இயேசு தம் இல்லம் சிதைந்திருப்பதையும், காலங்களின் முடிவில் பலர் அவரைக் கைவிட்டதையும் வேதனையுடன் கூறுகிறார். "உங்கள் இதயங்களுக்குள் நுழைய என்னை அனுமதியுங்கள், நான் உங்கள் ஒவ்வொருவரையும் குணமாக்குவேன்" என்று அனைவரையும் அழைக்கிறார். தாம் விரைவில் திரும்பி வருவதாகவும், புதிய ஜெருசலேமை நிறுவுவதாகவும் வாக்களிக்கிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 78. செப்டம்பர், 27, 1988 இயேசுவா?நான்தான்; உனக்கு தரப்பட்டுள்ள என் போதனைகளைக் கடைப்பிடி, என்னைப் பேச விடு; வெறும் காலோடு, ஊர் ஒன்றுமில்லாமையாக இரு; என் சமன்படுத்தப்பட்ட பாதையைக் கண்டுகொள்; என் பாதை நேரானது; ஆகவே, உன் வலமோ, உன் இடமோ பாராதே; உண்மையாகவே, நான் என் பரம இரகசியங்களில் உன்னை அனுமதித்திருக்கிறேன், உன்னை என் எழுத்துப் பலகையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன், நீ இராயப்பனைச் சந்திக்கும்படி, என் இல்லத்திற்குள் நீ வெறும் காலோடு வரும்படி நான் உன்னை நடத்தி வந்திருக்கிறேன்; என் சமாதானம் மற்றும் அன்பின் செய்தி என் எதிரிகளை ஆயுதமற்றவர்களாக்கும்; வெறுமனே பொறுத்திருந்து பார், நான் என் கைவேலைகளை இன்னும் முடிக்கவில்லை; என் இல்லம் இன்று சிதைந்து போயிருக்கிறது, ஆனாலும், அனைத்திலும் மோசமானது இனிதான் வரவிருக்கிறது; என் திருவுடலில் வாழ்பவர்களும், என் தலையில் முட்களாய் இருப்பவர்களும், வீண் பெருமையால் நிறைந்தவர்களுமாகிய காயின்கள், என் ஆபேல்களை, என் ஆவியைப் புரிந்துகொண்டு, என்னை உண்மையுள்ள விதமாக நேசிக்கிற இந்த ஆபேல்களைப் படுகொலை செய்ய முயல்வார்கள்; ஆனால் நான் உண்மையாகவே உனக்குச் சொல்கிறேன், அவர்களுடைய வீண் பெருமைகள் துக்கப் புலம்பலாக மாறும், என் நெருப்பு இந்தப் பிரமாணிக்கமற்ற ஊழியர்களைச் சுட்டெரிக்கும், ஏனெனில், இப்போது அவர்கள் எதை எனக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்? அவர்கள் தங்கள் சொந்த ஆசைகளாலும், சகிப்புத் தன்மை இன்மையாலும் வழிநடத்தப்பட்டு, என் ஆவியை மிதித்துச் செல்கிறார்கள்; அவர்களுடைய பிரமாணிக்கமின்மை அவர்களை வழிதவறச் செய்கிறது, அவர்கள் இனியும் தெளிவாகக் காணமாட்டார்கள்; வசுலா, உன் கேள்வியை எழுது, ஏனெனில், இந்தக் கேள்வி உங்களில் பலரிடம் இருக்கிறது; ஆண்டவரே, இனியும் எஞ்சியிருக்கிற நல்ல ஊழியர்கள் யாருமே இல்லையா? உம்மை உண்மையாகவும், நேர்மையோடும் நேசிக்கிற ஊழியர்கள்? என்னை நிஜமாகவே நேசிக்கிற ஒரு சிலர் மட்டுமே எஞ்சி இருக்கிறார்கள், என் ஆவியைப் புரிந்துகொள்பவர்கள் ஒரு கைப்பிடியளவே இருக்கிறார்கள், இந்த ஆன்மாக்கள் என் காயங்களை ஆற்றுகிறார்கள், என் புனித இதயம் அவர்களுடைய இல்லமாக இருக்கிறது; ஆண்டவரே, பொது நிலையினரை பற்றி என்ன கூறுகிறீர்? அவர்களிலும் கூட, என்னில் விசுவாசம் கொள்பவர்களும், என் தேவ பராமரிப்புள்ள வேலைகளில் விசுவாசம் கொள்பவர்களும் மிக மிக சிலர் மட்டுமே இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலானோர் தங்கள் இறைவனாகிய என்னைக் கைவிட்டு விட்டார்கள்; என் புனித இதயத்தின் உள்ளாழங்களில் ஈட்டியின் முனை, ஏராளமான இரத்தப்போக்கிற்குக் காரணமான இந்த ஈட்டி முனை கிடக்கிறது; இன்று அவன் என் துன்பங்களின் காரணத்தின் ஒரு பகுதியாக இருக்கிறான் என்று நான் உனக்குச் சொல்கிறேன்; ஆண்டவராகிய நான் எதிர்பாராத விதமாக அவன் மேல் வருவேன்; நான் திடீரென, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், என் தேவாலயத்திற்குள் நுழைவேன்; இந்த நாட்கள் எண்ணப்படுகின்றன; நான் மின்னலைப் போல் இறங்கி, புழுதிக் குவியலாக விழவிருக்கும் ஜெருசலேமைச் சுத்திகரித்து, அதனுடன் என்னை நேசியாத அனைவரையும் இழுத்துச் செல்வேன்; நான் அதன் நடுவராக இருப்பேன், அதைக் கடுமையோடு நடத்தி இருப்பேன்; ஆனால் என் பரிசுத்த பெயரின் கீழ் பிரமாணிக்கம் உள்ளவர்களாக நிலைத்திருந்த அனைவரையும் ஆண்டவராகிய நான் உயிரோடு எழுப்பி, என் புதிய ஜெருசலேமுக்குள் அவர்களை வைப்பேன்; அவர்கள் அஞ்ச வேண்டியதில்லை, ஏனெனில் அவர்கள் என் போதனைகளையும், என் சட்டத்தையும் பின்பற்றினார்கள்; அவர்கள் நசுக்கப்பட்டிருந்ததாலும், என்னை நோக்கி அவர்கள் எழுப்பிய கூக்குரல்கள் என் எதிரிகளால் முடக்கப்பட்டுவிட்டது என்றாலும், நான் இன்னும் கூட அவர்கள் சொன்னதைக் கேட்டேன்; என் கண்கள் இந்தப் புனிதர்களை விட்டு ஒருபோதும் விலகவில்லை; அவர்கள் எனக்கு அஞ்சினார்கள், என்னைப் போற்றினார்கள், என் வார்த்தைக்குப் பிரமாணிக்கமாக இருந்தார்கள், நான் அவர்களுக்குத் தந்திருந்த அனைத்து செல்வங்களையும் பகிர்ந்து கொண்டார்கள், என்னைப் பிரியப்படுத்துகிற நற்செயல்களைச் செய்தார்கள்; அன்பிற்குரிய படைப்பே, நீ காலங்களின் முடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய், குறிப்பு: உலக முடிவல்ல, ஒரு காலகட்டத்தின் முடிவு. இக்காலங்களில் வேதத்தை ஏளனம் செய்து நகைக்கிறவர்களும், இறைவாக்கின் ஆவியை அணைத்து விடுபவர்களும், காட்சி காண்பவர்களைப் பரிகாசம் செய்பவர்களுமான மனிதர்கள் இருப்பார்கள் என்று நான் உங்களை எச்சரித்திருக்கிறேன், கொடுந்தன்மைக்காக, தங்கள் வஞ்சகமுள்ள கொள்கைகளைத் தங்களால் பின்செல்ல முயலும்படி அவர்கள் இப்படிச் செய்வார்கள்; அவர்களுடைய திறமைகள் வக்கிரமுள்ள கண்டுபிடிப்புகளாக மாறி, அவர்களை வழிதவறச் செய்துள்ளன; தீமையை நேசிப்பவர்களாக, அவர்களால் எந்த விதமான மனத்தூய்மையும் பெற்றுக்கொள்ள இயலாது; மூடத்தனத்தைப் போல, அவர்கள் இரகசியமான சடங்குகளுக்குள்ளும், கருப்புப் பூசைகளுக்குள்ளும் இழுக்கப்பட்டு, சாத்தானை வழிபடுகிறார்கள்; ஒன்றில் இப்படிச் செய்கிறார்கள், அல்லது பெரும் தீமையுள்ள வாழ்வு நடத்துகிறார்கள், ஏனெனில், அவர்களுடைய அறியாமை எவ்வளவு பெரிதாய் இருக்கிறது என்றால், அது ஒன்றின் காரணமாகவே அவர்கள் தங்கள் சொந்த வாழ்வுகளைத் தீர்ப்பிடுகிறார்கள்; அவர்கள் தங்கள் காதுகளை மூடிக்கொண்டதாலும், தங்கள் கடவுளாகிய என்னை ஏற்று, உண்மையைக் காண மறுத்துவிட்டதாலும், அவர்களுடைய பாவம் ஒழுக்கமின்மைக்குள்ளும், அவர்களுடைய சொந்த ஆன்மாவின் அழுகலுக்குள்ளும் அவர்களை இழுத்துச் சென்றுவிட்டது; உங்கள் காலங்களில், என் ஊழியர்களில் மிக சிலர் மட்டுமே எனக்குப் பிரமாணிக்கமாய் இருந்து, நற்செய்தியைப் போதிக்கப்பட வேண்டிய விதமாகப் போதிப்பார்கள் என்றும், பலர் பகுத்தறிவு வாதத்தினுள் விழுந்து, பிரமாணிக்கமின்மையைக் கொண்டு எனக்குத் துரோகம் செய்வார்கள் என்றும் கூட சொல்லப்பட்டிருக்கிறது; இந்தப் பகுத்தறிவு வாதம் என் திருச்சபையை ஒரு வனாந்தரமாக்கிவிட்டது; அது அதன் உள்ளாழங்களில் விரியன் பாம்புகள் கூடுகட்டி வாழ்கிற ஒரு சிதைவாக அதை மாற்றிவிட்டது; என் திருப்பெயரைக் களங்கப்படுத்துபவர்களும், தங்கள் பணத்தாசையைத் திருப்திப்படுத்தி, என்னுடையதல்லாமல், தங்கள் சொந்த ஆவல்களையேத் தேடி, இவ்வுலக மகிமையின் சிம்மாசனத்தில் வீற்றிருப்பவர்களுமாகிய மனிதர்களுக்காக, என்னிடம் வந்து, சுத்திகரத்தின் நாளுக்கு முன்பாக மனஸ்தாபத்தோடு மனம் திரும்புகிற உங்களுக்காக, நீங்கள் உண்டாக்கி வைத்திருக்கிற வனாந்தரத்தில் நின்று நான் கூக்குரலிடுகிறேன்; ஆண்டவராகிய நான், இந்தப் பலவீனமான கருவியின் மூலமாகப் பேசுகிற என் உண்மையின் ஆவியை அழித்து விடாதபடி உங்களை எச்சரிக்கிறேன்; நானும், என் சீடர்களும் வேலை செய்த சூழ்நிலைகளையும், நாங்கள் எங்கே ஓய்வுக்காகத் தலைசாய்த்தோம் என்பதையும் அவர்கள் நினைவு கூற வேண்டுமென நான் என் திருச்சபையிடம் முறைப்படி கேட்டுக்கொள்கிறேன்; எங்களிடம் அரண்மனைகள் எதுவும் இருந்ததில்லை! எதுவுமே இருந்ததில்லை! அரண்மனைகள் அரசர்களுக்குரியவை, எனக்கோ என் சீடர்களுக்கோ உரியவையல்ல! ஆண்டவரே, உம்மால் குறிப்பிடப்படுபவர்களும், தங்களை அடையாளம் கண்டுகொள்பவர்களுமாகிய மனிதர்கள் இந்தப் பகுதியைக் கேட்க விரும்ப மாட்டார்கள், இந்தச் செய்தியை ஒடுக்கி அழித்து விட, இது அவர்களுக்கு மேலும் ஒரு காரணமாக இருக்கும். உண்மைதான், அவர்களில் சிலர் என் வார்த்தையைக் கேட்க விரும்ப மாட்டார்கள்; அவர்கள் தங்கள் வீண் மகிமையைக் கொண்டு என்னையும், என் இல்லத்தையும் முடக்குகிறார்கள்; என் இல்லமும் நானும், அவர்களது பொய் சாட்சிகளால் மூச்சுத் திணறுகிறோம்; எனக்கு மூச்சு விட இடமில்லை, அவர்கள் என் இல்லத்தின் ஜன்னல்கள் அனைத்தையும் மூடிவிட்டார்கள், என் ஒளி ஊடுருவ முடியாது, என் ஆவியும் காற்றைச் சுத்தரிக்கும்படி உள்ளுக்குள் வீச முடியாது; இந்த ஆன்மாக்கள் தங்கள் சாரத்தை இழந்துவிட்ட உப்பைப் போன்றவர்கள்; அவர்கள் தங்களில் என் ஒளி ஊடுருவ முடியாமல் தடுக்கிற, தங்களைச் சுத்திகரிக்க முடியாதபடி என் பரிசுத்தத்தனத்தைத் தடுக்கிற, சித்திரம் தீட்டப்பட்ட கண்ணாடி போன்றவர்கள்; சாத்தானின் திரவ ஆவிகள் இந்நாட்களில் மூடுபனியைப் போல் இருக்கின்றன, அவை சாவித் துவாரங்கள் வழியாகவும், கதவு நிலைகளின் கீல்களின் வழியாகவும் ஊடுருவி உள்ளே நுழைகின்றன; அவனுடைய திரவ ஆவிகள் மரண ஆபத்துள்ளவை என்பதால், நீங்கள் உங்கள் பரித் தியாகங்களையும், ஜெபங்களையும் இரு மடங்காக்க வேண்டுமென நான் அதிகாரப்பூர்வமாக உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்; சாத்தான் தன்னுடைய கோப வெறியில் இந்த ஆண்டு என் திருச்சபைக்கு எதிரான தன்னுடைய வேலைகளை இரு மடங்காக்கி இருக்கிறான்; பரிசுத்த மரியாயின் ஆண்டில், என் திருச்சபையின் ஒரு பகுதியைப் பிரித்தகற்ற அவன் முடிவு செய்தான்; இந்தப் பிரிவினையைப் பற்றியும், இதன் நடுவே நீங்கள் எல்லோரும் என் இல்லத்திற்குள் இறங்கி வர வேண்டி இருக்கும் என்றும் நான் உங்களுக்கு முன்னறிவித்திருந்தேன்; இப்போது என் கரத்தைப் பிடித்துக்கொண்டு, என்னோடு நட; என் வசுலா, என் சிலுவையைப் பகிர்ந்து கொள்; என் கைவேலைகள் இன்னும் முடியவில்லை; சமாதானத்தில் இரு, குழந்தாய், ஆண்டவராகிய நான் என் சமாதானத்தை உனக்குத் தருகிறேன்; நினைவில் வை, என் பிரசன்னத்தைப் பார்த்துப் புன்னகை செய், என் பிரசன்னத்தை ஒருபோதும் மறந்து விடாதே; என்னை நோக்கி ஒரு கீரியே எலெயாசான் ஆண்டவரே, இரக்கமாயிரும் ஜெபம் சொல்; என்னை மகிழ்வி, நான் உனக்கு மிக ஏராளமாகத் தந்திருக்கிறேன்; ஆம் என், ஆண்டவரே, நீர் எனக்கு மிக ஏராளமாகத் தந்திருக்கிறீர், பரிசுத்தரில் அதிபரிசுத்தரே, நான் உம்மை நேசிக்கிறேன், நீர் எவ்வளவு அதிகமான நன்மைகளை எனக்குத் தந்திருக்கிறீர் என்றால், அவை எல்லாவற்றையும், எல்லா நேரமும் அறிக்கையிட நான் விரும்புகிறேன், ஆனால் அவை என்னால் எண்ண முடிவதற்கும் அதிகமாக இருக்கின்றன, நீர் சொல்வதைக் கேட்க நான் என் காதுகளைத் திறந்தேன், நீர் என்னை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்தீர். உம் அன்பும், பிரமாணிக்கமும் இடையறாது என்னைப் பாதுகாப்பனவாக நீர் எனக்குத் செய்துள்ளவை அனைத்தையும் என் சகோதரர்களுக்கும் செய்வீராக, அவர்களும் அவற்றைப் பகிர்ந்து கொள்வார்களாக, ஆண்டவரே, என் குழந்தாய், நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன், நான் உங்கள் ஒவ்வொருவரையும் தேடுகிறேன், உங்கள் இதயங்களுக்குள் நுழைய என்னை அனுமதியுங்கள், நான் உங்கள் ஒவ்வொருவரையும் குணமாக்குவேன்; வா, இப்போது ஓய்வெடு, நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன், இதை ஒருபோதும் மறக்காதே! செப்டம்பர் 29, 1988 புனித மிக்கேல், புனித கப்ரியல் மற்றும் புனித ரஃபேல் என்னும் அதிதூதர்களின் திருநாள். நான் புனித மிக்கேலிடம் ஜெபித்தேன். புனித மிக்கேல்: உன்னதருக்கு மகிமையுண்டாவதாக, ஏனெனில் அவர் மரித்தோரிடமிருந்து உன்னை எழுப்பியிருக்கிறார்; நீ எப்போதும் விழிப்பாய் இருந்து, சாத்தானிடமிருந்து உன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், ஆண்டவருக்கு முன்பாக ஞான ஒடுக்கம் செய், என்னிடம் ஜெபி; பேய் விரட்டுதலுக்கான புனித மிக்கேல் ஜெபத்தையா? ஆம்; இந்த ஜெபம் தீமையை எப்படி எதிர்த்து போராடுகிறது என்பதை கடவுளின் படைப்பு மட்டும் அறிந்திருந்தால், அவர்கள் அதை அனுதினமும் ஜெபித்திருப்பார்கள்; ஆண்டவரின் வார்த்தைக்காக எப்போதும் ஆயத்தமாயிரு; நித்தியர் உன்னை நேசிக்கிறார்; அவரைப் போற்று! ஆ, புனித மிக்கேலே, எங்களைப் பாதுகாப்பதற்காகவும், எங்களுக்காகப் போர் புரிவதற்காகவும் உமக்கு நன்றி. என் ஆண்டவரா? நான்தான்; நினைவில் வை, உன் சுற்றுப்புறம் வனாந்தரமாக இருக்கிறது; வசுலா, மனஸ்தாபப்பட்டு, உன் பாவங்களை என்னிடம் பாவ சங்கீர்த்தனம் செய்; நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன், குறிப்பு: நான் கடவுளிடம் பாவ சங்கீர்த்தனம் செய்தேன். நான் உன்னை முழுமையாக மன்னிக்கிறேன்; நான் உன் ஆன்மாவைக் கறைப்படுத்திய உன் பாவங்களை மன்னிக்கிறேன்; என் சமாதானத்தைக் கொண்டிரு; நான் என் அனைத்து படைப்புகளுக்கும் இதை வற்புறுத்த விரும்புகிறேன்; நான் உங்கள் அனைவருக்கும் என் திருச்சட்டத்தைத் தந்திருக்கிறேன்; இந்தத் திருச்சட்டத்திற்கு நீங்கள் அனைவரும் கீழ்படிய வேண்டும்; என் திருச்சபையின் பரம இரகசியங்களை பகிர்ந்தளிக்கிற போதகர்களை உங்களுக்கு நான் தந்திருக்கிறேன்; இவர்கள் உங்களை வழிநடத்துவதற்காகவும், திவ்விய நன்மையில் என்னைப் பெற்றுக் கொள்வது எவ்வளவு முக்கியமானது என்று உங்கள் அனைவருக்கும் கற்பிப்பதற்காகவுமே; என் திரு இரத்தத்தையும் என் திரு உடலையும் வாங்குங்கள்; என் இரத்தம் எந்தக் காரணமும் இன்றி ஆறுகளாகப் பொழியப்படவில்லை, என் இரத்தம் நீங்கள் பருகும்படி உங்களுக்காகச் சிந்தப்பட்டது; இந்தத் தேவ ஊழியர்கள் என் இரத்தத்தை உங்களிடமிருந்து விலக்கி வைக்கக்கூடாது; என் இரத்தம் உங்கள் இரட்சணியத்திற்காக சிந்தப்பட்டது; நீங்கள் என் இரத்தத்தையும் பருக வேண்டும்; ஆகவே, வந்து என்னைப் பருகுங்கள், அப்போது இன்னும் தாகமாய் இருப்பீர்கள்; என் இரவு உணவின் போது என் ரா உணவின் வார்த்தைகளுக்குக் கீழ்படியுங்கள்; நீங்கள் என்னிடம் வரும்போது, நீங்கள் எப்படி என்னைப் பெற்றுக் கொள்வீர்கள் என்பதை முன்னமே உறுதி செய்து கொள்ளுங்கள்; உங்களைப் பரிசோதியுங்கள், ஞான ஒடுக்கம் செய்யுங்கள், மனஸ்தாபப்படுதலின் மூலமும், அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்வதன் மூலமும் என்னை முழுமையாகக் கனப்படுத்துங்கள்; நான் உங்களுக்கு ஆன்ம குருக்களைத் தந்திருக்கிறேன்; என் அன்பிற்குரியவர்களே, நீங்கள் அவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது, நீங்கள் என்னிடம் தான் பாவ சங்கீர்த்தனம் செய்கிறீர்கள், நீங்கள் பாவ சங்கீர்த்தனம் செய்வது என்னிடம் தான்; உடன்படிக்கையின் இரத்தம் பரிசுத்தமற்றது என்பது போல, அதைக் கையாளாதீர்கள்; என் பரிசுத்த பிரசன்னத்தை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள், நாம்; ஆம், நாங்கள், நாம்; ஆம், பரிசுத்த அன்னையே, பிற்பாடு: வசுலா, புனித மிக்கேலா? ஆம், இது நான்தான்; இந்த புதிய பேயோட்டும் ஜெபத்தைக் கொண்டு, நீ என் திருநாளையும், அர்ச்சிஷ்ட கப்ரியேலின் திருநாளையும், அர்ச்சிஷ்ட ராஃபேலின் திருநாளையும் நினைவு கூற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; இந்த ஜெபங்களை அச்சிட்டு, அவற்றைப் பரப்பு; உங்கள் யுகத்திற்கு இவை அவசியம் தேவை; நான் மகா உன்னதரின் சித்தத்திற்குக் கீழ்படுகிறேன், கடவுளுக்கு மகிமை உண்டாவதாக; கடவுளுக்கு மகிமை உண்டாவதாக, நம் ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக. என் குழந்தாய், இது ஆண்டவராகிய நான்தான்; இந்த ஜெபங்களை ஜெபிக்கும் போது, எப்போதும் விழிப்பாய் இரு! ஆண்டவராகிய நான் சொல்வதை நீ கேட்பதற்காக, உன்னை நான் நேசிக்கிறேன்; ஒருபோதும் சந்தேகப்படாதே, நான் உன் ஆன்மாவைப் போஷிப்பேன்; வா, என்னோடு ஒன்றாய் இரு; நாங்கள், நாம்; என்றென்றும்... நித்திய காலமும், ஆமென்; புனித மாமரியே, நான் உங்களை வாழ்த்துகிறேன். செப்டம்பர் 30, 1988 ஒரு ப்ரீமேசன் இரகசிய சபை உறுப்பினர் மற்றும் ஒரு ஜெகோவா சாட்சியும் கூட, முற்றிலும் மனம் திரும்பியதற்காக, கடவுளுக்கு மகிமை. முந்தின மனமாற்றங்களுக்காகவும், மிகச் சமீபத்திய மனமாற்றம் ஒன்றிற்காகவும் கூட, கடவுளுக்கு மகிமை. பெரும் மக்கள் கூட்டங்கள் உம்மிடம் திரும்பி வருவனவாக, ஆண்டவரா? நான்தான்; உன் பரித் தியாகம் என்னை மகிழ்வித்தது; நான் உங்கள் ஆயன், என் ஆட்டுக்குட்டிகளைக் கூட்டிச் சேர்க்கவும், பாதுகாக்கவும், நான் வருகிறேன்; என் ஆட்டுக்குட்டிகளை மேய்; என் செய்தியை பரப்பு; வா, நீயும் நானும், நானும், நீயும் அன்பின் ஒன்றிப்பில்; அக்டோபர் 5, 1988 என் ஆண்டவரா? நான்தான், ஒரு நித்திய அன்பைக் கொண்டு உங்கள் அனைவரையும் நேசிக்கிற ஆண்டவராகிய நான்தான், நான் உங்கள் அனைவருக்கும் மத்தியில் எப்போதும் பிரசன்னமாய் இருக்கிறேன்; காலங்களின் தொடக்கத்திலிருந்து, என் குழந்தைகள் எப்போது கலகத்தில் விழுந்தாலும், ஆண்டவராகிய நான் என் எச்சரிக்கையை அவர்களுக்குத் தரவும், அவர்களை என்னிடம் திரும்பக் கூட்டி வரவும், மிகப் பலவீனமான கருவிகளின் வழியாகவே இறங்கி வந்தேன்; இறைவனாகிய நான் எப்போதும் இதே முறையிலேயே செயலாற்றினேன்; பாறைகளை உடைப்பதற்கு, நான் ஒரு சுத்தியலைப் போல் இறங்கினேன், என் படைப்பின் இதயத்தை மூடியிருக்கிற கடினமான மேலோட்டை அடித்து உடைத்தேன்; என் படைப்புக்கு என் உதவி தேவைப்பட்டபோதெல்லாம், அல்லது அவர்கள் சாத்தானின் வாசல்கள் வரை முடிந்தவரை போய், மிகத் தாழ்வாக விழுந்தபோதெல்லாம், நான் எப்போதும் என்னை வெளிப்படுத்தினேன், என் வசுலா, என் சமாதானம் மற்றும் அன்பின் முழுச் செய்தியின் வழியாக, நான் அழைக்கிறேன், மிகப்பெரும் வேதனையோடு, உங்கள் அனைவரிடமும் என்னிடம் திரும்பி வரும்படியும், மனஸ்தாபப்படும்படியும் அழைக்கிறேன், கூக்குரல் இடுகிறேன்; நான் இந்த வனாந்தரத்தில் கூக்குரல் இடுகிறேன், ஆனால் என் குரல் ஒரு எதிரொலியைப் போல, ஒரு வெற்றிடத்தில் ஒலிக்கும் எதிரொலியைப் போல் ஒலிக்கிறது.... நீங்கள் மட்டும் என் குரலைக் கேட்டு, நான் உங்களைக் குணப்படுத்தும்படி, உங்கள் இருதயங்களைத் திறப்பீர்கள் என்றால்! இந்த மாபெரும் வனாந்தரத்தில் எஞ்சி இருக்கிற என் மலர்களைத் தேடி, நான் இறங்கி வருகிறேன், ஆனால் பாறைகளில் தான் என் கால்கள் தடுக்கின்றன, அடுத்தடுத்து பாறைகள்; நான் மிகுந்த நம்பிக்கையுடன் சுற்றிலும் திரும்புகிறேன், ஆனால் என்னை குத்திக் கிழிக்கின்ற முட்களையும், முட்புதர்களையும், என்னை நேசிக்கிற ஒரு சிலரையும் மட்டுமே காண்கிறேன்; நான் அன்பைத் தேடுகிறேன், ஆனால் வெறுப்பைக் கண்டடைகிறேன்; எனக்கு ஆறுதல் தேவைப்படுகிறது, ஆனால் அப்படி எதையும் நான் காணவில்லை; தயவு இரக்கத்திற்காக, நான் தாகமாய் இருக்கிறேன், ஆனால் ஏளனத்தை மட்டுமே கண்டுபிடிக்கிறேன்; நான் அன்பைக் காணவில்லை, நான் நம்பிக்கையைக் காணவில்லை, இந்தத் தலைமுறையின் நடுவே, எந்த விசுவாசத்தையும் நான் காணவில்லை, ஏனெனில் அவர்கள் என்னை ஆராதிப்பதை நிறுத்திவிட்டார்கள்; குறிப்பு: கடவுளுக்கு மட்டும் இதை நாம் செய்யவில்லை. மாறாக, நம்மிடையேயும் இதைச் செய்கிறோம். என் எல்லாப் பயங்களும் நிஜமாகிவிட்டன! ஓ, சற்றும் விசுவாசம் இல்லாத யுகமே! எந்த நம்பிக்கையும் இல்லாத யுகமே! எந்த நேசமும் இல்லாத யுகமே! நீங்கள் என்னை ஆராதிப்பதை நிறுத்திக் கொண்டீர்கள், என் பரிசுத்தப் பெயர் உங்களுக்குப் பொருளற்றதாக இருக்கிறது.... நீங்கள் என் வழிகளைப் பின்பற்றி, என் கூக்குரல்களை கவனித்திருந்தால், இந்த வனாந்தரம் எல்லாம் இருந்தே இருக்காது; என்னை நேசிப்பவர்களிடமும், ஜெபிக்காத உங்கள் சகோதரர்களுக்காக, ஜெபிக்கும்படி நான் கேட்கிறேன்; உங்கள் முன்னோர்கள் கலகத்தின் நாளில், வனாந்தரத்தில் அந்தச் சோதனையின் நாளில், செய்த தவறுகளை நீங்கள் மீண்டும் செய்யாதீர்கள்; என் மிகப் புராதனமான பசும்புல் மேய்ச்சல் நிலங்கள், தரிசாகியும் பாழ்பட்டும் கிடக்கின்றன, என் சிறு மந்தை, தங்கள் சொந்த ஆயர்களாலேயே தாக்கப்பட்டிருக்கிறது, அவர்களாலேயே சிதறடிக்கப்பட்டிருக்கிறது... ஏன் என் கோபத்தைத் தூண்டுகிறீர்கள்? ஏன்? எனக்கு எதிராகக் கலகம் செய்த ஒவ்வொரு தலைமுறையும் தண்டிக்கப்பட்டிருக்கிறது; ஆனால் உங்கள் மனங்கள் கொடுமையானவையாக இருக்கின்றன, நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்வதை நிறுத்துவதில்லை, 'அந்தக் காலத்தில் நாங்கள் வாழ்ந்திருந்தால், நாங்கள் அந்தப் பரிசேயர்களின் தீய செயல்களில் பங்கு பெற்றிருக்க மாட்டோம், எங்கள் விசுவாசம் எங்களை இரட்சித்திருக்கும்!' என்று சொல்லிக்கொண்டு, அந்தப் பரிசேயர்களை விட நன்றாகச் செயல்படுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், இன்று நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் என் உடலோடு உங்கள் நடுவில் இருந்த அந்த நாட்களில் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும், இப்போது உங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை, உங்களில் பலர் என் செய்திகள் எதைப் பற்றியவை என்று அறிவதற்கு முன்பே, அவற்றிற்கு தண்டனைத் தீர்ப்பிட்டு விட்டீர்கள்!! குறிப்பு: உண்மையான வெளிப்பாடுகள், காட்சிகள், அடையாளங்கள். மகளே, அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெசையா, நானே என்று அவர்களிடம் சொல்லும்படி, அவர்களுடைய வனாந்தரத்தில் நான் அவர்களிடம் வந்தேன், ஆனால் அவர்கள் என்னை விசுவசிக்கவில்லை, அவர்கள் என்னை மறுதலித்தார்கள், என்னைத் துன்புறுத்தினார்கள், சிலுவையில் அறைந்தார்கள்; இன்று என் பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருண்ட மறைவிடத்தில் உங்களை வந்தடைகிறார், ஆனால் உங்கள் கீழ்படிதலின்மையைக் கொண்டும், உங்களில் குவிந்துள்ள பாவக் கவர்ச்சியைக் கொண்டும், அவர்களுடைய வேலைகளை வந்தடைய நீங்கள் தவறுகிறீர்கள்; உங்கள் காலகட்டத்தின் வனாந்தரமானது மற்ற எல்லா வனாந்தரங்களையும் முந்திவிட்டது; அவர்களை ஒளிர்விக்க இறங்கி வருகிற என் ஆவியைக் கண்டு, அவர்கள் ஏன் வியப்படைகிறார்கள், ஏன் அழுத்துக் கொள்ளவும் செய்கிறார்கள், ஏன் எரிச்சல் அடைகிறார்கள்? அவர்களுடைய மந்த நிலை மேலும் மேலும் பாலைவனங்களை உருவாக்கிவிட்டது! பாறைக்கு மேல் பாறை, என் ஒரு சில எஞ்சியுள்ள மலர்களும், இந்த கலகம் செய்யும் மக்கள் இனங்களின் பாதங்களில் மிதிக்கப்படுவதைக் கண்டு, நான் எப்படி முனங்கியும் மூச்சுத் திணறியும் போகிறேன்! வசுலா, உன் பரிசுத்த மாதா மட்டும் அவர்களை நான் தாக்காதபடி என் கரத்தைத் தடுத்துப் பிடித்துக் கொண்டிராவிட்டால், என் அடியற்ற பாதாளமாகிய இரக்கமும் என்னைத் தடுத்திராவிட்டால், நீதியின் இறைவனாகவும் இருக்கிற நான், நீண்ட காலத்திற்கு முன்பே அவர்களை அடித்து வீழ்த்தி இருப்பேன்! ஏனெனில் இந்தத் தலைமுறை தங்கள் மத்தியில் ஒரு புதிய சோதோமையும், கொமோராவையும் உருவாக்கிவிட்டது; இப்போது அவர்களுக்கு நேரிடுகிற பேரிடர்கள் என்னிடமிருந்தே வருகின்றன என்று நம்பும் அளவுக்கு அவர்கள் போய்விட்டார்கள்; எவ்வாறு தீமையை இழுத்து வருகிறது என்பதையும், தங்கள் சொந்த நாணயத்தைக் கொண்டே இப்போது தாங்கள் திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை; என்னை நேசிப்பவர்கள் அனைவரும் இந்தக் கலகம் முடிந்து போகும்படி, ஜெபிக்க வேண்டும், ஜெபிக்க வேண்டும், ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; என் நண்பர்கள் தங்கள் நற்செயல்களைத் தொடர்ந்து செய்ய, அவர்களை உற்சாகப்படுத்த நான் விரும்புகிறேன்; குறிப்பு: மொழிபெயர்ப்பிலும், ஒளிநகல் எடுப்பதிலும் உதவி செய்கிற அனைத்து புதிய சீடர்கள், மற்றும் இந்த வெளிப்பாட்டின் வேலை மற்றும் பரப்புதல், என் சமாதானம் மற்றும் அன்பின் விதைகளைத் தூவுகிற அனைவரையும் நான் ஆசீர்வதிக்கிறேன், இறுதி வரைக்கும் எப்போதும் என்னை நம்பியிருங்கள்; என் புத்தியின் பரிசுத்த ஆவி உங்கள் அனைவரையும் ஒளிர்விக்கும்படி ஜெபிக்கும்படியாகவும், நான் அதிகாரப்பூர்வமாக உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்; அவர்கள் இன்னும் எவ்வளவு காலம் வேதாகமங்களை புரிந்து கொள்ளாதிருப்பார்கள்? இன்னும் எவ்வளவு காலம் அவர்கள் என் பரம இரகசியங்களை விலக்கி வைப்பார்கள்? பழமொழிகளில் என் கனிகளைக் கண்டுபிடியுங்கள்; பகுத்துணருங்கள், பகுத்தறிவின் ஆவியானவர் உங்கள் மீது இறங்கி வரும்படி, அவரிடம் மன்றாடுங்கள்; என் பரம இரகசியங்களில் பல இன்னும் மறைந்து கிடக்கின்றன, என் ஞான நூல்களில் அவை வெளிப்படுத்தப்படுகின்றன; குறிப்பு: இந்த இடத்தில் நான் மீண்டும் ஒரு விதவையைப் போல உணர்ந்தேன். நான் ஆண்டவரை நோக்கி, "வாரும், ஆண்டவரே" என்று கூக்குரலிட்டேன்! நான் ஆண்டவரை ஆசிக்கிறேன். அன்பு, அன்பாகவே உங்களிடம் திரும்பி வந்து, உங்கள் அனைவருக்கும் மத்தியில் வாழும் என்று நான் வாக்களிக்கிறேன்; நான் என் இல்லத்தை மீண்டும் ஸ்தாபிப்பேன், ஒரு புதிய ஜெருசலேமை நான் கொண்டு வருவேன்; ஒரு நேர்மையின் நகரம், ஒரு பிரமாணிக்கமுள்ள நகரம், ஏனெனில் நீதி வெற்றி பெறும்; நீங்கள் வந்து என் முற்றி இருக்கிற பெயரை அறுவடை செய்யுங்கள்; நண்பர்களே, நான் இரகசியமாக ஆயத்தம் செய்திருக்கிற என் பெயரை அறுவடை செய்யுங்கள்; என் கைவேலைகளைச் சேகரித்து, அவற்றைப் பரப்புங்கள்; அவை பாலைவனக் காற்றுகளைக் குளிர்விக்கும்; அவை வறண்ட மண்ணுக்கு நீர் பாய்ச்சி, இந்த வனாந்தரத்துக்கு மீண்டும் உயிரைக் கொண்டுவரும்; என் வசுலா, என் திரும்பி வருதலுக்காக ஜெபி; ஓ, இறைவா, சரி! வாரும், எங்களிடம் வாரும்! ஓ, ஆண்டவரே, எங்களிடம் திரும்பி வாரும்!! வருவேன், வெகுவிரைவில்; வருவேன், என் திரும்பி வருதல் இப்போது தொலைவில் இல்லை, என் திரும்பி வருதலுக்காக ஜெபிக்கும்படி மற்ற அனைவரிடமும் கூறு; ஆண்டவரும், இரட்சகருமான இயேசு கிறிஸ்துவாகிய நான், சேதப்படுத்தப்பட்டிருப்பதும், இன்னும் சேதப்படுத்தப்பட இருப்பதுமாகிய எல்லாவற்றையும் மீண்டும் ஸ்தாபிப்பேன், நான் என் திருச்சபையை முற்றிலுமாகப் புதிப்பிப்பதற்கு முன்பாக, அது உட்பட இருக்கிற மாபெரும் துன்பத்தை மறந்து போகாதீர்கள்... ஆகவே, என் குழந்தாய், என் எழுத்துப் பலகையாக உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; என் சமாதானத்தின் சிலுவையை, அன்பின் சிலுவையை, உன் ஆண்டவராகிய என்னோடு பகிர்ந்து கொள்; நாங்கள், நாம், நித்தியத்திற்கும்; ஆம், ஆண்டவரே. நாங்கள், நாம்? ஆம், என் புனித அன்னையே, நித்தியத்திற்கும். என்னைச் சந்திக்கும் குழுவுக்குக் கொடுக்கப்பட்டதும், அவர்களுக்கு வாசிக்கப்பட வேண்டியதுமான செய்தி: என் அதீத அபரிதமான அன்பு உங்களிடமிருந்து தொலைவில் இல்லை, நாம் ஒன்றாக உணர்கிறோம்... நாம் ஒன்றாக உண்கிறோம். நாம் ஒன்றாகக் காரியங்களைச் செய்கிறோம்... ஆகவே, என் பிரசன்னத்தை உணருங்கள்; என்னிடம் திரும்பி வாருங்கள், நானும் உங்களிடம் திரும்பி வருவேன்; குறிப்பு: மீக்கா மூன்றாம் அதிகாரம், ஏழாவது வசனத்தை காண்க. உங்களை உற்சாகப்படுத்தும்படி, என் பிரசன்னம் உங்களில் பலரால் உணரப்படும்; என்னைத் தேடுபவன் யாராய் இருந்தாலும், அவன் என்னைக் கண்டுபிடிப்பான்; என் ஆவி உங்களில் வளர அனுமதியுங்கள்; குழந்தைகளே, என் கரத்தை பிடித்துக் கொள்ளுங்கள், என்னைப் பின் செல்ல மனதாய் இருங்கள்; இயேசுவாகிய நான், என் சமாதானத்தை, இவ்வுலகில் காணாமல் போயிருக்கிற சமாதானத்தை, உங்களுக்குத் தருகிறேன்; நான் ஒருபோதும் உங்களை விட்டுப் பிரிந்ததில்லை; காலங்களின் முடிவு வரையிலும், நான் எப்போதும் உங்களோடு இருப்பேன் என்று நான் உங்களிடம் சொல்லவில்லையா? என் பரிசுத்த பிரசன்னத்தில் விசுவாசம் கொள்ளுங்கள், இப்போது என் பிரசன்னத்தில் விசுவாசம் கொள்ளுங்கள், ஏனெனில் இந்த வெளிப்பாடு என் வாய் மூலமாக வருகிறது; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன், வாருங்கள்...