வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 59. ஜனவரி 18, 1988 ஆண்டவரே, அனைத்தும் உம் சித்தத்திலிருந்தே வருகிறது என்றால், நடப்பது எதுவாயினும், அது நீர் சித்தம் கொண்டதாலேயே நடக்கும் என்றால், உம் செய்தி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென நீர் விரும்புகிறீர் என்றால், அதை நீர் விரும்புகிறீர் என்பதால், அதைப்பற்றி அறிவிக்கப்படுபவர்கள் அதை ஏற்றுக்கொள்ளும்படி நீர் ஏன் செய்வதில்லை? ஏன் என்று எனக்குப் புரியவில்லை. நீர் ஏன் அவர்களுக்கு ஞான வெளிச்சம் தருவதில்லை? ஓ மகளே, அன்புக்குரியவளே, நான் உன்னை குணமாக்கி, உன்னை மனம் திருப்பி இருக்கிறேன் என்பதற்காக அகமகிழ்ந்து களிகூரு; என் இரக்கம் எனக்கு அஞ்சுவோரைக் காலகாலமாகச் சென்றடைகிறது, ஆனால் என்னைக் குத்தி ஊடுருவும் முட்களுக்கோ, இசையாசின் இறைவாக்கு மீண்டும் ஒருமுறை நிகழ்கிறது: 'நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும், கருத்தில் கொள்வதில்லை; உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டே இருந்தும், உணர்வதில்லை; இம்மக்களின் இதயம் கொழுத்துப் போய்விட்டது; காதுகள் மந்தமாகிவிட்டன; இவர்கள் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே, கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறாமலும் இருக்கின்றனர்; என்னால் மனம் திருப்பப்படாமலும், குணமாக்கப்படாமலும் இருக்கின்றனர்; மகளே, நித்தியத்திலிருந்தே அவர்களுடைய பிடிவாதத்தை நான் தீர்க்கதரிசனமாகக் கண்டிருந்தேன்; இன்றைய தேவ பராமரிப்பின் பணிகளை அவர்கள் மறுதலிப்பது, அவர்கள் தங்கள் சலுகைகளை இழக்கும்படி செய்திருக்கிறது; வசுலா, உன்னில் நான் மிக அதிகமாகத் தேடுபவைகளை அடைந்து கொள்ள நூற்றுக்கணக்கான தடவைகள் ஜெபி, அவை அன்பு, விசுவாசம், மற்றும் நம்பிக்கை ஆகியவை ஆகும்; குறிப்பு: குருடும் செவிடுமானவர்கள் உண்மையைப் பகுத்துணரும்படி ஜெபத்தில் ஆண்டவரிடம் கேட்க வேண்டும். தாங்கள் உண்மையுள்ளவர்கள் என்று நிரூபிப்பவர்களை நான் ஒளிர்விக்கிறேன்; ஞானிகளிடம் நேர்மை குறைவுபடுவதால், நான் அவர்களை ஒளிர்விக்க மாட்டேன்; ஆண்டவராகிய நான் தாழ்ச்சியுள்ளவர்களையும், தாழ்ந்தவர்களையும் தேடுகிறேன்; நீ எவ்வளவுக்கு சிறியவளாக இருக்கிறாயோ, அவ்வளவுக்கு என் மகா மேன்மை உன்னை நோக்கிக் குனியவும், உன்னை அடைந்து, உன்னைத் தூக்கிக்கொள்ளவும் நாட்டம் கொள்ளும்; நீ எவ்வளவுக்கு சிறியவளாகவும், அற்பமானவளாகவும் இருக்கிறாயோ, அவ்வளவுக்கு என் புனித இருதயத்திற்குள் ஊடுருவுவது உனக்கு அதிக எளிதாக இருக்கும்; வசுலா! உன்னால் பார்க்க முடிகிறதா? இயேசு ஒரு நீண்ட நடைபாதையின் காட்சியை எனக்குத் தந்தார். ஒரு பிரம்மாண்டமான பாறை அதை இடைமறித்துக் கொண்டிருந்தது. அதற்கு அப்பால் ஒரு பலமுள்ள பிரகாசமான ஒளி பின்னால் இருப்பதை என்னால் காண முடிந்தது. ஆனால் அந்த ஒளி இந்த நடைபாதைக்குள் நுழையாதபடி அந்த பாறை தடுத்துக் கொண்டிருந்தது. அவர்கள் என்னை அடையும் பாதையை மறிக்கிறவர்கள், அவர்களுடைய பிரம்மாண்டமான தன்மை என்னைத் தேடுபவர்கள் எல்லோருக்கும் ஒளியை மறைக்கிறது; ஆண்டவராகிய நான் அவர்களுக்குச் சொல்கிறேன்; உங்களுடைய மகத்துவங்களை நான் சகித்துக் கொள்ள மாட்டேன்; உங்கள் ஆணவம் என்னைச் சோர்வுறச் செய்கிறது; என் கிண்ணம் நிறைந்திருக்கிறது; காலம் வரும்போது, நான் அவர்களை ஒருவர் பின் ஒருவராக மனம் திரும்ப அழைப்பேன்; பிரமாணிக்கம் இல்லாதவர்களுக்கு, ஐயோ கேடு, அவர்கள் என்னை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்! இயேசுவே, நான் புரிந்துகொள்ளத் தொடங்குவது என்னவென்றால், தாழ்மையும் தாழ்ச்சியும் உள்ளவர்களாகிய உம்முடைய உண்மையான சீடர்கள் உமது வெளிப்பாட்டால் அகமகிழ்வார்கள். ஆனால் உமக்கு பிரமாணிக்கம் இல்லாதவர்களாக இருக்கிற பலர் இந்த வெளிப்பாட்டை விரும்ப மாட்டார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது சிலருக்கு நன்மையாகவும், மற்றவர்களுக்குத் தீமையாகவும் இருக்கிறது. ஆம், வசுலா, இப்போது உனக்கு தெரிந்திருக்கிறது; குறிப்பு: இயேசு சோகமான குரலில் இதைச் சொன்னார். புனித மாமரியே, நான் இழிவானவள் என்றாலும், நீர் என் ஆதரவாக இருப்பீரா? என்னை ஊக்கப்படுத்தும் திருச்சபையின் அதிகாரிகளில் நான் சொல்வதைக் கேட்கக்கூடிய ஒருவர் இருக்க மாட்டாரா? ஒரே ஒருவர்? வசுலா, என் மகளே, இயேசு உன்னை நேசிக்கிறார், நான் உன்னை நேசிக்கிறேன்; ஆசீர்வதிக்கப்பட்டவளே, இயேசுவும் நானும் இப்போது உனக்கு உதவி செய்வோம்; அவருடைய உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக ஜெபி; சரி அம்மா, சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள். மலரே, நான் உனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன்; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன், ஒருபோதும் சந்தேகப்படாதே; எனக்கு உதவி செய்வதற்காக உங்களுக்கு நன்றி. என் குழந்தாய், பல துன்ப சோதனைகளைத் தாங்கிக்கொள்ள அன்பு உனக்கு உதவும்; இயேசு உனக்குத் தமது பலத்தைத் தருவார்; நான் உன்னை எப்போதும் ஊக்கப்படுத்துவேன்; அஞ்சாதே, நான் உன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்; குறிப்பு: என்னை அதைரியப்படுத்த இடைவிடாமல் முயன்று கொண்டிருக்கிற சாத்தானுக்குப் பயப்பட வேண்டாம் என்று புனித மாமரி இங்கே குறிப்பிட்டார்கள். அன்பிற்குரிய ஆன்மாவே, நான் ஆண்டவர், இப்போது என்னைக் கனப்படுத்து, என்னோடு நட, நான் என் ஆசைகளை நிறைவேற்ற உனக்கு என் பலத்தைத் தருவேன்; நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்! உன் ஆன்மா ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன்; என் சமாதானம், இரக்கம், அன்பு, மற்றும் நீதி ஆகியவற்றின் செய்தி இப்போது உங்கள் மத்தியில் இறங்கி வருகிறது; என்னை மகிமைப்படுத்துங்கள்; என் அன்பு என் நீதியிலிருந்து உங்களைக் காப்பாற்றும்; என் படைப்பு மீண்டும் என் பேச்சைக் கேட்கவில்லை என்றால், உங்களுக்கு நேரிட இருக்கிற நீதியிலிருந்து என் அன்பு உங்களைக் காப்பாற்றும்; நான் என் மற்றற்ற இரக்கத்தினால் உங்களை எச்சரிக்கும்படி வருகிறேன்; என் படைப்பு மனம் திரும்பி என்னை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; பாத்திமா தேவாலயம் கரபந்தாலின் மீதான அவதூறுகள் மற்றும் மறுதலிப்புகளுக்காக உரத்த குரலில் அழுகிறது; என் ஆன்மா மீண்டும் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறது; பாத்திமாவில் நான் கொண்டிருந்த அதே துயரம் இது; என் ஆவி அவர்களிலும், அவர்கள் என்னிலும் இருக்கும்போது, இப்போது அவர்கள் எப்படி சந்தேகப்பட முடியும்? பாத்திமாவில் என் செய்தி அலட்சியம் செய்யப்பட்டது, மிகவும் தாமதமாகிவிட்ட பிறகும் அவர்கள் என் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; பேசுபவர் ஆண்டவராகிய நானே-- ஒருபோதும் சந்தேகப்படாதீர்கள்; இருளில் நடக்கிற ஆன்மாக்களுக்காக ஜெபியுங்கள்; ஓ இராயப்பா, குறிப்பு: இயேசு பாப்பரசர் இரண்டாம் அருள் சின்னப்பரோடு தாம் நேரடியாக பேசிக் கொண்டிருப்பது போல திடீரென அவரை நோக்கி திரும்பினார். என்னால் நியமிக்கப்பட்டு, என்னால் அர்ச்சிக்கப்பட்டவனே, என் கண்கள் ஒருபோதும் உன்னை விட்டு நீங்கவில்லை; இந்த எல்லா வருடங்களிலும் நான் உன்னைக் கவனித்து வந்திருக்கிறேன்; சகோதரனே, எனக்கு சொந்தமானவனே, நான் இப்போது உன் வாசல் அருகில் இருக்கிறேன்; நான் இப்போது கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறேன்; நீ என்னை உள்ளே அனுமதிப்பாயா? என்னை மறுதலிக்காதே, இராயப்பா; நான் உன்னை நேசிக்கிறேன்; நான் சொல்வதைக் கேள்; என் குரலைக் கேள்; இது ஆண்டவராகிய நான்தான்; ஆன்மாவே, உன் மீது சமாதானம் இருப்பதாக, களிகூருவாயாக! நான் என் இரத்தம் வடிக்கும் திருவுடலை ஒன்றுபடுத்த வந்திருக்கிறேன், நான் என் ஆட்டுக்குட்டிகளை ஒன்று கூட்ட வந்திருக்கிறேன், நான் என் தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச வந்திருக்கிறேன்; நான் உன் இரட்சகராகிய இயேசு; பார்! குறிப்பு: இயேசு தம் ஆடைகளை விலக்கி, தம் திரு இருதயத்தைக் காட்டினார். அவர் பாப்பரசர் இரண்டாம் அருள் சின்னப்பருக்கு தம் இருதயத்தை காட்ட விரும்புகிறார். பார் இராயப்பா, என் புனித இதயம் மீண்டும் ஒருமுறை மிக அதிகமான முட்களால், நான் நேசிப்பவர்களால் என்னில் குத்தப்பட்டிருக்கின்ற முட்களால் குத்தி ஊடுருவப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! என் ஆன்மா மீண்டும் ஒருமுறை காயப்படுத்தப்படுகிறது; அவர்கள் எங்கள் இருதயங்களை மிதித்து நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள்; குறிப்பு: அவருடைய இதயமும் நம் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையின் இதயமும். எங்கள் இரு இருதயங்களும் மீண்டும் ஒருமுறை இரண்டு முள் வளையங்களால் முடிசூட்டப்பட்டுள்ளன; என் விலா அகலத் திறந்துள்ளது, என் இரத்தம் அதிலிருந்து வெளியே பாய்கிறது; நான் இப்போது உன் வாசல் அருகில் இருக்கிறேன், என்னோடு என் மீட்பின் மறைவான திட்டத்தை நான் சுமக்கிறேன்; அது இங்கே இருக்கிறது; இந்த வெளிப்படுத்தல் என் குரலாக இருக்கிறது; நான் என் முழு இருதயத்தோடும் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன், என் முழு இருதயத்தோடும் நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; ஜனவரி 24, 1988 வசுலா, நான் என் உணர்வுகளை அவருக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்; நான் சொல்வதைக் கேள்; சகோதரனே! ஆன்மாவே! 'எனக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆன்மாக்களை மட்டும்தான் கடவுள் அணுகி வந்து அவர்களை உயர்த்துகிறார்' என்ற கொள்கையை என்றென்றைக்குமாகத் தூர எறிந்துவிடு; நான் பக்தியுள்ள ஆன்மாக்களை மட்டும் அணுகி வருவதில்லை; நான் எந்த வேறுபாடும் காட்டுவதில்லை; ஏன், நான் பாராபட்சம் காட்டுகிற ஒரு கடவுளா? என் வரப்பிரசாதங்கள் பக்தியுள்ள சகோதரிகள் அல்லது சகோதரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன என்று உங்களில் மிக அதிகமானோர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கண்டு என் இதயம் வேதனைப்படுகிறது; என் குழந்தாய், நீயே பார், நான் என் சொந்த மக்களால் எவ்வளவு குறைவாகப் புரிந்து கொள்ளப்படுகிறேன்! இயேசு வருத்தத்தோடு தம் தலையை ஒரு பக்கமாக சாய்த்து, தம் கரத்தைத் தம் இதயத்தை நோக்கி உயர்த்தினார். அவர் சற்று நேரத்திற்கு இந்த நிலையிலேயே இருந்தார். அவர் மிகவும் அழகாக இருந்தார். என் திருச்சபைக்கு வெளியே இருக்கிற பலரை, ஆம்... இழிவான ஆன்மாக்களை.... குறிப்பு: இயேசு இதைச் சொன்னபோது மென்மையான ஆனால் சோகமான குரலில் சொன்னார். நான் அணுகி வந்து, அவர்களை என்னை பக்தியோடு பின்பற்றுபவர்களாக மாற்றி இருக்கிறேன்; அவர்களை என் சீடர்களாக ஆக்கி இருக்கிறேன்; அவர்களை நான் புனிதர்களாக ஆக்கினேன்; இருந்தாலும் என் திருச்சபையின் அதிகாரிகள் என்னுடைய அந்த பணிகளை கவனிக்கத் தவறி அவற்றை அலட்சியம் செய்கிறார்கள்; அவர்கள் ஒருபோதும் இந்த ஆன்மாக்களை அங்கீகரிப்பதில்லை, அவர்களை அறியமாட்டார்கள், அவர்களுடைய பாராபட்சத்தால் பலர் நிராகரிக்கப்பட்டார்கள்! 'கடவுள் துறவர அங்கி அணிகிற பக்தியுள்ள ஆன்மாக்களை மட்டுமே அணுகி வருகிறார்' என்ற கொள்கை தவறானது; ஓ, நீங்கள் எவ்வளவு தவறானவர்களாக இருக்கிறீர்கள்! இயேசு அமைதியான வருத்தத்தோடு இருந்த நிலையிலிருந்து இப்போது துயரப்படுபவராக மாறினார். அங்கி அணியாமல் இருந்தாலும் அல்லது என் மீது பக்தி உள்ளவர்களாக இல்லாதிருந்தாலும், நான் அணுகிச் சென்றவர்களாகிய ஆன்மாக்களின் எண்ணிக்கையை மட்டும் நீங்கள் அறிவீர்கள் என்றால், இவர்களில் பலரை நான் புனிதர்களாக மாற்றினேன்! அன்புக்குரியவளே, நீயே கூட என் பிரசன்னத்தை நறுமணம் வீசச் செய்தாய் என்பதை உண்மையிலேயே மறந்துவிட்டாயா? நான் என் நறுமணத்தில் உன்னைக் குளிப்பாட்டி, உன்னை ஆசீர்வதித்திருந்தேன்! வா, நீ கற்றுக்கொள்வாய்; என் சமாதானம் மற்றும் அன்பின் செய்தியால் நான் பல ஆன்மாக்களை மனம் திருப்பி இருக்கிறேன்; காணாமல் போன ஆட்டுக்குட்டிகள் என்னிடம் திரும்பி வந்து என் கரங்களில் விழுந்தன; ஆன்மாவே, அகமகிழ்வாய்! தன் எஜமானரைக் கண்டடைந்துள்ள ஒரு காணாமல் போன ஆட்டுக்குட்டியை விட பெரிய புதுமை என்ன உண்டு? தம் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிப்பது ஆயனுக்கு எவ்வளவு அதிக மேலான மகிழ்ச்சியாக இருக்கிறது! குறிப்பு: இயேசுவின் மென்மையான ஆண்மை மிக்க இனிய குரல் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய இதயம் மகிழ்ச்சியால் வெடித்து விடுவது போலத் தோன்றியது. என் மீட்பின் அற்புதங்களைப் பற்றி உன் சகோதரர்களுக்குச் சொல்! உன் அயலாருக்குச் சொல்! நற்செய்தியை அறிவி, என் பணிகளை அறிவி! என் பணிகள் அறியப்படுபனவாக, என் அற்புதம் அறியப்படுவதாக; நான் உன்னிடம் வந்து, உன் விளக்கை மீண்டும் என்னையால் நிரப்பி இருக்கிறேன்; நான் என் ஒளியை உனக்குத் தந்திருக்கிறேன், உன் படுக்கைக்கு அடியில் இந்த விளக்கை மறைத்து வைக்காதே, ஏனெனில் அப்போது அது பயனற்றுப் போகும்; சகோதரனே, வா, மகிழ்ச்சி கொள், ஏனெனில் உன் விளக்கு ஒரு விளக்குத் தண்டின் மீது ஒளிவீசும்படி, அதை நான் என்னையால் நிரப்பி இருக்கிறேன்; அவர்கள் எல்லோரும் இந்த ஒளியைக் கண்டு, அது என்னிடமிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வார்களாக; என் பரிசுத்த பணிகளை அறிவி, என் ஒளியை அனைவரும் காணும்படி உன் வீட்டுக்கூரையின் மீதிருந்து அதை வெளிப்படுத்துவதன் மூலம் என்னைக் கனப்படுத்து; அது எல்லோராலும் காணப்படுவதாக; இந்த ஒளியை அவர்கள் கண்டுணரும் போது, அவர்கள் தொலைவான இடங்களில் இருந்து வந்து கூடுவார்கள்; நான் எப்படி உன்னிடம் வந்து உனக்கு இந்த ஒளியை தந்தேன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக; என் சமாதானத்தை கொண்டிரு.... ஜனவரி 25, 1988 இயேசுவா? நான்தான்; இயேசுவே, இன்றுவரை இதெல்லாம் என்னை அதிசயிக்கச் செய்கிறது. இந்த வெளிப்பாட்டை தான் நான் குறிப்பிடுகிறேன். இது ஒரு கனவு போல் இருக்கிறது. நான் கனவுதான் கண்டுகொண்டிருந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தபடி விழித்தெழுவதை நான் எதிர்பார்க்கிறேன். இது அதிசயமானதாக இருக்கிறது! வசுலா, நான் எல்லாம் வல்லவர், எல்லாவற்றையும் காண்பவர், மரித்தோரிடமிருந்து உன்னை உயிரோடு எழுப்பி, உன்னை ஒளிர்விக்க நான் சித்தம் கொண்டேன்; 'சூரியக்' காட்சி உனக்கு நினைவிருக்கிறதா? ஆம், ஆண்டவரே, அந்த வட்டமான ஒளிப்பந்து. குறிப்பு: மார்ச் 26, 1987. செய்தியைக் காண்க. இந்த வட்டமான ஒளி உங்கள் மத்தியில் 'சூரிய அதிசயம்' என்று அறியப்பட்டிருக்கிற அதே வட்ட ஒளிதான், நீ காண, நான் அனுமதிக்கிற இந்த ஒளிப்பந்து, பாத்திமாவில் காணப்பட்ட அதே ஒளிப்பந்துதான்; அதற்குள் ஊடுருவி செல்ல நான் உன்னை அனுமதித்திருக்கிறேன்; அதற்குள் செல்ல நான் உன்னை அனுமதித்தேன்; ஓ, வசுலா, நான் உனக்கு தந்த சலுகையை மட்டும் நீ அறிந்திருந்தாய் என்றால்! சிறியவளே, நீ இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை, நான் உன் கண்களை திரையிட்டு மறைத்திருக்கிறேன் என்பதால்தான் நீ இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை; என் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன். வசுலா, என் திரு இருதயத்தில் நான் உன்னை மறைத்து வைத்துக் கொள்வேன்; நீ எனக்கு விலையேறப்பெற்றவள்; உன் இறைவனாகிய நான் உன்னை நேசிக்கிறேன்; எனக்கு ஒருபோதும் அஞ்சாதே, ஏனெனில் நான் அன்பாக இருக்கிறேன்; நான் எப்போதும் கனிவுள்ள ஒரு தந்தையாக இருக்கிறேன்; நீ எனக்கு எதிராக கழகம் செய்யும்போது மட்டும் எனக்குப் பயப்படு; ஆ, வசுலா, என் பரம இரகசியங்கள் அநேகமானவை, அவற்றில் பெரும்பாலானவை உன்னிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன; வசுலா, இப்போது கவனமாகக் கேள்; உரைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் நிறைவேறும்; பரிசுத்த வேதாகமங்களில் எழுதப்பட்டிருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேற்றப்படும்; வசுலா, இரண்டு இதயங்களை நீ வரைய வேண்டுமென நான் விரும்புகிறேன்; ஆம், ஒன்றுக்குப் பக்கத்தில் மற்றொன்று, உண்மையில் இணைந்திருக்கிற இதயங்கள்; ஆம், அவற்றைச் சுற்றி முள் வளையம் ஒன்றை வரை; என் தாயாரின் மாசற்ற இருதயம் என் இருதயத்தோடு இணைந்துள்ளது; அவர்களுடைய மாசற்ற இருதயத்திற்குத் தகுதியுள்ள பக்தியை நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; மகளே, எங்கள் தெய்வீக இருதயங்கள் எங்களுக்கு நன்றியற்றத் தனத்தையும், துரோகத்தையும், அன்பில்லாமையையும் மட்டுமே காட்டுகிற மனிதர்களால் குத்தப்படுகிற முட்களால் எப்படி மூடப்பட்டுள்ளன என்று பார்; அது அவர்களுடைய பாவங்களின் 'முழுமையாக' இருக்கிறது; வசுலா, வார்த்தையாகிய நான் என் தாயை நேசிக்கிறேன், மதிக்கிறேன்; நீ என் தாயை அணுகி வந்து நான் அவர்களைக் கனப்படுத்துவது போல, நீயும் அவர்களை கனப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அவர்களைக் கனப்படுத்தியபடி ஒவ்வொரு முழங்காலும் மடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நீ ஜெபமாலை ஜெபித்து, உன் பரிசுத்த மாதாவை வாழ்த்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நீ உன் பாவங்களை சுத்திகரிக்க உனக்கு கற்பிக்கும்படி அவர்களிடம் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; மகளே, விழிப்பாய் இரு; வா, என் தாயின் இருதயம் எப்படி என் தெய்வீக இருதயத்தோடு இணைந்திருந்து, ஒரு முள் வளையத்தால் சூழப்பட்டிருக்கிறது என்பதை நான் உனக்கு வெளிப்படுத்தி இருக்கிறேன்; நான் என் பிரசன்னத்தைப் பற்றி உனக்கு ஞாபகப்படுத்துவேன்; நான் உன்னை நேசிக்கிறேன்; இயேசுவே, நானும் உம்மை நேசிக்கிறேன். வா; வசுலா, நீ என்னோடு ஜெபிப்பாயா? ஆம், ஆண்டவரே. 'தந்தாய், அப்பா! என் சித்தத்தை நான் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன், என் வாழ்வை நான் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன், என்னை அர்ப்பணிக்கிறேன், உமக்குச் சித்தமானால், நீர் என்னை முழுமையாகப் பயன்படுத்தும்படி என்னைத் தகுதி உள்ளவளாக்கும், பற்றி எரிகிற உம் ஆசைகளுக்கு முழுமையாக என்னை ஒரு பலி பொருளாக்கி அருளும், உம் திரு இருதயம் விரும்புகிறபடி செய்யும், ஆமென்; வசுலா, உன்னை ஒடுக்குபவர்களை ஆசீர்வதி, அவர்களுக்காக ஜெபி; வா, உன் பரிசுத்த தாயாரிடம் ஜெபி, என்னோடு சேர்ந்து ஜெபி; இயேசு, நான் எழுத வேண்டிய வார்த்தைகளைச் சொல்வார்: 'ஓ, பரிசுத்த மாதாவே, அன்பிற்காக ஓர் அன்பின் பலியாக மாற விருப்பம் கொள்வதன் மூலம், உமது மாசற்ற இருதயத்தைப் பற்றிக் கூறப்படும் குற்றங்களுக்கு நான் பரிகாரம் செய்வேன், ஆமென்; வசுலா, பிதாவிடம் என்னோடு சேர்ந்து ஜெபி, வா, சேர்ந்து; 'தந்தாய், அன்பிற்குரியவரே, நான் மீண்டும் உம் பரிசுத்த திருப்பெயரை மகிமைப்படுத்தும்படியாக என் விசுவாசத்தையும், என் அன்பையும், என் நம்பிக்கையையும் நீர் அதிகரிப்பது எனக்கு தேவையாய் இருக்கிறது;"