கனவில் பாம்புகளுக்கு மேலாகத் தந்தையால் உயர்த்தப்பட்ட வசுலாவிடம், "அஞ்சாதே, நான் அருகில் இருக்கிறேன்" என்று ஆண்டவர் கூறுகிறார். திருச்சபையில் ஏமாற்றும் தலைமைக் குருவைப் பற்றி எச்சரித்து, "நான் என் திருச்சபையை இணைக்க இருக்கிறேன்" என்கிறார். ஒரே மந்தையும் ஒரே ஆயனும் இருக்கும்படி ஜெபிக்க அழைக்கிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
உயிருள்ள இறைவனைப் போற்றித் துதியுங்கள்; அவரது அளவற்ற அன்பிற்காகவும், இரக்கத்திற்காகவும் அவரைப் போற்றுங்கள்; அவரது அருள் வரங்கள் மனித குலம் முழுவதன் மீதும் தொடர்ந்து பொழியப்படும்; அவரைப் பெற்றுக்கொள்பவர்கள், அவரது புனித திருப்பெயரை வாழ்த்துவார்களாக; அவரை வாழ்த்துங்கள், ஏனெனில் அவர் அன்புள்ள தந்தையாக இருக்கிறார்; கேட்கச் செவியுள்ள அனைவரும், மோட்சத்திலிருந்து வரும் இந்த பலத்த கூக்குரலைக் கேட்பார்களாக; நாம் பரிசுத்தராயிருப்பதால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள்! என் மலர்களே, எங்கள் செய்தியை வாழுங்கள்; அவரது முழு இரக்கத்தையும் நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள், கடவுளின் சித்தத்தைப் புரிந்து கொள்ள முயலுங்கள்; அவரது ஒளியின் மக்களாக இருங்கள்; பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்; ஆமென்;