வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 62. பிப்ரவரி 10, 1988 வசுலா, நான் சொல்வதைக் கேட்டு எழுது; சரி, ஆண்டவரே. நான் வார்த்தையானவராக, ஆல்ஃபாவும் ஒமேகாவுமாக, தொடக்கமும் முடிவுமாக இருக்கிறேன்; நான் வாழ்வின் குணப்படுத்தும் திரவ சாரமாக, அன்பின் ஊற்றாக இருக்கிறேன், என்னிடமிருந்தே அனைத்தும் இருத்தலைப் பெற்றுக் கொள்கிறது; உங்களை இரட்சிப்பதற்காக நான் உடலோடு பூமியின் மீது இறங்கி வந்திருக்கிறேன்; மகளே, நான் சிலுவையின் மீது இருந்து அருளப்பனிடமும், என் தாயிடமும் சொன்ன வார்த்தைகளைப் பற்றி என் திருச்சபையில் ஏகப்பட்ட குழப்பம் இருக்கிறது; மற்ற எல்லாவற்றிற்கும் முன்பாக, ஆண்டவராகிய நான் எப்படி என் அன்னையை பரலோக ராக்கினியாக முடிசூட்டியிருக்கிறேன் என்று நான் உங்களுக்கு நினைவுபடுத்துவேனாக; ஆண்டவரே. வசுலா, சொல்; கடவுளாக உம்மை அறிமுகப்படுத்தியபடி நீர் வந்திருக்கிறீர், அதன்பின், உம் பரிசுத்த அன்னை என்று இருமுறை சொன்னீர். ஆண்டவரே, இப்போதுதான் புனித மாமரி உம் தாயார் என்று நீர் அறிவித்தீர். இவ்வாறு கடவுளின் அன்னை என்ற பெயரை நீர் உறுதிப்படுத்தி இருக்கிறீர். ஆண்டவரே, நீரே இப்படிச் சொல்லியிருக்கிறீர்! ப்ரோடெஸ்டன்ட் சபையினரால் மறுக்கப்படுகிற ஒரு பெயர். மகளே, நான் எவ்வளவாக அக்கலிக்கிறேன், நான் உனக்குக் கற்பித்து வந்தது வீணாகிவிடவில்லை; என் பணிகளை நீ புரிந்து கொண்டிருக்கிறாய் என்பதில் நான் மகிழ்கிறேன்; தொடர்ந்து கற்றுக்கொள்ள பெரும் முயற்சி செய்; இதை அடைந்து கொள்ளும்படி ஜெபி; இதை உணரும் தன்மையை நீ கேட்கிறாய் என்றால், அதை நான் உனக்குத் தருவேன்; வசுலா, மறுபடியும் நான் சொல்வதைக் கேள், என் வார்த்தைகள் அறியப்பட்டிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; இறைவனாகிய நான், என் தாயின் திரு உதரத்தில் வளர்ந்தேன்; படைப்பே, என் அன்னை உன் கடவுளாகிய என்னை போஷித்தார்கள்! நான் அவர்களிடமிருந்து உணவு உட்கொண்டேன்; வார்த்தையானவராக இருக்கிற நான் அவர்களை நேசித்து, அவர்களைக் கனப்படுத்துகிறேன்; வசுலா, தொடக்கத்திலேயே நான் சிலுவையில் அறையப்பட்டது பற்றிய விவரணத்தை நான் உனக்குத் தந்திருந்தேன். குறிப்பு: 1986 நவம்பர் 9ஆம் தேதியின் செய்தியைக் காண்க. என் பார்வை என் தாயின் மீது விழுந்தது, நான் அவர்களைப் பார்த்தேன், எங்கள் இதயங்கள் பேசின: குறிப்பு: வார்த்தைகள் இல்லாமலே புரிந்து கொள்ளப்பட்ட ஒரு காரியம், இயேசுவுக்கும் புனித மாமரிக்கும் இடையில் ஓர் அந்தரங்க இணைக்கம். என் அன்பிற்குரிய குழந்தைகளை நான் உங்களுக்கும் குழந்தைகளாகத் தருகிறேன், நீங்கள் அவர்களுடைய தாயாக இருக்க வேண்டும் என்று நான் சொன்ன நேரத்தை நினைவில் வை; சரி, ஆண்டவரே. ஆனால் சிலுவையில் இருந்து நீர் சொன்னது அருளப்பறை மட்டுமே குறித்தது என்று ப்ரோடெஸ்டன்ட் சபையினர் சொல்கிறார்கள். உம் தாய் விதவையாக இருந்ததால், நீர் உலகில் இல்லாதிருந்தபோது அவர்களை தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார் என்கிறார்கள். மேலும் புனித மாமரி கடவுளின் தாய் இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். என் வசுலா, வேதாகமம் ஒருபோதும் பொய் சொல்வதில்லை; என் ஆண்டவருடைய தாயார் என்ற இந்த வார்த்தைகளை வேதாகமம் கூறுகிறது, எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் துண்டப்பட்டு, இந்த வார்த்தைகளைப் பேசினாள்; எழுது; எல்லா பெண்களுக்குள்ளும் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே, உம்முடைய திரு உதரத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே; என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது எப்படி? சிலுவையில் இருந்து நான் சொன்ன வார்த்தைகள் உங்களில் அநேகர் புரிந்து கொள்வதாகத் தோன்றுவதைவிட மிக ஆழமான பொருளைக் கொண்டவை; குறிப்பு: என் இறைவா, ஏன் என்னை கைவிட்டீர் என்பது போன்ற மற்ற வார்த்தைகளையும் இயேசு குறிப்பிடுகிறார். உங்கள் பரிசுத்த அன்னையாகவும் இருக்கிற என் அன்னையைக் கனப்படுத்துங்கள்; இப்போது என் இருதயத்தில் இளைப்பாறு; என் பிரசன்னத்தை நினைவு கூர்வதன் மூலம் என்னை மகிழ்வி, என் வசுலா, என்னைக் கனப்படுத்து; சரி, என் ஆண்டவரே. பிப்ரவரி 19, 1988 ரோட்ஸ், தந்தாய்? நான்தான்; இவ்வளவு அதிகமான ஆன்மாக்களைச் சந்திக்க என்னை அனுமதித்ததற்காக உமக்கு நன்றி. வழியைத் திருப்பதற்காக உமக்கு நன்றி. என்னை வழிநடத்துவதற்காக உமக்கு நன்றி. என் இறைவா, அவர்கள் குணப்படுத்தப்படும்படியாக நீர் சொல்வதைக் கேட்க அவர்களுக்கு உதவும். வசுலா, என் மீது சாய்ந்து கொள்; என் கரம் உன் கரத்திற்குள் இருக்க, நாம் தொடர்ந்து செல்வோம்; ஓ, இழித்தன்மையின் யுகமே, நீ எவ்வளவு தூரம் போய்விட்டாய்! நான் இல்லாமலே உன்னால் நடக்க முடியும் என்று நம்பும் அளவுக்கு நீ போய்விட்டாய்; நீ தகுதியுள்ளவன் என்று நம்பும் அளவுக்குப் போய்விட்டாய்; சாத்தான் தன் வீண் பெருமையைக் கொண்டு உன்னை போஷிக்க அவனை அனுமதித்து விட்டாய்; வார்த்தைகளுக்கு எட்டாத அளவுக்கு இழிந்தவர்களே, பாவம் நிறைந்தவர்களே, குருடர்களே, உங்களையே நீங்கள் இளைப்பாற அனுமதியாதீர்கள்; விழிப்பாய் இருங்கள், உறங்காதீர்கள், ஏனெனில் காலம் அண்மையில் உள்ளது; என் ஆவியில் வளருங்கள்; நம்பிக்கையோடு என்னை அணுகி வாருங்கள்; என்னை பெற்றுக் கொள்ளும்படி உங்கள் இதயங்களைத் திறங்கள்; உங்களில் பலர் ஜெபிக்கிறீர்கள்; ஆனால் உங்கள் ஜெபங்கள் என்னை வந்தடைவதில்லை; ஜெபிப்பது எப்படி என கற்றுக்கொள்ளுங்கள்; நான் உங்களை உணர்வேனாக; பல ஜெபங்கள் ஒருபோதும் என்னை வந்தடையாமல் பூமியின் மீதே திரும்ப விழுகின்றன; ஆண்டவரே, உதட்டளவு ஊழியத்தை நீர் குறிப்பிடுகிறீரா? ஆம், உதட்டளவு ஊழியத்தையே நான் குறிப்பிடுகிறேன்; நீங்கள் கற்றுக்கொள்வதற்கு நான் என் வார்த்தையைத் தந்தேன், இப்போது என் வழிகளை உங்களுக்கு நினைவுபடுத்தும்படி, என் செய்தியை நான் உனக்குத் தருகிறேன்; வந்து கற்றுக்கொள், உங்கள் கொடிய தன்மையின் இடத்தை அன்பால் நிரப்புங்கள்; என் வழிகளை, என் புண்ணியத்தின் வழிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; பிரமாணிக்கமின்மையின் யுகமே, நீ ஏன் என் தெய்வீக வழிகளை மறந்துவிட்டாய்? உன் இரட்சகராகிய என்னிடம் திரும்பி வா; நான் உன்னைக் கைவிட்டு விடவில்லை, உன்னுடைய எல்லா பாவங்களையும் மீறி, நான் உன்னை நேசிக்கிறேன்; என் இருதயம் அன்பு மற்றும் மன்னிப்பின் பெரும் கடலாக இருக்கிறது; பிப்ரவரி 20, 1988 அன்பு உன் அருகில் இருக்கிறது; மகளே, என் கடும் வேதனைகளின் தொடக்கத்தில் என்னை எதிர்கொள்; என் காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது; நான் உன்னில் ஒரு பலியைத் தேடுகிறேன்; தியானி, உபவாசம் இரு; வசுலா, பிரெட்ரிக் இடமிருந்து கற்றுக்கொள், அவளுடைய வழிகள் என்னை மகிழ்விக்கின்றன; குறிப்பு: அவள் உபவாசம் இருக்கும் முறை. என் கடும் துன்பங்களை எப்படிக் கனப்படுத்துவது என்று கற்றுக்கொள், அதன்பின் வந்து சிலுவையின் மீது இருக்கும் உன் இரட்சகரைப் பார்; தியானிப்பதன் மூலம், உபவாசம் இருப்பதன் மூலம் என்னைத் திருப்திப்படுத்து; என் திருக்காயங்களில் வாழ்; நான் சிலுவையில் அறையப்பட்ட சரியான நேரத்தை அவர்களுக்கு வெளிப்படுத்து; உங்கள் மத்தியில் சமாதானம் நிலவுவதாக; ஆண்டவர் சென்ற வருடம் சரியான தேதியை எனக்குத் தந்தார்; ஆர்த்தராக்ஸ் சபையினர் ஆர்த்தராக்ஸ் நாற்காட்டியைக் கொண்டு கடைபிடிக்கிற தேதி. இப்போது உங்கள் மத்தியில் சமாதானம் இருப்பதாக; இப்போது நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள்; வசுலா, இன்னும் அதிகமாக அடிக்கடி என்னைக் கூப்பிடு;என் பிரசன்னத்தை நினைவில் வை; என்னை திருப்திப்படுத்து; நான் உன்னை நேசிக்கிறேன்; ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன். ரோட்ஸ், நான் மீண்டும் ரோட்ஸுக்கு வர கடவுள் என்னை அனுமதித்தார். வெளிப்பாடுகளைப் பற்றி அறிந்திருந்தவர்கள் மற்றவர்களை சந்திக்கும்படி என்னை அழைத்தார்கள். மக்கள் கேட்டு புரிந்து கொண்டு ஆண்டவரின் இரக்கத்திற்காக அவரை ஸ்துதித்தார்கள். பலர் ஆண்டவரிடமிருந்து தனிப்பட்ட செய்திகளை பெற்றுக்கொண்டார்கள். அந்த கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வந்தது. அநேகர் கடவுளைப் போற்றி ஸ்துதித்தபடி அவரிடம் திரும்பி வந்தார்கள். நான் மக்களை சந்தித்து செய்திகள் தந்தபடி என் நாட்களை செலவிட்டேன். மனம் திரும்புதல்களும் குணப்படுத்துதல்களும் அபரிமிதமாய் இருந்தன. கோயில்களையும் சிற்றாளங்களையும் சந்திக்க விரும்பியவர்கள் என்னோடு அதை செய்தார்கள். நாங்கள் நகரத்திற்கு வெளியே குன்றுகளின் மீதுள்ள சிற்றாலயங்களுக்கும் கூட சென்றோம். தந்தை யானி தம் ஆலய வழிபாட்டில் பங்கு பெற்ற அனைவருக்கும் வெளிபாட்டை அறிவித்தார். இது பிப்ரவரி 24 அன்று புனித அணியரோயி கோயிலில் நடந்தது. அதே நாள் பிற்பகலில் நான் புனித நிக்கோலா தேவாலயத்திற்கு அழைக்கப்பட்டேன். அங்கே தந்தை வாசிலி என்னையும் வெளிபாட்டை அறிந்தவர்களும் அதை பின்பற்றியவர்களுமாகிய கூட்டத்தினர் அனைவரையும் சுமார் 12 பெண்கள் செய்தியை பின்பற்றிய அவர்களுடைய கணவர்களும் அப்போது பணியில் ஈடுபட்டார்கள். தம் கோயிலில் செய்தியை அறிவிக்க அனுமதித்தார். பெண்களில் ஒருவர் எட்டாவது குறிப்பு புத்தகத்தில் இருந்து கடவுளின் செய்திகளில் ஒன்றை வாசித்தார். கடவுள் அவர்களில் இப்போது செயலாற்றுவாராக. பிப்ரவரி 24, 1988 ரோட்ஸ், ஆண்டவரைப் போற்றுங்கள்! அன்புக்குரியவளே, நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நான் ஆசீர்வதிக்கிறேன்; தந்தாய், உமக்கு நன்றி. கடவுளுக்கு மகிமை உண்டாவதாக. உம்முடைய பரிசுத்த திருப்பெயர் மீண்டும் மகிமைப்படுத்தப்படுவதாக. ஆம், ஆண்டவரே. நான் உங்கள் எல்லோருக்கும் உதவுவேன்; நான் என் வீட்டை மீண்டும் நிலைநிறுத்துவேன்; என் குழந்தைகளை நான் நேசத்திடம் திரும்பவும் இழுப்பேன், என் புண்ணியத்தின் வழிகளை அவர்கள் மறந்துவிட்டதால், நான் அவற்றை அவர்களுக்குக் கற்பிப்பேன்; நான் என் போதகர்களுக்கு ஞான ஒளி தருவேன், நான் ஒவ்வொரு கதவையும் தட்டி அவர்களுக்கு நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அன்பையும் தருவேன்; நான் என் தோட்டத்தை அலங்கரிப்பேன்; பார்த்தாயா? ஆண்டவரும் இரட்சகரும் ஆனவரே, உம்முடைய முழு அன்பிற்காகவும் இரக்கத்திற்காகவும் நான் உமக்கு நன்றி கூறுகிறேன்.... நீர் இரக்கத்தின் கதவைத் திறந்திருக்கிறீர். நீர் உம்மையே எங்கள் இரட்சகராக ஆக்கிக் கொண்டதற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன்.... யுகமே! ஓ, இழித்தன்மையின் யுகமே, நேரம் வந்துவிட்டது, உன் இரட்சிப்பின் நேரம் அண்மையில் இருக்கிறது; என் திருச்சபை உயிர் பெறும், ஏனெனில் நீதியும், அன்பும், சமாதானமும் உங்கள் மத்தியில் இருக்கும்; என் அரசு உங்கள் கதவுகளின் அருகிலேயே இருக்கிறது! மார்ச் 1, 1988 இயேசுவா? நான்தான்; இயேசு என் அருகில் நின்று கொண்டிருந்ததை நான் கண்டேன். நீ என்னை காணும் ஒவ்வொரு முறையும், என்னைக் கண்டு புன்னகை செய்; ஆம், மலரே, உன் இரட்சகரின் அருகில் தங்கியிரு; வா, நாம் பிதாவிடம் ஜெபிப்போம்; 'பிதாவே, இதோ உம் பார்வையில் நீர் கொண்டிருப்பதை பாரும். இழித்தன்மை உம் பார்வைக்கு முன்பாக இருக்கிறது, தந்தாய், என்னை மன்னியும், ஏனெனில் அந்த எல்லா வரப்பிரசாதங்களும் தரப்பட்டிருப்பதற்கு நான் தகுதியற்றவள், நான் எதற்கும் தகுதி பெறாதவள், ஏனெனில் நான் ஒன்றுமில்லாமையாக இருக்கிறேன்; உமது ஆங்கான இல்லாத நன்மைத்தனத்தில் இந்த ஒன்றுமில்லாமை உம்மீது சாய்ந்து கொள்ள அனுமதியும்; அன்பிற்குரிய பிதாவே, என் ஈனத்தன்மையையும் ஒன்றுமில்லாமையையும் மீறி நான் உம்மை நேசிக்கிறேன், நான் பணி செய்யக்கூடியவளாக இருந்து உம் வரப்பிரசாதத்தைக் கொண்டு நிறைவேற்றப்பட வேண்டியவற்றை எல்லாம் நிறைவேற்றும்படியாக உமது பலம் எனக்குத் தேவையாய் இருக்கிறது; ஆமென்; ஆ, வசுலா, என் எல்லாப் புண்ணியங்களையும் தேடு, அவற்றைப் பின்பற்றி, அவற்றில் வளர்வாயாக. ஆண்டவராகிய நான் ஒன்றும் இல்லாமையையும் மீறி உன்னை நேசிக்கிறேன்; எல்லா நேரங்களிலும் என் மீது சாய்ந்துகொள், நான் உன்னை முழுவதுமாகத் தாங்கிக் கொள்வேன்; என்னை நம்பி இறுதிவரை நான் உன்னை வழிநடத்த கண்மூடித்தனமாக என்னை அனுமதி; சில சமயங்களில் நீ சுமக்கும்படி நான் என் சிலுவையை உன் தோள்களின் மீது வைப்பேன்; நானும் நீயும், நீயும் நானும், நான் உன்னில் இளைப்பாறுவேன், நீ என்னில் இளைப்பாறுவாய்; நான் முழு பிரமாணிக்கமுள்ளவர், ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன், ஒருபோதும் என் பணிகளுக்கு உன் ஆன்மாவை முழுமையாக அர்ப்பணிப்பதன் மூலம் என்னை அதிகமாக மகிழ்வி, நீ உன் வார்த்தைப்பாட்டுக்கு, உன் பிரமாணிக்கத்தின் வார்த்தைப்பாட்டுக்கு உண்மையுள்ளவளாக நிலைத்திருக்க வேண்டும்; ஆம், ஓ, இந்த வார்த்தைகளை உன்னிடமிருந்து எவ்வளவாக நான் தேடினேன், இந்த வார்த்தைகளை உன்னிடமிருந்து கேட்க நான் ஏங்கினேன், ஆண்டவரே, என் வார்த்தைப்பாட்டை காப்பாற்ற எனக்கு உதவி அருளும். நான் என்னை நம்பவில்லை! அஞ்சாதே, உன் வாக்குக் கெட்டாதப் பலவீனத்தை நான் அறிந்திருப்பதால், நான் உனக்கு எப்போதும் நினைவுபடுத்துவேன்; நீ உடைந்து போகக்கூடியவள், ஆனால் நான் என் பலத்தைக் கொண்டு உன் பலவீனத்தை நிர்மூலமாக்குவேன்; என் பிரசன்னத்தை நினைவில் கொள்; நாங்கள் எல்லா சமயங்களிலும் என்றென்றும் நித்திய காலமும் நேசி, நம்பு, விசுவாசம் கொண்டிரு; ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகிய நான் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டேன்; மார்ச் 2, 1988 நான் அந்த மூன்று ஜெபங்களை ஜெபித்தேன். ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக! கடவுளுக்கு மகிமை உண்டாவதாக!
இயேசுவா? அன்பு இங்கே இருக்கிறது; என் திருப்பெயரை மகிமைப்படுத்து; என் திருச்சபைக்கு உயிரூட்டு; என் இல்லத்தை மீண்டும் ஸ்தாபி; என் தோட்டத்தை அழகுபடுத்து! தீமை செய்வதை நிறுத்து! திருச்சபை உயிர் பெறும், சமாதானம் உங்கள் எல்லோர் மத்தியிலும் இருக்கும்; வசுலா, நீ உத்தமமானவளாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்...... மாசற்றவளாக இரு; குழந்தைகளின் மாசற்றத்தனத்தின் காரணமாக நான் அவர்களை நேசிக்கிறேன்; அவர்களிடம் கெடுமதி இல்லை; வா, வந்து உன்னை மறுதலித்த எல்லோரையும் மன்னித்துவிடு; அவர்களுடைய பாவம் கடந்து போய்விட்ட நீர் திறல் போல் இருப்பதாக; மலரே, கல்லான இருதயம் உள்ளவர்களை ஆயுதமற்று போக செய்யும்படி உன் ஆன்மாவை நான் அழகுபடுத்துவேன்; கொடு! கொடு! அவர்களுக்குக் கொடு! தீமையின் இடத்தை அன்பால் நிரப்பு; என் பிரதிபலிப்பாக இரு! ஓ, இராயப்பா, என் இராயப்பா, என் ஆன்மாவின் அன்புக்குரியவனே, என் மந்தையை நல்லிணக்கத்திற்கு வழிநடத்து; குறிப்பு: இராயப்பர் இன்றைய பாப்பரசரின் அடையாளம். இந்த பெயரை இயேசு கூறும்போதெல்லாம், அவருடைய இருதயம் மிகுந்த அன்பால் விரிவடைவதை நான் உணர்கிறேன். இராயப்பா? என்னைப் பார்; அன்பனே, என் முகத்தைப் பார்; உன் ஆண்டவராகிய என்னைக் கனப்படுத்து; அன்பும், பிரமாணிக்கமும் இப்போது சந்திக்கின்றன; நீதியும் சமாதானமும் இப்போது உன் வாசலிலேயே இருக்கின்றன; என்னை பற்றிக் கொள்கிற அனைவரையும் நான் ஆபத்திலிருந்து விடுவிக்கிறேன்; நான் உன் அடைக்கலமாக இருக்கிறேன்; இராயப்பா, உன்னை சுற்றிலும் பார், நீ காணவில்லையா? நீ கவனிக்கவில்லையா? காயின்கள் என் ஆபேல்களைக் கொள்வதைக் கவனித்து என் கண்கள் சோர்ந்து போயின; ஏனெனில் நான் அவர்களுக்குச் செவிகளைத் தந்திருக்கிறேன், ஆனால் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள்; நான் அவர்களுக்குக் கண்களைத் தந்திருக்கிறேன், ஆனால் அவர்கள் பார்க்க மறுக்கிறார்கள்; அவர்களுடைய இதயங்கள் கரடு முரடாகிப் போய்விட்டன; அவர்கள் என் மகிமையை அல்ல, தங்கள் மகிமையையே தேடுகிறார்கள் ஓ, இராயப்பா, நான் எவ்வளவாக சோர்ந்து இருக்கிறேன்.... அன்பைக் காணவில்லை.... இராயப்பா, என்னை மகிமைப்படுத்து! அன்பனே, என்னை மகிமைப்படுத்து; இயேசு அன்பு மிக்கவராக இராயப்பரிடம் பேசினார். நம் ஆண்டவரின் குரல் மிகவும் துயரமாகவும், சோர்வுற்றதாகவும் ஒலித்தது. ராயப்பரிடம் பேசும்போது, அவரை சார்ந்திருக்க தம்மால் முடியும் என்று அவர் அறிந்திருந்தது போல, அவருடைய குரல் ஒலித்தது. மார்ச் 3, 1988 வசுலா, என் திருச்சபையை அழகுபடுத்து; வெறுங்காலோடு என் ஆளுகைக்குள் நுழை; குறிப்பு: அதாவது, தாழ்ச்சியோடும் எளிய மனதோடும் என் செய்தியை உன்னோடு சுமந்து செல்; இடமோ, வளமோ பாராதே, என்னோடு நேராக இராயப்பினிடம் சென்று, அவனிடம் என் செய்தியைக் கொடு; குறிப்பு: கடவுளின் நேரத்தில் இதை நான் செய்தேன். சாத்தியமே இல்லாத ஒரு வேலையை கடவுள் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார். இது எப்படி நடக்கும் என்பதை நான் அறியாதிருந்தேன். இருந்தாலும், இதுவும் கூட பிற்பாடு நடந்தேறியது. நான் எல்லா நேரமும் உன் அருகில் இருப்பேன்; ஆண்டவராகிய நான் எப்படி இருக்கிறேன் என்பதை நான் அவர்களுக்கு நினைவூட்டுவேன்; குழந்தாய், என் உத்தரவுகளைப் பின்பற்று; சரி என் இறைவா. என்னில் விசுவாசம் கொண்டிரு, நான் எப்படிப் பணியாற்றுகிறேன் என்பதை நினைவில் கொள்; திருச்சபை உயிர் பெறும், உன் தந்தையின் இல்லத்திற்குள் நீ அவர்களைக் கூட்டிச் சேர்த்து, அவர்களை ஆசீர்வதிப்பாய், நான் தீமையிலிருந்து அவர்களை விடுவிப்பேன்; மகா உன்னதராகிய நான் உங்கள் மத்தியில் இருப்பேன்; என் வாயிலிருந்து நீ பேசுவாய்; என்னை விரும்புகிறவர்களாகிய நீங்கள் எல்லோரும் உங்கள் கடவுளை அணுகி வந்து, என் கனியில் உங்கள் பங்கை எடுத்துக் கொள்ளுங்கள்; குறிப்பு: அதிர்ச்சி அடைந்து நான் நடுங்கிக் கொண்டும், அழுது கொண்டும் இருந்தேன். என்னை நேசித்து, என் வழிகளை பின்பற்றுகிற அனைவரும் வாருங்கள்; வந்து, உங்கள் பங்கைப் பெற்றுக்கொள்ளுங்கள்; என் கனியை உண்ணுங்கள், அப்போது இன்னும் அதிகம் உண்ண பசியாய் இருப்பீர்கள்; தாகமாய் இருப்பவர்கள் எல்லோரும் வாருங்கள், என்னை அருந்துங்கள், அப்போது இன்னும் அதிகம் பருக; நீங்கள் தாகமாய் இருப்பீர்கள்; என் புண்ணியங்களை அனுசரிக்கிற யாரும் ஒருபோதும் வெட்கமடைய மாட்டான்; நான் விரும்புகிறபடி செயல்படுகிறவன் யாராயினும், அவன் என்னை மகிமைப்படுத்துவான்; ஆ, வசுலா, நான் எப்போதாகிலும் உன்னை கைவிடுவேனா? மீண்டும் கேள், நான் என் தோட்டத்தை அழகுபடுத்த போகிறேன்; என் பழத்தோட்டத்திற்கு நான் நீர் பாய்ச்சுவேன்; என் மலர் பாத்திகளுக்கு நான் நீர் பாய்ச்சி, அங்கே ஒழுங்கு பிரகாசிக்கச் செய்வேன்; ஒவ்வொரு வார்த்தையும் என்னால் எழுதப்படும்; ஆண்டவராகிய நான் என் ஆவல்களுக்காகவும், என் மகிமைக்காகவும், என் பரம ரகசியங்கள் பற்றிய அறிவில் உன்னைத் தூண்டினேன்; அன்பிற்குரிய தந்தையே, நான் அளவற்ற விதமாக உம்மை நேசிக்கிறேன். நான் நேசிக்கிறேன்! வா, நினைவில் கொள், நாங்கள் நாம்....