகிய இயேசுவே, உமக்கு நன்றி. வசுலா, உனக்கு முன்பாக நான் எப்போதும் இருக்கிறேன் என்று நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்; என்னுடைய பணிகளை உன்னில் நிறைவேற்றும்படி எப்போதும் சிறியவளாகவே இரு; நான் உன்னை நேசிக்கிறேன்; ஆண்டவரே, நானும் உம்மை நேசிக்கிறேன். உம்மை வாழ்த்துகிறேன். நாம் நாங்கள்? ஆம், ஆண்டவரே. அக்டோபர் 10, 1987 இயேசுவா? ஆம், நான்தான்; ஓ, இயேசுவே, புனித மாமரியை கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை, அதாவது வணங்குவதில்லை என்பதை நான் ஒருபோதும் அறியாதிருந்தேன். மாமரியைப் பற்றி அவர்கள் இப்படி உணர்ந்தார்கள் என்பதையும் நான் ஒருபோதும் அறியாதிருந்தேன். கிறிஸ்தவர்களிடையே இப்படி ஒரு பிரம்மாண்டமான வேறுபாடு இருக்கிறது என்பதை நான் ஒருபோதும் அறியாதிருந்தேன். இது இவ்வளவு மோசமானதாக இருக்கிறது என்பதும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஓ, வசுலா, நீ நினைப்பதை விடவும் இது அதிக மோசமானது! ஓ, இயேசுவே, இது ஏன் இவ்வளவு மோசமாய் இருக்கிறது? ஏனெனில், வசுலா, என் உடல் சிதைக்கப்பட்டுப் பிளவுபட்டிருக்கிறது; என் உடல் ஒன்றிணைக்கப்பட வேண்டுமென நான் ஆசிக்கிறேன்! அவர்கள் இணைந்திருந்தால் நம் பரிசுத்த மாதாவை வணங்குவார்களா? குழந்தாய், அவர்கள் அப்படியே செய்வார்கள்; "அவர்கள் செய்வார்கள்" என்பதற்கு அவர்கள் வணங்குவார்கள், அது அவ்வாறே இருக்கும் என்று நான் புரிந்து கொள்ளலாமா? நான் அவர்களை வளைப்பேன், நான் அவர்களுடைய முழங்கால்களை மடக்குவேன், அவர்கள் என் தாயாரை வணங்கி, அவர்களுக்கு சங்கைச் செலுத்துவார்கள்; சரி, இயேசுவே. சிறியவளே, நான் என் திருச்சபையை உயிர்ப்பிப்பேன்; வா, நாங்கள் நாம்? ஆம், ஆண்டவரே. அக்டோபர் 12,1987 நான் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, விஞ்ஞான சிந்தனைகளை வளர்ப்பதும், எந்தவிதமான ஞான செயல்பாடுகளையும் மறுப்பதுமாகிய விஞ்ஞானப் பத்திரிக்கை ஒன்றைக் கண்டேன். இன்றைய நாட்களில் இயல்புக்கு மேலான ஒவ்வொரு காரியமும் "இயல்புக்கு உட்பட்ட" ஒரு விளக்கத்தைக் கொண்டுள்ளது. இரட்டை ஆள் தன்மை, இஎஸ்பி, ஆழ்மனது, நினைவின் கருத்துத் தூண்டுதல், மனோவசியம், ஒட்டுமொத்த மனோவசியம், அல்லது தன்னிச்சையான மனத்தூண்டுதல். உதாரணமாக, ஐந்து காய வரம் பெற்றவர்களைப் பொறுத்தவரை, தன்னிச்சையான மனத்தூண்டுதல், அதனால் தங்களுக்குத் தாங்களே காயங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் என்ற வார்த்தையைக் கொண்டு இந்த நிகழ்வை விளக்கலாம். மேலும், சிசோஃப்ரேனியா, எண்ணம், செயல் ஆகியவை மாறுபட்டு செயல்படும் மனக்கோளாறு, அல்லது பாலியல் சார்ந்த மனக்குழப்பங்கள் போன்ற வார்த்தைகள். மக்கள் எப்போதும் அறிவு சார்ந்த ஒரு விளக்கத்தைக் கண்டுபிடிக்க விரும்புவதாகத் தோன்றுகிறது. இசையாஸ் போன்ற பெரிய தீர்க்கதரிசிகள் இந்த நாட்களில் இருந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்களது வழக்கு விஞ்ஞானப்பூர்வமாக ஆராயப்பட்டிருக்கும். ஐந்து காய வரம் பெற்ற புனிதர்கள் எல்லோருமே சிசோக்கள், அல்லது தன்னிச்சையான மனத்தூண்டுதலால் தங்களுக்கு தாங்களே காயங்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள், அல்லது ஹிஸ்டீரியா, மிகையான உணர்ச்சிக்கோளாறு, பாதிப்புள்ளவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டிருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, அவர்கள் கடவுளோடு போட்டியிடவும், அவர் எல்லாம் வல்லவர் அல்ல என்று அவருக்கே நிரூபிக்கத் தங்களால் முடியும் என்று நிரூபிக்கவும் முயற்சி செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஓ, கடவுளே, ஏன்? வசுலா, என்னில் விசுவாசம் கொள்ளாதவர்கள் எண்ணற்றவர்களாக இருக்கிறார்கள்; ஆனால் உம்மிடம் நான் ஒன்று கேட்கிறேன். இதை நான் உணர்ந்தே கேட்கிறேன். உம்மை துடைத்து அகற்றிவிட முயல்கிற இந்த எல்லாக் கோட்பாடுகளையும், போதகங்களையும் அழித்துவிடும்படி நான் உம்மிடம் கேட்கிறேன். அவை உம் எதிரிகள். அவை பெருக ஏன் அனுமதிக்கிறீர்? அவற்றை அழித்துவிடும். இல்லாவிடில் அவை எங்கள் விசுவாசத்தை அழித்துவிடும். தயவுசெய்து இதைச் செய்யும். குறிப்பு: என்ன செய்ய வேண்டும் என்று கடவுளுக்கு நான் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். இது என் பலத்திற்கு அப்பாற்பட்டது. கண்டிப்பாக செய்வேன்; நான் சொல்வதைக் கேள், வேதனைப்படாதே, ஒருபோதும் சந்தேகப்படாதே, விசுவாசத்தைக் கொண்டிரு; நேசமே, எழுதுவதில் ஒருபோதும் சோர்ந்து போகாதே; இதற்காகத்தான் நான் வருகிறேன்; நீ அழிந்து போவதை என்னால் பார்க்க முடியாது என்பதால்தான்; வசுலா, இப்போது நீ புரிந்து கொள்கிறாயா? சிறியவளே, நீ வீழ்வதை நான் ஒருபோதும் காணமாட்டேன்; மற்றவர்களின் நிலை என்ன, மற்றவர்களும் வீழ்ச்சி அடைவதையும் நான் விரும்பவில்லை. என்னை நீர் தாங்குவது போலவே அவர்களையும் தாங்க வேண்டுமென நான் விரும்புகிறேன். வசுலா, நான் உங்கள் எல்லோருக்கும் உதவுவேன்; கடவுள் மகிழ்ச்சி அடைந்தவராகத் தோன்றினார். ஓ, இறைவா, உம்மிடம் பல காரியங்களை நான் கேட்பதற்காக என்னை மன்னியும். நான் உணர்ச்சி வசப்படுபவள் என்றாலும் அநீதியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு வெளிப்படையாக இருப்பதற்காக என்னை மன்னியும். குழந்தாய், நான் உன்னை மன்னிக்கிறேன்; நீ விரும்புவதைச் சொல்; சொல்வதற்கு என்னிடம் வேறு காரியங்கள் இருந்தன. இப்போது இருப்பது போலவே, இந்த மக்கள் தங்கள் கடைசி மூச்சு வரை கூட இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிகபட்சம் விளக்கப்படாதது என்ற வார்த்தையின் கீழ் அதைக் கோப்பில் சேர்த்து விடுவார்கள். ஆனால் "இது அல்லது அது கடவுளிடமிருந்து வந்தது" என்று சொல்லவே மாட்டார்கள் என்று நான் உமக்குச் சொல்ல வேண்டும். நான் அவர்களை சம்மதித்து ஏற்றுக்கொள்ளச் செய்வேன்; என் வல்லமை அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது, நான் சர்வ வல்லவர் என்று உங்கள் எல்லோருக்கும் நான் காட்டுவேன்; நீ எங்கிருந்தாலும் அங்கு என் சர்வ வல்லபம் காணப்படும்; எந்த கண்ணும் அதை மறுதலிக்க முடியாது; எந்த மனிதனும் இந்த அடையாளம் என்னிடமிருந்து வருகிறது என்பதை மறுக்க மாட்டான்; குறிப்பு: ஒருநாள் வானத்தில் தோன்றும் அடையாளமாக இது இருக்குமா? நேசமே, அவர்களது கொள்கைகள் அப்போது எப்படி தோன்றும்? குறிப்பு: கடவுள் பதில் கூறவில்லை. அவர்களுடைய விஞ்ஞானிகள் எப்படி உணர்வார்கள்? அவர்களுடைய ஞானத்திற்கு என்ன நிகழும்? அவர்களது ஞானம் என் ஞானத்திற்கு முன்பாக எப்படித் தோன்றுகிறது என்று நான் அவர்களுக்குக் காட்டுவேன்; அவர்கள் ஞானம் என்று நம்புவதை நான் இந்த பூமியிலிருந்து துடைத்து அழித்து விடுவேன்; என் திட்டத்தை முன்னுரைக்க உன்னால் இயலும்படியாக என் வார்த்தைகளை உன் மீது செதுக்கி நான் உன்னை பயன்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்; ஆண்டவராகிய நான் இருக்கிறேன், இருந்தேன், இனி எப்போதும் இருப்பேன்; நான் இல்லாதது போல் நீ என்னை பார்க்கக்கூடாது; நான் இருக்கிறேன்; ஓ, நான் ஆராதிக்கிற நேச தேவனே, இந்த திட்டம் இப்போதே, இன்று அல்லது அடுத்த வாரமே நிறைவேற வேண்டுமென நான் விரும்புகிறேன்! வசுலா, நான் தொடங்கிய எல்லாவற்றையும் எப்போதும் நிறைவேற்றியது போலவே என் திட்டத்தை நான் நிறைவேற்றுவேன்; சிறியவளே, நாம் ஜெபிப்போம், "நேச தந்தாய், நான் உம்மை நேசிக்கிறேன், நான் உம்மை வாழ்த்துகிறேன், உம் இரக்கத்திற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன்; என்னை முழுமையாக பயன்படுத்த உம்மால் இயலுமாறு என்னை உமக்கு தகுதி உள்ளவளாக்கும், உம் சித்தப்படி என்னை பயன்படுத்தும்; நான் உம்மை நேசிக்கிறேன், ஆமென்;" நேசமிக்கவளே, உன்னை ஆசீர்வதிக்கிறேன், என்னைப் பார்; நான் பார்த்தேன். நீர் புன்னகைத்துக் கொண்டிருக்கிறீர். குறிப்பு: மீதமுள்ளதை எழுத நான் தயங்கினேன். இதை எழுது; நீர் புன்னகைக்கும் போது உம் கன்னக்குழிகளை எனக்குக் காட்டுகிறீர்; நான் உன்னை நேசிக்கிறேன்; ஆண்டவரே, நானும் உம்மை நேசிக்கிறேன். அக்டோபர் 13, 1987 படுக்கையறை கதவருகில் நான் இயேசுவைக் கண்டேன். எழுதும்படியும் ஏதோ ஒரு வகையில் தாம் காத்துக் கொண்டிருப்பது போலவும் அவர் எனக்கு சைகை காட்டிக் கொண்டிருந்தார் என்பதை நான் அறிந்திருந்தேன். நான் வாசலருகில் இருந்தேன், வா, நீ என்னோடு வேலை செய்; சில சமயங்களில் இயேசு என் பகுத்துணர்தல் சரியாக இருந்தது என்று எனக்கு எண்பிக்க விரும்புகிறார். இப்போதிலிருந்து தங்களை ஞானிகள் என்று கூறிக்கொள்வோர் என் வேலைகளில் விசுவாசம் கொண்டு, என்னைப் பின் செல்லும்படியாக இனி வரவிருப்பதை நான் உனக்கு முன்னுரைப்பேன்; மகளே, நான் அநேகரை குணமாக்குவேன்; நேசமாகவே உன்னிடம் திரும்பி வந்து என் வார்த்தையை நிறைவேற்றும்; வசுலா, குறுகிய காலத்தில் இது என்னிடமிருந்து வருகிறது என்பதை நான் உனக்கு மெய்ப்பிப்பேன்; நேசமே, நானே ஆண்டவர், என்னிடம் நீ வருவாய்; நான் சொல்வதைக் கேள்; சில நாட்களுக்கு முன் நான் உன்னிடம் கேட்டிருந்ததை உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்; அது எல்லா இடங்களிலும் அறியப்படும்படியாக என் வார்த்தைகளை பரப்பு; "ஆண்டவராகிய நான் கரபந்தாளை சேர்ந்த என் பிள்ளைகளை நேசிக்கிறேன்;" அவர்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; ஓ, வசுலா, நான் இதற்காக எவ்வளவு ஏங்குகிறேன்; ஆண்டவராகிய இயேசுவே, என் சக்திக்கு உட்பட்டு நீர் எனக்கு தந்திருக்கிற எல்லா ஆதாரங்களையும் கொண்டு நான் முயற்சி செய்வேன். நான் வல்லமையற்றவள். நீரோ சர்வ வல்லபர். இயேசுவே, நீர் எனக்கு உதவுவீரா? நான் உனக்கு உதவுவேன், நான் எப்படி செயலாற்றுகிறேன் என்பதை நினைவில் வை; வசுலா, இன்னும் ஒரு குறுகிய காலத்தில் நான் மேலிருந்து வருகிற ஓர் அடையாளத்தை உங்கள் எல்லோருக்கும் அனுப்புவேன், இது என்னிடமிருந்தே வருகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள், நான் உங்கள் மீது ஒளிவீசுவேன்; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; நான் உங்கள் எல்லோரையும் எவ்வளவோ நேசிக்கிறேன்! நீங்கள் புரிந்து கொள்வதற்கு மேலாக நான் உங்களை நேசிக்கிறேன்; நான் உங்களைப் படைத்தவர்; உங்கள் உருவத்தை நான் என் உள்ளங்கையில் பொறித்திருக்கிறேன் என்று நான் சொல்லவில்லையா? நான் எப்படி உங்களை கைவிட முடியும்? நீர் எனக்குத் தந்த காட்சியைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் பயந்த அந்த தண்டனையைப் பற்றி. அது உன் மீது ஒரு அடையாளத்தை பதிக்குமாறு அதை நீ மறுபடியும் காணுமாறு நான் செய்வேன்; குறிப்பு: ஏப்ரல் 27, 1987. செப்டம்பர் 1, 1987. செப்டம்பர் 7, 1987. செப்டம்பர் 10, 1987. அக்டோபர் 3, 1987 ஆகிய நாட்களின் செய்திகளை காண்க. மேலும், ஆண்டவரே, அதை தவிர்க்க எங்களுக்கு உதவும். இதை எங்களுக்கு செய்ய நீர் விரும்பவில்லை. இதில் உமக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை என்பது எனக்கு தெரியும். என்ன செய்வதென்று எனக்குச் சொல்லும். வசுலா, உண்மைதான்; உங்களைத் தண்டிப்பதில் நான் எந்த இன்பமும் காண்பதில்லை, என் படைப்பு நேசத்திடம் திரும்பி வரவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்; மிகப் பிரம்மாண்டமான பரிகாரங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன; மற்றவர்களுக்காகப் பரிகாரம் செய்யக்கூடியவர்கள் எல்லோரும் பரிகாரம் செய்யுங்கள்; என் படைப்பு மாற வேண்டியுள்ளது; மகளே, என் படைப்பு கற்றுக்கொள்ளவும், என் ஞான வேலைகளில் விசுவாசம் கொள்ளவும் வேண்டியுள்ளது; என் படைப்பு என்னை எல்லாம் வல்லவர் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது; என் குருத்துவ ஆன்மாக்கள் இன்றைய என் ஞான வேலைகளை மறுதலித்துக் கொண்டிருப்பது எவ்வளவு தவறானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; இருந்தாலும், ஏற்றுக் கொள்கிறவர்கள் பலர் இருக்கிறார்களே. ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள், அவர்களிடம் தான் நான் பேசுகிறேன்; என் உடலை வெட்டி பிரித்து உள்ளவர்களிடமும் நான் பேசுகிறேன்; மகளே, என்னை நம்பு; என் சரீரம் சிதைக்கப்பட்டிருப்பதால் என் நீதியின் கிண்ணம் நிரம்பியுள்ளது; நான் அவர்களை இனியும் தண்டியாமல் விடமாட்டேன்; வசுலா, இன்னும் சற்று அதிக நேரம் நான் உன்னை பயன்படுத்த என்னை அனுமதி, நான் விரைவில் என் விளைச்சலைச் சேகரிப்பேன்; நேசமிக்கவளே, வா; ஆண்டவரே, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக. அக்டோபர் 15, 1987 நான் துன்புறுத்தப்பட்டது போல நீயும் துன்புறுத்தப்படுவாய், நான் உன்னைத் தாழ்த்துவேன் வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன், நேசத்தின் காரணமாக நான் உன்னைக் கண்காணிப்பேன்; நானே உன்னை வழிநடத்துவதால் உன் ஆத்துமத்திற்கு எது நல்லது என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆடம்பரத்தின் மீது உனக்குள்ள நாட்டத்தை துடைத்து அகற்றும்படியாக இந்த தவத்தை நான் உனக்குத் தருவேன்; ஆண்டவராகிய நான், உன் ஆன்மா எதிலும் குறைவுபடாமல் பார்த்துக் கொள்வேன்; உன்னை நான் எப்பொழுதும் கண்காணிப்பேன்; என் இறைவா, எனக்கு உதவுவதற்காக உமக்கு நன்றி. இப்போது நான் உன்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன், ஆனால் இன்னும் கொஞ்ச காலத்தில் நீ விடுவிக்கப்படுவாய், என் கரங்களில் நீ இருப்பாய்; மகளே, நான் உங்கள் மத்தியில் உடலோடு இருந்தபோது என் வாழ்வு வெறும் துன்பங்களையும், பரித்தியாகங்களாகவும், கடும் வேதனைகளாகவும், துயரங்களாகவும், மட்டுமே இருந்தது; எனக்கு ஓய்வே இருக்கவில்லை; வசுலா, இந்தச் செய்திக்காகவே நான் உன்னை வளர்த்து வந்திருக்கிறேன்; என் மலரே, நீ கடைசி வரைக்கும் என்னோடு சேர்ந்து என் சிலுவையைச் சுமக்க வேண்டும்; நான் அளவற்ற விதமாக உன்னை நேசிக்கிறேன்; ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன். நான் உருக்கப்படுவதை நீர் விரும்புகிறீர் என்றால், நான் உம் சித்தத்தை நிறைவேற்றுவேன். உன்னை நான் விரும்புகிறபடி உருவாக்குமாறு, இளகியவளாக இரு; சிறியவளே, என்னைப் பற்றி பேசு; இயேசு ரோட்ஸ் தீவில் உள்ள கிரேக்கர்களை குறித்து பேசுகிறார். கிரேக்கர்கள் கேட்பதில் மிகுந்த ஆவல் உள்ளவர்கள், எளிதாக தங்கள் செவிகளை திறப்பவர்கள். அக்டோபர் 16, 1987 வசுலா, நான் எப்போதும் என் குறிக்கோள்களை அடைகிறேன்; வா, நான் உன்னிடம் சொல்கிறேன்; ஒருநாள் பூமியில் உள்ள என் இராஜ்ஜியம் மோட்சத்தில் உள்ள என் இராஜ்ஜியத்தைப் போல் இருக்கும்; குறிப்பு: திருச்சபை. என் திருச்சபை ஒன்றிணைக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்படும், ஏனெனில் என் பக்தி உள்ள மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள்; என் கரத்தால் உயர்த்தப்பட்டு, என் இரக்கத்தால் சுத்திகரிக்கப்பட்டு, என் திருச்சபை ஒன்றாய் இருக்கும்; ஆண்டவரே, உம் ஆசைகள் உண்மையாகக் கடவது. எங்களில் பலர் இதை ஆசிக்கிறோம்; --உம் ஆசைகளை புரிந்து கொள்ள உதவி தேவைப்படுவோருக்கு ஒளியூட்டும்.